

தமிழ் கூறும் நல்லுலகின் இவ்வளவு பெரிய இழப்பை யாராலும் சரிக்கட்ட முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான்.சுஜாதாவின் வீட்டில் நேற்று அலைமோதிய கூட்டத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்று தான் தோன்றியது:
இவ் வலைப்பதிவு கணினி,தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிகழ்வுகள் பொழுது போக்கு சார்ந்ததாக அமையும்.
பல்பரிமாண எழுத்தாளர் சுஜாதா
மரணம் தொடர்பாக சுஜாதா ஆயத்தமாகவே இருந்தார் எனச்சொல்ல வேண்டும்। "இப்போதெல்லாம் ஹிந்துவில் முதலில் obtituary தான் பார்க்கிறேன்। இறந்தவர் என்னைவிட இளையவர் என்றால் பரவாயில்லை நாம் இன்னும் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுகொள்கிறேன்। என்னை விட வயதானவர் என்றால் என் நாள் எந்நாள் என்று யோசனை வருகிறது" -
இதை அவரின் 'கற்றதும் பெற்றதும்' என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார்। எனது வாசிப்பு பரிச்சயங்களில் அதிசயிக்க வைத்த எழுத்தாளர்।
தொடாத தலைப்பே இல்லை எனும் அளவிற்கு அனைத்து துறையிலும் தனது எழுத்தைக் கொண்டு சேர்த்தவர்। 'எந்த மரபையும் உடைக்கின்றபோது ஒரு புதுமையான இலக்கியம் தோன்றும்' என்ற வகையில் அதுவரை இருந்த எழுத்து நடைகளை மாற்றி தனக்கென்ற வகையில் வேகமான சுவாரசியமான நடைக்குள் தமிழ் மொழியைக்கொண்டு வந்தவர்।
இவரது எழுத்து வரிகளில் கலந்திருக்கும் நகைச்சுவை அலாதியானனது: நாசூக்கானது। சொற்களின் அளவைக்குறைத்து கதையில் தன்னுடன் வாசகனையும் வரச்செய்து பெரும்பாலானவற்றை வாசகனே ஊகித்து உணரும் வகையிலான இரசாயனத்தை தனக்கும் வாசகனுக்குமிடையில் தனது மொழிநடை மூலம் ஏற்படுத்திக்கொண்டவர்।
சூழ்நிலைகளையும் சம்பவங்களையும் கூர்ந்து அவதானித்து அவற்றை மிகச்சில சொற்களில் சொல்லி முடிக்கின்ற சாகசக்காரர்। தலைமுறை இடைவெளி இல்லாமல் இக்கால இளைஞர்களினதும் எண்ணஓட்டங்களையும் புரிந்து கொண்டு எழுத்திலும் இளமையைக் கொண்டு வந்தவர்। ஆரம்பகால இவரது சிறுகதை முயற்சிகள் இன்றும் பிரமிப்பூட்டுபவை। வேறுபட்ட கருக்கள், வேறுபட்ட அணுகுமுறைகள் எழுத்தில் வடிக்கமுடியாதவை। சிக்கலான மருத்துவ, விஞ்ஞான,தொழில்நுட்ப,கணணி விடயங்களையும் மிக எளிமையான எடுத்துக்காட்டுக்களோடு பாமரரும் விளங்கும் வகையில் தமிழில் தந்தவர்।
இளமைக்காலத்தை பாட்டியுடன் சிறீரங்கத்தில் கழித்த பசுமையான நினைவுகளை சிறீரங்கத்து தேவதைகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்। கவிஞர் வாலி சிறீரங்கத்தில் இவரது அயலவர்। திருச்சி சென்।ஜோசப் கல்லூரியில் பெளதிகவியலில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும்போது
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுடன் சகபாடியாக இருந்திருக்கிறார்। இதன் பின்னர் சென்னை தொழில்நுட்ப நிறுவகத்தில் இலத்திரனியல் துறையில் பட்டம் பெற்றார்। இந்திய அரசுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கும் குழுவிற்கு தலைமை தாங்கி செயற்பட்டவர்। இவரது விஞ்ஞானக்கதைகளும் அற்புதமானவை। என் இனிய இயந்திரா॥ மீண்டும் ஜீனோ போன்ற நூல்களில் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளும் ஒரு எந்திர நாய்பற்றி கற்பனை செய்துள்ளார்। அது தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு ஒரு நிலையில் தவறே செய்யாத ஒரு நிலையை அடைகிறது।
