18.4.08

உலக அளவில் ஒரே கரன்சி


Globalization அதாவது உலகமயமாக்கலின் தாக்கம் இன்று எல்லாராலுமே உணரப்படுகின்றது. வால்ஸ்டிரீட்டின் நெளிவு சுழிவுகள் உலகபங்குசந்தைகளில்எதிரொலிக்கின்றன.

ஈரானில் போர் மேகம் சூழ்ந்தால் சீனாவில் பெட்ரோல் விலை ஏறுகின்றது. அமெரிக்காவில் Day Light Saving Time மாற்றப்பட்டால் சென்னையில் கால் சென்டரில் வேலை செய்யும் மனோஜ் சீக்கிரமாக வேலைக்கு போக வேண்டியுள்ளது.

இப்படி வீடுவரை குடிவந்துள்ள உலகமயமாக்கல் பாதி கிணறே தாண்டியுள்ளதால் தாம் இன்றைய உலக எக்கானமி தடுமாறுகின்றது என்கின்றது ஒரு ஆய்வு.

அதாவது இன்று Economic imbalance, Economic instability பிரபலமான வார்த்தைகள்.இதற்க்கெல்லாம் தீர்வு அரைவேக்காட்டு தனமாய் உள்ள உலகமயமாக்கலை முழுதாக்க வேண்டுமாம்.

அதாவது ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து யூரோ எனும் கரன்சி கொண்டு வந்துள்ளார்கள். அரபு நாடுகளும் இது போன்ற ஒரு பொது கரன்சிக்கு தயாராகின்றார்கள்.

ஏன் தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் உட்பட சில நாடுகள் சேர்ந்து பொது கரன்சி உருவாக்கவும் திட்டம் போட்டுள்ளன.

அமெரிக்காவும் கனடாவும் மெக்ஸிகோவும் இணைந்து North American Union- என "The Late Great U.S.A" உருவாக்கி அதில் பொது கரன்சி உலவ விட திட்டங்கள் உள்ளன.

இந்த போட்டிகளையெல்லாம் விட்டு விட்டு பேசாமல் உலக அளவில் ஒரு பொது கரன்சி உருவாக்கி, அதற்கொரு உலக ரெசர்வ் பாங்க் உருவாக்கினால் பெரும்பாலான தலைவலிகள் தீரும் என்கின்றார்கள் பெரும்பாலானோர்.


இதைத்தான் Single Global Currency.org-ம் வலியுறுத்துகின்றார்கள்.

2025-க்குள் உலக அளவில் ஒரு பொது கரன்சி கொண்டு வருவது தான் இவர்கள் நோக்கம்.

பலரின் விருப்பமும் அதுதான்.

முன்னாள் U.S Federal Reserver Chair Paul Volcker இவ்வாறாக கூறினார்

"A global economy requires a global currency."

உலக பொது கரன்சியானால் உலகில் அனைவருக்கும் சம்பளம் ஒரே கரன்சியில் வழங்கப்படுவதால் ஏற்றத்தாழ்வுகள் வெகுவாக குறையும். பெரும்பாலான பொருளாதார குளறுபடிகள் சரியாகும் என நம்புகின்றார்கள்.


அப்படியே உலக அளவில் ஒரு பார்லிமெண்ட் அமைத்து உலகளாவிய அரசு ஒன்றும் ஆட்சி செய்தால் பிரச்சனையே இருக்காது போங்க.

புத்தாண்டு உணர்வுகள்

வியர்வையில் வீரம்பெரியவர்கள் சிறகடித்து போய் உலகபிரசித்தி என்னும் முகிலை எட்டிப்பிடித்து விட்டார்கள் என்று எண்ணுகிறாயோ? இல்லை.
பிறர் துயிலும் பொழுது இவர்கள் கால்கடுக்க ஏறினார்கள்
-ஹென்றி லாங் பெல்லோ
Positive Thinking"I Imagine this new year as my best year.I affirm enthusiasm energy and pleasure in my work.
As a positive thinker I will do 10% better than last year.God will help me reach this goal"-Norman Vincent Peale
The most important thing in the Olympic games is not to win but to take part;just as the most important thing in life is not the triumph but the struggle.
The essential thing is not to have conquered but to have fought well
-Baron Pierre de Coubertin (Founder of the Modern Olympic games)
செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது-சாபாகிளிஸ்
Let your goal be "Day by Day I am on my way.Say it over and over again and you will succeed-Mack.R.Douglas
வீழ்வது வெட்கமல்ல,வீழ்ந்தே கிடப்பது தான் வெட்கத்திலும் வெட்கம்-சீனா
We are stronger than we think
-Dale Carnegie
உண்மை உன் பக்கமெனில் வெற்றியும் நிச்சயம் உன் பக்கம் தான்
-நேரு-இந்திரா கடித்தத்தில்

