7.7.08

ஆயிரத்தோராவது பிரச்சனை


பிரபலங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனைகளில் இது ஆயிரத்தோராவது பிரச்சனை. நிம்மதியாக எங்கும் போக முடிவதில்லை. எப்போதும் யாரோ தன்னை கேமராவில் கண்காணித்துக் கொண்டிருப்பது போன்றே தோன்றும் துபாய் போனால் ஒழுங்காக தூங்க முடிவதில்லை, தென் ஆப்ரிக்கா போனால் கூட அட சுதந்திரமாக அங்கு குளிக்க முடிவதில்லை, மும்பை போய் ஒரு துணிமணி எடுக்கலாமெனில் ஷாப்பிங் மால்களின் டிரஸ்ஸிங் ரூம்களுக்குள் போகவே பயமாயிருக்கிறது.Pinhole அதாவது குண்டூசி அளவேயான மறைந்திருக்கும் கேமராக்கள் உங்களை படம்பிடித்துக் கொண்டிருக்கலாம்.படுக்கை அறையில் சாதாரண கடிகாரம் தானே இருக்கின்றது என அந்த பிரபலம் நினைக்க ஆனால் அதற்குள் தான் அந்த மர்ம காமரா ஒளிந்திருக்கும்.மேஜையில் புசு புசுவென இருக்கும் டெட்டிபியர் கரடி பொம்மையை எடுத்து கொஞ்சலாம் போல் தோன்றும் ஆனால் அதற்குள்ளே தானே அவருக்கு ஒளிந்திருக்கு ஆப்பு (காமெரா).ஏன் ஜேம்ஸ்பாண்ட் கணக்காலும் சாதாரண சட்டைபொத்தான் வடிவில் கூட ஹிடன் கேமராக்கள் இப்போது வந்துள்ளன.

இவற்றிலிருந்து தப்ப வழி இருக்கின்றதா?
அந்த காலத்தில் இராணுவ அல்லது அரசின் பிரத்தியேக உபயோகத்துக்கென இருந்த பல ரகசிய தொழில் நுட்பங்கள் இன்று சாதாரண குடிமகன்கள் கைக்கு எட்டும் அளவுக்கு வந்துவிட்டன. உதாரணமாய் GPS-ஐ சொல்லலாம்.சில வருடங்களுக்கு முன்பு வரை மிலிட்டரி பயன்பாடுகளுக்கு மட்டுமே அது பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது கோபால் கூட ஒன்றுக்கு இரண்டு வைத்திருக்கின்றான்.இன்றைய அளவில் இராணுவ அல்லது அரசின் பிரத்தியேக உபயோகத்துக்கென இருக்கும் ரகசிய தொழில் நுட்பங்கள் என்னென்னவோ யாருக்குத் தெரியும். தெரிய வந்தால் நமக்கு அநாவசியமாய் திகில் தான் பிடிக்கும்.
பெரும்பாலும் 2020-யில் அது வெளி உபயோகத்துக்கு வந்து நான், ஒரு ரேடியோ பெட்டியூண்டு அளவிலுள்ள தானியங்கி மினி நானோ-ஹெலிக்காப்டரில் வைத்து நியூயார்க்கிலிருந்து சென்னையிலிருக்கும் என் ஆசானுக்கு பரிசுபொருள் ஒன்றை கூரியர் போல அனுப்புவேன். அந்த கால தூதுபோன புறாபோல சென்னைபோய் திரும்ப என்னிடம் வரும்.கொஞ்சம் ஓவர் கற்பனையோ?

அதுவரை நியூயார்க் தாக்குபிடிக்கவேண்டும்.அணுஆயுத போர் வந்தால் அது தான் முதல் டார்கெட் அப்படி இப்படினு பலரும் பலதாய் பேச அது பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.கலிபோர்னியா போகலாமெனில் அங்கு ஒரு மாபெரும் பூமியதிர்ச்சி வர காத்திருக்கின்றதாம்.டிக் டிக்... திக் திக்...