இந்த நாயைவைத்து பின்னப்பட்ட அருமையான விஞ்ஞானக்கதை। இவரது துப்பறியும் நாவல்கள் இவரிற்கு அதீத இரசிகர்களைத் தேடித்தந்தது। இவரது கற்பனையான பாத்திரங்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள் என்று பலரை நம்பவைத்தது இவரது எழுத்து। வெகுஜனப்பத்திரிகைகளிலும் சரி, சிறுபத்திரிகைகளிலும் சரி தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துக்கொண்டவர்। இவர் எழுதிய நாடகங்கள் கூடப்புகழ்பெற்றவை। பூரணம் விஸ்வநாதன் நடிப்பில் இவரது நாடகங்கள் சிலாகிக்கப்படட்டன। நாடகத்தையும் மேடை அமைப்பு பின்னணி முதலிய தொழில்நுட்ப அம்சங்களையும் உள்ளடக்கியதாக எழுதியது அவரது பரந்து பட்ட அறிவிற்கு சான்று।
'கனவுத்தொழிற்சாலை' என்ற நூல் சினிமா திரைஉலகின் ஜிகினா பக்கத்திற்கான மறுபக்கத்தைக்காட்டி சாதாரண மக்களுக்கும் திரைஉலகு குறித்த உண்மை நிலையை எடுத்துக்காட்டியது। இவரது தயாரிப்பில் உருவான பாரதி படம் அனைவரதும் பாராட்டைப்பெற்றது। அறிவியல் சார்ந்த ஒரு படமாக 'விக்ரம்' என்ற படத்திற்கான கதை திரைக்தையை எழுதினார்। தனது கதைகள் திரைப்படமாகும்போது நடக்கும் கதை சீர்குலைவுகளை விமர்சித்த இவர் ஒரு திரைப்படம் ஒன்று உருவாகுவதற்கான சவால்கள் சிரமங்கள் குறித்தும் அவ்வப்போது எழுதியுள்ளார்। சென்னை மீடியா ட்ரீம்சின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்।
சிறுகதை நாவல்களை விட இவர் ஜீனியர் விகடனில் எழுதிய ஏன் எதற்கு எப்படி?, கணையாளியில் எழுதிய 'கணையாளியின் கடைசிப்பக்கம்', ஆனந்த விகடனில் எழுதிய கற்றதும் பெற்றதும் என்பவை மிகப்பிரபலமாயின। மூளை மற்றும் ஓமோன்கள் குறித்து எழுதிய 'தலைமைச்செயலகம்' சிறந்த அறிவியல் நூலாகும்। அவரது நுண்ணறிவும் ஆராயும்திறனும் மொழித்திறனும் சேர்ந்து எமக்கொரு நல்ல எழுத்தாளரைத்தந்தது.
பெண்கள் குறித்து சற்று அதிகமாகவே வர்ணிப்பவர் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் 'எப்போதும் பெண்' என்ற தன் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்। 'இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள், படியுங்கள்। இதன் விஷயம் எனக்குப்பிடித்தமானது। பொய் இல்லாமல் பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன்। பெண் என்கிற தீராத அதிசயத்தின்பால் அன்பும் ஆச்சரியமும் ஏன் பக்தியும்தான் என்னை இதை எழுதச்செலுத்தும் சக்திகள்'
ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்தைந்தாம் ஆண்டு மே மாதம் மூன்றாம் நாள் பிறந்த சுஜாதா அவர்கள் தனது 73ம் வயதில் காலமாகியிருக்கிறார்கள்। சிறீரங்கநாதரில் ஆழ்ந்த பக்தியும் ஆழ்வார்களின் பிரபந்தங்களில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்ட சுஜாதா அவர்களின் வாழ்வு நிறைவானது என்பதில் ஐயமில்லை। அன்னாரின் எழுத்துப்பணிக்கு சிரம்தாழ்த்திய அஞ்சலிகள்।
கவிதைகளிலும் ஹைக்கூக்களிலும் வெண்பாக்களிலும் நாட்டங்கொண்டவராகிய இவர் தனது எழுத்துக்களில் இளைய தலைமுறையினரை அறிமுகப்படுத்தவும் தவறுவதில்லை। விஞ்ஞானம் சம்பந்தமான ஹைக்கூக்கள் சைஃபிகூ எனப்படுகின்றன। இதில் சுஜாதாவின் முயற்சி இவ்வாறாக இருக்கிறது।
சந்திரனில் இறங்கினேன்
பூமியில் புறப்படும்போது
கதவைப்பூட்டினேனா?
அவரது எழுத்துக்கு என்றும் மரணமில்லை.
கருத்துக்கள்:
அன்புடன் புகாரி said...
