பணம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் இன்றைய தலைமுறையினருக்கும் பணம் சார்ந்த பிரச்சனைகள் இருக்க தான் செய்கின்றன. அமெரிக்காவில் பொட்டி தட்டும் மாப்பிள்ளைக்கு வாக்கப்பட்டு போகும் நம்ம ஊரு பொண்ணுதாயிகள் பண்ணும் அட்டூழியம் கொஞ்சமா நஞ்சமா,!!!
இப்போது பெரும்பாலான என் ஆர் ஐ சாப்டுவேர் இஞ்சினியர்கள் சந்தித்து வரும் பிரச்சனை ஒன்று உள்ளது, என்ன தெரியுமா? தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய பெற்றோருக்கு, யாராவது கை தூக்கி விட்டால் முன்னேறி விடலாம்' என்ற நிலையில் இருக்கும் அண்ணன் அல்லது தம்பிகளுக்கும் உதவி செய்வது தான் இப்போ பிரச்சனையே.
இதுல என்ன பிரச்சனை? உங்க கிட்ட பணம் இருந்த, உதுவுற மனசும் இருந்தா, உதவி செய்ய வேண்டியது தானே' என்று விஷயம் தெரியாதவர்கள் கேட்கக்கூடும். ஆனா இதுல ஒரு பிரச்சனை இருக்கு, கட்டுன பொண்டாட்டிக்கு தெரியாம எதுவும் செய்ய கூடாது என்று நம் அப்பாவி கணவன்மார்கள் நினைப்பதால், பெரும்பாலான வீடுகளில் மனைவிகளே நிதிமந்திரிகளாக உள்ளனர்.
என்ன தான் அமெரிக்காவில் வசதியாக வாழ்ந்தாலும் சொந்த ஊரில் நம் வீட்டை புதிதாக கட்ட வேண்டும், எல்லா வசதிகளும் செய்து அம்மா அப்பாவை சுகமாக வைத்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் பல பேருக்கும் இருக்கிறது. ஆனால் இவர்களின் மனைவிகள் இதற்க்கு துளியும் ஒத்துபோவது இல்லை.
"நம்மளே இப்போ தான் கொஞ்சம் பணம் சேர்த்து கிட்டு வறோம், இதுல நீங்க இப்படி இளிச்சவாயன இருந்தா உங்க அம்மா அப்பா எல்லா செலவையும் உங்க தலையிலேயே கட்டிடுவாங்க, இன்னும் உங்க தங்கச்சி கல்யாணம் வேற இருக்கு , அதுக்கும் நீங்க தான் செலவு பண்ணனும், என்ன நினைச்சு கிட்டு இருக்கீங்க?
உங்க பிரண்ட பாருங்க , யு எஸ் வந்து நாலு வருஷம் ஆகுது , சொந்த வீடு வாங்கிட்டார். நாம எப்போ வாங்க போறோம் ?" என்று கேள்விகளால் துளைத்து எடுப்பார்கள்.
"என்னமா இப்படி பேசுற, நாம அம்பது லட்ச்சதுக்கு வீடு வாங்குறதுக்கும், ஊர்ல உள்ள வீட்டை அஞ்சு லட்ச்சத்துல புதுப்பிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்? இதுனால என்ன நமக்கு குறைந்து விட போகுது? என்று எதிர்கேள்வி கேட்டால் அவ்வளவுதான், மூஞ்சை தூக்கி வைத்து கொண்டு இரண்டு நாள் பேசாமல் இருந்து கொல்லுவார்கள்.
இதற்க்கு பயந்தே பலரும் வாயை திறப்பதில்லை. ஆனால் "அண்ணே, கொஞ்சம் பணம் உதவி நீ பண்ணினா நான் ஒரு தொழில் பண்ணி முன்னேறி விடுவேன், கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்" என்று வாய் திறந்து உதவி கேட்கும் தம்பிக்கு கூட "எனக்கு இப்போ கொஞ்சம் டைட், ஒரு ஆறு மாசம் கழிச்சு பாக்கலாம்" என்று பொய் சொல்ல சொல்லும் மனைவிமார்களை என்ன செய்வது??????
"அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா" என்ற பாடலில் வருவது போன்ற பெண்களாக தான் இன்றைய பெண்களும் உள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வருமானம் பத்து மடங்கு எகிறி விட்டது. பட்ஜெட் போட்டு சம்பளத்தை செலவழிக்கும் பழக்கம் எல்லாம் மலையேறி கொண்டு வருகிறது.
ஆனால் 'கணவன் அவன் வீட்டாருக்கு எந்த வகையிலும் உதவி செய்யக்கூடாது என்ற பெண்களின் எண்ணம் மட்டும் அப்படியே உள்ளது. அமெரிக்காவில் உள்ள சாப்டுவேர் இன்ஜிநியர்களின் மனைவிமார்கள் எந்த ஒரு விழாவில் சந்தித்து கொண்டாலும் , கூடி பேசும் போது " அவர் நான் சொல்றத கேக்கவே மாட்டிகிறார், எப்போ பார்தாலும் அவங்க அம்மா போன் பண்ணி 'இந்த செலவு அந்த செலவுன்னு சொல்லி நச்சரிகிறார்" என்று தங்கள் எரிச்சலை பகிர்ந்து கொள்வர். ஆனால் இவர்கள் பண்ணும் செலவுகளை எல்லாம் நாம் கணக்கு பார்க்க கூடாது என்று எதிர்பார்ப்பார்கள்.
இந்த பெண்களுக்கு அவர்கள் மாசமாக இருக்கும் போதும், குழந்தைகளை வளர்க்கவும் மட்டும் ஆயா வேலை பார்க்க பெற்றோர் தேவை படுகின்றனர், அதற்கு அங்கே ஆள் கிடைப்பதில்லை என்பது தான் காரணம்.
எத்தனையோ பேர் தங்கள் பெற்றோர்களை அமெரிக்காவுக்கு வரவழைத்து ஆறு மாதம் வரை தங்க வைத்து கொள்கின்றனர், ஆறு மாதத்தில் அவர்கள், ஐயோ அம்மா, விட்டால் போதும்டா சாமி என்று இந்தியா திரும்புவதை பார்த்திருப்பீர்கள்.
ஆனால் இதை வெளியே காட்டிக்கொள்ளாமல் "US TRIP எல்லாம் ரொம்ப பிரமாதமாக இருந்தது" என்று சமாளிப்பார்கள். இந்தியாவில் , பக்கத்து வீடு எதுத்த வீடு , கோவில் குளம் , சொந்தகாரர்களுடன் அரட்டை, விசேசங்களுக்கு செல்லுதல் என்று பிசி யாக இருக்கும் பெரியவர்களை ஒரு மாதம் வரை தான் அமெரிக்காவில் தங்க வைக்கலாம், அதற்கு மேல் தங்கவைத்தால் அது கூண்டுக்குள் அடைத்த மாதிரி தான் இருக்கும்.
கடவுள் அருளால் நல்ல வசதியான வாழ்க்கை நமக்கு கிடைத்திருக்கிறது, நம்மை பெற்றவர்களும், நம்மோடு பிறந்தவர்களும் இதே போல வளமாக வாழ நாம் உதவி செய்வது நம் கடமை என்று ஒரு ஆண் மகன் நினைப்பதில் என்ன தவறு?
பேராசை பிடித்த பெண்கள் கொஞ்சம் மனசாட்சியோடு நினைத்து பார்கட்டும்.
இந்த பெண்கள் தங்கள் சுயநலத்துக்காக பெரியவர்களை வாட்டி வதைப்பதும் இல்லாமல் , அந்த பெரியவர்களுக்கு டிக்கெட்டுக்கு செலவு செய்ததை கூட சொல்லி காட்டுவது கொடுமை. உண்மையில் பெரியவர்களால் இவர்களுக்கு நல்ல லாபமே ஒழிய செலவு இல்லை.
மிக மிக அருமையான பதிவு.//அமெரிக்காவில் உள்ள சாப்டுவேர் இன்ஜிநியர்களின் மனைவிமார்கள் எந்த ஒரு விழாவில் சந்தித்து கொண்டாலும் , கூடி பேசும் போது " அவர் நான் சொல்றத கேக்கவே மாட்டிகிறார், எப்போ பார்தாலும் அவங்க அம்மா போன் பண்ணி 'இந்த செலவு அந்த செலவுன்னு சொல்லி நச்சரிகிறார்" என்று தங்கள் எரிச்சலை பகிர்ந்து கொள்வர்.//ஆனால், அவர்கள் செய்யும் கொடுமையை வெளியில் சொன்னால் கேவலம் என்று நினைத்து எதுவும் சொல்வதில்லை.