நிற்க

இது போல முன்பு அரசு பயன்பாட்டிலிருந்து இப்போது பொதுவில் வந்துள்ள ஒரு கருவி தான் Spy Finder Hidden Camera Detector/Locator.இது என்னமோ principle of optical augmentation முறைப்படி வேலை செய்கின்றதாம். இந்த கையடக்க கருவி வழி சுற்றும் முற்றும் பார்த்தால் எங்காவது Hidden Camera இருந்தால் அது உடனே உங்களுக்கு காட்டிகொடுத்து விடுமாம்.

கலியுகத்தில் இது ஒரு நல்ல பரிசுபொருளோவென தோன்றுகின்றது. ஏதோ ஒரு இணையபக்கத்தில் அவரை பாவம் அப்பாவி ஏமாந்தவராய் பார்க்கமாட்டோம்.

ரேப்பிட் வைரஸ்கள்

விண்டோஸ் எக்ஸ்பியில் அடிப்படையிலேயே பயர்வால் ஒன்று ஓடிக்கொண்டே உள்ளதால் இப்போதெல்லாம் வைரஸ்கள் தானாக வந்து உங்கள் கணிணியை தாக்குவது அபூர்வமே.மாறாக நாமாகப் போய் வலிய வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டால் தான் உண்டு.ஏடாகூடாமான தளம் எதற்காவது போய் அங்கு தோன்றும் ஒரு பாப் அப் விண்டோவில் "Yes" சொல்லி வைரஸை விலைக்கு வாங்கும் ரகம் பாமர கணிணி பயனர்கள் ரகம் எனில் தேடிப்போய் ஒரு குறிப்பிட்ட ".exe" கோப்பை ரேப்பிட்ஷேரிலிருந்தோ அல்லது இது போன்ற இன்ன பிற கோப்புகிடங்குகளிலிருந்தோ இறக்கம் செய்து அது வழி வைரசை தங்கள் கணிணிக்கு இறக்குமதி செய்யும் ரகம் கீக் (Geek) கணிணி பயனர்கள் ரகம்.

எதாவது ஒரு பயன்பாடு வேண்டுமெனில் உடனே அதற்காக பட்டென ஏதாவது ஒரு ரேப்பிட்சேர் சுட்டியிலிருந்து அதை இறக்கம் செய்வது அத்தனை பாதுகாப்பானதல்ல. முடிந்த வரைக்கும் நம்பகமான தளத்திலிருந்து மட்டுமே "எக்சிகியூட்டபிள்"-களை இறக்கம் செய்வது நல்லது. அல்லது இறக்கம் செய்ததும் நன்றாக ஸ்கேன் செய்ய ஒரு நல்ல வைரஸ் ஸ்கேனராவது உருப்படியாய் வைத்திருத்தல் வேண்டும்.

MP3 கோப்புகள், வீடியோ கோப்புகள், PDF கோப்புகள் ,சில சமயம் CBTகள் இது தவிர பிற வகை கோப்புகளை முக்கியமாய் exe கோப்புகளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் ஓட விடுதல் அத்தனை பாதுகாப்பான பழக்கம் அல்லவே. எவர் என்ன நோக்கில் அந்த மென்பொருளை அங்கு சேமித்து வைத்துள்ளாரோ? அதனுள் ஏதாவது வைரசோ அல்லது பிற மர்ம ட்ரோஜன்களோ ஒளிந்திருந்தால் அது நமக்கு சுத்தமாய் தெரிவதில்லை. நம்மில் பலரும் வைரசில் மாட்டிவிடல் இப்படித் தான்.

அது இப்படி இருக்க, இங்கே ஒரு டிப்.

ரேப்பிட்சேரில் 100MB-க்கும் பெரிதான கோப்புகளை சேமிக்க முடியாததாகையால் டிவிடிக்களை நூறு நூறு Meg-காக பல .rar துண்டுகளாக்கி ஒரு குழுவாக இணைஏற்றம் செய்து வைத்திருப்பார்கள். பத்து .rar கோப்புகளில் ஒன்பதை பல மணிநேரமாய் இறக்கம் செய்த பின் 10வது இறக்கமாக மறுக்கும். அனைத்தையும் இறக்கம் செய்யாமல் Winrar-ம் அவ்வீடியோவை Extract செய்யவிடாது. ஒரே டென்சனாகிப் போகும். குறைந்தது இறக்கம் செய்துள்ள அந்த ஒன்பது .rar கோப்புகளில் உள்ள வீடியோவையாவது பார்க்க வழியுள்ளதா?
ஆம் உள்ளது.