சிறுகதை நாவல்களை விட இவர் ஜீனியர் விகடனில் எழுதிய ஏன் எதற்கு எப்படி?, கணையாளியில் எழுதிய 'கணையாளியின் கடைசிப்பக்கம்', ஆனந்த விகடனில் எழுதிய கற்றதும் பெற்றதும் என்பவை மிகப்பிரபலமாயின। மூளை மற்றும் ஓமோன்கள் குறித்து எழுதிய 'தலைமைச்செயலகம்' சிறந்த அறிவியல் நூலாகும்। அவரது நுண்ணறிவும் ஆராயும்திறனும் மொழித்திறனும் சேர்ந்து எமக்கொரு நல்ல எழுத்தாளரைத்தந்தது.உண்மை. நான் சமீபகாலமாக வாசித்ததெல்லாம் அவரின் கட்டுரைகளைத்தான். சிறுவயதில்தான் கதைகள் வாசித்தேன்.அன்புடன் புகாரி
சுஜாதாஞ்சலி
சிறுகதை, நாவல், நாடகம், அறிவியல் கதைகள், அறிவியல் கட்டுரைகள். கவிதைகள், பொதுக் கட்டுரைகள், திரைப்பட கதை வசனம், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் முத்திரை பதித்த திரு சுஜாதா [S.ரங்கராஜன்] நேற்றுக்காலமானார்.அன்னாரக்கு எமது அஞ்சலிகள்.
ஈழத்தமிழர் பற்றியும் அவர் தப்பான அபிப்பிராயங்களைக்கொண்டிருக்காத மனிதர் அவர்.
இத பற்றி கானாபிரபா அண்ணாவின் வலைப்பூவில் அவருக்கு சுஜாதா வழங்கியபேட்டியில் கேட்டேன் " நம்பிக்கையைத் தளர விடாதீர்கள் " என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.
அன்னாரைப்பற்றிய சிறுதுளிகள்
எழுதிய நாவல்கள்
பதவிக்காக
ஆதலினால் காதல் செய்வீர்
பிரிவோம் சந்திப்போம்
அனிதாவின் காதல்கள்
எப்போதும் பெண்
என் இனிய இயந்திரா
மீண்டும் ஜீனோநிலா நிழல்ஆ
கரையெல்லாம் செண்பகப்பூ
யவனிகாகொலையுதிர் காலம்
வசந்த் வசந்த்
ஆயிரத்தில் இருவர்
பிரியா
நைலான் கயிறு
ஒரு நடுப்பகல் மரணம்
மூன்று நிமிஷம்
கணேஷ்காயத்ரிகணேஷ்
x வஸந்த்அப்ஸரா
மறுபடியும் கணேஷ்
வீபரீதக் கோட்பாடுகள்
அனிதா இளம் மனைவிகாந்தளூர் வசந்தகுமாரன் கதைபாதிராஜ்யம்24 ரூபாய் தீவுவசந்தகாலக் குற்றங்கள்வாய்மையே - சிலசமயம் - வெல்லும்கனவுத்தொழிற்சாலைரத்தம் ஒரே நிறம்மேகத்தைத் துரத்தினவன்நிர்வாண நகரம்வைரம்ஜன்னல் மலர்மேற்கே ஒரு குற்றம்உன்னைக் கண்ட நேரமெல்லாம்நில்லுங்கள் ராஜாவேஎதையும் ஒருமுறைசெப்டம்பர் பலிஹாஸ்டல் தினங்கள்ஒருத்தி நினைக்கையிலேஏறக்குறைய சொர்க்கம்என்றாவது ஒரு நாள்நில் கவனி தாக்குஎழுதிய குறுநாவல்கள்ஆயிரத்தில் இருவர்தீண்டும் இன்பம்குரு பிரசாத்தின் கடைசி தினம்மெரினா சிறுகதைஸ்ரீரங்கத்துக் கதைகள்கட்டுரைகள்கணையாழியின் கடைசி பக்கங்கள்கற்றதும் பெற்றதும்கடவுள் இருக்கிறாராதலைமை செயலகம்எழுத்தும் வாழ்க்கையும்ஏன் ? எதற்கு ? எப்படி ?சுஜாதாட்ஸ் திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்காயத்ரிகரையெல்லாம் செண்பகப்பூப்ரியாவிக்ரம்வானம் வசப்படும்நாடகம்Dr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு்கடவுள் வந்திருந்தார்திரையாசிரியராக பணியாற்றிய திரைப்படங்கள்ரோஜாஇந்தியன்ஆய்த எழுத்துஅந்நியன்பாய்ஸ்முதல்வன்விசில்கன்னத்தில் முத்தமிட்டால்சிவாஜி the பாஸ் சில சுவையான தகவல்கள்* இறந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் முன்னால் ஜனாதிபதி அப்தூல் கலாமும் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.*சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. சுஜாதா திரைக்கதை எழுதிய கடைசி திரைப்படம் சிவாஜிசுஜாதாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லத் தேவையில்லை. இப்போதும் சிவாஜி படத்தில் எழுதிய வரி ஒன்று ஞாபகம் வருகிறது "சாகும் நாள் தெரிந்து போய்விட்டால் வாழும் நாள் நரகமாகிவிடும் "மற்றவர்களுக்கு எப்படியோ என்னைப்பொறுத்தவரையில் அவர் ஓர் சகாப்தம்வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதற்கமைய போய் வாருங்கள் சுஜாதா! போய் வாருங்கள் சுஜாதா அறிந்திராத உலகிற்கு ! நன்றி :- WIKIPEDIA
inspired by சதீஷ் — #5
இந்த எழவுக்காகத்தான் எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊர் தமிழ்ச் சங்கம் இருக்கும் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை.
