17.4.08

கடி-நகைச்சுவை




ஜவகர்லால் நேரு ரொம்ப மோசமாமே?


ஆமாம்.ஏன்?


அவரு "ரோஜா"வை வச்சிருந்தாரே.

வரிகள்-வெற்றி


வெற்றி வெற்றி என்பது யாதெனில்

ஓயாத புன்முறுவலுடன் பல் அறிஞர்களின் மரியாதைகளையை அள்ளிக்கொண்டு

சிறுகுழந்தையோடு குழந்தையாய் கூத்தாடி உண்மையான விமர்ச்சனங்களை வாங்கிக்கொண்டு

காட்டிக்கொடுக்கும் நண்பர்களைத் தாங்கிக்கொண்டு

அழகை ஆராதித்து அடுத்தவர் திறனை வெளிக்கொணர்ந்து

வாழும்பூமியை இன்னும் வளமாக்க துடிப்பான குழந்தையையோ-

இல்லை செழிப்பான துறவையோ-

இல்லை சுதந்திரமான ஒரு சமூகத்தையோ

உருவாக்கி உன் வாழ்வால்

இன்னொரு உயிர் நிம்மதியாய் மூச்சுவிடுகிறது

என்றால் அதுவே உன் வாழ்வின் வெற்றியாகும்

-ரால்ப் வால்டொ எமெர்சன்


What is success?

To laugh often and much;

To win the respect of intelligent people and the affection of children;

To earn the appreciation of honest critics and endure the betrayal of false friends;

To appreciate beauty; To find the best in others; To leave the world a bit better, whether by a healthy child, a garden patch or a redeemed social condition;

To know even one life has breathed easier because you have lived;

This is to have succeeded.

-Ralph Waldo Emerson

தனிமை இந்த தனிமை..



வரிகள்புதன்-38
காத்திருந்தான் தனிமை இந்த தனிமை..


கொடுமையிலும் கொடுமை..


இனிமை இல்லை வாழ்வில்..


எதற்க்கு இந்த இளமை...


என் நான் செய்த பாவம்..


அழகு மலர் ஆட..


அபினயங்கள் கூட..


சிலம்பொலிகள் புலம்புவதை கேள்..

நகைச்சுவை-அமெரிக்கர் பெங்களூர் வருவதாக


பிடித்ததுசனி-39
இந்த வருடம் பெப்ரவரி வாக்கில் ஒரு அமெரிக்கர் பெங்களூர் வருவதாக இருந்தது.இந்தியாவை பற்றி விவரம் தெரிந்தவர்களிடமிருந்து சில தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என நினைத்த அவர் தன் வலைப்பூவில் இந்தியாவை பற்றிய பயண அறிவுரைகள் யாராவது கொடுக்க முடிந்தால் கொடுங்களேன் என கேட்டிருந்தார்.

ஒரு அமெரிக்கர் பதில் எழுதினார் "தவறாமல் ஒரு அணுகுண்டு எடுத்து செல்லவும்.பெங்களூர் டிரிப் முடிந்து திரும்பும் போது அதை போட்டுவிட்டு வரவும்.

அமெரிக்கர் வேலைகளையெல்லாம் பெங்களூர்காரர்கள் திருடிவிட்டார்கள்".-நல்ல அறிவுரை என்று அந்த அமெரிக்கர் நொந்துபோய் இருந்த போது சில நாட்கள் கழித்து இன்னொரு இந்தியர் அதற்கு பதில் எழுதி இருந்தார் -"அப்படியே ஒரு குண்டை சியாட்டிலிலும் போட்டுவிடுங்கள்.

அவர்கள் எங்கள் திறமைமிக்க எஞ்சினியர்களையெல்லாம் அபகரித்து வைத்திருக்கிறார்கள்".-அடப்பாவி அடப்பாவி அட்ப்பாவிகளா...... இங்க ஏற்கனவே பாபுகாரயும்,எஸ் எம் சாரயும் குண்டுபோட்டு வீட்டுக்கு அனுப்பியாச்சு.

அங்க சார்ஜ் புஷ்ஷயும்.......கொஞ்சம் செப்டம்பர் வர வெய்ட் பண்ணுங்க.ப்ளீஸ்....

எல்லோரும் நல்லா இருக்கனும்



தினமலரை அங்காங்கே திட்டி எழுதி இருக்கிறார்கள்.எனக்கொரு நினைவு.2002 என நினைக்கிறேன்.

ஐடி பபிள் உடைந்திருந்த நேரம்.

நியு எகனாமியின் அபாயம் குறித்து பத்திரிகைகள் பக்கம் பக்கமாய் எழுதிகொண்டிருந்தன.தினமலரில் ஒரு செய்தி துணுக்கு படித்தேன்.அது இப்படியாக போகிறது."சில மாதங்களுக்கு முன்பு வரை ஐடி எனப்படும் கம்ப்யூட்டெர் படிதவர்கள் பண்ணின பந்தாவுக்கு அளவே இல்லை.

கல்லூரி முடித்திருந்தாலே போதும் கை நிறைய சம்பளம் என இருந்தது.ரெஸ்டாரென்ட்தோரும் இளைஞர் பட்டாளங்கள்.இஷ்டத்துக்கு செலவு செய்து கொண்டிருந்தனர்.இப்போ IT பபிள் உடைந்து விட்டதால் எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது.

பந்தாபண்ணிதிரிந்த இளைஞர் கொட்டம் அடங்கியிருக்கிறது" என்கிறரீதியில் மகிழ்ச்சி தொனியில் எழுதி இருந்தது.As a IT guy ஆத்திரத்தில் தினமலருக்கு எழுதலாம் என நினைதேன்.

மீண்டும் மௌன வாசகனாகிவிட்டேன்.வேலைஇல்லாமல் நம் இளைஞர் சுற்றினால் தினமலருக்கு என்ன சந்தோசமோ.

ரொம்ப வருத்தமாகிவிட்டது.இப்போ அவுட்சோர்சிங்கால் நம் இளைஞருக்கு வேலை கிடைத்திருக்கிறது.

அதற்க்கு எதாவது ஆபத்தென்றால் மீண்டும் தினமலர் சந்தோச பட்டாலும் படும்.எல்லோரும் நல்லாஇருந்தால் நாமும் நல்லா இருக்கலாம் என்பதை எப்போ தினமலர் புரிந்து கொள்ளபோகிறதோ.

உன் நினைவில்



உன் நினைவில்
நெஞ்சம் முழுதும் உன் நினைவு புதிதாய் எதையும் பிடிக்கவில்லை கண்கள் முழுதும் உன் உருவம் துளிவிட்டு தினமும் துடைக்கின்றேன் சேர்ந்திருந்த கால வசந்தங்களால் இவ்வலைகள் அமர்ந்து அழிந்தால்கூட அப்படியே உன் நினைவில் தவமிருப்பேன் இன்னுமோர் சகாப்தம் வாழ்ந்திருப்பேன்

நகைச்சுவை-கடி வாங்கலையோ கடி


கடி வாங்கலையோ கடி
1.இரட்டை குழந்தைகளில் ஒருத்தன் பெயர் பீட்டர் என்றால் இன்னொருத்தன் பெயர் இன்னா?Repeater

2.கடலை பாத்து tide என்னா சொல்லி இருக்கும்?Long time no sea

3.கணக்கு புத்தகம் ஏன் பெஜாரா இருக்கு?It has got lot of problems to solve

4.முருகனால நெட் ப்ரொஸ் பண்ணமுடில ஏன்?Because mouse is with pillaiyaar

5.காக்கை ஏன் கருப்பா இருக்கு?Because its mummy and dady is black

அருமை காளையே-நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில்




அருமை காளையே
நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் மட்டும் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். ஒரேயடியாய் 750 மைல்கள் தொலைவிலுள்ள மிச்சிகனில் கடாசிவிட்டார்கள். 12 மணிநேர சாலை பயணம்.

பெரிதாய் களைப்பு ஒன்றும் இல்லை.வந்து சேர்ந்தாயிற்று. இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கு தான். மிச்சிகன் ஏரி கடல் போல் கிடப்பது பிரம்மிப்பாய் இருக்கின்றது.


அமெரிக்காவை பற்றி ஏழுதி ரொம்ப நாளாகி விட்டது.ஆரம்ப காலங்களில் "அமெரிக்கா போறீங்களா?"என்கின்ற தலைப்பில் தொடர்வாய் பல பதிவுகள் எழுதினது நினைவுக்கு வந்தது.


எவ்வளவாய் மாறி இருக்கின்றேன். "Made in China" சாதனங்களில் ஈய விஷமிருக்குமென அமெரிக்கர்கள் பயந்து போனதாலோ என்னவோ இப்போதெல்லாம் கடைகளின் பிளாஸ்டிக் சாதனங்களில் "Made in Mexico"-ன்னு பெரிதாய் போட்டு பின் "Some parts Made in China"-ன்னு சிறிதாய் லேபல் போடுகின்றார்கள்.திரைக்கு பின்னால் நடப்பது ஆள்றவனுக்குதான் தெரியும்.தெருவுக்கு தெரு சாரைசாரையாய் வீடுகள் விலைக்கு கிடக்கின்றன.ஆனால் வாங்கத்தான் யாரும் இல்லை.


சமீபத்தில் புதுவீடுகளால் உருவாக்கப்பட்ட அநேக புறநகர் நகர்கள் மனித சஞ்சாரமற்று போய் பேய்நகர்களாகிப் போயின.தேர்தலுக்கு பின் இந்த வீட்டின் விலைகள் ராக்கெட்டில் ஏறலாம்.வீடுகள் மட்டுமே ஒப்பிட்டு பார்க்கும் போது இப்போது சீப்பாய் கிடைக்கின்றன.மற்றவை எதை தொட்டாலும் விலைவாசி ஷாக் அடிக்குது நம்மூர் போலவே.


வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றதாம்.ஆடம்பர, ஆத்திர அவசியமில்லாத புராஜெக்ட்கள் தற்காலிகமாய் நிறுத்திவைக்கப்படுள்ளன.டிவியில் சிக்கனமாய் செலவு செய்வது எப்படி-னு வகுப்பு எடுக்கின்றார்கள்.

அப்படி தான் இலவச சர்வதேச போன்கால்கள் செய்ய http://www.talkster.com/ பற்றி தெரிந்து கொண்டேன்.இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை எதிர்த்து சண்டை போட்ட முன்னாள் ராணுவவீரன் கூட டொயோட்டா அல்லது ஹாண்டா பக்கமே சாய்கின்றான் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

நல்ல மைலேஜ் மற்றும் நோ பிராப்ளம் பிராண்ட்களாம்.


அகிம்சை வழியே எங்கள் தீர்வு என்பவர்கள் கிளின்டன்/ஒபாமா டெமாக்ரடிக்-காரர்கள்-கழுதை!இம்சை வழியே எங்கள் தேர்வு என்பவர்கள் புஷ்/மெக்கெயின் ரிபப்ளிகன் -காரர்கள்-யானை!!அடுத்து வருவது அகிம்சையோ இம்சையோ?Fed இரவு பகல் பாராமல் வார நாள் வீக்கெண்ட் பாராமல் கலக்கத்தில் இருக்கின்றார்கள். ஒன்றை கஷ்டப்பட்டு சம்மாளித்து வரும் போது இன்னொன்று இடிக்கின்றது.


ஸ்டாக்மார்க்கெட்டை தக்க வைக்க தினமும் எதாவது செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கின்றது. கடந்த வீக்கெண்ட் ஸ்பெஷல் பியர்ஸ்டெர்ன் ஹாரரை இப்போதைக்கு அவர்களால் மறக்க முடியாது.வல்லரசு கழுகு ஒன்று உண்மையிலேயே விழி பிதுங்கி நிற்கின்றது. நிலைமை இன்னும் மோசமாகாமல் இருக்க எல்லாருமே இறைவனை வேண்டுகின்றார்கள்.தத்தக்க பித்தக்க வென தள்ளாடி நிற்கும் கரடியே போ போ .எக்கனாமியை இழுத்து செல்ல அருமை காளையே வா வா .இது தான் வால் ஸ்டிரீட் வியாபாரிகளின் முனங்கல்.மும்பையிலும் அதுதான் கேட்கின்றது.

பாட்டியின் கணக்கு



"எப்பாவூ! என்ன நகநட்டா வாங்கப் போற,இப்ப வாங்காத, பொங்கலு கழிஞ்சு வாங்கு.கூடுன வெல அப்ப கொறஞ்சு வரும்.இந்த கெழடு அனுபவஸ்தி சொல்றேன் கேளூ"-ன்னு அந்த வயதான பாட்டி அப்போது சொன்னது ஒன்றும் தப்பாய் தெரியவில்லை. அவளை பொறுத்தவரை அவள் காலத்திலெல்லாம் அப்படிதான் இருந்து வந்திருக்கின்றது. பொங்கல் தீபாவளி வந்தால் கல்யாணகாலங்கள் வந்தால் சில சரக்குகளின் விலை கூடுவதும் அப்புறம் குறைவதும் நடந்து வந்திருக்கின்றது.இன்றைக்கோ நிலைமை வேறு.நம்மூர் நிலவரங்களால் மட்டுமல்ல பூமியின் கடைகோடியில் எங்கோ யாரோ ஒருவர் கூட்டம் போட்டாலும் தங்கம் விலை ஏறுகின்றது. கச்சா எண்ணை விலை ஏறுதாம். அதற்கு தங்கம் என்ன செய்ததாம்.
நம்மூர் அரசியல் நிலவரங்கள் மும்பை பங்கு சந்தையை சிறிதாய் ஆட்டுகின்றது என்பது உண்மையே.என்றாலும் அசலூர் சந்தை நடப்புகள் இன்னும் பெரிதாய் ஆட்டுவிக்கின்றது.
எக்கனாமியை உசுப்பேத்த,இந்த வருடம் வரி செலுத்தும் அமெரிக்க வாழ் மக்களுக்களுக்கெல்லாம் 600 டாலர்களை அமெரிக்க அரசு இலவசமாய் கொடுக்கின்றது. கணவன் மனைவி வேலைபார்த்து அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தால் 1500 டாலர்கள் வரை அது வழங்குகின்றது
மேலும் எக்கனாமியை உசுப்பேத்த அமெரிக்கா நேற்று $200 பில்லியன் டாலர்களை வங்கிகளில் விடுவதாக (அதாவது அச்சடிப்பதாக) அறிவித்தது.

அதனால் நேற்று புசுபுசுவென ஏறிய Dow இன்று பிசுபிசுக்கின்றது. இதுமாதிரியான தற்காலிக பொருளாதார உசுப்பேற்ற தீர்வுகள் எங்கு போய்விடுமென யாரும் கவலைப்படுவதாய் தெரியவில்லை.
நம்மூரின் பணவீக்கம் 5 சதவீதம்.பொறாமைநாடுகளின் சதியால் ஆயிரம் ஆயிரம் கோடி போலி இந்திய பணங்கள் அசல்போலவே அச்சடிக்கப்பட்டு இந்தியா வந்தால் அது இன்னும் கூடும்.அமெரிக்கா பண்ணுவது போல் இஷ்டத்துக்கும் டாலர் அச்சிட்டால் அது ஜிம்பாவேயின் இன்றைய நிலை போல் பணவீக்கம் அதாவது Inflation 100,580 சதவீதம் ஆனாலும் ஆகும்.அப்போது ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்க நீங்கள் மேலே படத்தில் காண்பது போல் ஆயிரம் ஆயிரம் நோட்டுகள் எண்ண வேண்டி வரும்.

பொங்கலுக்கு பின் பாட்டி சொன்னது போல் கடைசியில் தங்கம் விலை குறையவில்லை. காலம் மாறிப்போச்சி பாட்டி-ன்னு பாட்டியிடம் சொன்னால் பாட்டிக்கு கோபம் வருகின்றது.

நான்கு ஆண்டுகள்



வாய்க்காகவும் வயிற்றுக்காகவும் செய்யப்படும் அன்றாட வேலைகளுக்கும் அப்பாற்பட்டு நாம் ஒவ்வொருவருக்கும் மனதை நிறைவுபடுத்தும் ஒரு பொழுது போக்கு கண்டிப்பாய் இருக்கவேண்டும் என ஒரு பெரியவர் ஒருமுறை சொன்னது நெஞ்சில் அப்படியே ஆணி அடித்தாற் போல் பதிந்து போனது.அவர் அதற்கு சொன்ன காரணம் தினசரி சிக்கல்களிலிருந்து மனது சிறிது திரும்பி இலகுவாய் இருக்கவும், ஓய்வூர்தியம் வாங்கும் காலத்திலும் நொடிந்து உட்காரவிடாமல் சுறுசுறுப்பாய் வைத்திருக்கவும் அது உதவும் என்றார்.கால்ச்சட்டை போட்டிருந்த காலத்திலேயே தபால் தலை சேகரித்தல், நாணயங்கள் சேகரித்தல் என பல பண்ணியிருப்போம். இன்று அது ஒரு வேளை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மைல்களுக்கங்கே ஒரு பரணில் இருந்தாலும் இருக்கலாம்.இல்லாமலும் போயிருக்கலாம்.அப்படியே தான் பலரின் தமிழ் ஆர்வமும். யாருமே வாசிக்கப்போகாவிட்டாலும் எழுதும் ஆர்வத்தில் டைரிகளிலும் நோட்டுபுத்தகங்களிலும் எழுதி எழுதித் தள்ளி, ஊருக்கு ஊர் பழைய அட்டைப்பெட்டிகளில் சிலந்தி பின்னல்களுக்கிடையே புதைந்து போன கதைகளும் கவிதைகளும்,கட்டுரைகளும் காவியங்களும் ஆயிரமாயிரம் இருக்கும்.இன்றைக்கு நீங்கள் சிக்கியிருக்கும் இந்த நவீன சிலந்திப் பின்னல் (Web)அநேகருக்கு ஒரு வடிகால். வலது இடதுவென வசமுள்ளோரெல்லாம் எழுதிக்குவிக்கின்றார்கள்.தமிழ் இன்னும் ஆக்கப்பூர்வமாய் இணையத்தில் கலாச வேண்டுமென அவா.இன்னும் ரொம்ப தூரம் போக வேண்டியிருக்கிறது.

கடைசி 20 பின்னூட்டங்களை வலைப்பதிவில் காட்ட சொந்தமாக widget தயார் செய்வது எப்படி. விளக்கம் இதோ!!!!

கடைசி 20 பின்னூட்டங்களை வலைப்பதிவில் காட்ட சொந்தமாக widget தயார் செய்வது எப்படி. விளக்கம் இதோ!!!!

