25.4.08

விக்கி மாஃபியா


View Larger Map SAT View Chennai Merina-Click Map See all places

விக்கி மாஃபியா என்றதும் "இது ரொம்ப முக்கியமோ? அடுத்தவன் கம்ப்யூட்டர கெடுக்க நல்ல வழி சொல்றீங்க"- என்று சொல்லும் படியான பதிவு அல்ல இது. இது விக்கிமேப்பியா (Wikimapia.org) பற்றிய பதிவு. :) இந்தியாவில் இண்டர்நெட் எத்தனையாய் ஊடுருவியிருக்கின்றது என்பதற்கு இந்த விக்கிமேப்பியாவே சாட்சி. நம்மூரில் பிரபலமான இந்த மேப்பின் விசேஷம் என்னவென்றால் நீங்களே உங்கள் வீட்டை, உங்களுக்கு தெரிந்த இடங்களை பிறர் அறிய எழுதி அதில் குறித்து வைக்கலாம். நம்மூரில் எதோ ஒரு கோடியிலிருக்கும் குப்பன் மற்றும் சுப்பனின் வீடுகளும் அழகாக குறித்து வைக்கப்பட்டிருக்கின்றது. இப்படி இந்த தளத்திற்கு வருவோர்களாலேயே குறிக்கப்பட்டு இந்த மேப்பானது தகவல்களால் பெருகி வருகின்றது. மேலே படத்தில் மவுசை வைத்தால் சென்னை கடற்கரை மற்றும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தை பார்க்கலாம்.சென்னையில் மட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் இப்படி வாசகர்களால் குறிக்கப்பட்டுள்ளனவாம். யாகூகாரர்களும் சும்மா இருக்கவில்லை. இப்போது இந்தியாவில் டிரைவிங் டைரக்ஷன்கள் கொடுக்க தொடங்கியிருக்கின்றார்கள். உதாரணமாய் From tnagar,chennai to ashoknagar,chennai என கொடுத்த போது அழகாய் எங்கே இடது பக்கம் திரும்பவேண்டும் எங்கே வலது பக்கம் திரும்பவேண்டும் என டிரைவிங் தகவல்களும் வரைபடமும் (மேலே) கொடுக்கின்றார்கள். திநகரிலிருந்து அசோக்நகர் செல்ல வரைபடம் பெற இங்கே சொடுக்குங்கள். கிடைத்த வழித்தடம் கீழே Start-Raja Mannar St,

L-Gopathi Narayanswami Chetty Rd,

Prakasam Rd,1st L,R-Nageswaran St,

L-Sir Mohammed Usman Rd,

R-Duraisamy Rd,Brindavan St,

L-Thamvaiah Rd,

R-Veeraswamy St,

R-Arya Gowda Rd,

L-Brindavan Street Extension,

L-4th Av,L-Jawaharlal Nehru Rd,1st L,

Stop (L stands for Left & R stands for Right) மைக்ரோசாப்டின் லைவும் டிரைவிங் டைரக்ஷன்கள் கொடுக்கின்றார்கள்.ஆனால் பிரமாதமாய் ஒன்றும் தெரியவில்லை.இங்கே சொடுக்கி சென்னை டு மதுரை டிரைவிங் டைரக்ஷன் பாருங்கள். அமெரிக்க வாழ் நண்பரா நீங்கள்?. உங்கள் பூகோள அறிவுக்கு இங்கு கூலாய் ஓர் குவிஸ் மேப். http://jimspages.com/States.htm

24.4.08

போட்டோ ஸ்கிரீன்சேவர்

போட்டோ ஸ்கிரீன்சேவர்

டிஜிட்டல் கேமரா மூலம் சுடப்பட்ட ஒளிப்படங்களை ஒரே சொடுக்கில் உங்கள் கணிணியின் வால்பேப்பராக்க இன்றைய கணிணிகள் வசதிகொண்டுள்ளன.

எந்த படத்தையும் வலது சொடுக்கினால் "Set as Desktop Background" வசதி அப்படத்தை உங்கள் கணிணியின் பிண்ணணி (Wallpaper) படமாக்கும்.

