25.6.08

கடிவாளங்கள்


இன்று வீட்டுக்கு வீடு கணிணி.30 வருடத்திற்கு முன்பு இப்படி வீட்டுக்கு வீடெல்லாம் கம்ப்யூட்டர் வருமென்று யாராவது கனவு கண்டார்களா? தெரியாது. நாசாவிலும், ஆராய்ச்சிக் கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் மட்டுமே இருக்கும் விலையுயர்ந்த மிருகமாக அது அப்போது கருதப்பட்டது.

இன்று நடு அறை கணிணியில் அப்பா பிபிசியில் செய்தி பார்த்துக் கொண்டிருக்க உத்து பாக்குது குட்டிப் பாப்பா. தாத்தா கிரிக்கெட் ஸ்கோர் கேட்டு வந்து நிற்கின்றார். பாட்டிக்கு யூ.கேயிலுள்ள தன் தங்கையை வெப்கேமில் பார்க்க ஆசை. கான்எடிசனுக்கு (மின்சாரத்துக்கு) பணம் கட்டுவது காம்கேஸ்டுக்கு (இணையம்) பணம் கட்டுவது என அம்மாவுக்கு தலைக்கு மேல் வேலையுள்ளது. எல்லாம் கணிணி வழிதான்.

இப்படி டி.வி போல் நம் குடும்பத்தில் புதுசாய் அங்கமாகிப்போன கணிணியை நம் குடும்பத்துக்கு ஏற்ற நண்பனாக மாற்ற சில கடிவாளங்கள் நாம் போட வேண்டியுள்ளது. அறிந்தோ அறியாமலோ நம் வீட்டு சிறுசுகள் தவறாக தவறான தளங்களுக்கு செல்ல அல்லது வயதுவந்தோர்க்கான தளங்களுக்கு சென்றுவிட வாய்ப்புகள் உள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள், அசிங்கங்கள், மர்ம நபர்கள், ஜாதிமதபேத வெறிகள் இதிலிருந்தெல்லாம் நம் குழந்தைகளை கொஞ்ச காலமாவது விலக்கிவைத்திருக்கலாம் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமாகவே இருக்கும். நீங்களும் அப்படிப்பட்ட ஒரு பெற்றோரானால் உங்கள் கணிணிக்கு இலவசமாய் கடிவாளம் போடலாம்.எப்படி?

ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உணர்ந்த Blue Coat Systems எனும் நிறுவனம் K9webprotection எனும் மென்பொருளை அனைத்து பெற்றோர்களுக்கும் இலவசமாய் வழங்குகின்றார்கள். இம்மென்பொருளை நீங்கள் இறக்கம் செய்து உங்கள் கணிணில் நிறுவினால் நிச்சயம் ஒரு பாதுகாப்பை உணர்வீர்கள். அடிப்படையிலேயே பல தளங்களை தடைசெய்யும் இம்மென்பொருளை உங்கள் விருப்பற்றிற்கு ஏற்றார் போல் கூடுதல் தளங்களை கூட்டவோ அல்லது சில தளங்களின் மீதான தடையை நீக்கவோ செய்து கொள்ளலாம். தவறுதலாக அவர்கள் மோசமான இணையதளம் பக்கம் போனால் "Prohibited" screen வரும் அல்லது ஒரு குரைக்கும் நாய் வருமாறு செய்யலாம். நீங்கள் உசாராகி விடலாமே?.

கீழ்கண்ட சுட்டியிலிருந்து நீங்கள் இறக்கம் செய்துகொள்ளலாம்.
(Free registration required to get the License)

http://www.getk9.com

பொதுவாக உங்கள் வீட்டு கணிணியை எல்லாருக்கும் தெரியும் வகையில் ஒரு பொது அறையில் வைப்பது நல்லது, அது போல குழந்தைகளுக்கு சில நடைமுறை அபாயங்களை சொல்லிக்கொடுப்பதும் தேவையே, உதாரணமாக சாட் ரூம் பேச்சுக்கள், முகமறியாதோரிடம் விலாசம் தொலைப்பேசி எண்கள் கொடுப்பதின் அபாயம் போன்றவற்றை சொல்லிகொடுத்து உசார் படுத்தி வைத்தல் எப்போதுமே நல்லது.

