26.11.08

ஜிமெயில் பேக்-அப்


இணையத்தில் காணக்கிடைக்கும் பல இலவச மெயில் சேவைகளில் "ஜிமெயில்" இன்றைக்கு நம்மில் பலருக்கும் பிரதான மெயிலாசனமாகிவிட்டது. ஒரே பயனர் கணக்கில் மெயில் அக்கவுண்ட், ஐகூகிள், பிக்காசா, அட்சென்ஸ், ஆர்குட் என்று பலவசதிகள் வைத்துக் கொள்ளலாம் என்பது அதற்கான இன்னொரு காரணம்.அப்படியே மைக்ரோசாப்ட் வழங்கும் ஸ்கைடிரைவ்(5 GB) போல கூகிளும் சீக்கிரம் ஜிடிரைவ் வழங்கினால் நன்னா இருக்கும்.

உங்கள் ஜிமெயிலிலிருக்கும் மின்னஞ்சல்களையெல்லாம் இறக்கம் செய்து உங்கள் கணிணியின் ஹார்ட் டிரைவில் பாதுகாப்பாக சேமித்துவைத்துக்கொள்ள வேண்டுமா?
பின்பு நேரம்கிடைக்கும் போதெல்லாம் இணைய இணைப்பில்லாத போதும் அம்மெயில்களை அட்டாச்மெண்ட்களோடு திறந்து படிக்கவேண்டுமா? பழையதொரு ஜிமெயில் அக்கவுண்டிலிருக்கும் உங்கள் மின்னஞ்சல்களையெல்லாம் புதியதொரு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டுக்கு மாற்றவேண்டுமா? இரு வேறு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டுகளை ஒன்றிணைக்க வேண்டுமா?

எளிய இலவச Gmail-Backup டூல் மேற்கண்ட சூழ்ச்சிகளையெல்லாம் உங்களுக்கு செய்கின்றது. ஒரே கண்டிசன். உங்கள் ஜிமெயிலில் IMAP-ஆனது enable செய்யப்பட்டிருக்க வேண்டும்.
விண்டோசில் மட்டுமல்லாது லினக்சிலும் இந்த பயன்பாட்டை பயன்படுத்தலாம் என்பது கூடுதல் விசேசம்.

Download from here

http://www.gmail-backup.com


Thanks.PKP

17.10.08

உண்மையான பணக்காரன்

அவன் பெயர் மணி. ஆனால் இவ்வூர்காரர்கள் உச்சரிப்பில் அவனை மாணி என்றாக்கி விட்டார்கள். 2001-ல் 400K விலை கொடுத்து நியூஜெர்சியில் ஒரு வீட்டை வாங்கினான். 2006-ல் அவன் தன் வீட்டு மதிப்பை வல்லுனர்களை வரவழைத்து கணக்கிட்டான்.600K வென சொல்லிப் போனார்கள். அதாவது 200K லாபம். மகிழ்ச்சியில் கொண்டாடினான். இஷ்டத்துக்கும் செலவு செய்தான். சேமிக்க ரொம்பவும் யோசித்தான். மீண்டும் இவ்வருடம் அவன் வீட்டு மதிப்பை வல்லுனர்களை வரவழைத்து கணக்கிட்டான். 375K என்றார்கள். மாணிக்கு மாரடைப்பே வந்துவிட்டது. இப்போது சொல்லுங்கள், அவனுக்கு 225K நஷ்டம் வர யார் காரணம்? அப்பணம் எங்கே போனது? யாராவது கொள்ளை கொண்டு போனார்களா? அல்லது அரபுநாட்டுக்குப்போனதா? இல்லையே. இப்படித்தான் பில்லியன்கணக்கில் டாலர்கள் வால்தெருவில் காற்றில் கரைந்து போயின. ஃபைனான்ஸ் வங்கிக்காரர்களால் சொல்லப்பட்டு வந்த பெரிய புள்ளிவிவர எண்களெல்லாம் வெறும் fake number-களாகிப்போயின.

இப்படி செயற்கையாய் போலி எண்களால் உருவான போலி பிரமாண்டம் இப்படி அநியாயத்துக்கும் விழுந்து நொறுங்கியது ஒரு வகையில் நல்லதே. தன்னைத்தானே சரிசெய்து கொள்ள பொருளாதாரம் என்ற அந்த அப்பாவி முயன்றது. ஆனாலும் அதை தன்னைத்தானே சரிசெய்ய விடாமல் அந்த போலி எண்களை காப்பாற்ற நிஜமாய் நோட்டுகள் அடித்து பணத்தின் மதிப்பை வெகுதாழ கொண்டு செல்லவிருக்கின்றார்கள். தற்காலிகமாய் சந்தையை காப்பாற்ற உலவ விடப்படும் பல நூறு பில்லியன் டாலர்கள் தீர்வானது கார் இஞ்சின் இரைச்சலை போக்க வானொலி சத்தத்தை அதிகப்படுத்துவது போன்றதாகும். நிஜ ஆரோக்கியத்தை அது தராது. எனினும் இன்னொரு கிரேட் டிப்ரசனை தவிர்க்க உலகநாடுகள் இதில் அபூர்வமாய் ஒருங்கிணைந்துள்ளன. உலக அளவில் ஒரு ரெசர்வ் பாங்கின் அவசியத்தையும் உலகளாவிய ஒரே கரன்சியின் அவசியத்தையும் இச்சிக்கல் நமக்கு வலியுறுத்தியுள்ளது.