ஆனாலும் உங்களுக்கு அசாத்திய பொறுமை! எல்லாவற்றையும் (சுஜாதாவுக்காகத்) தாங்கிக்கொண்டு வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!
இப்பதிவை அவர்களுக்கு அனுப்பினீர்களா?
3] from: CHANDRAMOWLEESWARAN
சுஜாதா அளவுக்கு பெங்களூரை வர்ணித்தவர் யாரும் இல்லை என்பது உலகம் அறிந்த உண்மை. அவரது படைப்புகளில் பெரும்பான்மை அவர் அங்கு வசித்த போது எழுதப்பட்டவை என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள் அந்த ஊர் தமிழர்கள். அவர் பாணியிலேயே "பசித்த புலி தின்னட்டும்" என சொல்லத்தோன்றுகிறது. ஆனால் யாரையும் திட்டி எழுதி அவர் நம்மை பழக்க்கவில்லையே. போகட்டும் விடுங்கள் . அவர் கற்பூரம் !! இப்போது திருநாட்டில் அரங்கன் முன்பு சுடரும் கற்பூரம் !! நமக்கு என்றும் மனங்களில் சுடரான கற்பூரம் !!!!
reply to this comment Tuesday, 18.03.08, 11:15:21
show comment in his contextreset
4.from: revathi.narasimhan
அவரை முற்றும் அறிந்தவர், தெரிந்தவர் என்று யாரும் உணரவில்லை. உணராதவர்கள் அவரைப் பற்றிப் பேசித்தான் என்ன ஆகப் போகிறது.விடுங்கள். அவருக்கு இதெல்லாம் தேவை இல்லை என்றுதான் சட்டேன்று கிளம்பி விட்டாற்.reply to this comment
show comment in his contextreset
[5] from: உண்மைத்தமிழன்
இப்போதெல்லாம் அமைப்புகள் எல்லாவற்றிலும் அரசியல் தங்குத்தடையின்றி ஊடுறுவியிருக்கின்றன.
விட்டுத் தள்ளுங்கள்.. அழைப்புக்கிணங்கி வாத்தியாரின் பெயரை பதிவு செய்துவந்து விட்டீர்கள்.
இதுவே போதும்.
நம் வாத்தியாருக்கு புத்தகங்களே சாட்சி.. குரல் ஓட்டுத் தேவையில்லை..
அவருடைய பெயர் சாசுவதம் பெற்றது.. அழியாப் புகழ் பெற்றவருக்கு வேறு புகழ் தேவையில்லை..
தாங்கிக் கொண்ட தங்களுக்கும் நன்றிகள்..reply to this comment Tuesday, 18.03.08, 12:06:34
show comment in his contextreset
[6] from: Ravi
this is quite embarasing, good i didnt happen to attend this...
~Ravireply to this comment Wednesday, 19.03.08, 15:36:16
show comment in his contextreset
[7] from: vedhagopalan
Your narration about the condolence meeting was really humorous. this irony is the real Anjali for our great master!reply to this comment Friday, 21.03.08, 01:14:13
show comment in his contextreset
[8] from: Ramasundaram
we are pained to read the article "akanda pajanai" that has come in this week Thinnai (http://www.desikan.com/blogcms/url).
It seems that only your speach has given some satisfaction to the visitors of the meeting. You have gone there as hanuman would do to a ramayana sangirthan, and have saved the face of the great writer.reply to this comment Friday, 21.03.08, 20:31:35
show comment in his contextreset
[9] from: Rajagopal,
Neenda natkalaga bangalore-il vasikkum Sujatha vin Vasganagiya enakku andha Anjali Meeting patri theriyamal poi vittadhu.Therinthirunthal andha koottathirku vandha 31 vadhu nabaraga irundhiruppen. Enakku andha bakkiyam kidaikkavillai endru varundhugiren.