இந்த வீணைக்கு தெரியாது-A hit`s Profile

ராகம் - சகானா.(Sahana)
வெளியீடு-தூர்தர்ஸனின் ரயில் ஸ்நேகம் டிவி தொடர் (1990`s) (with 13 episodes)இயக்கம்-கே.பாலசந்தர்
பாடியவர்-சித்ராநடிப்பு-நிழல்கள் ரவி, அமுதா
எழுதியவர் : வைரமுத்து
இசை அமைத்தவர் : வி.எஸ்.நரசிம்மன்.

வரிகள்
இந்த வீணைக்கு தெரியாதுஇதை செய்தவன் யாரென்று(2)
என் சொந்த பிள்ளையும் அறியாது
அதை தந்தவன் யாரென்று
எனக்குள் அழுது ரசிக்கின்றேன்
இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்
இந்த வீணைக்கு தெரியாது
மலையில் வழுக்கி விழுந்த
நதிக்குஅடைக்கலம் தந்தது
கடல் தானேதரையில் வழுக்கி விழந்த
கொடிக்குஅடைக்கலம் தந்தது
கிளை தானேஎங்கோ அழுத
கண்ணீர் துடைக்க
எங்கோ ஒரு விரல் இருக்கிறது
காகம் குருவிகள் தாகம்
தீரகங்கை இன்னும் நடக்கிறது
இந்த வீணைக்கு தெரியாது
சொந்தம் பந்தம் என்பது எல்லாம்
சொல்லித் திரிந்த முறை தானே
சொர்கம் நரகம் என்பது எல்லாம்
சூழ்நிலை கொடுத்த நிறம் தானே
உள்ளம் என்பது சரியாய் இருந்தால்
உலகம் முழுதும் இனிக்கிறது
உதிர போகும் பூவும் கூட
உயிர் வாழ்ந்திட தான் துடிக்கிறது
இந்த வீணைக்கு தெரியாது
என் சொந்த பிள்ளையும் அறியாது

ரூபி போகும் ரயில்-வெப் டெவலப்பர்கள்

வெப் டெவலப்பர்கள் உலகில் இன்று சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு ஜார்கன் "Ruby on Rails".
இது ஒரு சில சமயங்களில் RoR அல்லது Rails எனப்படுகிறது.
Perl , Python போன்ற ஸ்கிரிப்டிங் வகைகளுக்கு இந்த RoR ஒரு மாற்று எனலாம்.வேகமான செயல்பாடு,எளிதான ஸ்கிரிப்டிங் என்கிறார்கள்.

இன்னும் மார்க்கெட்டில் இதெல்லாம் நிரூபிக்கப்பட்டதாக தெரியவில்லை.
ஆனாலும் போகப் போக இந்த ஸ்கிரிப்டிங் வகை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ruby on Rails ஆனது இருவற்றால் ஆனது. அதாவது Ruby எனப்படும் object-oriented programming scripting language (OOP) - மற்றும் Rails எனப்படும் open source web framework-ன் கலவையே Ruby on Rails.
அதாவது ரயில் இல்லையேல் ரூபி இல்லை. இது டேவிட் கெனிமெர் கான்ஸ் என்பவரால் (David Heinemeier Hanss) உருவாக்கப்பட்டு,இன்று அது open-source project ஆக,
rubyonrails.org -ல் காணக் கிடைக்கிறது.
நீங்களே உங்கள் வின்டோஸ் கணிணியில் இதை நிறுவி விளையாடி பார்க்கலாம்.ரூபியுடன் நீங்களும் ரயிலேறி பாருங்கள்.
Windows -க்கான Ruby download link
http://rubyforge.org/frs/?group_id=167&release_id=5246
Rubygems download link
http://rubyforge.org/frs/?group_id=126&release_id=2471
சாம்பிள் ஸ்கிரிப்டுகள்-டூடோரியல்கள்- இங்கே
http://www.hotscripts.com/Ruby_on_Rails/index.html