17.6.08

வெப் உலக கின்னஸ் சாதனைகள்



பயர்பாக்ஸ் உலாவி மீது கொண்ட காதலால் நான் ஒன்றும் பயர்பாக்ஸ் பயன்படுத்த தொடங்கவில்லை. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மேல் வந்த வெறுப்பே அது என்னை பயர்பாக்ஸ் பயன்படுத்த வைத்தது. இப்போது அதுவே என் பிரதான பிரவுசராகியும் போனது. ஆயினும் பழைய பாசத்தால் சில சமயம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்த விழைவேன். போன வேகத்தில் மீண்டும் FF-யிடமே வந்துவிடுவேன். அப்பப்போ கிராஷ் ஆகுதல் ,அதன் ஆமை வேகம் IE மீது வெறுப்படிக்க வைத்து விட்டது. நீங்கள் இணைய உலாவரும் போது கூட அசாதாரண வேகமின்மை அல்லது எந்த error-ம் கொடுக்காமல் வெற்று பக்கத்திலேயே அரைமணி நேரமாய் நிற்றல் போன்ற அறிகுறி தெரிந்தால் ஒரு வேளை அது இணைய இணைப்பு பிரச்சனையாய் இல்லாமல் உங்கள் பிரவுசர் பிரச்சனையாய் இருக்கலாம். பயர்பாக்ஸ்க்கு தாவிவிடுங்கள். FF-யின் வேகம், வகை வகையான இலவச Add-on கள் அதன் ப்ளஸ்கள். அலுவலகத்தில் இப்போதெல்லாம் பயர்பாக்ஸ் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் போல் ஆகிவிட்டது. IE பயன்படுத்துபவர்களை பாவம் விவரம் அறியாதவர்களென்றும் FF பயன்படுத்துகிறவர்களை damn smart விவரம் அறிந்தவர்களென்றும் மூளை தானாகவே பகுத்துவிடுகின்றது.

துரதிஷ்டவசமாய் தமிழில் இன்னும் சில வலைப்பக்கங்கள் பயர்பாக்ஸில் ஒழுங்காய் தெரிவதில்லை. அவற்றை படிப்பதற்காக வேண்டியே IE-யை திறக்க வேண்டியுள்ளது. நீங்கள் சொந்தமாய் தமிழில் வலைப்பக்கம் வைத்திருந்தால் தயவுசெய்து அது Firefox browser-யிலும் சரியாய் தெரிகிறதாவென சரிபார்க்கவும்.
நண்பர் Kricons-ன் blogger template யோசனையையே இங்கும் வழங்குகிறேன். "Firefoxல் அனைவரது வலைபதிவும் நன்றாக தெரிய பதிவை எழுதும் போது text-align justify யை பயன் படுதாமல் இருந்தாலே போதும்."

பயர்பாக்ஸ் உலாவியில் நான் சமீபத்தில் அறியவந்த ஒரு அருமையான Add-on பெயர் Piclens. கூகிள் படங்கள் தேடலில் நமீதாவை நீங்கள் தேடுகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம்.(பின் என்ன காந்தியையா தேடுவோம்) அது இணையத்தில் நமீதா படங்களாய் தேடி காட்டும். அந்த படங்களை அட்டகாசமாய் 3D தாக்கத்தில் "ஸ்லைடு ஷோ"போல இறக்கம் செய்யாமலே பார்க்க இந்த Add-on உதவுகின்றது.

நிற்க.
நாளை இந்த நம் அபிமான பயர்பாக்ஸ் ஒரு கின்னஸ் உலக சாதனை செய்யவிருக்கின்றது. 24 மணிநேரத்தில் உலகிலேயே அதிக அளவில் இறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் என்ற சாதனையை அது செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இது வரை உலகெங்கும் 1,247,084 பேர் அந்த புது பயர்பாக்ஸ்3-ஐ ஜூன் 17 அன்று இறக்கம் செய்யப் போவதாக தெரிவித்திருக்கின்றார்கள். இந்தியாவிலிருந்து மட்டும் 22000 பேர் அதை இறக்கம் செய்யப் போவதாக தெரிவித்திருக்கின்றார்கள். நீங்களும் இந்த சாதனையில் பங்கு கொள்ளலாம். நாளை அதாவது ஜூன் 17 அன்று பயர்பாக்ஸின் தளம் www.mozilla.com/firefox/ சென்று புதிய FireFox version 3-யை முழுவதுமாய் இறக்கம் செய்து (no upgrade please) உங்கள் கணிணியில் நிறுவி இச்சாதனையில் பங்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு.

http://www.spreadfirefox.com/en-US/worldrecord/

இது போல இன்னொரு உலக சாதனையை செய்ய http://www.internetbigbang.com தயாராகிக்கொண்டிருக்கிறது. அதாவது ஒரே நேரத்தில் அதிகமான நபர்கள் ஆன்லைனில் இருந்த தளம் என்ற பெயரை இது எடுக்கப்போகின்றது. இதுவரை 836 639 பேர் ஒரே நேரத்தில் இத்தளம் வர ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஜூன் 20-ம் தியதி இச்சாதனை நடத்தப்படவிருக்கின்றது.