பதிவர்கள் பலர் தங்கள் வலைப்பதிவுகளில் இப்போது கடைசியாக இடப்பட்ட பின்னூடங்களை காட்ட ஆசைபடுகின்றனர். அதற்காக Third party Recent comment widget போடுகின்றனர் . இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இது recentcomment காட்டுவதற்கான javascript ஐ வேறு ஒரு தளத்தில் வைத்திருக்கும், load அதிகமாகினால் நம்முடைய வலைப்பதிவும் open ஆகாது
இதற்க்கு பதில் நாமே சொந்தமாக இதை தயாரிக்கலாமே , எப்படி என்று பாருங்கள்
Step 1: Goto Template->Edit HTML tab. Find the

tag in your template
கீழே உள்ள கோடை tag க்கு முன்னால் பேஸ்ட் செய்யுங்கள்.


Step 2:
Goto Template->Page elements tab and click on "Add a page element" in your sidebar.
Choose HTML/Javascript element.
சரியான தலைப்பு கொடுத்து கீழே உள்ள கோடை பேஸ்ட் செய்து விடுங்கள்



இதில் முக்கியமானது "yourblog" என்பதை உங்கள் வலைப்பதிவு address ஆக மாற்ற வேண்டும் .
20 என்பது எத்தனை பின்னூட்டங்கள் காட்ட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது , இதை உங்கள் விருப்பம் போல மாற்றிக்கொள்ளலாம்.
100 என்பது எத்தனை எழுத்துக்கள் காட்டப்பட வேண்டும் என்பதை குறிக்கிறது, இதை 300 or 400 என்று மாற்றினால் முழு பின்னூட்டத்தையும் கூட காட்ட முடியும்.
இதை செய்து முடியுங்கள் உங்கள் வலைப்பதிவு வேகமாக load ஆகும் , படிப்பவர்களுக்கும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
இதை sidebar அல்லது bottom of the post இல் காட்டினால் சிறப்பாக இருக்கும் .
இது எப்படி இருக்கிறது என்று பாருங்கள

எலக்ட்ரானிக் உலகை கலக்கப்போகும் புதிய வரவுகள



வீடியோ கான்பரன்சிங்'க்கு ஏற்ற சிறந்த இலவச மென்பொருள்


வீடியோ கான்பரன்சிங்'க்கு ஏற்ற சிறந்த இலவச மென்பொருள்

மாறிவரும் இணைய உலகில், தற்போதைய நிலவரப்படி வீடியோ கான்பரன்சிங் செய்ய ஏற்ற இலவச மென்பொருளாக "ஓவூ" கருதப்படுகிறது.
http://www.oovoo.com/
அப்படி என்ன இதுல புதுசா இருக்கு? என்று கேட்கிறீர்களா?இருக்கு , புதுசு புதுசா சில மேம்பட்ட வசதிகள் இருக்கு , அதுவும் இலவசமா.skype, yahoo இன்ன பிற மென்பொருள்களை விட இதில் வீடியோ தகவல் பரிமாற்ற வேகம் மிக அதிகம் (up to 5mbps) அதனால் துல்லியமான வீடியோ கிடைக்கும்.
மேலும் இதில் ஒரே நேரத்தில் 20 files அனுப்பவும் , 25mb வரை பெரியதான பைலை அனுப்பவும் முடியும்.

பிளாக்கர் வலைப்பதிவில் எவ்வளவு படங்கள் வரை ஏற்றலாம்? பதில்


நண்பர் ஒருவர் என்னிடம் இந்த கேள்வியை மின்மடலில் கேட்டு இருந்தார், இந்த சந்தேகம் பலருக்கும் என்று எண்ணுகிறேன்.
ஏன் என்றால் ஈமெயில் இன் பாக்ஸ் போல பிளாக்கர் கணக்கில் இவ்வளவு கோப்புகள் தான் ஏற்ற முடியும் என்று எந்த வரைமுறையும் காணப்படுவதில்லை.
உண்மை என்னவென்றால் நீங்கள் உங்கள் பிளாக்கர் கணக்கில் வலைப்பதிவில் ஏற்றும் படங்கள் யாவும் கூகுளின் மற்றொரு சேவையான பிகாசாவில் தான் சேமிக்கப்படும். நீங்கள் பிகாசா சேவையை கூகிள் அக்கௌன்ட் பக்கத்தில் போய் இணைத்து கொண்டு, உள்ளே சென்று பாருங்கள் தெரியும் சேதி,
ஆம் , நீங்கள் உங்கள் வலைப்பதிவில் ஏற்றி இருக்கும் அத்தனை படங்களும் அங்கே ஆல்பம் ஆக இருக்கும் , இந்த படங்களை மற்றவர்களுடன் நாம் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
பிகாசா 1 gb free storage கொடுக்கிறது, இந்த limit டை நாம் தாண்டிவிட்டால் நாம் வலைபதியும் போது படங்களை ஏற்ற முடியாது. மேற்கொண்டு இடம் வேண்டும் என்றால் $20 கொடுத்து ஒரு 6 gb வாங்கி கொள்ளலாம். அல்லது photobucket போன்ற இலவச image hosting service தேடி செல்லலாம்.

விளம்பர அட்டாக்கிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்க சிறந்த மென்பொருள்


விளம்பர அட்டாக்கிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்க சிறந்த மென்பொருள்

உங்கள் கணினியில் நீங்கள் என்ன தான் antivirus நிறுவி இருந்தாலும் அதையும் மீறி சில adware மற்றும் spyware உங்கள் கணினியில் ஜம்மென்று பாய் விரித்து படுத்து இருக்கும் ஆனால் அது உங்களுக்கு தெரியாது.
சில சமயம் சில adware ,அதாவது நம் கட்டுப்பாட்டையும் மீறி நம் கணினியில் விளம்பரங்களை அவிழ்த்து விடும் திருட்டு மென்பொருள், நாம் ஒவ்வொரு முறை internet explorer ஐ திறக்கும் போதும் டமாரென்று ரெண்டு மூணு விளம்பர விண்டோ க்களை திறந்து விட்டு விடும்,
நாம் என்ன தான் antivirus மற்றும் spyware remover tools கொண்டு சலித்து எடுத்தாலும் பிரச்சனையை தீர்க்க முடியாமல் போகலாம், காரணம் இந்தவகை adware&spyware பெரும்பாலும் நம் registry யில் சில மாற்றங்களை செய்து விடும், மேலும் நமது host file எனப்படும் முக்கியமான பைலிலும் மாற்றம் செய்து விடும். இதனால் இது செய்துள்ள மாற்றங்களை நீக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.
இதற்கான சரியான தீர்வு "SPY BOT" ஆம், இலவசமாக கிடைக்கும் மென்பொருட்களில் சிறந்ததாக கருதப்படுகிறது.மிக துல்லியமாக adware மற்றும் spyware களை கண்டறிந்து அழிக்கிறது.
மேலும் நமது registry யில் மாற்றம் ஏதும் செய்யப்பட்டால் அதை நிறுத்தி நமது அனுமதிக்கு காத்திருக்கிறது. இதனால் நிம்ம்மதியாக இணையத்தில் உலாவலாம். இவ்வளவு அருமையான சேவைக்கு இவர்கள் கேட்பது நன்கொடை மட்டுமே. பயன் இருந்தால் நன்கொடை செய்யுங்கள்.
spybot download link

கைநாட்டாக மாறும் சாப்டுவேர் இஞ்சினியர்கள்

தலைப்பை பார்த்து பயந்து விட வேண்டாம். நம் கணினியையும் அதில் உள்ள தகவல்களையும் திருடு போகாமல் பாதுகாக்க இப்போது பிரபலமடைந்து வரும் முறை கைவிரல் ரேகையை கடவுசொல்லுக்கு பதிலாக பயன்படுத்துவது தான்.

நாம் நம் கணினிக்குள் நுழையும் போது, encrypt செய்யப்பட்ட பைல்களை திறக்கும் போது மற்றும் சில windows applications களை திறக்கும் போதும் இந்த விரல் ரேகை முறையை கடவுச்சொல்லுக்கு பதில் பயன்படுத்தலாம்.
இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுச்சொல் பயன்படுத்துவோர் அதை சிரமப்பட்டு நினைவில் வைத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை
மேலும் நமது கடவுச்சொல்லை யாரேனும் திருடிவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் தேவை இல்லை. நம் விரலை வெட்டி எடுத்து சென்றுவிடாமல் பார்த்து கொண்டால் போதும்.
மேலும் விபரம் அறிய இங்கே சென்று பார்க்கவும்.


comments.


தமிழீழவன் said...
இதிலும் சிக்கள்கள் இருக்கின்றது.அதாவது நம் கைவிரல் ஈரமாக இருந்தாலோ, அல்லது விரலில் காயம் ஏற்பட்டாலோ இந்த விரல் வாசிப்பாளர்கள் திறப்பதற்கு மறுத்துவிடுவார்கள். அப்படியான சமயம் என்னச் செய்யலாம்?

Udhayakumar said...
This post has been removed by the author.

Udhayakumar said...
//அதாவது நம் கைவிரல் ஈரமாக இருந்தாலோ, அல்லது விரலில் காயம் ஏற்பட்டாலோ இந்த விரல் வாசிப்பாளர்கள் திறப்பதற்கு மறுத்துவிடுவார்கள். அப்படியான சமயம் என்னச் செய்யலாம்?//It is not just based on only one finger. You can configure for more fingersHP and Toshiba laptops are already having this.

Comedy video-1

see this video

போலி வெப்சைட்கள்




போலி வெப்சைட்கள்
திநகர் லலிதா ஜீவல்லர்ஸ்-க்கு அடுத்துள்ள கனாராபாங்க் இப்போது கண்ணமாபேட்டையிலுள்ளது என யாரோ உங்களுக்கு ஈமெயில் அனுப்ப, உடனே அடுத்த நாள் கண்ணமாபேட்டை போய் அங்குள்ள ஒரு ஏமாற்று வங்கியில் உங்கள் பணத்தை போட்டுக்கொண்டிருப்பீர்களா?.