சொக்கன்...! said...
இது உங்க சொந்த கதையில்லையே....ஏன் கேக்றேன்னா ர்ர்ரொம்ப ஃபீலிங்ஸோட எழுதியிருக்கீங்க..அதான்.இதுவரை யாரும் தொடாத ஒரு பிரச்சினையை தொட்டிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.எனக்கு தெரிந்த ஒரு வயதான பெண்மணி அமெரிக்கா போய்ட்டு வந்து என்னிடம் அழுது புலம்பியது இப்போது நினைத்தாலும் பாரமாக இருக்கிறது. சிலருக்குத்தான் அப்படியான அனுபவம் என நினைத்திருந்தேன்...ம்ம்ம்ம்
Please change title to பேராசை பிடித்த அமெரிக்க சில மருமகள்கள்" .Sorry for english as i can not type tamil . All points are one sided. Have you validated the Wife's arguments ? When Husband is helping his family roots same will not apply to wife side ?All brothers/sisters of Husband were not eager to share their issue with husband's wife and will be considered as outsider or novice , so they react other way . I have seen families who enjoy their US stay . Parents of NRI always doesnt want to stay in US not because of treatment because of other reasons like wheather and social activity .This is a ego issue and also husband also want to hide lot from their wife . so problem muliplies not because of purpose . If male treat female equal then problem may reduce.
Anonymous said...
இது எல்லா மருமகள்கள்களுக்கும் பொருந்தும். அமெரிக்காவில் மட்டும் நடக்கிற மாதிரி எண்ண வேண்டாம். பழைய விசு படங்களை நினைவில் கொள்ளவும்./*ஆனால் 'கணவன் அவன் வீட்டாருக்கு எந்த வகையிலும் உதவி செய்யக்கூடாது என்ற பெண்களின் எண்ணம் மட்டும் அப்படியே உள்ளது. அமெரிக்காவில் உள்ள சாப்டுவேர் இன்ஜிநியர்களின் மனைவிமார்கள் எந்த ஒரு விழாவில் சந்தித்து கொண்டாலும் , கூடி பேசும் போது " அவர் நான் சொல்றத கேக்கவே மாட்டிகிறார், எப்போ பார்தாலும் அவங்க அம்மா போன் பண்ணி 'இந்த செலவு அந்த செலவுன்னு சொல்லி நச்சரிகிறார்" என்று தங்கள் எரிச்சலை பகிர்ந்து கொள்வர். ஆனால் இவர்கள் பண்ணும் செலவுகளை எல்லாம் நாம் கணக்கு பார்க்க கூடாது என்று எதிர்பார்ப்பார்கள்.8/இது ஈகோ பிரச்ச்னையே தவிர பண பிரச்சைனை அல்ல. உங்கள் வீட்டுக்காரர்கள் உதவியை உங்களிடம் மட்டுமே கேட்கிறார்கள். உஙகள் மனைவியிடம் கேட்கச் சொல்லுஙகள், அப்புறம் எப்படி மாறுகிறார்கள் என்று பாருங்கள்./*இந்த பெண்களுக்கு அவர்கள் மாசமாக இருக்கும் போதும், குழந்தைகளை வளர்க்கவும் மட்டும் ஆயா வேலை பார்க்க பெற்றோர் தேவை படுகின்றனர், அதற்கு அங்கே ஆள் கிடைப்பதில்லை என்பது தான் காரணம். எத்தனையோ பேர் தங்கள் பெற்றோர்களை அமெரிக்காவுக்கு வரவழைத்து ஆறு மாதம் வரை தங்க வைத்து கொள்கின்றனர், ஆறு மாதத்தில் அவர்கள், ஐயோ அம்மா, விட்டால் போதும்டா சாமி என்று இந்தியா திரும்புவதை பார்த்திருப்பீர்கள். */இதுவும் இந்தியாவாக இருந்தாலும், அம்மா வீட்டிற்கு போக முடியாதவர்கள் செய்வதே. இதில் பிரச்சனை, அதே பெற்றோர்கள் பெண் அவர்கள் வீட்டிற்கு வந்தால், வேலை செய்வதை பெரிதாக பேசமாட்டார்கள். அதே அவர்கள் நம் வீட்டிற்கு வந்து செய்வது சுயகொவுரவம் குறைந்து விட்டது போல் கருதுகிறார்கள்.எனக்கு தெரிந்த வரை இதில் பெற்றோர்கள் எண்ணத்தின் மேல் தான் குறை உள்ளது.
said...