காகிதத்திலிருந்து கணிணிக்கு


உங்களின் பழைய தமிழ் நூல்கள்,அச்சுப் பிரதிகள்,சேகரித்த செய்திதாள்கள், பத்திரிகை துணுக்கு துண்டுகள்,கிழித்து வைத்திருக்கும் பிரசுரங்கள்,தமிழ் பக்கங்கள் இவற்றை எல்லாம் கணிணியில் ஏற்றி புதிய பதிப்பாக மென்னூலாகவோ அல்லது அச்சிட்டோ வெளியிட ஆசையா?.

எளிது அது இப்போது.


நீங்கள் நினைப்பது போல் அவற்றையெல்லாம் தட்டச்சு செய்து கணிணியில் ஏற்ற வேண்டிய அவசியமில்லை.எந்த தமிழ் தாளையும் ஸ்கேனாக படம் (bmp) பண்ணி (ஸ்கேனர் தேவைப்படும்)

பின்பு OCR மென்பொருள் வழி ஸ்கான் செய்தால் சாதாரண அந்த பட கோப்பு பின்பு சாதாரண text கோப்பாக மாறி உங்களுக்கு கிடைக்கும்.

நீங்கள் மேற்செய்ய வேண்டியதெல்லாம் ஏதேனும் மாற்றம் எடிட்டிங் செய்து உங்கள் மின்புத்தகம் செய்யவேண்டியது தான்.


இந்த மாதிரியான முதன் முதல் தமிழ் ஓசிஆர் மென்பொருள் "பொன்விழி" ஆகும்.70% வரை குறையின்றி பணிசெய்வதாக கேள்வி.

கீழ்காணும் இரண்டு தமிழ் OCR மென்பொருள்களும் இலவச மென்பொருள்களே.



PonVizhi Product Page


http://www.ildc.in/GIST/htm/ocr_spell.htm


PonVizhi Direct Download Link


http://www.ildc.in/GIST/LearnFun/PonVizhi-TamilOCR.zip


Another Tamil OCR


http://sourceforge.net/projects/gtamilocr/


Free Tamil OCR Optical Character Recognition Paper printout Scan Computer Image


Picture to text file conversion

சின்னத் திரைப் பாடல்கள்




சில சமயங்களில் சின்னத் திரை தமிழ் தொடர் தீம் பாடல்கள் அர்த்தத்தோடு அழகாக ரசிக்கும் படியாக அமைந்து விடுவதும் உண்டு.அப்படியான பாடல்களில் ஒன்று "நம்பிக்கை" தொடரின் கீழ்கண்ட பாடல்.கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகள் கீழே


.நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை


நம்பிக்கை இல்லாமல் நாளை இல்லை


நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை


நம்பிக்கை இல்லாமல் வாழ்வு இல்லை


நட்பு என்பதும் நம்பிக்கை


கற்பு என்பதும் நம்பிக்கை


முயற்சி என்பதும் நம்பிக்கை


நாம் மூச்சு விடுவது நம்பிக்கை


தலையை இழந்த அருகம் புல்லும்தழைத்து வருவது நம்பிக்கை


அப்பா என்னும் உறவும் கூட அம்மா கொடுத்த நம்பிக்கை


ஆண்டவன் என்னும் கற்பனை கூடஅச்சம் கொடுத்த நம்பிக்கை


அடுத்த வருடம் மழை வரும் என்பது உழுவோர்க்கெல்லாம் நம்பிக்கை


அடுத்த தேர்தலில் ஆட்சி என்பதுஅரசியல்வாதியின் நம்பிக்கைதரைக்கு மேலே பாதம் நிற்பதும்ஆகாயத்தில் நிலவு நிற்பதும்எல்லைக்குள்ளே கடல்கள் இருப்பதும்இதயகூட்டில் ஜீவன் இருப்பதும்நம்பிக்கை