அந்த .rar கோப்புக் குழுவை விரிவாக்கம் செய்யும் முன் மறக்காமல் "Keep broken files" -ஐ Winrar-ல் டிக் செய்துகொள்ளுங்கள்.(படம்)

பத்தாவதை பார்க்க இயலாவிட்டாலும் மற்ற ஒன்பதையாவது பார்க்கலாம்.

பைலைச் சரியாக அமைக்கும் டிபிராக்ளர்

அண்மையில் மிகப் பயனுள்ள புரோகிராம் ஒன்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அதுகுறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தக் குறிப்பு. கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் எழுதப்படுகையில் வரிசையாகத்தான் முதலில் எழுதப்படும். காலப் போக்கில் பைல்களை அழித்து அழித்து புதிய பைல்களை எழுதுகையில் அவை ஹார்ட் டிஸ்க்கில் தொடர்ந்த இடத்தில் எழுதப்படாமல் விட்டு விட்டு பல இடங்களில் பிட்டு பிட்டாக எழுதப்படும். ஆனால் கம்ப்யூட்டர் இயக்கம் அவற்றைச் சரியாகக் கோர்வையாகப் படித்து நமக்குத் தரும். இவ்வாறு விட்டு விட்டு பிட்டு பிட்டாக இருக்கும் பைல்களை மீண்டும் சரியாகத் தொடர்ச்சியாக அமைப்பதற்கு உதவிடும் புரோகிரம் தான் டிபிராக் புரோகிராம் ஆகும்.

இதில் என்ன பிரச்னை என்றால் டிபிராக் செய்கையில் ஹார்ட் டிஸ்க் முழுவதும் அல்லது ஒரு குறிப்பிட்ட டிரைவ் முழுவதும் இந்த பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அளவில் பெரிய பைல் ஒன்றை அமைக்கிறீர்கள். நீங்கள் டிபிராக் செய்து நாள் ஆகிவிட்டது என்றால் நிச்சயமாய் அந்த பைல் பல பிட்டுகளாகத்தான் எழுதப்படும். இந்த பைலை மட்டும் டிபிராக் செய்து சரியாக ஓரிடத்த்தில் அமைக்க முடியுமா? முடியும் என்கிறது அண்மையில் நான் பார்த்த டிபிராக்ளர் (Defraggler) என்ற புரோகிராம். இனிமேல் அனைத்து பைல்களையும் நீங்கள் டிபிராக் செய்திடத் தேவையில்லை. குறிப்பிட்ட பைலை மட்டும் இந்த புரோகிராம் மூலம் டிபிராக் செய்து கொள்ளலாம். முழு டிரைவினையும் டிபிராக் செய்திடவும் இந்த புரோகிராம் வழி வகுக்கிறது. இந்த புரோகிராமின் இன்னொரு வசதி என்னவென்றால் இதனை எளிதில் எடுத்துச் செல்லலாம். மிகச் சிறிய கட்டமைப்பில் இது உருவாக்க பட்டுள்ளது. அதனால் ஒரே ஒரு சிறிய எளிய இ.எக்ஸ்.இ. பைலாக இது நமக்குக் கிடைக்கிறது. எனவே இதனை ஒரு பிளாஷ் டிரைவில் பதிந்து எடுத்துச் சென்று எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம். இந்த பைல் 1 எம்பி அளவிலேயே இருக்கிறது.


உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எப்படி இந்த அளவிலான சிறிய பைல் டிபிராக் பணியை மேற்கொள்கிறது? என்ற கேள்வி எழலாம். இதற்கு நீங்கள் செயல்முறையிலேயே தெரிந்து கொள்ளலாம். டிபிராக்ளர் புரோகிராமினை முதலில் www.defraggler.com/download என்ற இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். அதன்பின் மற்ற புரோகிராம்களை இயக்குவது போல இயக்குங்கள். அதன்பின் உங்கள் கம்ப்யூட்டரில் எந்த எந்த புரோகிராம்களை அல்லது போல்டர்களை டிபிராக் செய்திட வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.


பின் அவற்றை டிபிராக் செய்திட கட்டளை கொடுக்கலாம். டிபிராக்ளர் அந்த பைல்களை டிபிராக் செய்துவிட்டு வெற்றிகரமாக செய்ததாக உங்களுக்கு அறிவிக்கும். டிபிராக் செய்திட முடியாத பைல்களின் பட்டியலைத்தரும். அத்துடன் இன்னும் டிபிராக் செய்யப்பட வேண்டிய பைல்கள் என்று ஒரு பட்டியலையும் தரும். பட்டியலில் உள்ள அந்த பைல்களின் மீது கிளிக் செய்தால் அந்த பைல்கள் எங்கு இருக்கிறது என்பதனையும் அவை ஏன் டிபிராக் செய்யப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் கண்கூடாகப் பார்க்க முடியும். டிபிராக்ளர் விண்டோஸ் 2000, 2003, எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் செயல்படுகிறது.


அண்மையில் 64 பிட் சிஸ்டத்தில் இயங்கும் வகையிலும் டிபிராக்ளர் மாற்றம் செய்யப்பட்டு தரப்பட்டுள்ளது. CCleaner என்ற புரோகிராம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த புரோகிராமினைத் தயாரித்து வழங்கிய Piriform என்ற நிறுவனம் தான் இதனையும் தயாரித்து வழங்குகிறது.

4.7.08

உலகின் மிக மிக உயரமான கட்டிடம்


மனிதன் நினைத்தால் எதையும் சாதிக்க இயலும்.

கீழே உள்ள படத்தை பாருங்கள்

இந்த புகைப்படம் உலகின் மிக மிக உயரமான கட்டிடமான BURJ DUBAI (உயரம் 2620 அடி) யில் இருந்து எடுக்கப்பட்டது





அடுத்து கீழே உள்ள படத்தின் இடது பக்க மூலையை கவனியுங்கள் பூமியின் வளைவுகளை காண முடியும்

படத்தில் மேல்புறத்தில் கட்டிட வேலை செய்து கொண்டு இருப்பவர்களால் பூமி சுற்றுவதை உணரமுடிகிறாதாம்.

படம் பெரியதாக பார்க்க படத்தின் மீது கிளிக்கிட்டுகொள்ளுங்கள் அப்போது தான் தாங்களும் உணரமுடியும்

இப்போது கூறுங்கள் மனிதனால் செய்யமுடியாதது எதாவது உள்ளதா ??




3.7.08

கூகிள் டாக்ஸ் (Docs) பிடிஎப் கோப்புகள்

கூகிள் டாக்ஸ் (Docs) பிடிஎப் கோப்புகளை திறக்க மற்றும் தயார் செய்ய உதவி செய்கிறது . ஆம் நீங்கள் உலகின் எந்த முலையிலும் உற்க்காந்து கொண்டு உங்கள் டாகுமென்ட் கோப்புகளையும், ஸ்பிரெட்ஷீட்களையும் கோப்புகளையும் திறந்து மற்றும் அதை எடிட் செய்ய இந்த கூகிள் டாக்ஸ் மற்றும் ஸ்பிரெட்ஷீட்ஸ் உதவுகிறது .

