13.5.08

Mr. JPG -Digital camera tools


டிஜிட்டல் கேமெரா வந்தாலும் வந்தது இப்போதெல்லாம் ஃபிலிம் செலவில்லை கழுவ செலவில்லை. இஷ்டத்துக்கும் படங்களை சுட்டுத்தள்ளலாம். உங்கள் குழந்தை வளர்வதை வாராவாரமாக மாதாமாதமாக வரிசையாக படம் பிடித்துவைக்கலாம். சில வருடங்களுக்கு முன் கொடைக்கானல் போனது, தஞ்சாவூர் போனது, கும்பக்கோணம் கல்யாணம், துபாய் அஞ்சப்பரில் சாப்பிட்டது, அபுதாபி அடுக்குமாடிகளை வியந்தது, சார்ஜா கிரிக்கெட் மைதானம் போனது இப்படி ஏகப்பட்ட நினைவுகள் இன்று டிஜிட்டல் இமேஜ்களாகி உங்கள் கணிணியில் இருக்கும்.
பல சமயங்களில் இந்த மாதிரி நடப்பதுண்டு. நீங்கள் "இது பாப்பா 3 மாசமா இருக்கும் போது எடுத்த படம்" என சொல்ல மனைவி "இல்லை இது 6 மாசத்தில் எடுத்த படம் ஆர் யூ கிரேசி" என்பாள். துபாய் போனது 2003-ல் என நீங்கள் அடித்து சொல்ல இல்லை அது 2004-ல் என அவள் தகராறு செய்வாள்.இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவுபவர் தான் மிஸ்டர் ஜேபிஜி.
நீங்கள் நினைப்பது போல உங்கள் ஒளிப்படக்கருவி படம் பிடிக்கும் போது உருவாகும் .jpg கோப்பானது வெறும் படத்தை மட்டும் கொண்டிருப்பதில்லை. அந்த .jpg கோப்பானது இன்னபிற தகவல்களையும் தன்னகத்தே மறைவாய்க் கொண்டுள்ளதாம். உதாரணமாய் இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது (நாள்,சமயம் எல்லாம் துல்லியமாய்),அப்போது பிளாஷ் உபயோகப் படுத்தப்பட்டதா இல்லையா போன்ற பல தகவல்கள். இத்தகவல்களை Exif அல்லது மெட்டாடேட்டா என்கின்றார்கள்.(EXIF stands for Exchangeable Image File - Examples of stored information are shutter speed, date and time, focal length, exposure compensation, metering pattern and if a flash was used etc)
ஆமாம்.இப்போது நீங்கள் உங்கள் மனைவியிடம் பந்தயம் கூட வைத்துக்கொள்ளலாம். கீழ்கண்ட Exif ரீடரை பயன்படுத்தி அந்த குறிப்பிட்ட உங்கள் பாப்பாவின் போட்டோ சரியாக எந்த ஆண்டு, எந்த நாள், எந்த நிமிடம் எடுக்கப்பட்டது என அறிந்துகொள்ளலாம். துபாய் போனது எந்த ஆண்டுவெனவும் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் சொன்னது தான் சரியென்றால் "Something wrong with your computer"-ன்னு உங்கள் மனைவி சொல்வாள் என்பது வேறு விஷயம். ஆச்சர்யபடவேண்டாம்.
Download Exif Reader
இந்த முக்கியமான Exif தகவல்களை நீங்கள் போட்டோ எடிட்டிங் செய்யும்போது இழக்க நேரிடலாம். ஆதலால் போட்டோ எடிட்டிங் செய்யும் முன் அசலை அப்படியே பத்திரமாக வைத்துவிட்டு நகலை மட்டும் எடிட்டிங் செய்தல் நல்லது. அல்லது கீழ்கண்ட இன்னொரு மென்பொருளால் இந்த Exif தகவல்களை பேக்கப்செய்து பத்திரப் படுத்திவிட்டு உங்கள் திருவிளையாடல்களை தொடரலாம். முடிந்ததும் மீண்டும் அந்த Exif தகவல்களை எடிட்செய்யப்பட்ட படத்தின் மீது மீட்டுக் கொள்ளலாம்.Backup exif before editing it , and then after editing restore it back using Exifer.

Download Exifer
நீங்கள் எடுத்த டிஜிட்டல் ஒளிப்படங்களெல்லாம் ஒரு ஃபோல்டரில் IMG_001.JPG, IMG_002.JPG, IMG_003.JPG.... என img-க்களாகவோ அல்லது DSC001.JPG, DSC002.JPG, DSC003.JPG...என dsc-க்களாகவோ தானாகவே பெயரிடப்பட்டு இருக்கும். இப்படி கண்டபடி சம்பந்தமேயில்லாமல் போட்டோக்களுக்கு பெயர்கொடுக்காமல் அந்த போட்டோ எடுக்கப்பட்ட நாள்,நேரத்தையே அதற்கு பெயராக கொடுத்தால் எப்படி இருக்கும்? (மேலே படம்) இதன் மூலம் பல்வேறு உங்கள் போட்டோக்களை காலகிரமபடி வரிசைப்படுத்துவதோடு அதை பார்வையிடும் போதும் ஒரு தொடர்வாய் பார்வையிடலாம் அல்லவா? அதற்கு உதவுவது தான் கீழ்கண்ட மென்பொருள். இது உங்கள் டிஜிட்டல் போட்டோக்களின் Exif தகவல்களை தானாகவே படித்து அதிலுள்ள நாள்படி உங்கள் போட்டோக்களை அழகாய் கிரமமாய் பெயர்மாற்றம் செய்யுமாம்.(Eg.2007-08-15 18.05.27.jpg) Namexif-automatically rename photos with the date they were shot.

thanks.pkp