நம்பிக்கை அது நம்பிக்கை நம்பிக்கை

இந்திரஜால் Phantom-ம் மாண்ட்ரேக்கும்




கார்ட்டூன் நெட்வொர்க்குகள் வந்து பால்ய குழந்தைகளை ஆளும் முன் அந்தகால "குழந்தை"களை ஆண்டு கொண்டிருந்தவை Indrajal Comics-காமிக்ஸ் புத்தகங்கள் எனப்படும் படக்கதை நூல்கள்.


Phanton,Mandrake,Bahadur,Flash Gordon,Dara,Rip Kirby,Buz Sawyer,Kerry Drake


இப்படி தொடரும் அந்தகால வீர தீர காமிக்ஸ் கதை புத்தகங்களை அழகாக ஸ்கான் பண்ணி இணையத்தில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.


நீங்களும் ரசிகர்களானால் இதை இலவசமாய் இணையத்திலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம்.


மலரும் நினைவுகளுக்கு திரும்பலாம்.


http://thecomiclinks.blogspot.com/2006/08/comic-download-links.html

கணிணி பவர் ஆப் மேட் ஈஸி


உங்கள் கணிணியை தானாகவே ஒரு குறிப்பிட்ட சமயத்தில் பவர் ஆப் செய்ய வேண்டுமா?.

இதோ ஒரு சிறு இலவச மென்பொருள்.சமயத்தை குறித்து விட்டால் போதும்.சரியான நேரத்தில் அதுவே உங்கள் கணிணியை Shutdown,Logoff அல்லது Hybernate செய்துவிடும்.

இனி இசை கேட்டு கொண்டே தூங்கிவிடலாம் அல்லது படம் பார்த்தவாறே தூங்கிவிடலாம். :)

Product Page


Direct Download Link


Automatic Scheduled Computer Switchoff Poweroff Reboot Freeware Utility

சென்னை டிவி சானல்களை சிக்காகோவிலிருந்து பார்க்கலாம்



சென்னை மாதவரம் வீட்டிலுள்ள டிவியில் நீங்கள் என்னவெல்லாம் சேனல்கள் பார்க்கமுடியுமோ அவற்றையெல்லாம் இப்போது நீங்கள் சிக்காகோ பிரின்ஸ்டன் அவென்யூவிலுள்ள உங்கள் வீட்டிலிருந்தும் பார்க்கலாமாம்.


எப்படி இது சாத்தியம்.


என்னவெல்லாம் தேவை இதற்கு?.இந்தியாவில் தேவையானது ஒரு டிவி,கேபிள் இணைப்பு மற்றும் நல்ல இணைய இணைப்பு.சிக்காகோவில் தேவையானது நல்ல இணைய இணைப்பும் கணிணியும்.$149-க்கு கிடைக்கும் HAVA unit எனும் இக்கருவியை இந்திய வீட்டு டிவியில் முறைப்படி இணைத்துவிட்டால் சிக்காகோவிலிருந்து உங்கள் கணிணி/இணையம் வழி அந்த சென்னை டிவியை பார்க்கலாம்.(Hava மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும்).


ஏறக்குறைய அனைத்து சேனல்களையும்.எந்தஅமெரிக்க டிவி சந்தாதார கணக்கும் இல்லாமல் பார்க்கலாம்.மேலும் Tivo போல் நிகழ்ச்சிகளை சேமித்து வைத்து பிற்பாடு பார்க்கும் வசதியும் இதில் உண்டு என்கிறார்கள்.


டெக்னாலஜி துள்ளியோடிக்கொண்டிருக்கிறது.


http://www.snappymultimedia.com/products_hava_hd_pro.htm


Watch Indian Local Tv Channels from USA and worl wide Remote Viewing Over The Internet

உடைக்கப்பட்ட விண்டோஸ் விஸ்டா



யாராலும் உடைக்கவே முடியாது.எதுவுமே செய்யமுடியாது.பாதுகாப்பு விஷயங்களில் எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டோம் என்று நுண்மென்னால் (அதாங்க ஐ மீன் மைக்ரோசாப்ட்டால்,FireFox -ஐ நெருப்பு நரின்னும் போது Microsoft-ஐ நுண்மென் எனக் கூடாதா? :) )சொல்லி வெளியான விண்டோஸ் விஸ்டா-Windows Vista முற்றிலும் ஹாக்கர் ஜாம்பவான்களால் இன்று உடைக்கப்பட்டு நிற்கின்றது.