ஹாப்பி பர்த்டே சுஜாதா ! 70வது பிறந்த நாள்
சுஜாதா எழுதிய எல்லாவற்றையும் படித்து அனுபவித்திருக்கிறேன். அந்த அனுபவம் குதூகலம், விளையாட்டு, பக்தி, உற்சாகம், துக்கம் என கலவையானது. ஆனால் நேற்று ஆனந்த விகடன் 'கற்றதும் பெற்றதும்'ல் சுஜாதா எழுதிய இந்த கட்டுரை என்னை கொஞ்சம் டிஸ்டர்ப் செய்தது. முதுமை ஒரு தவிர்க்க இயலாத கட்டளை என்ற போதிலும் அதை எதிர்கொள்வது ஒரு கலை. வயோகதிகத்தின் அச்சுறுத்தும் இருண்ட கனவுகளை அங்கதமாக மாற்றி அதனோடு விளையாடுவதற்கு வாழ்க்கையின்மீதான ஒரு பெரிய தரிசனமும் சுய வெளிச்சமும் இருந்தால்தான் சாத்தியம். சுஜாதாவின் இந்தக் கட்டுரை அந்த வெளிச்சத்தை கொஞ்ச நேரம் நம் மனங்களில் ஏற்றுகிறது. அவர் இந்தக் கட்டுரையில் கூறியிருக்கும் ஞாபக மறதி உட்பட பல symptoms எனக்கு இந்த வயதிலியே இருப்பதை நினைத்தால் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறதுஇன்று தனது 70வது பிறந்த நாள் காணும் திரு.சுஜாதாவிற்கு என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள். அவரை ஸ்ரீரங்கநாதர் நல்ல உடல் நலத்துடன் வைத்துக்கொள்ள பிரார்த்திக்கிறேன். நான் சுஜாதாவின் தீவிர வாசகன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன்.
இந்த வார 'கற்றதும் பெற்றதும்'ல் சுஜாதா...
மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். "யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார். நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன். "எதுக்குப்பா?" "தொடுங்களேன்!" சற்று வியப்புடன் தொட்டார். "மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார். "ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..." "இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார். "உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன். அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?" "ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன்.
தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை.
‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை. மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது.
ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்! டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.
மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன.
ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன்.
எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!". ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது.
நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை.
பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன். இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன்.
சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது. ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.
தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.
அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று. நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது.
பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான்.
வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள்.
மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!
நன்றி: ஆனந்த விகடன்
ஹாப்பி பர்த்டே சுஜாதா ! பிடிச்சிருக்கா ? பிடித்திருந்தால் '+' பிடிக்காவிட்டால் '-' என்று ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து மற்றவருக்கு படிக்கவோ படிக்காமலிருக்கவோ உதவுங்கள். பரிந்துரைக்க Starsயை கிளிக் பண்ணுங்க..நன்றி!
?
Works best if you Comments:
வணக்கம் . அன்னிக்கு மூக்கு சுந்தர் பதிவுள்ள எழுதியிருந்ததால, ஆ.வி போய் படித்தேன். உண்மையில் படிக்கும்போது மிகுந்த கலக்கமாய் இருந்தது. சாருக்கு கண்ணில் பிரச்னை ஏற்பட்டபோதும், இதயநோய் ஏற்பட்டபோதும் அவர் சிரித்தபடி எழுதியிருந்தாலும், என் மனது வருத்தப்பட்டது உண்மை. ஆனாலும், அப்போது விட இந்த வார கற்றதும், பெற்றதும் கலங்கடித்து விட்டது. ஒரு மினி சுயசரிதை போன்ற வடிவமும் காரணமாய் இருக்கலாம். அது உங்களை disturb பண்ணியதில் ஆச்சரியமில்லை.சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... உடல்நலப்பிரச்னை அதிகமில்லாமல் நீடுழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்.