ஆனால் உங்களின் கெனான் ஒளிப்படக்கருவி மின்னி மின்னி உள்வாங்கிய உங்கள் குழந்தையின் புன்னகை படங்களை உங்களின் ஸ்கிரீன்சேவராய் உங்கள் கணிணியில் ஓட விடுவது எப்படி? கூகிள் வழங்கும் இலவச மென்பொருளான பிக்காசா உங்களிடம் இருந்தால் அது இதுமாதிரி தெரிவுசெய்யப்பட்ட படங்களை உங்கள் கணிணியில் ஸ்கிரீன்சேவராய் ஓட விட வசதியளிக்கின்றது.

ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமாய் வசதி வாய்ப்புகளோடு .scr வடிவில் உங்கள் குடும்ப படங்களை ஸ்கிரீன்சேவராக்க இதோ ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் PhotoMeister. இதனைபயன் படுத்தி நீங்கள் உருவாக்கும் Screensaver-க்கு பலவித எஃபெக்ட்கள் கொடுக்கலாம், போட்டோ தலைப்புகள் போட்டுக்கொள்ளலாம், பிண்ணணியில் இசையை ஓட விடலாம், இப்படி பல கிமிக்ஸ்கள் செய்யலாம். கணிணியும் உங்கள் குதுகல குடும்பத்தை எதிரொளித்துக்கொண்டே இருக்கும்.
Product Home Page

http://www.photomeister.com/

Direct Download Link

http://download2.paessler.com/download/photomeister.zip

பரிமளா போன பாதை

வெள்ளிக்கிழமை என்றாலே பக்கத்து வீட்டு பரிமளாவுக்கு ஏகத்துக்கும் குஷிதான்.ஏனென்றே எனக்கு தெரிந்ததில்லை. கார் சாவியை சுழற்றிச்சுழற்றி ஏதோ ஒரு பாடலை முணங்கிக்கொண்டே அலுவலகம் விட்டு வீட்டுக்கு வரும் அவள் அரைமணிநேரத்தில் ரெடியாகிவிடுவாள். கிளம்பி போனவள் போனவள் தான். திரும்பிவர நள்ளிரவும் தாண்டிவிடும்.இதையெல்லாம் இங்கு நான் கட்டாயம் சொல்லத்தான் வேண்டுமாவென நினைத்தேன். சொல்லிவிடுவதுதான் நல்லது.அதற்கான காரணத்தையும் அப்புறம் சொல்கின்றேன். எங்கு போகின்றாள் இவள்? மாலை முதல் நள்ளிரவுதாண்டியும் அப்படி எங்கே அவள்? போன வாரம் கிளைமாக்ஸ் நடந்தது. வெறும்(!) 