பொதுவாக விண்டோஸ் விஸ்டாவை ஆக்டிவேட் பண்ண இணையம் போய் இணையம் வழி மைக்ரோசாப்ட் செர்வர்களால் அவை ஆக்டிவேட் செய்யப்படும்.இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடினமாய் இருக்கும் என்பதால் KMS (Key Management Service) எனப்படும் இந்தமாதிரி சிறு சிறு "விண்டோஸ் விஸ்டாவை ஆக்டிவேட் செய்யும் செர்வர்"களை மைக்ரோசாப்ட் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் கொடுக்க தீர்மானித்தது.


அதில் வந்தது தான் வினை.அந்த KMS செர்வெர் இமேஜ் இணையத் தெருவில் இன்று கொட்டிக்கிடக்கின்றது.இந்த செர்வெரின் VMware இமேஜை torrent வழி இறக்கம் செய்து ஒரு VMware Player கொண்டு தற்காலிகமாக அந்த இமேஜை ஓடவிட்டு உங்கள் விண்டோஸ் விஸ்டாவை நீங்களே ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.


என்னத்தை சொல்வது.இங்கே நமக்கொரு சந்தேகம் இலவசமாய் விஸ்டாவை கொடுப்பதற்கு பதிலாய் இந்தமாதிரி வேலைகளை செய்தால் பிச்சிகிட்டு ஓடும் என தெரிந்தே மைக்ரோசாப்ட் செய்யும் மார்க்கெட்டிங் சதியா இல்லை உண்மையிலேயே கிராக் செய்யப்பட்டதா என தெரியவில்லை.


பின்ன என்னங்க சொல்வது.விண்டோஸ் விஸ்டா பற்றி கவலைப்படாத ஜந்துகளெல்லாம் இப்போது ஒரு DVD யை கையில் வைத்து கொண்டு அதை சந்தோசமாய் கிராக் பண்ணிவிட்டு பின்னர் ஆகா என்னா அருமை Windows Vista.Super graphics ya-ன்னு சொல்லிட்டு போறதுங்க.


Read More KMS Crack Activate Windows Vista


Microsoft.Windows.Vista.Local.Activation.Server-MelindaGates torrent which contains a spoofed KMS server VM image Windows vista pirate cracked

சூப்பர் ஹிட் வலைப்பூக்கு வந்த சிக்கல்


உலகின் சூப்பர் ஹிட் வலைப்பூக்களில் (Blog) ஒன்று


பெரேஸ் கில்டன் வலைப்பூ.


மரியோ லாவன்டிரா (Mario Lavandeira),எனும் இந்த 28 வயது இளைஞரின் இணைய வலைப்பூக்கு படிக்க ஒரு நாளில் வருவோரின் எண்ணிக்கை என்ன தெரியுமா?. 30 லட்சம்.


உலக புகழ்பெற்ற ஆங்கில திரை உலகமாகிய ஹாலிவுட் பிரபலங்கள் பற்றிய கிசுகிசுக்கள் மற்றும் சர்ச்சைக்கிடையான படங்களை வெளியிட்டே இந்த பிளாகு சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.


இந்த வலைப்பூ முழுக்க முழக்க அவராலேயே எழுதப்படுகிறதாம்.தினமும் சராசரியாய் 25 பதிவுகள் வேறு.ஆனால் ஆள் நன்றாக காசு பண்ணிக்கொண்டிருக்கிறார்.150x200 Pixel விளம்பரம் ஒன்று இவர் வலைப்பூவில் ஒரு வாரம் ஓட விட ஏறக்குறைய 4 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்.