தன்னுடைய கவலையைக் கூட சுவைபட சொல்வது ஒரு கலை. அது சுஜாதா அவர்களால் தான் முடியும். அவர் நீடூழி வாழ்ந்து, மேன்மேலும் பற்பல எழுத்தாளர்களின் மானசீக குருவாகத் திகழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.அன்புடன்,'சுபமூகா'
‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை. >>உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!நாளை இருப்போமா என்பது நம் கையில் இல்லை என்பதை எத்தனை தெளிவாக சொல்லி இருக்கிறார்!.அவரை வாழ்த்த வயது போதாது, அவர் நல்லாரோக்கியத்துடன்,நலமே வாழ ராஜராஜேஸ்வரிஅருள்புரிய வேண்டுகிறேன்.அற்புதமான அந்த எழுபது வயது இளைஞரின் ஆசிகள் எங்களுக்கு எப்போதும் கிடைக்கவேண்டும்.அன்புடன்(ரங்க)மீனா
நான் சுஜாதாவின் தீவிர வாசகன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன். //நானும்.எனது வாழ்த்துக்களையும் சுஜாதா அவர்களிடம் சேர்ப்பிக்கவும்.விகடன் கட்டுரை மிகவும் நெகிழ வைத்தது. அவரது நல்ல நெஞ்சுக்கு எவ்விதக் குறையும் வாரா. 'உமக்கென்ன குறைச்சல் நீர் ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை, வந்தால் வரட்டும் முதுமை' என்று எம் எஸ் விஸ்வநாதன் குரலில் பாடத் தோன்றுகிறது. நோய்கள் நீங்கி, இன்னும் பல நூற்றாண்டு ஆரொக்கியமாக வாழ்ந்து, உன்னதப் படைப்புக்களைத் தொடர்ந்து படைக்க எனது அன்பான வாழ்த்துக்கள். பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்தும் அன்பு நெஞ்சம்ச.திருமலை
By Anonymous, at Thu May 05, 07:03:00 AM IST
விகடன் கட்டுரை படிப்பது ஒரு மினி சுயசர்தை படிப்பது போலிருந்தது என்பது உண்மைதான்.கட்டுரை படித்ததும் நானும் பெரிதும் பாதிக்கப்பட்டேன், இங்கு எழுத நினைத்தேன், பிரகாசும் தேசிகரும் போட்டுவிட்டார்கள்.நன்றி.நல்ல உடல் நலத்துடன் ரங்கராஜன் அய்யா அவர்கள், நீண்ட நாள் வாழ இறை அருள் புரியட்டும்!எம்.கே
By எம்.கே.குமார், at Thu May 05, 07:21:00 AM IST
நானும் அவரின் தீவிர வாசகன்! அன்னாருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களும்!
By Moorthi, at Thu May 05, 08:05:00 AM IST
Desikan,today i morning i read the article. amma was reading it two days and recommended me to read this weeks katrathum petrathum in vikatan. there are lots of things that is beyond human understanding. if all the information all available for everyone at some place learning will stop. then it is all about perceiving those information more than coming out with new things. i was reading angels and demons last week and got a new perspective about god. as per the author dan brown science is nothing but god. god has created so many things for you and whenever you learn something you are nearing god. the time when you see both science and god are complementing each other you are starting learning more. ofcourse this is a perspective of one of the character in the book.one more addition the late age memory loss is something called as dementia. the definition of dementia is gradual progressive mental impariment. alzheimer is one form of dementia. nearly 65% of people are suffering from this kind of dementia. this is a compromise that people had to do for their long life. lots of activities are happening on this area in nimhans @ bangalore. as sujatha mentioned live for today.
By kicha, at Thu May 05, 10:51:00 AM IST
Dear Desikan,Thanks for the article. I have one similarity with Sujatha!! Guess What???My Date of Birth is also 13-April and his too. But Actually my DOB is 13-October.. changed due to some reason in school. Apart from this he is a great human being. He came to my colleage during my 2 Year, he was talking about Video Compressiong, Huffman coding etc.. i was thrilled to hear that. I wanted to meet him in person and get an autograph,but i couldn't do on that day. Everyone in my famil likes his stories. I have bought all the Katrathum Petrathu,En Etharku eppadi series from Ananda Vikatan. He is truly a amazing gift to Tamil People and Cinema.Wishing him a great Day and God bless him.Regards,Subbu
By Anonymous, at Thu May 05, 11:29:00 AM IST
என் தாத்தாவின் ஞாபகம் வருகிறது. அவர் இப்படித்தான் ஒரு ஆங்கில வார்த்தையைத் தேடிப் பிடித்துக்கொண்டிருந்தார். "சண்டை போடுறதுக்கு இதைச் சொல்வாங்க" என்று தேடினார். ஞாபகத்திலிருந்து எப்படியும் எடுத்துவிடமுடியும் என்று நம்பித் தேடினார். கடைசியில் சில மணி நேரங்களுக்குப் பிறகு "quarell" என்றார், அதைக் கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தில். "இதைக் கண்டுபிடிக்கத் தெரியலை?" என்றேன். "நான் நினைச்சதை உன்னாலயும்தான் கண்டு பிடிக்கமுடியலை" என்றார்.எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள் போல, எல்லா வயதானவர்களும் ஒரே மாதிரியே. சமீபத்தில் ஜெயகாந்தனைப் பார்த்தபோது, அருகில் என் தாத்தாவைப் பார்ப்பது போலவே உணர்ந்தேன். சுஜாதாவின் எழுத்தில் கூட அதே "தாத்தாமை".இந்தச் சப்பை கமெண்ட்டைப் போடுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. தேசிகனின் வலைப்பதிவு ஒரு "நிலை"க்கு வருவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது. இதே பிரச்சினை பத்ரியின் வலைப்பதிவிலும் இருக்கிறது. ஏதாவது செய்யவும், எழுதாமலிருப்பதைத் தவிர! :-)அன்புடன்ஹரன்பிரசன்னா
By Haranprasanna, at Thu May 05, 01:46:00 PM IST
DesikanConvey my wishes to Sujatha"Now I know why he did not attend my marriage"BTW what film he is curremtly working onDittu
By Dittu, at Sat May 07, 08:13:00 AM IST
Dear DesikanU will become a cloned version of Sujatha one day.best wishesNanu
By Narayanan, at Sun May 08, 11:04:00 AM IST
the post as well as the responses are as sentimental and sensible as most tamil tv serials are.