நிஜ உலகில் மாட்டோம்.ஆனால் இணைய உலகில் அது தான் நடந்து கொண்டிருக்கின்றது.


தினம் தினம் ஆயிரம் ஆயிரம் பேர் சிடிபேங்க் அல்லது ICICI பாங்க் வெப்தளம் தான் போகின்றோம் என நினைத்து நம்பி வேறெதோ ஒரு ஹாக்கர் நிறுவிவைத்துள்ள சிடி பாங்க் போன்றே அல்லது ICICI பாங்க் போன்றே தோற்றமளிக்கும் ஒரு போலி வெப் தளம் போய் தங்கள் அக்கவுண்ட் எண்,மற்றும் பின் நம்பர்களை டைப்பி ஏமாறிக்கொண்டிருக்கின்றார்கள்.


இதை பொதுவாக பிஷ்ஷிங் என்பார்கள்.Phishing அதாவது password harvesting fishing.இது போன்ற போலி தளங்களின் முக்கிய நோக்கம் உங்கள் பாங்க் அக்கவுண்ட் அல்லது பிற முக்கிய அக்கவுண்ட்களின் பாஸ்வேர்ட்களை திருடுவதே.பொதுவாக இத்தளங்கள் சில நாட்கள் மட்டுமே ஆன்லைனில் இருக்கும்.தேவையான அளவு அப்பாவி ஆட்களை ஏமாற்றி பாஸ்வேர்களை திருடி சுருட்டிக்கொண்டு போய் விடுவார்கள்.So,எப்போதுமே பணபட்டுவாட விஷயங்களை ஆன்லைனில் செய்யும் போது மிக மிக கவனமாயிருங்கள்.


சுட்டிகளை சொடுக்கும் போது கவனம் தேவை.அந்த சுட்டி சரியான இடங்களுக்கு உங்களை கொண்டு செல்கின்றதா வென பாருங்கள்.(படம்)


உதாரணமாய் கீழே பாருங்கள்.மேலே நான் யாகூக்கு உங்களை கூட்டி போகிறேன் என போர்டு வைத்து கொண்டு உங்களை ஏமாற்றி கூகிளுக்கு கொண்டு போகலாம்.


Click here to visit


yahoo.com


எப்போதுமே நேரடியாக தளங்களுக்கு விலாசம் டைப்பி போகுல் நலம்.யாரோ அனுப்பிய ஈமெயிலிலுள்ள சுட்டியை கிளிக்கி குறிப்பிட்ட பணம் சம்பந்த பட்ட வெப் தளங்கள் செலல் எப்போதுமே ஆபத்து தான்.சமீபத்தில் சிடிபாங்க் "Important Notice" என சொல்லி எனக்கு வந்த ஏமாற்று மெயில் கீழ் கண்ட சுட்டிக்கு என்னைக் கொண்டு செல்கின்றது.அங்கே ஒரு முழு போலி சிட்டி பாங்க் தளமே இயங்குகின்றது.(ஒருவேளை நீங்கள் சொடுக்கி செல்லும் போது அது காணாமலும் போயிருக்கலாம்).


Do not enter your details on this fake citibank web site.


Fake citibank website

மாற்று மருந்துகள்




மாற்று மருந்துகள்
ஏற்கனவே நம்மிடையே வெறுப்பூட்டிகொண்டிருக்கும் சில அரசியல் கட்சிகளை விட்டால் வேறு நமக்கு மாற்று அரசியல் கட்சிகள் எதுவும் இல்லை.அதுவே தான் தலைவர்கள் நிலைமையும்.ஒன்றை விட்டால் இன்னொன்று என உருப்படியாய் மாற்று தலைவர் எவருமே இல்லை.


நல்ல வேளையாய் மென்பொருள்களில் அப்படியில்லை.ஒன்றை விட்டால் இன்னொன்றுக்கு மாறிக்கொள்ளலாம்.அடிக்கடி IE sucks என்கின்றீர்களா? ரூட்டை மாத்து,Fire fox இருக்குது அல்லவா iTune sucks என்கின்றீர்களா? ரூட்டை மாத்து.Sharepod இருக்குதுல.


இப்படி அநேக இலவச மென்பொருள்கள் மாற்றுக்கு உள்ளன. சொல்லப்போனால் போட்டிக்கு மாற்றாய் வரும் மென்பொருள்கள் தான் அட்டகாசமாயும் இருக்கின்றன.


உங்களுக்காக இதோ சில


Internet explorer க்கு மாற்றாக Firefox


Adobe Acrobat Reader க்கு மாற்றாக Foxit Reader


iTune க்கு மாற்றாக Sharepod


Real Player க்கு மாற்றாக Real Alternative


QuickTime க்கு மாற்றாக QuickTime Alternative


Windows Picture and Fax Viewer க்கு மாற்றாக Irfan View


Windows zip க்கு மாற்றாக 7-zip

நிலவுக்கும் ஐபி




Thursday, October 11, 2007

நிலவுக்கும் ஐபி
கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் "IP Addreess தட்டுப்பாடு - ஐபி அட்ரெஸ் பெறும் புது வடிவம் - IPv6"


எனும் தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன். அதாவது தற்கால IPv4-கள் (எகா:192.168.1.0) போதுமான அளவு ஐபி அட்ரஸ்கள் கொண்டிராததால் IPv6 (எகா:2016:0fe8::0000:0000:0000:1975:69bf)-க்கு நாம் போயாக வேண்டியுள்ளது என குறிப்பிட்டிருந்தேன்.


நண்பர் கூத்தாடி அவர்கள் NAT,CIDR,புராக்ஸி போன்ற விலாசம் மாற்றும் நுட்பங்கள் இப்போதைக்கு இருப்பதால் அப்படியெல்லாம் அவசரம் ஒன்று மில்லை என விரிவாக பின்னூட்டமும் இட்டிருந்தார்.


அது முழுக்க முழுக்க உண்மையும் கூட.இப்போது IPv6 பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்பழைய IPv4-ஆனது 32 பிட் முறையாலானது.புதிய IPv6-ஆனது 128 பிட் முறையாலானது.அப்போ IPv5-என்ன ஆனது என கேட்கிறீர்களா?


1970-களில் உருவாக்கப்பட்ட Internet Stream எனும் Protocol-க்கு பெயர் தான் IPv5.எனவே IPv4 க்கு அடுத்து TCPIP புரோட்டோகால் IPv6 ஆனது.IPv6 -க்கு இன்னொரு பெயர் கூட உண்டு.


IPng அதாவது அதன் விரிவாக்கம் Internet Protocol next generation.அமெரிக்க அரசின் அனைத்து கணிணி வலைகளும் வரும் ஜுன் 30 2008-க்குள் முற்றிலும் IPv6 மயமாக்கப்பட திட்டம் போய்க்கொண்டிருக்கின்றது.பழைய IPv4 மூலம் உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஐபிவிலாசம் கூட கொடுக்கமுடியாது.


ஆனால் புதிய IPv6 மூலம் உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் 50000000000000000000000000000 ஐபிவிலாசங்கள் கொடுக்கமுடியும்.


இந்த IPv6 மூலம் விண்ணிலுள்ள நம் மூளைக்கு எட்டியவரையுள்ள அனைத்து வான நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொன்றுக்கும் 7000000000000000 ஐபி அட்ரஸ் கொடுக்கலாமாம்.அடேங்கப்பா.


இனி கார், ஐபாட், ஃபிரிட்ஜ், டிவி, மணிபர்ஸ், போன், பேக், கீசெயின் என கண்ட கண்ட பொருள்களுக்கும் ஐபி அட்ரஸ்கொடுத்தாலும் மனிதகுலம் உள்ளவரை IPv6-தான் அரசாளும் போல் தெரிகின்றது.உங்கள் கணிணியில் IPv6 நிறுவப்பட்டுள்ளதா என கீழே கிளிக்கி தெரிந்து கொள்ளுங்கள்.


Show My IPv6 Status

மந்திர மென்பொருள்கள்




மந்திர மென்பொருள்கள்
அடிப்படையில் புரோகிராமராய் இல்லாவிட்டாலும் சிலசமயங்களில் சில மென்பொருள்கள் வேலைசெய்யும் விதங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுவதுண்டு. பெரும்பாலான மென்பொருள்களை ஓட்டும் போது அது இந்த லாஜிக்கில் தான் வேலை செய்யுமாயிருக்கும் என மனதில் தோன்றும். ஆனால் சிலவற்றின் லாஜிக் புரிவதேயில்லை.


அப்படி ஒரு மென்பொருள் சமீபத்தில் வலைமேயும் போது சிக்கியது.அதன் பெயர் eyedropper. இந்த இலவச மென்பொருள் Web designer மற்றும் DTP experts களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல விதங்களில் இது உதவினாலும் இதன் பிரதான பயன் கீழே.வெப்டெவலபர்களுக்கு ஒரு தலைவலி வருவதுண்டு.ஒரு கலர் கொடுத்திருப்பார்கள்.


ஆனால் அதற்கு மேச்சான பக்கங்களை உருவாக்க அந்த கலரின் சரியான Html Color code RGB HEX CMYK -யை கண்டு பிடிப்பதற்குள் உயிர்போய்விடும்.


இந்த மென்பொருளை நிறுவி மவுஸ் பாயிண்டரை கொண்டு போய் அந்த குறிப்பிட்ட நிறம் மேல் வைத்தால் போதும்.