230 டாலர்கள் தான். ஆன்லைனில் ஆர்டர்பண்ணியிருந்த LandAirSea GPS Tracking Key வந்துவிட்டிருந்தது. சிறுசா தீப்பட்டிமாதிரி. ஒரு USB கொக்கியும் இருந்தது. சில பேட்டரிகள் நாம் போடவேண்டும்.பரிமளாவுக்குத் தெரியாமல் அவள் டொயோட்டா கேம்ரி காரின் அடியில் அந்த டிராக்கிங் கீயை நச்சென ஒட்டவைத்தேன். அதிலிருந்த காந்தம் பரிமளாவின் காரை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. இனி இந்த கார் எங்கெல்லாம் போகுமோ அதெல்லாம் எனக்கு சந்து சந்தாக தெரிந்துவிடும். எவ்வளவு வேகமாக அவள் காரை ஓட்டினாள் (அவள் ஒரு பறக்கும் பாவை) எங்கெல்லாம் எவ்வளவு நேரம் அவள் நின்றாள் எல்லாம் இந்த கீ நோட் செய்து வைத்துக்கொள்ளும். அடுத்த நாள் அந்த Tracking Key-யை எடுத்து வந்து எனது கணிணியில் செருகி பார்த்தால் அத்தனையும் மேப் போட்டு துல்லிபமாய் எனக்கு காட்டிவிடும். இதுமாதிரி யாரை வேண்டுமானாலும் நீங்கள் கண்காணிக்கலாமாம் அதுவும் உலக அளவில். அதனால் இனிமேல் "ஒருமாதியான" இடங்களுக்கு போவதாய் இருந்தால் செல்லும்முன் காரை முழுசா சோதனை போட முடிவெடுத்திருக்கின்றேன். இன்றைய காலத்தில் தொழில்நுட்பத்தில் நீங்கள் ஆர்வமுள்ளவராய் இல்லாதவராயினும் நிகழ் கால தொழில்நுட்ப விசயங்களை கண்டிப்பாய் தெரிந்திருக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.எது தொழில் நுட்பத்தால் முடியும் எது முடியாது இதெல்லாம் சகலோர்க்கும் தெரிந்திருக்க வேண்டிய நிலை. ஒன்றும் தெரியாத அப்பாவியாய் இருந்தால் தெரிந்தவன் உங்களை கொள்ளை கொண்டு போய்விடுவான். சரி பரிமளாவின் கதையை நான் இப்போ எப்படி முடிக்கறது? ஒவ்வொரு மொழி பட இயக்குனர்களும் ஒவ்வொரு விதமாய் முடித்திருப்பார்கள். இல்லையா? மேலும் அறிய http://www.trackingkey.com டிஸ்கிளைமர்: எனது பதிவுகளில் வரும் பக்கத்து வீட்டு பரிமளா முதல் பொன்னம்மா பாட்டி வரை அத்தனைபேரும் கற்பனை கதாபாத்திரங்களே Just In Case :) thanks.pkp