இனி என்ன நடக்கும்.இன்று போல் தொடர்ந்து பங்குசந்தைகள் முன்னேறி நிலமை சரியானால் இன்னும் விலைவாசி இரண்டு மடங்கு ஏறும்.டாலர் அப்படியே கீழாக குட்டிகரணமடிக்க தங்கமும் பெட்ரோலும் விர்ரென மேலே ஏறத்தொடங்கும்.சந்தையில் புழக்கத்தில் விடப்பட்ட பணங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் சாதாரண ஜனங்களை வந்து எட்டும்.வந்து நிறையவே வாட்டும்.அது அப்படியே போய்விட்டால் நல்லது.இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலேபோய் ஹைப்பர் இன்ஃபிளேசன், ஃபுட் ரையாட்ஸ், மார்சியல் லா, மில்லியன் பேர்களை அடைக்க வசதி கொண்ட ரகசிய அண்டர்கிரவுண்ட் ஜெயில்கள், கவர்ண்மென்ட் கிராஷ் அப்படி இப்படியென பல கதைகள் சொல்கின்றார்கள்.

இந்த விளையாட்டில் அணில் அம்பானி இழந்தது 30 பில்லியன் டாலர்களாக்கும். சம்பாதிப்பது மட்டுமல்ல சம்பாதித்ததை தக்கவைப்பததற்கும் ரொம்ப பிராயசப்படவேண்டியிருக்கின்றது. இப்போதெல்லாம் தினமும் நிம்மதியாய் உங்களால் தூங்கமுடிகிறதென்றால் நீங்கள் தான் உண்மையான பணக்காரர்.

தேங்க்ஸ் pkp

25.9.08

ஒரு துகளை தேடி


நூறு ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரான் எனும் துகளை கண்டுபிடித்தார்கள். அதை ஓட விட்டு பின்பு அதனை மின்சாரம் என்றார்கள். இன்றைய நவ நாகரீக மின்னுலகம் மலர்ந்தது.

இதுபோல இன்னொரு துகளும் கட்டாயம் இருக்கவேண்டும். அதை நாம் எப்படியாவது கண்டு பிடித்தேயாகவேண்டும். அதை நாம் கண்டுபிடிக்காததால் தான் இன்னும் அநேக மர்மங்கள் உலகில் நிலவுகின்றன என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள் CERN விஞ்ஞானிகள். நாம் வாழும் இந்த பூமிக்கு புவி ஈர்ப்புவிசை எப்படி வந்தது? அதற்காக காரணம் பூமியின் நிறை என்றால் நிறை என்றால் என்ன? நமக்கு ஒளி தெரியும், அது போகும் வேகமும் தெரியும் அப்படியென்றால் இருளென்றால் என்ன? இப்படி அநேக கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லையாம். பலசமயங்களில் Higgs boson-னு ஒரு துகள் இருப்பதாக தியரிட்டிக்கலாக கணக்கில் போட்டு காலத்தை ஓட்டினாலும் அந்த மகா "கடவுள் துகளை" எப்படியும் பிராக்டிக்கலாக பார்த்துவிடுவது என்ற நோக்கத்தில் தான் ஜெனிவா அருகே அந்த மகாபெரிய எந்திரத்தை நிர்மாணித்திருக்கின்றார்கள். கடவுளுக்கே கொஞ்சம் திக்திக்கென்றுதான் இருக்கும்."பாவிப்பசங்க எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுவாங்களோ"

என்னத்தைக் கண்டுபிடிக்கிறது முதலில் உங்கள் கணிணி நெட்வொர்க்கை பாதுகாப்பா வைக்க கத்துக்கோங்கடாவென ஒருஹேக்கர் கும்பல் ஏற்கனவே LHC-யின் கணிணி நெட்வொர்க்கை ஹேக்கி அங்கே ""We are 2600 - don't mess with us"" என கொடியும் நாட்டிவிட்டு வந்திருக்கின்றார்கள்.விஞ்ஞானிகள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். நல்லகாலம் அடுத்து ஒரு அடி வைத்திருந்தால் அந்த ராட்சச எந்திரத்தின் கணிணி அறையில் நுழைந்திருப்பார்களாம். போதுமடா சாமி என இதுவரைக்கும் ஆன்லைனில் வைத்திருந்த அந்த நெட்வொர்க்கை ஆப்லைனாக்கி விட்டார்கள். அதனால் அவர்கள் இணைய தளமான www.cmsmon.cern.ch இப்போது டவுன்.இத்தனைக்கும் அவர்கள் ஓட்டுவது என்னமோ Scientific Linux ஆம்.
உங்களுக்கு தெரியுமா CERN தான் இன்டர்நெட்டின் பிறப்பிடமும் கூட.நிற்க.