By Anonymous, at Mon May 09, 03:08:00 AM IST
எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள் போல, எல்லா வயதானவர்களும் ஒரே மாதிரியே
தமிழில்..
அடிக்கடி என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி.நீங்கள் தமிழில் எப்படி எழுதுகின்றீர்கள்? நான் தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்?
பையர்பாக்ஸ் -ல் தமிழ் ஒழுங்காக தெரிய மாட்டேங்குதே என்ன செய்ய? போன்றன.
இங்கே என் விளக்கங்கள்.
நீங்கள் தமிழில் எப்படி எழுதுகின்றீர்கள்?
ஆரம்பத்தில் Kuralsoft எனும் அழகிய எளிய இலவச மென்பொருள் ஒன்றை தான் பயன்படுத்தி வந்தேன்.இதன் வழி நேராக Notepad-ல் தமிழில் தட்டச்சலாம் அல்லது நேராகவே பிளாகிலேயே தட்டச்சலாம்.பிரச்சனை இல்லாதிருந்து வந்தது. என்னநினைத்தார்களோ சமீபத்தில் அதற்கு விலையை குறித்து விட்டார்கள். தமிழில் எழுத இலவச மென்பொருள்கள் இன்னும் இருப்பதால் அவைகளுக்கு தாவ வேண்டி வந்தது.
இப்போது ஈகலப்பை எனும் மென்பொருளை பயன்படுத்துகின்றேன். இந்நேரத்தில் இம்மென்பொருளை இலவசமாய் வழங்கிவரும் தமிழா (Thamizha) குழுவுக்கு நன்றிகள் தெரிவித்துகொள்கின்றேன்.நான் (அதாவது நீங்கள்) தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்?நீங்களும் தமிழில் Notepad-லோ அல்லது Blog-கிலோ அல்லது Gmail-லிலோ தமிழில் எழுதலாம்.
நான் (அதாவது நீங்கள்) தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்?நீங்களும் தமிழில் Notepad-லோ அல்லது Blog-கிலோ அல்லது Gmail-லிலோ தமிழில் எழுதலாம். முதலில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து eKalappaiஎனும் மென்பொருளை இறக்கம் செய்து கொள்ளுங்கள்
http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=5
பின் கீழ்கண்ட சுட்டியிலிருந்து கீபோர்டு Tamil unicode .kmx கோப்பை இறக்கம் செய்து அதை ஈகலப்பையில் பயன்படுத்துங்கள்
http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=13
குழப்பமாய் இருக்கிறதா? இதோ படிப்படியாக செய்முறை உங்களுக்காக..
1.eKalappai-யை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவவும்.
சும்மா Install-யை கிளிக் பண்ணி மற்ற எல்லா வற்றையும் பட்பட்டென கிளிக்கி செல்லவும்.
கீழே அந்த ஆரம்ப படம்.
2.eKalappai நிறுவி முடித்ததும் கீழே படத்தில் இடதுகோடியில் காண்பது போல புதிதாய் ஒரு ஐகான் (TavulteSoft Keyman 6.0) உங்கள் கணிணியில் வரும்.
3.அந்த ஐகானை வலது கிளிக்செய்து keyman configuration...-ஐ கிளிக்கவும்.
4.அதிலுள்ள Install Keyboard-யை கிளிக்கி ஏற்கனவே இறக்கம் செய்து வைத்துள்ள NewUniTamil.kmx கோப்பை நிறுவவும்
5.முடிவில் இப்போது மூன்று கீபோடுகள் இருக்கும். அதில் Tamil99UNI,Tamil99Tsc இரண்டிலும் உள்ள டிக் மார்க்கை நீக்கிவிடவும்.UniTamil மட்டும் டிக் இருக்கட்டும்.
6.இப்போது Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் நீங்கள் தமிழில் எழுத தயார். Notepad-யை திறந்து தமிழில் எழுதலாம்.
உதாரணமாய் அம்மா என்பதை ammaa எனவும் ஆசை என்பதை aasai எனவும் டைப்பவேண்டும். இதை Tamil Transliteration என்பார்கள்.
மீண்டும் Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் ஆங்கிலத்துக்கு போய் விடுவீர்கள்.பையர்பாக்ஸ் -ல் தமிழ் ஒழுங்காக தெரிய மாட்டேங்குதே என்ன செய்ய?
ஏற்கனவே நண்பர் சொல்லிய விளக்கத்தையே இங்கும் தருகின்றேன்.