இனி இதுமாதிரி நிறைய சுவையான உலக சாதனைகள் இணையத்தில் நடத்தப்படலாம். ஜாலி தான்.
thanks pkp

10.6.08

பச்சக்கலரு சிங்கிசாங்




வலையுலகில் நல்ல பசங்ககளுக்கும் கெட்டப் பசங்ககளுக்கும் உள்ள தொடர் போரில் யார் வெற்றி பெறப் போகின்றார்கள் என்பது இன்னும் சஸ்பென்சாகவே உள்ளது.


நல்ல பசங்க எட்டடி பாய்ந்தால், எங்கோ கணிணியே கதி என்று பேஸ்மென்டில் கிடக்கும் கெட்ட பயல்கள் பதினாறடி பாய்கின்றனர். முன்பெல்லாம் கணிணி ஹேக்கிங் என்பது ஒரு குறிப்பிட்ட சாராரின் ஆர்வமாகவும் பொழுது போக்காகவுமே இருந்து வந்தது. இப்போது அது முற்றிலும் உருமாறி வணிக ரீதியாகிக் கொண்டிருக்கின்றது. பேட்டை ரவுடிகளைப் போல் போட்டி பொறாமை உள்ள எதிரிகள் மீது கெட்ட பசங்ககளை ஏவிவிட்டுவிட்டு பின்பு அவர்களை காசுகொடுத்து சரிபண்ணுவது வரைக்கும் வந்துவிட்டது.


முன்பெல்லாம் கணிணி வைரஸ்கள் உங்கள் கணிணியை தின்பதை பார்த்து, பெரு நிறுவனங்களை கலங்கடித்ததை பார்த்து அதை உருவாக்கியோர் மகிழ்ந்தனர். அதோடு விட்டு விட்டனர். இப்போது கணிணி வைரஸ் வழியாயும் ஏதாவது காசு பண்ணமுடியுமா வென்று பார்க்கின்றார்கள். விசேஷ நாட்கள் தோறும் மின்னஞ்சல் வாழ்த்து வடிவில் உலா வரும் இன்றைய புகழ்பெற்ற ஸ்டார்ம் வைரஸ் (Strom worm) உங்கள் கணிணியில் வந்து விட்டால் அவ்வளவு தான்.


அமைதியாய் இருந்துகொண்டு இணையம் வழி உங்களுக்கு பல விளம்பரங்களை பாப் செய்து காட்டுமாம். அது வழி அதை படைத்தோர் காசு பண்ணுகின்றார்கள்.தினமும் 2 மில்லியன் டாலர்கள். எப்படி இருக்குது கதை.




ஒரு இணையதளம் நம்பத்தகுந்த இணையதளம் தானா அதில் காசுகொடுக்கல் வாங்கல் தைரியமாக வைச்சுக்கலாமா இதை எப்படி கண்டறிவது? நல்ல பசங்க எல்லாம் ஒன்று சேர்ந்து Extended Validation SSL certificates -ன்னு ஒன்று கொண்டு வந்திருக்கின்றார்கள். பயந்துடாதீங்க. எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய அத்யாவசிய விஷயம் தான் இது.


அதாவது நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 வைத்திருந்தால் அதில் போய் www.paypal.com என டைப்புங்கள். சட்டென மேலிருக்கும் அந்த விலாசச்சட்டம் பச்சை நிறத்தில் மாறும். அதாவது பேபால் இணையதளம் பாதுகாப்பான இணையதளம். நீங்கள் பாதுகாப்பான இணைய பக்கத்தில் தான் இருக்கின்றீர்கள் என அது காட்டுகின்றதாம்.


பழைய SSL certificate உள்ள தளங்களில் பூட்டு ஒன்று தோன்றும் அது வழி அது பாதுகாப்பான இணைய பக்கம் என தெரிந்து கொள்ளலாம். ஆனால் அந்த விஷயம் கணிணியில் நாலும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.சராசரிகளுக்கு தெரியாதல்லவா அதனால் தான் இப்படி கலர் போட்டு காட்ட முடிவெடுத்திருக்கின்றார்கள்.புதிதாக வெளிவரவிருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 3-ம் இது மாதிரி பச்சை வண்ணம் காட்டுமாம்.


ஆக இனி அட்ரஸ்பாரில் பச்சைவண்ணம் இருக்கும் வரை அப்பக்கத்தை நம்பி உங்கள் கடவுசொல்லை தட்டலாம். பச்சைநிறமில்லாவிட்டால்... உஷார் அது பிஷ்ஷிங்(போலி) சைட்டாக கூட இருக்கலாம்.இது சற்று புதிய தொழில் நுட்பமாதலால் அநேக வணிக இணையதளங்கள் இப்போதுதான் இதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.


சீப்பாகவும் எளிதாகவும் பழைய SSL certificate-கள் கிடைப்பதால் சமீபகாலமாக பல போலி தளங்கள் கூட அவைகளை வாங்கி பிரவுசரில் பூட்டு படம் காட்டி பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதால் நல்ல பசங்க இதுமாதிரி Extended Validation SSL certificates கொணாந்திருக்கிறார்கள்.


