20.4.08

எளிய அவுட்லுக் எக்ஸ்பிரஸ் backup மென்பொருள்


outlook Express மின்னஞ்சல் மென்பொருளை பயன்படுத்தும் நண்பர்கள் அநேகர்.என்னத்தான் உயர்நுட்ப மின்னஞ்சல்கள் like Outlook,Lotus Notes மென்பொருள்கள் இருந்தாலும் சிறு/குறுஅலுவலகம் மற்றும் வீடுகளில் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் ராஜாங்கம் தான்.
என்ன வேண்டுமோ அது மட்டும் கொண்டதோடு POP,IMAP,HTTP,News Group Reader இதெல்லாம் கொண்டு இது இருப்பதால் பெரும்பாலும் திருப்தி அளிக்கிறது.ஆனால் வந்திருக்கும் மெயில்களை பத்திரமாக் backup செய்ய,இருக்கும் விலைமதிப்பற்ற address book-ஐ பாதுகாப்பாய் வைத்திருக்க வழியுள்ளதா?.
இதோ ஒரு வழி..இலவச எளிய அவுட்லுக் எக்ஸ்பிரஸ் backup மென்பொருள்.இதை ஓட்டி உங்கள் மெயில்களை பத்திரமாய் இன்னொரு டிரைவிலோ அல்லது CD,DVD,USB டிரைவிலோ பேக் அப் எடுத்து வைத்திருங்கள்.எப்போது உதவும் அது என்று சொல்லமுடியாது.
Product Page
http://www.oehelp.com/OEBackup/Default.aspx
Direct download link
http://www.oehelp.com/OEBackup/oeqbfull.zip
Free Outlook Exprees Backup software

சென்னை வந்த டெல்


குர்கான்,மொகாலி,ஐதராபாத்,பெங்களூரில் வாடிக்கையாளார் சேவை மையங்களைக் (Customer Service Call Centers)கொண்ட அமெரிக்காவைச் (Round Rock, Texas) சேர்ந்த டெல்-Dell நிறுவனம் இந்தியாவில் அதுவும் சென்னையில் தனது கணிணி உற்பத்தி தொழிற்சாலையை (Manufacturing Unit) திறக்கின்றது இனிப்பான செய்தி.

ஏற்கனவே 8 உற்பத்தி தொழிற்சாலைகளை கொண்ட இந்நிறுவனத்திற்கு ஆசிய பசிபிக் பகுதியில் இது 3 ஆவது உற்பத்தி தொழிற்சாலை.50 ஏக்கரில் ஸ்ரீபெரும்புதூர் Hi-Tech Park-ல் 280 கோடி ரூபாய் செலவில் இது அமையவிருக்கின்றது.

அடுத்த ஆண்டு மத்தியில் "Made in India" என்ற பொறியோடு dell கணிணிகள் ஓகோவென வெளியாகும்.ஒரு ஆண்டுக்கு 400,000 கணிணிகள் உற்பத்திசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

20000 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.1984- ஆம் ஆண்டு Michael Dell (படம்) என்ற University of Texas ( Austin)மாணவரால் வெறும் 1000 டாலரில் துவக்கப்பட்ட இந்நிறுவனத்தின் இன்றைய வளர்ச்சி அபாரம்.இன்று 63,700 பேர் இந்நிறுவனத்தில் வேலை செய்கின்றார்கள்.


தற்போதைய President மற்றும் CEO Kevin Rollins.சுவையான தகவல் என்னவென்றால் இந்நிறுவன கணிணிகள் மற்றும் மடிக்கணிணிகள் கடைகளில், மால்களில் விலைக்கு கிடைப்பதில்லை.இணையம் மற்றும் தொலைபேசி வழியே தான் மொத்த வர்த்தகமும் நடக்கின்றது.

இவர்கள் கஸ்டமர் சர்வீஸ் ரொம்ப பிரபலம்.

Alienware எனப்படும் உச்ச வகை மடிக்கணிணிகளும் இப்போது இவர்களோடதே.

20 ஆண்டுகளுக்கு முன் இருந்த 1GB ஹார்டுடிஸ்க்



கடந்த இருபது ஆண்டுகளில் விஞ்ஞானம் கண்ட வளர்ச்சி எத்தனை பிரமாண்டம் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.


மேலே படத்தை பார்த்தாலே நன்கு புரியும். 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த 1GB ஹார்டுடிஸ்க்கை தூக்க குறைந்தது இருவர் வேண்டும். இன்றைய 1GB SD டிரைவ் விரல் நுனியில் நின்றுவிடுகின்றது.


இது இப்படியேப் போனால் பத்துவருடம் கழித்து விரல் நுனியில் என்ன இருக்கும் என யோசித்துகூட பார்க்க இயலவில்லை. எங்கு போகின்றோம்னும் தெரியலை. எனக்கு அவ்வப்போது மின்னஞ்சல் செய்யும் வலையுலக நண்பர் MSK இப்படியாக எழுதுகின்றார்.


"உங்களது வலைப்பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் வலையோடிகளில் நானும் ஒருவன்.சமீபகால உங்களது வலைப்பதிவுகளில் ஒரு எழுத்தாளரின் ஆழம்,வலையோடி வாசகர்களின் தேடல் என்ன,தேவை என்ன என்பதைத் தெளிவாக கண்ணூட்டம் காண்பவரின் கருத்தாழம் வெளிப்படுகிறது.வலைப்பின்னல் என்பதும்,வலைத்தேடல் என்பதும் பொழுதுபோக்கு என்ற நிலை மாறி,இப்பொழுது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. உணவு, காற்று, நீர்,ஒளி இவற்றுக்கு அடுத்தபடியாக இன்றைய மானுடப்பிறப்பின் ஒரு அங்கமாக மாறிப்போனது வலைப்பின்னல்.இன்றைய நாளிலிருந்து 20 அல்லது 25 வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது அன்றைய மனிதனின் (வலைப் பின்னலற்ற)வாழ்க்கையில் இந்த உலகையும்,உறவுகளையும் தன்னோடு சார்புபடுத்திக் கொள்ள சிறிதளவேணும் காலம் கிடைத்திருக்கும்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் இதுவும் இயந்திரமயமாகிப் போனது. மெக்ஸிகோவில் இல்லறம் கொண்ட மகனுடன் வலைப்பின்னலில் முகம் பார்த்துப் பேசி, மனதில் பேரன்பும்,விழிகளில் வெள்ளத்தையும் ஒடவிடும் மதுரைத் தாய்.மலைக்கும் மடுவுக்கும் தொடர்பு கொள்ள இங்கு முடியும் என்றாலும் வலையோடலில் அன்பும்,பாசமும் ஒடமுடிவதில்லை.எங்கு முடியும் இந்த வறட்சியான வளர்ச்சி? உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம்,தெரிந்திருந்தால் தெரிவியுங்கள் எனக்கு."


என்னத்தை சொல்ல நான். விஞ்ஞானம் வளர வளர ஆயிரம் நன்மைகளை நாம் கண்டாலும் அதற்கேற்றார் போல் நாம் இழக்கும் இழப்புகளும் சொல்லிமாளாதனவே.


அந்தகாலப் பெரியோர் சொன்ன வாக்கு் தான் நினைவுக்கு வருகின்றது.


வருந்தி அழைத்தாலும் வராதன வாரா.


பொருந்துவன போம் என்றால் போகா.