அது அந்த வண்ணத்தின் Html Color code தகவல்களை பிட்டு பிட்டு வைத்துவிடும்.


Product Home Page


http://www.inetia.com/en/eyedropper/


Download Here


http://www.inetia.com/en/eyedropper/download/


இதென்ன பெரிய மந்திரம், இப்போதெல்லாம் CAPTCHA எனப்படும் கோணல்மாணல் எழுத்துக்கள் வெரிபிக்கேசனை படிக்கவே மென்பொருள்கள் வந்து விட்டன என்கின்றீர்களா?.


(completely automated public Turing test to tell computers and humans apart ....அப்பாடா என்னா பெரிய அப்ரிவியேசன்).


கணிணிக்கு பலவழிகளில் கண் பார்வைகொடுக்கும் பணிவெற்றிபெற்றுவருவதாகவே தோன்றுகின்றது.


CAPTCHA decoder reader


http://sam.zoy.org/pwntcha/

Credit Card எண்ணில் ஒரு கணக்கு






Credit Card எண்ணில் ஒரு கணக்கு
அமெரிக்க Credit Crunch உலக பொருளா தாரத்தையே கொஞ்சம் அசைத்துபார்த்திருக்கின்றது.


அந்த குலுங்கல் ஆடி அடங்க இன்னும் சிறிது காலம் பிடிக்கலாம்.அக்குறுகியகாலத்துக்குள் என்னவெல்லாம் நடக்கப்போகின்றதோ?. International MonetaryFund தலைவர் இன்னும் கொஞ்சம் டாலர் விழும் என்கின்றார்.


யூரோ ஓரளவுக்கு அதன் சரியான மதிப்பிற்கு வந்து விட்டதென்கின்றார்.நிலை தடுமாறினவன் நேராய் வர தன்னை சமநிலைப்படுத்துவது போல உலக எக்கனாமி தன்னை சமநிலைப்படுத்தி சரிபடுத்துகின்ற தருணம் இது.முடியாதோரெல்லாம் ஆயிரக்கணக்கான டாலர்கள் கடனுக்கு வீடுவாங்கி பின் முடியாமல் போக ...இந்நிலை வந்தது.


நம்மூரிலும் இந்த கிரெடிட் (கடன் வழங்கப்படுதல்) தொல்லை அதிகமாகிக் கொண்டே வருகின்றது.


தங்கள் தகுதிக்கும் மீறி கடன் வாங்குதல் எத்தனை அபாயம் என்பது எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா வழி இது ஒரு பாடம்.அது போகட்டும்,


உங்கள் கிரெடிட் கார்ட் நம்பரில் ஒரு கணக்கு உள்ளது தெரியுமா?


உங்கள் கிரெடிட் எண்ணை வைத்தே அது VISA-வா அல்லது MASTERCARD-டா என சொல்லலாம். மாஸ்டர்கார்டுகளின் எண்கள் பொதுவாக 51-55 எண்களில் தொடங்கும்.


வீசா கார்டுகளின் எண்கள் பொதுவாக 4 என தொடங்கும்.வழக்கமாக ஆன்லைனில் சாப்பிங் போகின்றீர்கள்.


அங்கே அத்தளத்தில் ஈகாமெர்ஸ் வசதி அதாவது அங்கு வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வசதி செய்து வைத்திருப்பார்கள். நீங்கள் கொடுக்கும் கிரெடிட் கார்டை ஒரே பார்வையில் அந்த வெப்தளம் நோட்ட மிட்டு அக்கார்டு சரியானதா இல்லை போலியா என சொல்லிவிடும்.


அதன் பின்பே அது கொடுக்கல் வாங்கலை ஆரம்பிக்கும்.எப்படி அது சாத்தியம் Check digit algorithm MOD 10 அதாவது LUHNஎனும் Formula அங்கே உதவிக்கு வருகின்றது.நீங்களும் இக்கணக்கு பயனபடுத்தி ஒரு கிரெடிட் கார்டு எண் சரியானதா அல்லது போலியா என எளிதாய் கண்டறியலாம்.




பார்முலா இது தான்.


உங்கள் கிரெடிட் கார்ட் நம்பரில் வலது கோடி எண்ணை விட்டு விட்டு பின், வலமிருந்து இடமாக ஒன்று விட்ட எண்களை இரட்டிப்பாக்குங்கள்.


பின் எல்லா எண்களையும் கூட்டுங்கள்.அவ்ளோ தான்.


அதன் விடை பூஜியத்தில் 30, 40, 50, etc முடிந்தால் அது உண்மையான கிரெடிட் கார்ட் எண்.


உதாரணத்துக்கு எண்ணிடம் உள்ள கார்டின் எண் 49927398716 என வைத்து கொள்வோம்.4 9x2 9 2x2 7 3x2 9 8x2 7 1x2 6இரட்டிப்பாக்கி கிடைத்த எண்கள்.18 4 6 16 2இவற்றை இனி கூட்டும் போது 18 என்ற இரு இலக்க எண் 1+8 ஆக பயன்படுத்தப்பட வேண்டும் .16 என்ற இரு இலக்க எண் 1+6 ஆக பயன்படுத்தப்பட வேண்டும்.


இப்போ எல்லா எண்களையும் கூட்டுங்கள்4 +(1+8)+ 9 + (4) + 7 + (6) + 9 +(1+6) + 7 + (2) + 6விடை 70 ஆக இது ஒரு சரியான கிரெடிட் கார்டு எண்தான்இன்னொரு எடுத்துகாட்டை படத்தில் பாருங்கள்.


அது ஒரு போலி கிரெடிட் கார்டு எண்.


இந்த கணக்கீடு Excel -ல் இங்கே http://www.beachnet.com/~hstiles/bin/luhn.zip


இந்த கணக்கீடு Java -ல் இங்கே https://www.azcode.com/Mod10/mod10.js


இந்த கணக்கீடு C# -ல்


இங்கே


Zip ஆயுதம்



Zip ஆயுதம்
மடியில் வெடிகுண்டை வைத்துக்கொண்டு அலையிறான் என்பார்கள். அதுபோல இந்த 42.zip(http://www.unforgettable.dk)நண்பர் வேண்டுகோளுக்கிணங்க சுட்டி நீக்கப்பட்டது)


கோப்பு உங்கள் கணிணியில் இருந்தால் வெடிகுண்டை உங்கள் கணிணியில் வைத்துக்கொண்டு அலைகின்றீர்கள் என்று அர்த்தம்.எப்படி?இதை Zip bomb அல்லது Decompression Bomb என்பார்கள். இந்த சுருக்கப்பட்ட ஷிப் கோப்பை தப்பித்தவறி விரிக்கச்செய்தால் அவ்ளோதான். அதினுள் 16 zip கோப்புகள் இருக்கும்.


அந்த 16 zip கோப்புகள் விரிவாகி ஒவ்வொன்றினுள்ளும் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்,அப்புறம் அந்த 16 zip கோப்புகளும் விரிவாகி அதனுள் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்.இப்படி விரிவாகி விரிவாகி இந்த 42.372 kb அளவேயான கோப்பு 281 டெர்ரா பைட்டுகளைவிட அதிகமாய் விரிவாகி அப்புறம் அது உங்கள் கணிணி டிரைவில் இருக்க இடமில்லாமல் போய் உங்கள் கணிணி ஸ்தம்பித்து கிராஷ் ஆகிவிடும்.


இது போன்ற ZIP-Crash Trojan களை இந்த காலத்து வைரஸ்கேனர்கள் கண்டுபிடித்து உடனே அந்த ZIP கோப்புகளை அழித்து விடும். வைரஸ்கேனர் உங்கள் கணிணியில் இல்லாவிட்டால் உங்கள் கணிணி அம்பேல் தான்.


Please do not try this with you or with your friends computer.This information is for educational purpose only.

ரியல் இறக்கம்-RealPlayer








என்றைக்குமே RealPlayer மென்பொருள் நமக்கு பிடித்ததாய் அமைந்ததில்லை.
இணையத்தில் காணக்கிடைக்கும் பிரபலமான அபூர்வ வீடியோ கிளிப்புகள் பெரும்பாலும் rm, ram ஃபார்மாட்டில் கிடைப்பதால் ரியல் பிளயர் சும்மாவேனும் நிறுவி வைத்திருப்பது உண்டு. ஆனால் சமீபத்தில் வெளியான RealPlayer (பீட்டா) நம் அபிப்ராயத்தையே முற்றிலும் மாற்றி விடும் போலுள்ளது.


இதில் நமக்கு மிக பிடித்தமான பயன் Youtube வீடியோக்கள் , Google Video-களை பிரவுஸரில் ஒரே கிளிக்கில் நேரடியாக டவுன் லோட் செய்து கொளல் தான். இவை .flv எனும் கோப்பு வகையாக உங்கள் கணிணியில் இறக்கம் செய்யப்பட்டு உங்கள் வீடியோ லைப்ரரியில் அழகாய் அடுக்கப்படும். பின் நேரம் கிடைக்கும் போது அவ்வீடியோக்களை பொறுமையாய் Full Screen-ல் பார்த்துக்கொள்ளலாம்.


நல்ல வீடியோ குவாலிட்டி கூட.esnips.com எனும் பிரபல கோப்புகள் கிடங்குகாரர்கள் நம் பேவரைட் MP3-களை கேட்க மட்டுமே அனுமதிக்கின்றார்கள். டவுண்லோட் செய்ய வசதி தருவதில்லை.


