புது வருஷத்து ஸ்பெஷல் டிவி ப்ரோக்ரம்ஸ்'ல அஜித் பேட்டி தான் விஜய் மற்றும் சன் டிவியில் கலக்கோ கலக்குனு கலக்கிடுச்சு. இது வரை அஜீத் டிவி பக்கம் வராததால இளைய தளபதி தான் ஆட்சி பண்ணிக்கிட்டு இருந்தார் டிவியை இப்போ அஜித்தின் இந்த டிவி பிரவேசம் அவருக்கு பெரிய அதிர்ச்சி.
ஒரு சாதாரண நடிகன் பேட்டிக்கு அப்படி என்ன முக்கியத்துவம் ? இத தான் சன் டிவி ஆரம்பிச்ச காலத்துல இருந்து பாத்துகிட்டு இருக்கிறோமே? என்று நீங்க கேக்கலாம் ?
நானும் அஜித் ரசிகன் எல்லாம் கிடையாது , ஆனா இத்தன வருஷம் பேட்டி கொடுக்காம இருந்த ஒரு ஆள் பேட்டி கொடுக்குறார்யா!!!! என்ற எதிர்பார்பையும் தாண்டி அந்த பேட்டியை நம்மை சேனல் மாத்தாம பாக்க வைக்கிறது அஜித்தின் வித்யாசமான பேச்சு தோரணை , stylish உடைகள் மற்றும் கொஞ்சம் கூட அலட்டிகொள்ளாத தன்மை, நிதானமான பேச்சு இதெல்லாம் தான்,
இன்னொரு விஷயம் , அஜித் சில விசங்களை கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் உண்மை தான் சொல்லுவேன் என்று உறுதியாக இருந்ததால் அந்த பேட்டிகள் சுவாரசியம் மிக்கவையாக இருந்தன.
உதாரணத்திற்கு , விஜய் டிவியில் கோபிநாத் அஜித்திடம் "நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க ? " என்று கேட்டார்.
அதற்கு அஜித் உண்மையை மறைக்காமல் "நான் 10th std தான் படிச்சிருக்கேன் " என்றார்.
இதே இடத்தில் விஜய் இருந்திந்தால் "நான் லயோலா காலேஜுல vis com படிச்சேன்" என்று நாக்கு கூசாமல் பொய் சொல்லுவார்.
லயோலா viscom department இல் பேராசிரியர்கள் சிலர் இவர் இப்படி பேட்டி கொடுப்பதை பார்த்து அடிக்கடி வகுப்புகளில் ஏளனம் செய்வது உண்டாம்.
30 நாட்கள் கூட கல்லூரிக்கு வந்ததில்லையாம்.
கதை இப்படி இருக்க விஜய் நான் பிளஸ் டூ படித்திருக்கிறேன் என்று தானே சொல்ல வேண்டும்.
நான் ஒன்றும் விஜய் படம் புடிக்காது என்று சொல்பவன் இல்லை. நடனத்திலும் முகபாவனையிலும், கலகலப்பான நடிப்பிலும் பட்டையை கிளப்பும் விஜய் பேட்டிகளிலும் நடிக்கிறார் என்றே தோன்றுகிறது. விஜய் மட்டும் அல்ல 98 % நடிகர்கள் பேட்டியிலும் நடிக்கிறார்கள் ,
இதில் அஜீத் விதிவிலக்கு ஆனால் இதுவே அஜித்துக்கு ஆபத்திலும் முடியலாம்.
இதில் அஜீத் விதிவிலக்கு ஆனால் இதுவே அஜித்துக்கு ஆபத்திலும் முடியலாம்.
இவர் வாயிலிருந்து எதாவது ஏடாகூடமாக வார்த்தையை புடுங்கிவிட பேட்டி எடுப்பவர்கள் இனி முயற்சிக்க கூடும்.
அஜீத் பேட்டியில் ஒரு காமெடியான விஷயம், சன் டிவி யில் அஜித்தை பேட்டி எடுத்த விஜயசாரதி ஏதோ அம்மாவிடம் பேட்டி எடுக்கும் ரபி பெர்னாட் போல பம்மிக்கொண்டே பேசியது பார்ப்பதற்கு காமெடியாக இருந்தது.
ஆனா ஒன்னு , அஜித் இப்படி எப்போ பார்த்தாலும் சீரியஸாக உர் என்று மூஞ்சியை வைத்துக்கொண்டிருந்தால் பேட்டியை பார்க்கும் நமக்கு ஏதோ செய்தி சேனலில் வெளிநாட்டு அதிபர் பேட்டி பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.