ஏற்கனவே நாம் செய்திருக்கும் அட்டூழியத்தில் பூமி தாங்கமாட்டேங்குது. போகுமிடமெல்லாம் நிலஅதிர்ச்சி, சுனாமி, சூறாவளி, பெருவெள்ளம் அப்படி இப்படினு அது தள்ளாடிக்கொண்டிருக்க இது தேவையா? தப்பி தவறி அது ஒரு "கருந்துளை"யை உண்டாக்கினால் இந்த பூமி தாங்காதே என்பது சிலரின் கருத்து. பிளாக் ஹோல் எனப்படும் இந்த கருந்துளைகள் "bottom less pit" அதாவது அடிவாரமே இல்லாத துளை போன்றது. இதன் ஈர்ப்பு சக்தியும் மிக மிக அதிகம். அந்த பக்கமாய் போகும் ஒளிக்கதிரை கூட இது இழுத்து சாப்பிட்டுவிடுமாம். இந்த மாதிரி ஒரு பிளாக் ஹோல் உருவாகி அது இன்னும் நமக்கு தொல்லை தர அது நமக்கு தேவையாவென ஒரு கும்பல் காட்டு கத்து கத்துகின்றார்கள்.

அட போங்கையா இதுமட்டும் சக்ஸஸ் ஆகி "அந்த" ரகசியத்தை நாங்கள் கண்டுபிடித்துவிட்டால் மனுஷனுக்கு சாவே வராமலிருக்கும் சூட்சுமம் வரைக்கும் நாங்கள் கண்டுபிடித்து விடுவோம். ஏற்கனவே டாலருடன் போட்டி போட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் யூரோ பிராந்தியம் தான் இனி அடுத்த வல்லரசுவென இப்பக்கம் கொண்டாடுகின்றார்கள்.

இப்ப நடப்பது வெறும் வெள்ளோட்டம் தான். அடுத்த ஸ்ப்ரிங்கில் தான் நிஜ விளையாட்டு ஆரம்பமாகின்றது.

"All should leave Geneva"-ன்னு நம்ம நாஸ்ட்ரொடாமஸ் (Nostradamus) தாத்தா முன்னமேயே எதுக்கு சொல்லி வச்சிட்டு போனாருனுதான் தெரியலையே.

(இதெல்லாம் ஒரு சாமானியனின் கருத்துக்கள்.தவறுகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே)


தேங்க்ஸ்.PKP

12.9.08

சிம்ரன் குடும்ப புகைப்படங்கள்




நடிகர் விஜய் குடும்ப புகைப்படங்கள்


Actor Vijay with his son Sanjay




Tamil actor Vijay his wife Sangeetha and his son Sanjay



Actor Vijay with his Mom and Dad




Vijay was born on June 22 1974 to S.A. Chandrasekhar and Shoba Chandrasekhar. His full name is Joseph Vijay Chandrasekhar. He had a sister named Vidhya who died when she was just two. Vijay studied Visual Communications at Loyola College, but dropped out to pursue an acting career. He is interestingly also collegemates with other prominent personalities Surya Sivakumar, Yuvan Shankar Raja, Karthik Raja and Vishnuvardhan.



Actor Vijay as a small kid




Actor Vijay childhood photo as a baby boy.



19.7.08

இளையராஜாவின் இசை அற்புதம்

Illayaraja

http://www.pvv.ntnu.no/~kailasan/album/april_2000/cov5.jpg[ilayaraja.jpg]
இசையின் மகத்துவம் உலகம் அறிந்ததுதான். ஆனால் அந்த இசையைக் கையாளும் விதத்தில்தான் அற்புதங்கள் நிகழ்கின்றன. இசையை மிகச் சரியாகக் கையாள்வதில் ராஜாவுக்கு நிகர் ராஜாதான்.

சமீபத்தில் ராஜாவின் இசை ஒரு மிகப் பெரிய அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது.