இப்பொழுது கூகிள் டாக்ஸ் மற்றும் ஸ்பிரெட்ஷீட்ஸ் 48 மொழிகளில் சேவையை தருகிறது . மேலும் உங்கள் PDF (Portable Document File) அவற்றையும் எழுதவும் படிக்கவும் உதவுகிறது . நீங்கள் கூகிள் டாக்ஸ் செட்டிங்சில் மொழியை தமிழ் என்று மாற்ற வேண்டும் . இப்பொழுது உங்கள் கூகிள் டாக்ஸ் தமிழில் எழுதவும் படிக்கவும் முடியும் மேலும் எழுதியதை பிடிஎப் (PDF) கோப்பாக தயாரித்து பதிவிறக்கம் செய்ய முடியும் .
http://i297.photobucket.com/albums/mm205/karthik775/GoogelDocstamilWrite.png

உங்கள் பிடிப் (PDF) கோப்புகளை கூகிள் டாக்ஸில் திறக்க உங்கள் பிடிஎப் (PDF) கோப்புகளை மேலிறக்கம் (Upload) செய்ய வேண்டும் . உங்கள் கோப்பின் இட அளவு 2MB இருக்க வேண்டும் நீங்கள் (Browser) முலமாக மேலிரக்கம் (Upload) செய்தல்2MB அளவு இலையெனில் 10 MB அளவுக்கு மேலிரக்கம் செய்து கொள்ளலாம் .
இங்கே உங்கள் பிடிஎப் கோப்பில் உள்ள எழுத்துக்களை மட்டும் பிரதிகளாக எடுத்து கொள்ளலாம் .

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/GoogelDocstamilread.png

கூகிள் டாக்ஸ் செல்லும் சுட்டி http://docs.google.com/

நீங்கள் புதிய பயணாளரா ? கூகிள் டாக்ஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த சுட்டியை பார்க்கவும் Basic Information

2.7.08

Actor Vijay and his spouse Sangeetha Couple Pictures.

தெரு தெருவாய் படம் எடுக்கும் கூகிள் வேன்கள்

கூகிள் சமீபத்தில் தனது மேப்பில் Street View என்னும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியது. இதன்படி ஒரு குறிப்பிட்ட நகரின் ஒரு குறிப்பிட்ட தெருவுக்கு நீங்கள் விர்சுவலாகப்போய் அத்தெரு எப்படி இருக்கும் என பார்க்கலாம்.அதாவது இணையத்தில் அத்தெருவில் நின்றவாறே 360 டிகிரிக்கும் சுற்றிப் பார்க்கலாம். நியூயார்க் நகரின் லிவிங்ஸ்டன் அவெனியுவில் உள்ள சரவணாஸ் சைவ உணவகம் தான் நீங்கள் படத்தில் பார்ப்பது. சிவப்பு கலர் SaravanaS போர்டுக்கு கீழே நம்மாட்கள் பசியாய் சாப்பிட வெளியே காத்துநிற்கின்றார்கள். சைவ உணவுடன் இங்கே கிங்பிஷரும் கிடைக்கும் என்பது விஷேசம். சரவணபவன் என்ற பெயரை வேறொரு நிறுவனம் முன்கூட்டியே பதிவுசெய்துவிட்டதால் சரவணாஸ் என பெயராயிற்றாம். Link to Saravanas Streetview சரி நம் விஷயத்துக்கு வருவோம். இது போன்ற immersive எனப்படும் மூழ்கு படங்களை எடுக்க அமெரிக்க நகரங்களில் கூகிளின் வேன்கள் தலைக்கு மேல் விசேசித்த கேமராவோடு சுற்றி வருகின்றனவாம்.அப்படியான ஒரு வேனை கேமராவோடு படத்தில் காணலாம்.அது போலவே Windows Live Local-காரர்களும் தெருக்களை சுற்றி வருகின்றார்கள். இது போன்ற immersive வீடியோ தொழில்நுட்பத்தில் http://www.immersivemedia.com முன்ணணியில் இருப்பதுபோல தெரிகின்றது. Link to msn`s version of this feature http://preview.local.live.com/ பிரைவசி போச்சுடோய்யென சிலர் கத்த "அது மாதிரி" படங்களை நீக்கும் பணியிலும் கூகிள் ஈடுபட்டு வருகின்றது. அமெரிக்காவில் நீங்கள் இருப்பவரானால் ஸ்டிரீட்வியூ போய் பரிச்சயமான இடங்களை ஒரு பார்வை விடுங்கள்.ஒருவேளை உங்களையோ அல்லது உங்கள் நண்பரையோ அல்லது உங்கள் காரையோ காணலாம்.