ஒரு EV சர்டிபிக்கேட் வாங்குவதற்குள் உயிர்போய்விடுமாம். ஏகப்பட்ட விலை. கன்னா பின்னாவென சோதனை சரிபார்த்தல் இருக்குமாதலால் கெட்டபசங்க கொஞ்சம் அடங்கி கிடப்பார்கள் என்பது நல்லதுகளின் எண்ணம்.




மரியாதைக்குரிய பேராசிரியர் சாலமன் பாப்பையா ஐயா அவர்களிடம் இதைச் சொன்னால் "அட இதெல்லாம் வெளங்குமாய்யா" என்பார். :)


thanks pkp

5.6.08

போலி வெப்கேமும் சில சுட்டிகளும்



ஏதாவது ஒரு மெசெஞ்சரில் சாட்டிங்கில் இருக்கின்றீர்கள்.உங்களிடம் வெப்கேமே இல்லை.எனினும் மறுமுனையில் இருப்பவரிடம் உங்களிடம் வெப்கேம் இருப்பது போல் பாவ்லா காட்ட ஆசையா?.அவர் போன்றோர்க்கு உதவுவது தான் இந்த போலி வெப்கேம்.


Fakewebcam


இந்த மென்பொருளை நிறுவிவிட்டு பின் அதில் ஒரு போலி வெப்கேம் வீடியோவை ஓட விட்டு விட்டால் மறுமுனை மனசு அதை உண்மையென்றே நம்பிவிடுமாம். டைப்புவதில் மட்டும் அல்ல வெப்கேமில் தோன்றுபவரிலும் பொய் இருக்கலாம்.உசாராயிருங்கள் அவதார்களே.


கூகிளில் inurl:view/index:shtml


அல்லது inurl:viewerframe?mode=


எனத் தேடினால் ஆயிரக்கணக்கான திறந்த கேமராக்கள் உங்கள் பார்வைக்கு வரும்.அதெல்லாம் அங்காங்கே ரோடுகளிலும் ஓட்டல்களிலும் பார்க்குகளிலும் ஒழுங்காக பாதுகாக்கப்படாத CCTV security கேமராக்கள்.சிலவற்றை கிளிக்கினால் இன்டரஸ்டிங் காட்சிகள் கூட உங்களுக்கு கிட்டலாம். இதை பார்வையிட Axis Live View அல்லது live applet அல்லது webview livescope இதிலெதாவது ஒரு ஆக்டிவெக்ஸ் கன்ட்ரோல் நீங்கள் நிறுவ அனுமதிக்க வேண்டிவரும். அவ்வளவுதான்.முழுக் கேமராவும் உங்கள் கைபிடிக்குள் வந்து விடும்.


இஷ்டப்படி கேமராவை மேலே கீழே இடது வலது வென நகர்த்தலாம்.கேமரா தானாகவே நகர்வதை பார்த்து அங்கிருந்து நோக்கும் அன்னியர்கள் சற்று கிலியிலேயே கேமராவை பார்ப்பர்.உதாரணத்துக்கு கீழ்கண்ட சுட்டியைப் பாருங்கள்.எங்கோ ஒரு ரெஸ்டாரன்டின் பாதுகாப்பு கேமரா பாதுகாப்பேயின்றி.


http://yamucha.miemasu.net:81/ViewerFrame?Mode=Motion&Language=1


இது இன்னொன்று.உலகின் எங்கோ ஒரு தெருமுனை.நான் பார்த்ததிலேயே மிக வேகமாக ஸ்டிரீம் செய்யும் கேமரா.லைவ்வாய் உலகை காட்டுகின்றது.


http://213.196.182.244/view/index.shtml


கீழ்க்கண்ட இணையதளத்தில் இதுமாதிரி ஏகப்பட்ட அனாதை கேமராக்களை கண்டுபிடித்து உங்களுக்காக கண்காட்சி போல் அடுக்கிவைத்திருக்கின்றார்கள்.


http://www.opentopia.com/hiddencam.php


இந்தியாவிலும் ஏன் சென்னையிலும் இது போல் கேமராக்கள் சாலைகளிலுள்ளதுவென கீழ் கண்ட சுட்டியில் சொல்கின்றார்கள்.எதுவும் வேலை செய்வதாய் தெரியவில்லை.


http://www.webcamgalore.com/EN/India/countrycam-0.html


நியூஜெர்ஸி டர்ன்பைக்கில் டிராபிக் எப்படி இருக்குதுவென கேமரா வழி பார்க்க நாங்கள் அடிக்கடி பயன்படுத்தும் சுட்டி இது.


http://www.state.nj.us/transportation/traffic/cameras/