ஜெர்மனியைச் சேரந்த தம்பதிகள் அவர்கள். நிறைமாதத்தை எட்டும் தருவாயில் மனைவி. ஆனால் வயிற்றில் சிசுவின் அசைவையே உணர முடியவில்லை. பெர்லின் மருத்துவமனையில் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம் போய் செக்கப் செய்துள்ளனர். அவரும் பல சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டு, குழந்தை அசைவின்றி இருப்பதற்கு என்ன காரணமென்று தெரியவில்லை. ஆனால் சிசுவுக்கு உயிர் இருக்கிறது என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.

உயிர் இருந்தாலும் வயிற்றில் குழந்தை கை கால்களை அசைக்கும் போதுதானே ஒரு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் இருக்கும்...

என்ன செய்வதென்றே புரியாமல் தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவராகப் பார்த்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நம்பிக்கையிழந்து அமைதியாகிப் போனார்களாம். ஒருநாள் இளையராஜாவின் திருவாசகம் இசையை மன நிம்மதிக்காக ஓடவிட்டிருக்கிறார்கள்.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற சான்றோர் மொழி மெய்யாகிப் போனது.

என்ன ஆச்சர்யம்... சில நிமிடங்களில் வயிற்றில் ஒரு அசைவு தெரிந்துள்ளது. இசையை நிறுத்தியதும் அந்த அசைவும் நின்று விட்டது. தொடர்ந்து நான்குமுறை இப்படிப் போட்டுப் போட்டு நிறுத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை இசையைக் கேட்கும்போதும் குழந்தையின் அசைவு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. இசை நின்றதும் சில வினாடிகளில் அசைவும் நின்று போனதாம். அப்போதிலிருந்து தொடர்ந்து ராஜாவின் இசைதான் வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

சரியாகப் பத்தாவது மாதம், குழந்தை ஆரோக்கியமாக, அதுவும் அறுவைக்கு அவசியமின்றி சாதாரணமாகவே பிறந்து, மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

படிக்க கதை போலத் தோன்றினாலும், இச்சம்பவம் நிஜம்தான் என்பதை மெய்ப்பிக்க அந்த ஜெர்மன் தம்பதிகளே சென்னைக்கு வந்திருந்தனர் சில தினங்களுக்கு முன்பு. அவர்கள் முன்பின் இளையராஜாவைப் பார்த்ததும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவரது இசை மட்டும்தான்.

ராஜாவின் உதவியாளரிடம் விஷயத்தைச் சொன்னதும் அவர் உடனே ராஜாவிடம் விஷயத்தைக் கூற அந்தத் தம்பதிகளை நேரில் சந்தித்து குழந்தைக்கும் ஆசி வழங்கியிருக்கிறார் ராஜா.

ஜெர்மனியின் மருத்துவர்கள் பலரும் இந்த இசை அற்புதத்தை ஒப்புக் கொண்டதோடு, ராஜாவின் திருவாசம் சிடியை வாங்கிக் கேட்டு, மொழி புரியாவிட்டாலும் அந்த இசைக் கட்டுமானத்தில் வியந்து போயிருக்கிறார்கள்.

அதோடு மருத்துவத்துறையில் இந்திய இசையால் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற ஆராய்ச்சியிலும் ஜெர்மன் டாக்டர்களை இறங்க வைத்திருக்கிறது இந்த சம்பவம்.

உண்மையில் இந்த அதிசயத்தையெல்லாம் விஞ்ஞானத்தின் துணையின்றி பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள். ஆனால் பாரம்பரியத்தை மறந்து போனதால் நமக்கு நம் பொக்கிஷங்களின் மதிப்பே தெரியாமல் போய்விட்டது.

போகர் மருத்துவத்தை நம்மவர்கள் ஓரங்கட்ட, அதை இன்னும் வெற்றிகரமாகக் கையாண்டு சாதனைகள் புரிகிறார்கள் ஜெர்மானியர்கள்.

இந்திய இசையை, இசைக் கலைஞர்களை பாதுகாக்க, கௌரவிக்க நாம் தவறிவிடக் கூடாது. இளையராஜா என்பவர் வெறும் திரை இசைக் கலைஞர் மட்டுமல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக உணர வைத்திருக்கும் சம்பவம் இது.
Source: Oneindia

17.7.08

ஆஸ்திரேலியாவில் அதி துல்லிய (High Definition) அலைச்சறுக்கு வீடியோ.

இந்த வீடியோ ஆஸ்திரேலியாவில் கர்ரம்பின் தங்க கடற்கரை என்னும் இடத்தில் அதி துல்லிய வீடியோ கேமரா மூலம் எடுக்கப்பட்டது. அதி துல்லிய வீடியோ காண வலது பக்கம் "HD is OFF" எனும் பொத்தானை இயக்கி "ON" செய்யவும்.
Fun with Twixtor - Surf at Currumbin from Geoff Charters on Vimeo.