செர்வர் சுமையை தவிர்க்க தான்.


ஆனால் புதிய RealPlayer அந்த MP3-களையும் ஒரே கிளிக்கில் இறக்கம் செய்ய நன்கு உதவுகின்றது.இவை .ivr எனும் கோப்பு வகையாக உங்கள் கணிணியில் இறக்கம் செய்யப்படும்.


அநேக இலவச மென்பொருள்கள், வெப்தளங்கள், பயர்பாக்ஸ் எக்ஸ்டென்சன்கள் இத்தகைய வீடியோக்களை இறக்கம் செய்ய இருப்பதால் RealPlayer லேட்டாதான் வந்திருக்கின்றார் எனச் சொல்லலாம்


கூகிள் எர்த் சேட்டலைட்கள்




கூகிள் எர்த் சேட்டலைட்கள்
கூகிள் எர்த் பற்றிய அறிமுகம் நம்மில் பலருக்கும் தேவைப்படாது. அது அவ்வளவாய் பிரபலம். ஆனால் கூகிள் எர்த் படங்களை விண்வெளியிலிருந்து சுட்டுத்தள்ளும் சேட்டலைட்கள் பற்றி கேள்விபட்டிருக்கின்றீர்களா?. அந்த சேட்டலைட்டின் பெயர் QuickBird (படத்தில் காண்பது). இவர் தான் மூத்த அண்ணா.


இவர் விண்ணில் ஏவப்பட்ட நாள் முதல் (October 18, 2001) பூமியின் மூலை முடுக்குகளையெல்லாம் வானிலிருந்து படம் எடுத்து பிடித்து பூமிக்கு அனுப்பி வைக்கின்றார். அவற்றை தாம் நாம் கூகிள் எர்த்தில் அல்லது கூகிள் மேப் சேட்டலைட் வியூவில் பார்க்கின்றோம். இந்த சேட்டலைட் பூமிக்கு மேல் 450கிமீ தொலைவில் பூமியை சுற்றியவாறு உள்ளதாம். உண்மையில் இந்த சேட்டலைட் கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமானதல்ல. இது DigitalGlobe எனும் American remote sensing நிறுவனத்தினுடையது.


QuickBird-ன் தம்பி சேட்டலைட்டான WorldView I சமீபத்தில் தான் (September 18, 2007) விண்ணில் ஏவப்பட்டது. இப்போது இவரும் கலக்கலாய் தெளிவாய் லேட்டஸ்ட் டெக்னாலஜியோடு படங்களை சுட்டு வானிலிருந்து பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார். QuickBird-ஐ விட தெளிவான படங்களாய் இவை இருக்கின்றன. விரைவில் இப்படங்கள் கூகிள் எர்த்தில் இடம்பிடிக்க தொடங்கிவிடும்.


WorldView I-னால் தினமும் 750,000 சதுரகிலோமீட்டர்களை படம்பிடிக்க இயலுமாம்.மேலும் அப்படங்களில் பூமியின் அரைமீட்டரே அளவான பொருள்களையும் காண இயலுமாம்.WorldView I சேட்டலைட் பூமிக்கு அனுப்பிய சில சாம்பிள் படங்களை இங்கே காணலாம்.


http://www.digitalglobe.com/worldview-1_images.html


அடுத்ததாய் 2008-ல் Worldview II ஏவவிருக்கின்றார்கள். அது என்னமாயமெல்லாம் செய்யப்போகின்றதோ?.


இப்போதைக்கு DigitalGlobe-ன் ஒரே காம்பெடீட்டர் GeoEye Inc.இவர்கள் பணியும் விண் ஒடம் வழி படம் எடுத்து கொடுப்பதே.கூகிள் எர்த்தை ரியல்டைமில் பார்க்க ஆசையா?.


கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும்.

இதுதான் உலகம்- இதுதான் வாழ்க்கை-சுவாமி சுகபோதானந்தா

சுவாமி சுகபோதானந்தா

நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி -ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ?


இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.

அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது.

உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் ! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன்.

ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் ! என்னைக் காப்பாற்று ! என்று கண்ணீர்விடுகிறது.முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்... சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. பாவி முதலையே... இது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க... அதற்கென்ன செய்வது ?

இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை ! என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முதலையின் வாய்க்குள் மெள்ளப் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் - முதலை சொல்வது மாதிரி... இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ? அதற்குப் பறவைகள், எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்... ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன... அதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான் !ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்...நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான்.

எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை ! என்றது கழுதை.சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். இல்லை ! முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை ! முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல... முதலைக்குக் கோபம் வந்து விட்டது.

சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ஊஹூம்! சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல்.பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே ! உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே. என்று நினைவுபடுத்த... முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது.

அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ! ஓடிவிடு ! என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான்.முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது.

அதன் நினைவுக்கு வந்தது ! சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது - புரிந்ததா... இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை !சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர... அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள்.

அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி... சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..சிறுவன் பெருமூச்சு விடுகிறான். இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்.

வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது ! என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது............................இப்படியாய் போகின்றது சுவாமி சுகபோதானந்தாவின் (Swami Sukhabodhananda) "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" புத்தகம்.


இப்புத்தகம் இப்போது ஆடியோ வடிவிலும் (MP3) கிடைப்பது மிக அருமை. நிழல்கள் ரவி தன் சொந்த குரலில் இந்த புத்தகத்தை ஒலி வடிவாக்கியிருக்கின்றார்.

விண்ணிலிருந்து துபாய் - அன்றும் இன்றும்


ஐக்கிய அரபு நாடுகளிலேயே, ஏன் அரபு நாடுகளிலேயே துபாய்க்கென ஒரு தனிப் பிரமாண்டம் என்றுமே உண்டு.எண்ணெய் வருவாயை ஒதுக்கிவைத்து விட்டு வேறெப்படி பணம் பண்ணலாம் என யோசித்து புதுமைகளை தைரியமாய் புகுத்தி இன்று ஆப்ரிக்க மற்றும் அரபு நாடுகளுக்கு இந்த நகர் ஒரு ஹப் (Hub) அதாவது முச்சந்தி.துபாயில் அப்படி என்னத் தான் நடக்கின்றது என ஒரு சராசரி துபாய்வாசியிடம் கேட்டாலே சொல்வான் Shipping Shopping and F**king -ன்னு.அப்புறமென்ன காசுக்கு சொல்லவா வேணும்.
வணிகம் மற்றும் சுற்றுலாத்துறையில் டுபே-Dubey-DBX கொடிகட்டிப் பறக்கிறது.
தேரா துபாய்,பர் துபாய்-யிடையே ஓடும் கிரீக் எனப்படும் நீர்க்கரையில் நின்றிருந்தால் நீங்கள் பார்க்கும் ஓயாமல் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் விமானங்களே இதற்கு சாட்சி.கட்டுமானங்கள் காணுமிடமெங்கும்.யாரோ சொன்னார்கள் உலகின் 3-ல் ஒரு
பங்கு கிரேன்கள் துபாயிலுள்ளதுவென.கோல்ட் சவுக் போனால் ஏதோ தங்கத்தால் இழைத்து கட்டப்பட்ட அரண்மனைக்குள் புகுந்தது போல் தோன்றும்.ரெக்கார்ட் பிரேக் பண்ணும் நவீன உலக கட்டுமான சாதனைகள் நகரெங்கும்.பிற அரபு நாடுகள் போலல்லாது யார் வேண்டுமானாலும் வீடு வாங்கலாம் நிலம் வாங்கலாம் என்ற அரசின் உற்சாக அறிவிப்பு வேறு.ம்...ம். நம்மாட்கள் நிறைய பாடங்கள் இவர்களிடமிருந்து கற்க வேண்டியுள்ளது.

(சார்ஜா,துபாய் சேக்குகளிடையேயான தகராறால் சார்ஜா துபாயிடையேயான சாலைப் போக்குவரத்து முன்பு நாறிப்போய் இருந்தது.இப்போது நிலை தெரியவில்லை).

கீழே 1991-துபாயையும் 2005-துபாயையும் பாருங்கள்.கூடவே துபாய் ரோடுகள்.

UAE United Arab Emirates Dubai Old Photos Amazing Pictures From Sky












அழிக்க அன்லாக்கர்



எனக்கு தெரிந்தவரை ஆக்குதல் தான் ரொம்பவும் கடினம். அழித்தல் மிக எளிது. ஆனால் சில சமயங்களில் கணிணி உலகு அப்படி இருப்பதல்ல. சில கோப்புகளை அழிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

Cannot delete file: Access is denied அல்லது The source or destination file may be in use அல்லது There has been a sharing violation போன்ற வார்த்தைகளால் நச்சல் கொடுக்கும்.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலும் அக்குறிப்பிட்ட கோப்பானது அச்சமயத்தில் இன்னொரு பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்திருப்பதால் அழிக்கமுடியாதிருந்திருக்கலாம்.

இது போன்ற சமயங்களில் உதவ வருவது தான் Unlocker எனும் மென்பொருள்.

இந்த இலவச மென்பொருள் அக்கோப்புகளை அது மாதிரி பணிகளிலிருந்து விடுவிப்பதால் அழிக்கமுடியா கோப்புகளையும் எளிதாக அழிக்கலாம். தேவைப்படும்போது முயன்று பாருங்கள்.