23.4.08

இந்தியா .in




இங்கு நீங்கள் பார்க்கும் உலக வரைபடம் சற்று வித்தியாசமானது. அதை சொடுக்கி நீங்கள் பெரிது படுத்திப் பார்த்தால் உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் கொடுக்கப்பட்டுள்ள டொமைன் பெயரை அது காட்டும்.(இந்தியாவிற்கு .in போன்று)
சரி விஷயத்துக்கு வருவோம்.

நண்பர் Thameem கேட்டிருந்தார். How can i get .com or .in website. Can you post me the details (including the expences).
நண்பர் Shiva கேட்டிருந்தார். புதிதாக இனையதளம் ஆரம்பிக்க யாரிடம் பதிவு செய்வது நல்லது.ஆண்டொன்றுக்கு (தோராயமாக) எவ்வளவு கட்டணம் இருக்கும்.
.com போன்ற சர்வதேச டொமைன் பெயர்களை பதிவுசெய்ய http://www.godaddy.com/ போன்ற பேர்போன இணையதளங்களை அணுகலாம். டாலரில் காசு செலுத்த வேண்டும். வருடத்திற்கு ஒரு .com பெயருக்கு 10 டாலர்கள் வரை செலவுஆகும்.
.com மட்டுமல்லாது இந்திய டொமைன்பெயர்களான .in மற்றும் .co.in போன்ற பெயர்களையும் பதிவுசெய்ய http://www.hostindia.net/ என்ற இணைய தளத்தை அணுகலாம். ஒரு .com பெயருக்கு வருடத்திற்கு ரூ 349 செலவாகும். ஒரு .in பெயருக்கு வருடத்திற்கு ரூ 699 செலவாகும்.
மொத்தமாய் பல டொமைன் பெயர்களை வாங்கினாலோ அல்லது பலவருடங்களுக்கு ஒரு பெயரை பதிவுசெய்தாலோ அல்லது பிற சேவைகளையும் சேர்த்துவாங்கினாலோ இந்த விலைகளில் தள்ளுபடிகள் கிடைக்கும்.
நண்பர் Shiva கேட்டிருந்தார். நமது தளத்துக்கு யாராவது வருகை புரிந்தால் அதில் நமக்கு லாபம் ஏதாவது வருமா?
சிவா, அது முழுக்க முழுக்க உங்கள் தளத்தின் பயன்பாட்டை பொறுத்தது. Sify Mall போன்ற நேரடியாக வர்த்தக நோக்கில் வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் எதாவது விற்றுக்கொண்டே இருக்க வேண்டும். காசு வரும். Tamil Matrimony போன்று மக்களுக்கு சேவைகள்/உதவிகள் செய்தும் காசுகள் சம்பாதிக்கலாம். இன்றைய அளவில் வெளிநாடுவாழ் இந்தியர்களையும், இந்திய பெருநகர மக்களையும் கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க புத்தம் புதிதாய் அவர்க்ளுக்கு எதாவது செய்தால் சூப்பர் ஹிட் ஆகலாம். உட்கார்ந்து யோசிக்கவேண்டும். அதை மென்பொருள் வடிவாக்க வேண்டும். நிறைய வேலை இருக்கிறது. காலப்போக்கில் பட்டி தொட்டிகள் வரைக்கும் இணைய இணைப்புகள் வரும் போது இதன் போக்கு இன்னும் வீரியமாகும்.
விளம்பரங்கள் வழியும் பணம் பண்ணலாம். அமித் அகர்வால் போல் முழுநேர வேலையாய் சீரியசாய் உட்கார்ந்து ஆங்கிலத்தில் பலருக்கும் பயனாகும் படி பிலாகினால் கூகிள் ஆட்சென்ஸ் உதவியால் ஹாண்டா சிஆர்வி வாங்கலாம்.
Html-கூட தெரிய வேண்டியதில்லை. அவ்வளவு எளிதாய் வலைபதிய மென்பொருள்கள் வந்துவிட்டன. பிரபலங்களெல்லாம் வலைப்பதிய வந்து விட்டார்கள். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர்தாப்பாச்சன் கூட வலைபதிக்கிறாராம். குமுதம் அரசு பாணியில் பைத்தியம் என்றுவிடாதீர்கள். ரசிகர்கள் குஷியில் நூற்றுகணக்கில் பின்னூட்டமிட்டு இருக்கின்றார்கள்.bigb.Bigadda.Com இல்லை xboard.us போன்ற மசாலா தளங்கள் நிறுவி அதில்வரும் விளம்பர வருவாய் மூலமும் லட்சங்கள் குவிக்கலாம்.
தமிழில் வலைப்பதிவி ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். நான் ஒரு மணிநேரத்தில் சம்பாதிப்பதை தர எனது வலைப்பதிவு விளம்பரங்கள் ஒரு மாதம் எடுக்கின்றன.
சமீபத்தில் இணையத்தில் படித்த வாசகம் ஒன்று என்னை சுள்ளென உருவக் குத்தியது போல் இருந்தது.
எதை வேண்டுமானாலும் செய். முயலு. முடி. ஆனால் உனக்கு சோறு போடும் உன் கல்வி மற்றும் வேலையை மட்டும் மறந்து விடாதே. அதில் முன்னேற ஏதாவது வாய்ப்புகள் உண்டோவென பார்த்துக்கொண்டே இரு. ஏனெனில் அதனால் தான் நீ இவ்வளவு தூரமும் வந்திருக்கின்றாய்.

எத்தனை அருமை வாசகம்.