சராசரியாய் தினமும் 12 லட்ச ரூபாய் பண்ணுவது போல் தெரிகின்றது.இதுவரை மொத்தம் 7000 பதிவுகள் இட்டுள்ளாராம்.


அதில் சுமார் ஐந்து லட்சம் பின்னூட்டங்கள். மூச்சுவாங்குகிறது.இத்தனைக்கும் இவருக்கென்று ஒரு நிரூபர் கூட கிடையாதாம்.


இப்போதோ அவர் இன்னொரு காப்பிரைட் சிக்கலில் மாட்டி இன்னும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறார்.

உலகிலேயே மிக உயரமான வலைத்தளம்



கேட்க கேணத்தனமாக இருக்கின்றதா?.


ஆமாம் ஆனால் அதுதான் உண்மை.இந்த வலைத்தளத்தின் உயரம் என்ன தெரியுமா? 18.939 கிலோமீட்டர்கள்.அதாவது 11.769 மைல்கள்.


இந்த வலைத்தளத்தின் பக்கம் போனால் பக்கத்தை ஸ்க்ரோல் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.ஏறிச் செல்ல படிகளும் எலிவேட்டரும் கொடுத்திருக்கிறார்கள்.


அவ்ளோ உயரம்.ஏதோ CSS சோதனைக்காக இப்பக்கத்தை பண்ணியிருக்கிறார்களாம்.போய் பார்த்துவிட்டு வாருங்கள்.


http://worlds-highest-website.com/


கூடவே இங்கு போய் உலகிலேயேயே மிகச் சிறிய வலைத்தளத்தையும் பார்வையிடுங்கள்.
http://www.guimp.com/


Worlds Highest Website And Worlds Smallest website

சென்னைத் தெருப் பெயர்கள் இப்போது கூகிள் மேப்பில்


எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியவில்லை.கூகுள் இப்போது இந்தியாவின் மேப் (India Map) போடுவதில் தீவிரமாய் இருப்பது போல் தெரிகின்றது.இந்தியாவின் பெரும்பாலான பெருநகரங்களின் தெரு அளாவிலான மேப்புகளும் சிறு நகரங்களின் தேசிய நெடுஞ்சாலை அளவிலான மேப்புகளும் தயாராக ஆன்லைனில் உள்ளன.
குறிப்பாக சென்னை வாசிகளுக்கும் அங்கு வருபவர்களுக்கும் கொண்டாட்டம் தான்.
T nagar Pothys வரைக்கும் மேப்பில் பார்க்க முடிகிறது என்றால் பாருங்களேன்.
சீக்கிரமாகவே டிரைவிங் டைரக்சன் (driving directions ) கொடுத்தாலும் கொடுப்பார்கள்.Great holidays gift from Google. :)கீழே சொடுக்கி நகர வரைபடங்களை பாருங்கள்.









நாசாவைப் பார்க்கலாம்-NASA Pictures






நாசாவைப் பார்க்கலாம் - NASA Pictures




அமெரிக்காவின் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா-National Aeronautics and Space Administration (NASA).
நம்மூரின் ISRO போல.1958-ல் தான் நிறுவப்பட்டது.
ஜூலை 1969-ல் அப்பொல்லோ 11 வழி நிலவுக்கே ஆள் அனுப்பிவிட்டார்கள்.
பின்னர் இது ஒரு சுத்த கதை என ஒரு சாரார் கூற நாசா அதை மறுத்து தலையில் சத்தியம் அடித்து உண்மையென்று கூறிவருகிறது.
படத்தில் இருப்பவர் தான் அந்த ஹீரோ நீல் ஆம்ஸ்ட்ராங்க்.இன்றைய அளவில் நாஸாவின் வருடாந்திர பட்ஜெட் ஏறக்குறைய 17 பில்லியன் டாலர்கள்.
தலைமையகம் வாசிங்டன் டிசி-யிலுள்ளது.

வரிகள்-வாழ்வின் உச்சங்களை..


