24.4.08

போட்டோ ஸ்கிரீன்சேவர்

போட்டோ ஸ்கிரீன்சேவர்

டிஜிட்டல் கேமரா மூலம் சுடப்பட்ட ஒளிப்படங்களை ஒரே சொடுக்கில் உங்கள் கணிணியின் வால்பேப்பராக்க இன்றைய கணிணிகள் வசதிகொண்டுள்ளன.

எந்த படத்தையும் வலது சொடுக்கினால் "Set as Desktop Background" வசதி அப்படத்தை உங்கள் கணிணியின் பிண்ணணி (Wallpaper) படமாக்கும்.

ஆனால் உங்களின் கெனான் ஒளிப்படக்கருவி மின்னி மின்னி உள்வாங்கிய உங்கள் குழந்தையின் புன்னகை படங்களை உங்களின் ஸ்கிரீன்சேவராய் உங்கள் கணிணியில் ஓட விடுவது எப்படி? கூகிள் வழங்கும் இலவச மென்பொருளான பிக்காசா உங்களிடம் இருந்தால் அது இதுமாதிரி தெரிவுசெய்யப்பட்ட படங்களை உங்கள் கணிணியில் ஸ்கிரீன்சேவராய் ஓட விட வசதியளிக்கின்றது.

ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமாய் வசதி வாய்ப்புகளோடு .scr வடிவில் உங்கள் குடும்ப படங்களை ஸ்கிரீன்சேவராக்க இதோ ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் PhotoMeister. இதனைபயன் படுத்தி நீங்கள் உருவாக்கும் Screensaver-க்கு பலவித எஃபெக்ட்கள் கொடுக்கலாம், போட்டோ தலைப்புகள் போட்டுக்கொள்ளலாம், பிண்ணணியில் இசையை ஓட விடலாம், இப்படி பல கிமிக்ஸ்கள் செய்யலாம். கணிணியும் உங்கள் குதுகல குடும்பத்தை எதிரொளித்துக்கொண்டே இருக்கும்.
Product Home Page

http://www.photomeister.com/

Direct Download Link

http://download2.paessler.com/download/photomeister.zip

பரிமளா போன பாதை

வெள்ளிக்கிழமை என்றாலே பக்கத்து வீட்டு பரிமளாவுக்கு ஏகத்துக்கும் குஷிதான்.ஏனென்றே எனக்கு தெரிந்ததில்லை. கார் சாவியை சுழற்றிச்சுழற்றி ஏதோ ஒரு பாடலை முணங்கிக்கொண்டே அலுவலகம் விட்டு வீட்டுக்கு வரும் அவள் அரைமணிநேரத்தில் ரெடியாகிவிடுவாள். கிளம்பி போனவள் போனவள் தான். திரும்பிவர நள்ளிரவும் தாண்டிவிடும்.இதையெல்லாம் இங்கு நான் கட்டாயம் சொல்லத்தான் வேண்டுமாவென நினைத்தேன். சொல்லிவிடுவதுதான் நல்லது.அதற்கான காரணத்தையும் அப்புறம் சொல்கின்றேன். எங்கு போகின்றாள் இவள்? மாலை முதல் நள்ளிரவுதாண்டியும் அப்படி எங்கே அவள்? போன வாரம் கிளைமாக்ஸ் நடந்தது. வெறும்(!) 230 டாலர்கள் தான். ஆன்லைனில் ஆர்டர்பண்ணியிருந்த LandAirSea GPS Tracking Key வந்துவிட்டிருந்தது. சிறுசா தீப்பட்டிமாதிரி. ஒரு USB கொக்கியும் இருந்தது. சில பேட்டரிகள் நாம் போடவேண்டும்.பரிமளாவுக்குத் தெரியாமல் அவள் டொயோட்டா கேம்ரி காரின் அடியில் அந்த டிராக்கிங் கீயை நச்சென ஒட்டவைத்தேன். அதிலிருந்த காந்தம் பரிமளாவின் காரை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. இனி இந்த கார் எங்கெல்லாம் போகுமோ அதெல்லாம் எனக்கு சந்து சந்தாக தெரிந்துவிடும். எவ்வளவு வேகமாக அவள் காரை ஓட்டினாள் (அவள் ஒரு பறக்கும் பாவை) எங்கெல்லாம் எவ்வளவு நேரம் அவள் நின்றாள் எல்லாம் இந்த கீ நோட் செய்து வைத்துக்கொள்ளும். அடுத்த நாள் அந்த Tracking Key-யை எடுத்து வந்து எனது கணிணியில் செருகி பார்த்தால் அத்தனையும் மேப் போட்டு துல்லிபமாய் எனக்கு காட்டிவிடும். இதுமாதிரி யாரை வேண்டுமானாலும் நீங்கள் கண்காணிக்கலாமாம் அதுவும் உலக அளவில். அதனால் இனிமேல் "ஒருமாதியான" இடங்களுக்கு போவதாய் இருந்தால் செல்லும்முன் காரை முழுசா சோதனை போட முடிவெடுத்திருக்கின்றேன். இன்றைய காலத்தில் தொழில்நுட்பத்தில் நீங்கள் ஆர்வமுள்ளவராய் இல்லாதவராயினும் நிகழ் கால தொழில்நுட்ப விசயங்களை கண்டிப்பாய் தெரிந்திருக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.எது தொழில் நுட்பத்தால் முடியும் எது முடியாது இதெல்லாம் சகலோர்க்கும் தெரிந்திருக்க வேண்டிய நிலை. ஒன்றும் தெரியாத அப்பாவியாய் இருந்தால் தெரிந்தவன் உங்களை கொள்ளை கொண்டு போய்விடுவான். சரி பரிமளாவின் கதையை நான் இப்போ எப்படி முடிக்கறது? ஒவ்வொரு மொழி பட இயக்குனர்களும் ஒவ்வொரு விதமாய் முடித்திருப்பார்கள். இல்லையா? மேலும் அறிய http://www.trackingkey.com டிஸ்கிளைமர்: எனது பதிவுகளில் வரும் பக்கத்து வீட்டு பரிமளா முதல் பொன்னம்மா பாட்டி வரை அத்தனைபேரும் கற்பனை கதாபாத்திரங்களே Just In Case :) thanks.pkp