15.7.08

ஷங்கரின் பட்ஜெட்

இயக்குனர் ஷங்கர் எப்போதும் தெளிவுடன் இருப்பவர். அவரே தன் 'ரோபோ' படத்திற்கு யாரை ஹீரோவாகப் போடுவது என்ற குழப்பத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் கமல் நடிப்பார் என்ற பேச்சு அடிபட்டது.

அதன்பிறகு ரஜினி நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது. அதுவும் போய் தற்போது விக்ரம் நடிப்பதாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும், ரஜினி சொல்லும் முடிவில்தான் இருக்கிறது ஷங்கரின் கனவுப் படமான ரோபோ.

தற்போது லொகேஷன் பார்ப்பதற்காக கேமராமேனுடன் வியட்நாம், தென் ஆப்ரிக்கா, சுவிட்சர்லாந்த் என பறந்துகொண்டு இருக்கிறார். அந்தப் படத்தை எடுத்து முடிக்க குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும்.

'சிவாஜி' படத்திற்கே இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டபோது அதைவிட பல மடங்கு பிரமாண்ட படமான ரோபோவுக்கு இன்னும் கூடுதலாக மாதங்கள் தேவைப்படலாம். இப்போது ஆகும் செலவுக்கே விழிப்பிதுங்கி நிற்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

பின்னே அடுத்த தயாரிப்பாளர் என்றால் 100 கோடி வரைக்கும் கூட படமெடுப்பார். தன் படக் கம்பெனியாக எஸ் பிக்சர்ஸில் மட்டும் மூன்று கோடி பட்ஜெட்டுக்கு மேல் கதை சொல்ல வேண்டாம் என்கிறார். அதான் காக்கைக்கு தன் குஞ்சு என்றாலும் பொன் குஞ்சு ஆச்சே.

நியூஸ். Webdudia