வாழ்வின் உச்சங்களை அடைந்தோரெல்லாம் ஒரே இரவில் பறந்து போய் அதை எட்டியவர் அல்லர்.-
இவர் பிறர் தூங்கிக்கொண்டிருக்கும் போது கால்கடுக்க ஏறிக்கொண்டிருந்தார்கள்
-ஹென்றி லாங்பெல்லோ
The heights by great men reached and kept were not attained by sudden flight,
but they while their companions slept,
were toiling upward in the night. -Henry Wadsworth Longfellow

வாரயிறுதி கொண்டாட்டம்-WEEKEND


WEEKEND.

நாம எல்லோருமே ரொம்ப ஆசையாய் எதிர்பார்க்கிறது.

அதை எந்த புண்ணியவான் கண்டு பிடிச்சானோ தெரியலை.

சூரியனை வைத்து நாள் கண்டுபிடித்தான் சந்திரனை வைத்து மாதம் கண்டுபிடித்தான்.

எதை வைத்து வாரம் கண்டுபிடித்தான்?.

யாராயிருந்தாலும் அவன் வாழ்க.(யூதர்கள் ஒவ்வொரு ஏழாம் நாளும் ஓய்வு இருப்பது வழக்கம் - சாப்பாத் என்கிறார்கள்.

அதிலிருந்து வந்திருக்கலாம்).சனி,ஞாயிறு என முழு உலகமே WEEKEND கொண்டாடும்போது அரபு உலகம் வியாழன்,வெள்ளி என WEEKEND கொண்டாடுகிறது.

வாரம்முழுவதும் வார இறுதிக்காக கா.....த்திருந்து வந்ததும் கொண்டாடி தள்ளிவிடுகிறோம்.ஏனென்றால் TODAY IS "PRESENT".TOMORROW வருமா யாருக்கு தெரியும்.

இனிமேல் நீங்களும் கூட முழுசாய் கொண்டாடுங்க.ஒரு நிமிடம்...என்ன? போவோமா ஊர்கோலம் என்று ஊர் சுற்ற போறீங்களா? போங்க போங்க

நாமும் ஓர் பயணி

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் தனது கடைசிநாட்களில் இப்படிச் சொன்னதாய்ச் சொல்வார்கள்.

கண் கலங்கி தன்னை பார்க்க வருபவர்களை பார்த்து "எல்லாத்துக்கும் கண்டிப்பா ஒரு முடிவு வந்து தானே ஆகனும். முடிவே இல்லாத ஒரு கிரிக்கெட் ஆட்டம் சுவாரஸ்யமாய் இருக்குமா என்ன?"ன்னு சொல்லி சிரிப்பாராம்.


எவ்வளவு சரியாய்ச் சொன்னார் பாருங்கள்.


எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வந்துவிடுகின்றதே.


சாமானியர்களுக்கும் சரி, சாம்ராஜ்யங்களுக்கும் சரி.இரபீந்திரநாத் தாகூர் அவர்கள் அழகாய் இப்படிச் சொன்னார்.


"எனது பூமியே!நான் உனது கரையில் ஒரு அந்நியனாகவே வந்துஉனது வீட்டில் ஒரு விருந்தாளியாக வாழ்ந்து ஒரு நண்பனாகவே உன் இல்லத்தை விட்டு வெளியேறுகிறேன் "


இன்றைக்கு நாம் பலரையும் வழி அனுப்பி வைக்கின்றோம்,நாளைக்குநாமும் அங்கே ஓர் பயணி தான்.எங்கே போகின்றோம்? அதில் தானே மொத்த குழப்பமும்.நூறு ஆண்டுகளுக்கு முன்பு நான் இல்லை.


நூறு ஆண்டுகளுக்கு அப்புறமாய் நான் இருக்கப் போவதும் இல்லை. இடைப்பட்ட காலத்தில் தான் எத்தனை போராட்டம்.


எத்தனை சம்பவம்."கடவுள் எழுதிய சிறுகதைதான் ஒவ்வொரு மனிதனின் வாழ்வும்" என்ற ஆண்டர்சனின் வைர வரிகள் உண்மையாய் தெரிகின்றது.நாமிருக்கும் வாழ்வே சிலகாலம் தான்.


அதுவும் உறவோடு வாழ்ந்தால் பூக்கோலம் தான்னு யாரோ சொன்ன கவிதை வரிகளும் கூடவே நினைவுக்கு வந்து செல்கின்றது.