பயர்பொஸ் உலாவியில் தான் தமிழ் யுனிகோட் பிரச்சனை உள்ளது. அதனை கீழ் கண்டவாறு சீர் செய்யலாம்
1.முதலில் windows XP with Service pack 2 இறுவட்டை CD Drive க்குள் போட்டுக்கொள்ளவும்.
பின்னர் க்ண்ட்ரோல் பனெலிற்கு போய் Regional & Language Options என்னும் ஐக்கனை கிளிக் பண்ணவும்.
2. அதில் language என்னும் Tab இனை கிளிக் பண்னவும்.
3.அதில் supplemental language supportஏனும் option இல் இரண்டு தெரிவுகள் இருக்கும்*. install files for complex scripts and right to left language (including Thai)*install files for east Asian languages
இதில் முதலாவதை தெரிவு செய்த பின்பு apply button ஐ சொடுக்கினால் வின்டோஸ் எக்ஸ்பி சீடியிலிருந்து தமிழ் யுனிகோட்டுக்கு தேவையான விபரங்களை தானாகவே அது பதிவு செய்து கொள்ளும். பின்பு கணினியை மீள ஆரம்பிக்கவும்.
அவ்வளவு தான்
உலக கரன்சிகளில் தமிழ்
இந்தியா தவிர இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மொரிஷியஸ் நாட்டு கரன்சிகளிலும் தமிழ் எழுத்துக்கள் இருக்கின்றனவாம்.இங்கே உங்கள் பார்வைக்காக அவற்றின் அணிவகுப்பு.
மேலே நீங்கள் காண்பது இலங்கை காசுவில்
நீங்கள் காண்பது சிங்கப்பூர் காசுவில்
நீங்கள் காண்பது இந்திய பணத்தில்
நீங்கள் காண்பது இலங்கை பணத்தில்
நீங்கள் காண்பது சிங்கப்பூர் பணத்தில்
தநீங்கள் காண்பது மொரிஷியஸ் பணத்தில்
தமிழ்Tamil script in World Currencies
மறைத்து வாழ வேண்டும்
மனிதமென்றாலே அது கடவுளும் சாத்தானும் சேர்ந்த கலவை தானே.அதனால் தானோ என்னவோ தனது "டிஸ்கவரி ஆப் இந்தியா" புத்தகத்தில் நேரு இப்படியாகச் சொன்னார். "இயற்கையின் வலிமையான விளையாட்டுக் கருவியாகவும், இந்தப் பெரிய அண்டங்களில் ஒரு பூமி உருண்டையில் ஒரு தூசை விட அணுவை விட சிறியவனாக இருந்த போதிலும் மனிதன் இயற்கையின் வலிய ஆற்றலை வெற்றிக் கொண்டு அறிவினால் புரட்சிகளினால் அவற்றை அடிமைப்படுத்தினான். அங்கங்கே கடவுள்கள் இருந்தாலும்- இருப்பதாக வைத்துக் கொண்டாலும், மனிதனுக்குள் கடவுளைப்போல ஒன்று இருக்கின்றது. அவனுக்குள்ளே ஒருவகைச் சாத்தானும் இருக்கின்றது" எவ்வளவு சரியான வார்த்தைகள் அவை.உதாரணத்திற்கு சிவப்பு விளக்கு எரிகிறதென வைத்துக்கொள்வோம். அதிகம் டிராபிக் இல்லாத நேரம். சிவப்பு விளக்கை மீறிச்செல்ல மனம் ஒத்துக்கொள்வதில்லையா?என்ன...? சிலர் கொஞ்சம் அதிகமாய் கடவுளாகிவிடுகின்றனர். சிலர் கொஞ்சம் அதிகமாய் சாத்தானாகி விடுகின்றோம்.தினமும் அழுக்காகின்றோம். அதனால் தானே தினமும் குளிக்க வேண்டியிருக்கின்றது.வேறு வழி?.மறைக்கவேண்டிவற்றை மறைத்து காட்டவேண்டியதை மட்டும் காட்டினால் மனிதன் எப்போதுமே இப்போதும் போல் சமூக மிருகமாகவே இருப்பான்.இப்போது கணிணியில் நாம் மறைக்க வேண்டியவற்றை பற்றி பார்ப்போம். :)எதோ ஒரு தளத்திலிருந்து பல அரிய(?) தகவல்களை இறக்கம் செய்து வைத்திருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அதை ஒரு ஃபோல்டரில் போட்டு வைத்துள்ளீர்கள். இப்போது யாரும் அந்த போல்டரை பார்த்து விடுவார்களோ என பயமாய் இருக்கின்றது. பிறருக்கு தெரியாமல் அந்த டைரக்டரியை எப்படி மறைப்பது?இது தானே உங்கள் கவலை.விடுங்கள் இதோ இருக்கின்றது ஒரு தீர்வு.