22.4.08

அஜித் பேட்டி-விஜய் பேட்டி -ஒரு ஒப்பீடு



புது வருஷத்து ஸ்பெஷல் டிவி ப்ரோக்ரம்ஸ்'ல அஜித் பேட்டி தான் விஜய் மற்றும் சன் டிவியில் கலக்கோ கலக்குனு கலக்கிடுச்சு. இது வரை அஜீத் டிவி பக்கம் வராததால இளைய தளபதி தான் ஆட்சி பண்ணிக்கிட்டு இருந்தார் டிவியை இப்போ அஜித்தின் இந்த டிவி பிரவேசம் அவருக்கு பெரிய அதிர்ச்சி.
ஒரு சாதாரண நடிகன் பேட்டிக்கு அப்படி என்ன முக்கியத்துவம் ? இத தான் சன் டிவி ஆரம்பிச்ச காலத்துல இருந்து பாத்துகிட்டு இருக்கிறோமே? என்று நீங்க கேக்கலாம் ?
நானும் அஜித் ரசிகன் எல்லாம் கிடையாது , ஆனா இத்தன வருஷம் பேட்டி கொடுக்காம இருந்த ஒரு ஆள் பேட்டி கொடுக்குறார்யா!!!! என்ற எதிர்பார்பையும் தாண்டி அந்த பேட்டியை நம்மை சேனல் மாத்தாம பாக்க வைக்கிறது அஜித்தின் வித்யாசமான பேச்சு தோரணை , stylish உடைகள் மற்றும் கொஞ்சம் கூட அலட்டிகொள்ளாத தன்மை, நிதானமான பேச்சு இதெல்லாம் தான்,
இன்னொரு விஷயம் , அஜித் சில விசங்களை கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் உண்மை தான் சொல்லுவேன் என்று உறுதியாக இருந்ததால் அந்த பேட்டிகள் சுவாரசியம் மிக்கவையாக இருந்தன.
உதாரணத்திற்கு , விஜய் டிவியில் கோபிநாத் அஜித்திடம் "நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க ? " என்று கேட்டார்.
அதற்கு அஜித் உண்மையை மறைக்காமல் "நான் 10th std தான் படிச்சிருக்கேன் " என்றார்.
இதே இடத்தில் விஜய் இருந்திந்தால் "நான் லயோலா காலேஜுல vis com படிச்சேன்" என்று நாக்கு கூசாமல் பொய் சொல்லுவார்.
லயோலா viscom department இல் பேராசிரியர்கள் சிலர் இவர் இப்படி பேட்டி கொடுப்பதை பார்த்து அடிக்கடி வகுப்புகளில் ஏளனம் செய்வது உண்டாம்.
30 நாட்கள் கூட கல்லூரிக்கு வந்ததில்லையாம்.
கதை இப்படி இருக்க விஜய் நான் பிளஸ் டூ படித்திருக்கிறேன் என்று தானே சொல்ல வேண்டும்.
நான் ஒன்றும் விஜய் படம் புடிக்காது என்று சொல்பவன் இல்லை. நடனத்திலும் முகபாவனையிலும், கலகலப்பான நடிப்பிலும் பட்டையை கிளப்பும் விஜய் பேட்டிகளிலும் நடிக்கிறார் என்றே தோன்றுகிறது. விஜய் மட்டும் அல்ல 98 % நடிகர்கள் பேட்டியிலும் நடிக்கிறார்கள் ,
இதில் அஜீத் விதிவிலக்கு ஆனால் இதுவே அஜித்துக்கு ஆபத்திலும் முடியலாம்.
இவர் வாயிலிருந்து எதாவது ஏடாகூடமாக வார்த்தையை புடுங்கிவிட பேட்டி எடுப்பவர்கள் இனி முயற்சிக்க கூடும்.
அஜீத் பேட்டியில் ஒரு காமெடியான விஷயம், சன் டிவி யில் அஜித்தை பேட்டி எடுத்த விஜயசாரதி ஏதோ அம்மாவிடம் பேட்டி எடுக்கும் ரபி பெர்னாட் போல பம்மிக்கொண்டே பேசியது பார்ப்பதற்கு காமெடியாக இருந்தது.

ஆனா ஒன்னு , அஜித் இப்படி எப்போ பார்த்தாலும் சீரியஸாக உர் என்று மூஞ்சியை வைத்துக்கொண்டிருந்தால் பேட்டியை பார்க்கும் நமக்கு ஏதோ செய்தி சேனலில் வெளிநாட்டு அதிபர் பேட்டி பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.

பாக்தாத்தா-பெங்களூருவா? அய்யய்யோ!



கூகிள் யெர்த்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது

பாவப்பட்ட பாக்தாத் நகரின் அற்புதமான அமைப்பை பார்த்து அசந்து போனேன்,

ஒவ்வொரு தெருக்களும்,சாலைகளும் வளைவுகள் இல்லாமல், திருட்டுத்தனமான ஆக்கிரமிப்புகள் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் விசாலமாக அமைந்து உள்ளது
( அதான் அமெரிக்காகாரன் சுலபமா ஆட்டயப்போட்டாணுங்களோ)இப்படி திட்டமிட்டு உருவாக்கி இருக்கிறார்களே ,