Product Homepage


Download Link


1. Simply right click the folder or file and select Unlocker

2. If the folder or file is locked, a window listing of lockers will appear

3. Simply click Unlock All and you are done!

4. Now you can delete the file.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)



ஜாதி, மத பேதங்களை கடந்து இந்திய அளவில் எனக்கு மிகப் பிடித்தமான மனிதர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள். உலக அளவில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

.ஐன்ஸ்டீன் தன் மரணப்படுக்கையிலும் கடைசி நொடிவரை கணக்குகளாய் போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார் என்பார்கள்.

அவர் மூளையை ஆராய ஆர்வம் கொண்ட Dr.Thomas Harvey ஐன்ஸ்டீனின் மரணத்துக்கு பின் திருட்டுத் தனமாய் அவர் மூளையை எடுத்து வைத்துக்கொண்டாராம்.

இன்றும் அது Princeton Hospital Pathology lab-ல் இருக்கின்றது.

ஐன்ஸ்டீனின் வார்த்தைகள் பொதுவாய் நகைச்சுவையும் அர்த்தமும் செறிந்ததாய் இருக்கும்.

இங்கே சில உதாரணங்கள்.

எளிய தமிழில்.ஐன்ஸ்டீன் சொல்கிறார்.....எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும்.

அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?அறிவியல் அற்புதமானது தான்.

ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை.ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது.

கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள்.கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும்.A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Zஅதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும்.ஒரே நேரத்தில் யாரும் போருக்கும் சமாதானத்துக்கும் தயாராக முடியாது.

மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான் பயன்படுத்தப்படும்.ஆகாயமண்டலத்துக்கும் மனிதனின் முட்டாள் தனத்துக்கும் முடிவே இல்லை.

முன்னதுக்கு முடிவிருந்தாலும் இருக்கலாம்.தவறே செய்திராதவர்கள் புதுசாய் எதையும் முயலாதவர்கள் தாம்.காதலில் விழுதலுக்கெல்லாம் புவி ஈர்ப்புவிசை காரணமாகாதையா.

உலகிலேயே புரிந்து கொள்ள முடியாத ரொம்ப கஷ்டமான ஒன்று இன்கம்டாக்ஸ்.சிலவை எளிதாயிருக்க வேண்டும் தான்.

ஆனால் ரொம்ப ரொம்ப எளிதாய் அல்ல.கடவுள் என்ன நெனைப்பில் இருக்கிறார்னு விளங்கிக்கனும், மற்றவையெல்லாம் விளக்கமாயுள்ளன.நேரம் என ஒன்றிருக்க காரணம், எல்லாம் ஒரே சமயத்தில் நடக்காததால் தான்.சூடேறிப்போயிருக்கும் ஓர் அடுப்பில் நீங்கள் ஒரு நிமிடமே கையை வைத்தாலும் அது ஒரு மணிநேரம் போல் தோன்றும்.

ஆனால் அழகான பெண்ணோடு ஒரு மணிநேரமாய் பேசினாலும் அது ஒரு நிமிடமாய் தான் தோன்றும். அதான் ரிலேடிவிட்டி.உலகை புரிஞ்சிக்கவே முடியாத காரணம் அதை புரிந்துகொள்ள முடிவதுதான்.

கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு இருந்ததாவென அறிய ஆவல்.வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்.உதாரணமாய் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும்.

அதுவே வழிகாட்ட சிறந்த வழி.நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே.நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது.எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிப்பதில்லை. அது சீக்கிரமாய் வந்துவிடுகின்றதே.

-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)

வயர்லெஸ் கீ போர்டு அபாயம்

வயர்லெஸ் கீ போர்டு அபாயம்
வயர்லெஸ் கீ போர்டு, வயர்லெஸ் மவுஸ் என வைத்துக்கொளல் இப்போதெல்லாம் ஆடம்பர விஷயமல்ல. வீடுகளிலும் அலுவலகங்களிலும் இவை மிக சகஜமாகிவிட்டன.
அசோக்நகர் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பின் முதலாவது மாடியில் ஹாயாக அமர்ந்து கொண்டு வயர்லெஸ் கீ போர்டுவழி உங்கள் கணிணியில் ஏதோ டைப்புகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அது ஏதோ ஒரு பாங்கிங் சைட் பாஸ்வேர்டாக கூட இருக்கலாம்.
அதை அப்படியே என்ன டைப்புகின்றீர்கள் என இரண்டாவது மாடியில் குடியிருக்கும் "பத்தாவது படிக்கும் சுட்டி" தெரிந்து கொள்ளலாம். எப்படி?வயர்லெஸ் கீ போர்டுகள் நீங்கள் தட்டும் எழுத்துக்களை அப்படியே டைப்ப டைப்ப அவற்றை ரேடியோ அலைகளாக மாற்றி கணிணிக்கு அனுப்பிக்கொண்டேயிருக்கும்.
மேல்மாடி சுட்டி ரொம்ப தொலைவில் இல்லையே. அவர்களுக்கும் அந்த ரேடியோ அலைகள் எட்டும். இந்தகால பள்ளிக்கூட படு சுட்டிகளுக்கு ஒரு வயர்லெஸ் ரிசீவரும்,எளிய டிகிரிப்டோ மென்பொருளும் கிடைத்தால் போதும். மொத்தமும் காலி.
ஏன் அப்பேர்பட்ட Microsoft Wireless Optical Desktop 1000/2000 keyboard-கள் கூட இதற்கு விதிவிலக்கில்லையாம். அக்கம் பக்கம் யார் இருக்கானு தெரிஞ்சு வச்சிக்கிறது ஒரு விதத்தில் நல்லது தான்.

எங்கே போகும் இந்த பாதை...




காலம் மாற மாற நாமும் அதற்கு தகுந்தாற்போல் மாறவேண்டும். இதுதான் உலகநியதி. சிலநாடுகள் இந்த மாற்றங்களை புரிந்துகொண்டு, தங்களையும் மாற்றி கொண்டு வேகமாக வளர்ச்சிபாதையில் போய்கொண்டிருக்கும் நிலையில், இந்தியா பல்வேறு விஷயங்களில் இந்த மாற்றங்களை புரிந்துகொள்வதே இல்லை. பிரச்சினை தீவிரமாகி வேறு வழியில்லை என்ற சுழ்நிலையில் மட்டுமே விழித்துகொண்டு மாற்றங்களை ஏற்றுகொள்வது பற்றி யோசிக்கும். இந்த தலைப்பில் பல்வேறுவிதமான மாற்றங்களைபற்றி விவாதிக்கலாம். ஆனால் இங்கே கவனிக்கபோவது அரசின் கவனகுறைவினால் விவசாய நிலங்கள் (தேவையற்ற) குடியிருப்புக்காண நிலங்களாக மாறுவதைபற்றிதான்.மக்கள்தொகை பெருக பெருக அவர்கள் வசிப்பதற்காண குடியிருப்புகளும் பெருகுவது இயற்கையான ஒன்றே. ஆனால் இந்த மாற்றங்கள் நமது இயற்கை வளங்களை பாதிக்காமல் அதேநேரத்தில் நமக்கு புதிய பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல் பார்த்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

சொந்தமாக ஒரு வீடு என்பது மக்களின் நியாயமான கனவுதான். சேமிப்பும் அதை பாதுகாப்பாய் முதலீடு செய்ய மக்கள் விரும்புவதும் வரவேற்கபட வேண்டிய விஷயம்தான். ஆனால் அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாய் இருக்கவேண்டுமே தவிர உபத்திரமாய் இருக்ககூடாது. உதாரணமாக மக்கள் தங்கள் சேமிப்பை வங்கிகளில் முதலீடு செய்தால் அதன் மூலம் வங்கிகளில் சேரும் கோடிக்கணக்கான ரூபாய்கள் தொழில்துறையினருக்கு கடனாக சென்று பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்புகள் உருவாவதற்கும், அரசுக்கும் பல்வேறு வகையில் வரி வருவாய்க்கு வழிவகுக்கும்.

வங்கிகளில் வட்டிவிகிதம் குறைவென்றால் அதற்கு மாறாக பங்கு சந்தை, ம்யூச்சுவல் பண்ட், இன்சுரன்ஸ் போன்ற துறைகளில் முதலீடு செய்தாலும் அது வளர்ச்சிக்கே வித்திடும். ஆனால் நிலங்களில் செய்யப்டும் முதலீடுகள் கண்டிப்பாக நாட்டுக்கு எதிர்மறையான பிரசினைகளைதான் உருவாக்கும்.முதல் பிரச்சினை, நகர எல்லைக்குள்ளேயே பல மனைகள் வீடுகள் கட்டப்படாமல் காலியாக இருக்க சுற்றியுள்ள விவசாய நிலங்களை மனைகளாக்கி வீணாக்குவது. அத்தியாவசியமான உணவு பொருட்களை லாபநோக்கம் கருதி பதுக்குவது எப்படி குற்றமோ அதேபோல் லாபநோக்கத்தில் செய்யப்படும் இதுபோன்ற முதலீடுகளால் விளைநிலங்களை பாழாக்குவதும் குற்றமே.

இரண்டாவதும், மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய பிரச்சினை என்னவென்றால் அரசாங்கத்துக்கு (நகராட்சிகள்) நிறைய செலவினங்ளை உருவாக்குவது. நகரங்கள் அகலமாக விரிவடைந்து கொண்டே போனால், அவர்களுக்கென்று சாலை போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் போன்ற சேவையை செய்வதற்கு மேலும் மேலும் முதலீடுகள் செய்ய நேரிடும்.


விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சில நகரங்களில் கேபிள் டிவிக்கான கட்டணங்கள் அபார்ட்மெண்ட்களில் ஒரு மாதிரியாகவும் தனித்த வீடுகளில் ஒரு மாதிரியாகவும் இருக்கும். காரணம், அபார்ட்மெண்ட்களில் குறைந்த செலவில் (வயரில்) பெரும்பாலானோருக்கு இனைப்புகள் வழங்கிவிடலாம். அவர்களுக்கே இப்படியென்றால், கண்டிப்பாக அரசுக்கும் இது பலவேறு வகையில் செலவினங்களை குறைக்கும்.

வெளிநாடுகளில் 50 மாடி 100 மாடி என கட்டடங்கள் எழுப்புவதற்கு காரணம் அவர்களிடம் இடம் இல்லை என்பது இல்லை. பல வகைகளில் இது வசதியாக இருப்பதால் நிலபரப்பில் இந்தியாவைவிட மிகபெரிய நாடுகள் கூட நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு / அலுவலகங்களுக்கே முன்னுரிமை தருகின்றன. இந்தியாவும் நகரங்களில் சலுகைகள் மூலம் இதுபோன்ற குடியிருப்புகளை ஆதரித்தால் விளைநிலங்களையும் காப்பாற்றலாம் மற்றும் நகரங்களில் இடநெருக்கடி தவிர்க்கப்பட்டு அகலமான சாலைகள் அமைப்பதிலிருந்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான பூங்காகளையும் உருவாக்கலாம்.மக்களின் கவலையெல்லாம் தங்களுடைய முதலீடுகள் லாபம் தரகூடியவையாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் என்பதே.

அரசாங்கம்தான் ஆரோக்யமான முதலீடுகளுக்கு சலுகைகளும் தவறான முதலீடுகளுக்கு கூடுதலான வரிச்சுமையையும் சுமத்தி அதை கட்டுப்படுத்தவேண்டும்.எனவே இது போன்ற பிரச்சினைகளை தடுக்க அரசு எடுக்கவேண்டிய முடிவுகள்.1) வளர்ந்து வரும் நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விரைவாக அனுமதி அளிப்பதோடு மட்டுமில்லாமல், இந்த குடியிருப்புகளுக்கு முத்திரைதாள் கட்டணத்தை குறிப்பிட்டகாலத்துக்கு ரத்து செய்யவேண்டும்.2) நகரங்களில் நிலங்கள் மனைகளாக பிரிக்கப்பட்டு குறிப்பிட்டகாலத்துக்குள் அவற்றை (வீடுகளாக) பயன்ப்டுத்தாவிட்டால் ஆண்டுதோறும் அந்த மனைகளின் மீது 10 அல்லது 20 சதவிகித அபராத வரி விதிக்கவேண்டும்.

பிற வங்கியின் ATMல் பணம் எடுத்தால்


ATM
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிற வங்கியின் ATMல் பணம் எடுத்தால் அதற்கென்று தனியாக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களை பொறுத்தவரையில் இது ஒரு சந்தோஷமான செய்தி. ஆனால் நீங்கள் எந்த ATMல் வேண்டுமானாலும் கூடுதல் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம் என்ற வசதி வந்துவிட்டால் சில தனியார் வங்கிகள் சிக்கனம் கருதி புதிதாக ATM நிலயங்களை திறக்காமல் இருக்கும். இது ஏற்கணவே இருக்கும் ATMல் கூட்டத்தை அதிகரிக்கும். எனவே பிற வங்கிகளின் ATM ல் பணம் எடுத்தால் அதற்காக குறிப்பிட்ட அளவு கட்டனம் வசூலிப்பதுதான் சரியான நடைமுறை.
இன்னும் சொல்லபோனால் ATM என்பது வங்கிதுறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்ட நிலையில், ஒவ்வொறு வங்கியும் தனித்தனியாக ATM அமைத்து அதற்கென வாடகை, ஊழியர்கள் மற்றும் நிர்வாக செலவு செய்வதை விட, ATM சென்டர் நடத்துவதையே தனித்துறையாக மாற்றி அதை அரசாங்கமோ அல்லது தனியாரோ நிர்வாகிக்கலாம். ஒரு ATM நிலையத்தில் செய்யப்படும் பணபரிமாற்றத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து கட்டணம் வசூலித்துகொள்ளலாம்.

ஜோக்ஸ்


ஜோக்ஸ்



ஒரு குழந்தை தன் அம்மாவிடம்..."அம்மா, மனித இனம் எப்படிமா உருவாயிற்று?""கடவுள் ஆதாமையும் ஏவாளையும் படைச்சார். அவங்களுக்கு குழந்தை பிறந்து படிப்படியா மனித இனம் உருவாயிற்று."


அதே குழந்தை தன் அப்பாவிடம் இதே சந்தேகத்தை கேட்க..."குரங்கிலிருந்து படிப்படையா உருவானதுதாம்மா மனித இனம்"குழம்பிபோன அந்த குழந்தை மீண்டும் தன் அம்மாவிடம்..."அம்மா, கடவுள்தான் மனிதனை படைச்சார்னு நீ சொல்ற, ஆனா அப்பா குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானான்னு சொல்றார். எதும்மா உண்மை?""


ரெண்டும் சரிதான். நான் சொன்னது எங்க பரம்பரையைபத்தி, உங்க அப்பா சொல்றது அவர் பரம்பரையைபத்தி."

ஜோக்ஸ்



ஜோக்ஸ்



ஒரு குழந்தை தன் அம்மாவிடம்..."அம்மா, மனித இனம் எப்படிமா உருவாயிற்று?""கடவுள் ஆதாமையும் ஏவாளையும் படைச்சார். அவங்களுக்கு குழந்தை பிறந்து படிப்படியா மனித இனம் உருவாயிற்று."


அதே குழந்தை தன் அப்பாவிடம் இதே சந்தேகத்தை கேட்க..."குரங்கிலிருந்து படிப்படையா உருவானதுதாம்மா மனித இனம்"குழம்பிபோன அந்த குழந்தை மீண்டும் தன் அம்மாவிடம்..."அம்மா, கடவுள்தான் மனிதனை படைச்சார்னு நீ சொல்ற, ஆனா அப்பா குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானான்னு சொல்றார். எதும்மா உண்மை?""


ரெண்டும் சரிதான். நான் சொன்னது எங்க பரம்பரையைபத்தி, உங்க அப்பா சொல்றது அவர் பரம்பரையைபத்தி."

அலைப்பேசியும் .jar கோப்புகளும்



அலைப்பேசியும் .jar கோப்புகளும்


முன்பு போல் அலைப்பேசிகள் இனிமேலும் பேசமட்டுமல்லாது இன்ன பிற காரியங்களையும் கையடக்கமாய் செய்ய உதவும் அளவிற்குவந்துவிட்டன. இணையத்தை மேயமுடிகின்றது, மின்னஞ்சல் பொட்டியை பார்க்கமுடிகின்றது, மென்புத்தகங்களை படிக்கமுடிகின்றது அப்படியே இஷ்ட விளையாட்டுகளை இறக்கம் செய்து பல ஆட்டங்களும் ஆடமுடிகின்றது. முன்பெல்லாம் கணிணிகளில் மட்டுமே முடிந்த பயன்பாடுகளையெல்லாம் இப்போது உள்ளங்கையிலேயே செய்ய முடிகின்றன.
உங்கள் அலைபேசியையும் இது மாதிரி முழுவீச்சில் பயன்படுத்தலாம். என்ன கொஞ்சம் ஒசர ரகமான ஃபோனாய் உங்கள் போன் இருத்தல் வேண்டும். அதிக போன் மெமரி இருந்தால் நல்லது. மைக்ரோ SD மெமரி கார்டு வசதி உங்கள் போனில் இருந்தால் நீங்கள் கலக்கலாம் போங்க.
மேல் நான் சொன்ன கைப்பேசி மென்பொருள்களெல்லாம் இணையத்தில் நிறையவே இறக்கத்துக்கு கிடைக்கின்றன. பெரும்பாலும் இவை jar,jad வடிவில் கிடைக்கும். இம்மென்பொருள்களை உங்கள் கைப்பேசிக்கு கடத்தி நிறுவலாம்.(கைப்பேசியிலிருந்து கணிணிக்கு) கைப்பேசியில் ஒரு மென்பொருளை நிறுவ அதன் .jar கோப்பும் அல்லது .jad எனப்படும் இன்னொரு கோப்பும் உங்களுக்குத் தேவைப்படலாம்.
ஒருவேளை .jar மட்டுமே இருந்தால் அதிலிருந்து .jad கோப்பை எளிதாய் jadMaker எனும் இலவச மென்பொருள் வழி உருவாக்கலாம்.
இந்த கைப்பேசி மென்பொருள்களை உங்கள் கணிணியில் சோதனைக்காக ஓட்ட, சரிபார்க்க ஒரு Cell Phone Emulator வேண்டுமாயின் நீங்கள் சன் ஜாவாவின் இலவச Sun Java Wireless Toolkit-ஐ முயன்று பார்க்கலாம்.
இப்போது ஆப்பிள் ஐபோனுக்கே சாப்ட்வேர் டெவலப்மென்ட் கிட் கிடைக்கின்றது.
கைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் கீழ்கண்ட சுட்டியில் அநேக ஈபுத்தகங்கள் கிடைக்கின்றன.(Registration Required)http://www.thinnai.info
கைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் குரான் கீழ்கண்ட சுட்டியில் கிடைக்கின்றது. (Registration Required)
http://www.mobango.com
கைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் பைபிள் கீழ்கண்ட சுட்டியில் கிடைக்கின்றது. (Registration Required)
http://www.christiansmobile.com