சில மனப்புழுக்கங்களை வெளியே சொல்ல முடியாது. உள்ளுக்குள்ளேயே போட்டுக்கொண்டு மனைவிக்காக பெற்றோரை/உடன்பிறந்தோரை திட்ட வேண்டியதுதான். சரிபாதி "உங்க நல்லதுக்குதான் சொல்றேன்" என்று சொல்லும் போது ஆமாம் சாமி போட்டுவிட்டு சென்று கொண்டேயிருக்க வேண்டியதுதான். சரிபாதிதான் முக்கியம். மீதியை பற்றி கவலை இல்லை.சரிபாதியின் மகிழ்ச்சிக்காக அவளது உறவுகளை உணவகங்களுக்கு அழைத்து செல்லும்போது என் தாய்தந்தையர் இந்த உணவகங்களை மிதித்தேனும் பார்த்திருப்பார்களா என்ற சுயபச்சாதாபம் ஏற்படுவது உண்மையே.சரிபாதி மகிழ்ச்சியாக இருந்தால்தான் மீதி பாதியாகிய நாம் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். மகிழ்ச்சி முக்கியம் என்று வரும்போது மனசாட்சியை கழட்டி வைத்து விட வேண்டும். பெண்ணுரிமை என்பது தாய்க்கு அல்ல. தாரத்திற்கு மட்டுமே. இந்த பெண்ணுரிமை குறித்த அறிவு உங்களுக்கு இருந்திருந்தால் இந்த பதிவை எழுதியிருக்க மாட்டீர்கள். சட்டங்களும் சமூக அமைப்புகளும் பெண்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. உண்மையில் இன்றைய ஆண் பரிதாபத்திற்கு உரியவன்.இது "அமெரிக்கா" என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைவது இல்லை. எங்கும் உள்ள பொதுவான நிலையே.
ஏதோ எங்கள் வீட்டில் நிகழ்ந்ததை எட்டிப்பார்த்தோ ஒட்டுக்கேட்டோ எழுதியதுபோல இருந்தது. While I can't comment for the others, I can atleast register what happened in my case.எனது திருமணத்திற்கு முன்பு எங்கள் ஊரில் நான் இங்கிருந்து அனுப்பியதில் வீடு கட்டினோம். ஒரு தமையன் விவசாயி. இன்னொருவர் நாற்பது கடந்தும் சவுதிக்கும் ஊருக்குமாய் அல்லாடிக்கொண்டிருக்கும் Welder (ஊரோடு செட்டில் ஆகலாம் என்று எண்ணி ஆறேழு ஆண்டுகள் முன் எடுத்த நேர்மையான முயற்சிகள் - கேண்டீன், அரசு ஒப்பந்ததாரர் - தோல்வியிலும் நஷ்டத்திலும் இழுத்துவிட மறுபடி சவுதிக்கே போய்விட்டார்)அண்ணனால் ஏற்பட்ட கடன்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பு என் 75 வயது அப்பா பேரில். போன வருடம் என் பெற்றோர் இங்கே என் குழந்தையை கவனித்துக்கொள்ள (உங்கள் பாஷையில் "ஆயா வேலை பார்க்க") வந்திருந்தார்கள். பலநாட்கள் மனதிற்குள்ளேயே மருகிப்போய் ஒருநாள் என் அப்பா ஒரு தாளில் இரண்டு தவணைகளில் $6000 கேட்டு கடிதம் போல எழுதி என்னிடம் தந்தார். மூன்று வருடங்களில் தன் பென்ஷனிலிருந்து திருப்பித்தந்து விடுவதாகவும், கிராமத்தில் தன் பெயரில் இருக்கும் சிறுதுண்டு நிலத்தை என் பெயருக்கு எழுதித்தந்துவிடுவதாகவும் எழுதியிருந்தார்.எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.இவ்விஷயம் தெரிந்து என் இல்லாள் எவ்வளவு பேசினார் தெரியுமா ? அவரது வாதங்கள் :- அவருடைய நண்பர்கள் ஊரில் கிட்டத்தட்ட 30-40 லட்சத்திற்கும் இங்கும் கிட்டத்தட்ட 5-6 லட்சம் டாலர்களிலுமாய் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட நாங்கள் இன்னும் வீடே வாங்கவில்லை இங்கு. (அதற்குக் காரணம், பொருளாதார பற்றாக்குறை அல்ல; இறையருளால் இப்போது நினைத்தாலும் வாங்க இயலும், ஆனால் பச்சை அட்டை இல்லாத நாடோடி வாழ்வென்பதால் இன்னும் உறுதியாக முடிவெடுக்க இயலாமையே காரணம்)- ஊருக்கு திரும்பிப்போனால் எங்களுக்கு வீடில்லை (பிரச்சினை வந்தபோது). ஆனால் என் பெற்றோர் மற்றும் தமையனார்க்கு வீடு உள்ளது - எல்லாவற்றையும் அனுப்பிக்கொண்டே இருந்தால் நாம் நாளைக்கு தெருவில்தான் நிற்கவேண்டும்- நமக்கு retirement benefits கிடையாது- நாம் நாளை நம்மை நம்பித்தான் இருக்கவேண்டும்; பெண்ணையோ பிள்ளையையோ அல்ல.ஆசிரியையாக வேலை பார்க்கும் என் தமக்கை ஊரில் வீடு கட்டினபோது, வங்கியில் வாங்கின கடன், நகை விற்ற பணம் எல்லாம் போக 2 லட்சம் தேவைப்பட, அதை நான் கடனாக தந்தேன். இப்போது அதை அவரிடமிருந்து கேட்டு வாங்கி என் பெற்றோருக்கு உதவலாம் என்று ஒருமுறை சொன்னார். பணம் இருந்தால் தானாக உதவக்கூடியவரே என் தமக்கை. இன்னும் சொல்லப்போனால் என் பெற்றோரின் கடன் அடைக்க தமக்கு தெரிந்தவர்கள் மூலம் கடன் வாங்கி உதவியும் செய்திருக்கிறார்.எல்லாம் 'அதை பிடுங்கி இதில் போட்டு, இதை பிடுங்கி அதில் போட்டு' என்னும் நடுத்தரவர்க்கம்தான்.அவருடைய பெற்றோர் அவரிடம் எதுவும் வாங்காமல் இருந்ததற்குக் காரணம், அவர்கள் மேல் நடுத்தரவர்க்கம். மொத்தமே 5 பேர் கொண்ட குடும்பம், அவருடைய அப்பா மத்திய அரசு நிறுவனத்தில் வேலையென்பதால் ஓரளவு நல்ல சம்பளம், சேமிப்பு, திருமணத்திற்கு முன்னரே என் இல்லாள் வெளிநாடுகளில் வேலைசெய்து சம்பாதித்த பணம் என்று. நாங்களோ சற்று பெரிய குடும்பம். கைக்கும் வாய்க்குமென்றே ஓடிய குடும்பம்.இன்னும் என்னால் பணம் தர இயலவில்லை. அது விஷயமாய் பேச்செடுத்தால் மறுபடி என்ன பூகம்பம் வருமோ என்று தெரியவில்லை.இறுதியாக, அப்படி அவர்களுக்கு பணம் அனுப்பினால் நான் பெட்டியோடு வெளியேறிவிடுவேன் என்றார். 'சரி, தாராளமாக வெளியேறலாம். என் பெற்றோர் / சகோதரர்களுக்கு தக்க சமயத்தில் உதவுவதற்கு குறுக்கே நிற்கும் பெண் என் மனைவியாக என் வாழ்வில் வேண்டாம்' என்று சொல்லியிருப்பேன், எங்களுக்கு ஒன்றரை வயது செல்வம் மட்டும் இல்லாது போயிருந்தால்.
அன்புடன்NRI_அனானி