ஒரு நல்ல அரசாங்கத்தை உருவாக்க தவறியதால் இன்று ICU வில் இருக்கும் நோயாளி போல இதன் கதை ஆகிவிட்டது.சரி நம்ம பெருமை மிகு பெங்களூரு எப்படி இருக்கு என்று பார்க்க போனால்.....அய்யோ இது என்ன கொடுமை? ........குறுகிய திட்டமிடப்படாத சாலைகள், நெருக்கடி மிகுந்த கட்டிட அமைப்பு....அப்பப்பா மூச்சு திணறி தான் போகும்.
உஷார் மக்களே .....அப்படி இருந்த அவர்களே இப்படி ஆகிட்டானுங்கோ.......இப்படி இருக்கிற நாம எப்படியும் மாறிவிட வாய்ப்பு உள்ளது.....
என்ன நான் சொல்றது?

20.4.08

எளிய அவுட்லுக் எக்ஸ்பிரஸ் backup மென்பொருள்


outlook Express மின்னஞ்சல் மென்பொருளை பயன்படுத்தும் நண்பர்கள் அநேகர்.என்னத்தான் உயர்நுட்ப மின்னஞ்சல்கள் like Outlook,Lotus Notes மென்பொருள்கள் இருந்தாலும் சிறு/குறுஅலுவலகம் மற்றும் வீடுகளில் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் ராஜாங்கம் தான்.
என்ன வேண்டுமோ அது மட்டும் கொண்டதோடு POP,IMAP,HTTP,News Group Reader இதெல்லாம் கொண்டு இது இருப்பதால் பெரும்பாலும் திருப்தி அளிக்கிறது.ஆனால் வந்திருக்கும் மெயில்களை பத்திரமாக் backup செய்ய,இருக்கும் விலைமதிப்பற்ற address book-ஐ பாதுகாப்பாய் வைத்திருக்க வழியுள்ளதா?.
இதோ ஒரு வழி..இலவச எளிய அவுட்லுக் எக்ஸ்பிரஸ் backup மென்பொருள்.இதை ஓட்டி உங்கள் மெயில்களை பத்திரமாய் இன்னொரு டிரைவிலோ அல்லது CD,DVD,USB டிரைவிலோ பேக் அப் எடுத்து வைத்திருங்கள்.எப்போது உதவும் அது என்று சொல்லமுடியாது.
Product Page
http://www.oehelp.com/OEBackup/Default.aspx
Direct download link
http://www.oehelp.com/OEBackup/oeqbfull.zip
Free Outlook Exprees Backup software

சென்னை வந்த டெல்


குர்கான்,மொகாலி,ஐதராபாத்,பெங்களூரில் வாடிக்கையாளார் சேவை மையங்களைக் (Customer Service Call Centers)கொண்ட அமெரிக்காவைச் (Round Rock, Texas) சேர்ந்த டெல்-Dell நிறுவனம் இந்தியாவில் அதுவும் சென்னையில் தனது கணிணி உற்பத்தி தொழிற்சாலையை (Manufacturing Unit) திறக்கின்றது இனிப்பான செய்தி.

ஏற்கனவே 8 உற்பத்தி தொழிற்சாலைகளை கொண்ட இந்நிறுவனத்திற்கு ஆசிய பசிபிக் பகுதியில் இது 3 ஆவது உற்பத்தி தொழிற்சாலை.50 ஏக்கரில் ஸ்ரீபெரும்புதூர் Hi-Tech Park-ல் 280 கோடி ரூபாய் செலவில் இது அமையவிருக்கின்றது.

அடுத்த ஆண்டு மத்தியில் "Made in India" என்ற பொறியோடு dell கணிணிகள் ஓகோவென வெளியாகும்.ஒரு ஆண்டுக்கு 400,000 கணிணிகள் உற்பத்திசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

20000 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.1984- ஆம் ஆண்டு Michael Dell (படம்) என்ற University of Texas ( Austin)மாணவரால் வெறும் 1000 டாலரில் துவக்கப்பட்ட இந்நிறுவனத்தின் இன்றைய வளர்ச்சி அபாரம்.இன்று 63,700 பேர் இந்நிறுவனத்தில் வேலை செய்கின்றார்கள்.


தற்போதைய President மற்றும் CEO Kevin Rollins.சுவையான தகவல் என்னவென்றால் இந்நிறுவன கணிணிகள் மற்றும் மடிக்கணிணிகள் கடைகளில், மால்களில் விலைக்கு கிடைப்பதில்லை.இணையம் மற்றும் தொலைபேசி வழியே தான் மொத்த வர்த்தகமும் நடக்கின்றது.

இவர்கள் கஸ்டமர் சர்வீஸ் ரொம்ப பிரபலம்.

Alienware எனப்படும் உச்ச வகை மடிக்கணிணிகளும் இப்போது இவர்களோடதே.

20 ஆண்டுகளுக்கு முன் இருந்த 1GB ஹார்டுடிஸ்க்



கடந்த இருபது ஆண்டுகளில் விஞ்ஞானம் கண்ட வளர்ச்சி எத்தனை பிரமாண்டம் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.


மேலே படத்தை பார்த்தாலே நன்கு புரியும். 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த 1GB ஹார்டுடிஸ்க்கை தூக்க குறைந்தது இருவர் வேண்டும். இன்றைய 1GB SD டிரைவ் விரல் நுனியில் நின்றுவிடுகின்றது.


இது இப்படியேப் போனால் பத்துவருடம் கழித்து விரல் நுனியில் என்ன இருக்கும் என யோசித்துகூட பார்க்க இயலவில்லை. எங்கு போகின்றோம்னும் தெரியலை. எனக்கு அவ்வப்போது மின்னஞ்சல் செய்யும் வலையுலக நண்பர் MSK இப்படியாக எழுதுகின்றார்.


"உங்களது வலைப்பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் வலையோடிகளில் நானும் ஒருவன்.சமீபகால உங்களது வலைப்பதிவுகளில் ஒரு எழுத்தாளரின் ஆழம்,வலையோடி வாசகர்களின் தேடல் என்ன,தேவை என்ன என்பதைத் தெளிவாக கண்ணூட்டம் காண்பவரின் கருத்தாழம் வெளிப்படுகிறது.வலைப்பின்னல் என்பதும்,வலைத்தேடல் என்பதும் பொழுதுபோக்கு என்ற நிலை மாறி,இப்பொழுது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. உணவு, காற்று, நீர்,ஒளி இவற்றுக்கு அடுத்தபடியாக இன்றைய மானுடப்பிறப்பின் ஒரு அங்கமாக மாறிப்போனது வலைப்பின்னல்.இன்றைய நாளிலிருந்து 20 அல்லது 25 வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது அன்றைய மனிதனின் (வலைப் பின்னலற்ற)வாழ்க்கையில் இந்த உலகையும்,உறவுகளையும் தன்னோடு சார்புபடுத்திக் கொள்ள சிறிதளவேணும் காலம் கிடைத்திருக்கும்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் இதுவும் இயந்திரமயமாகிப் போனது. மெக்ஸிகோவில் இல்லறம் கொண்ட மகனுடன் வலைப்பின்னலில் முகம் பார்த்துப் பேசி, மனதில் பேரன்பும்,விழிகளில் வெள்ளத்தையும் ஒடவிடும் மதுரைத் தாய்.மலைக்கும் மடுவுக்கும் தொடர்பு கொள்ள இங்கு முடியும் என்றாலும் வலையோடலில் அன்பும்,பாசமும் ஒடமுடிவதில்லை.எங்கு முடியும் இந்த வறட்சியான வளர்ச்சி? உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம்,தெரிந்திருந்தால் தெரிவியுங்கள் எனக்கு."


என்னத்தை சொல்ல நான். விஞ்ஞானம் வளர வளர ஆயிரம் நன்மைகளை நாம் கண்டாலும் அதற்கேற்றார் போல் நாம் இழக்கும் இழப்புகளும் சொல்லிமாளாதனவே.


அந்தகாலப் பெரியோர் சொன்ன வாக்கு் தான் நினைவுக்கு வருகின்றது.


வருந்தி அழைத்தாலும் வராதன வாரா.


பொருந்துவன போம் என்றால் போகா.

19.4.08

Phishing site செய்வது எப்படி? படங்களுடன் முழு விளக்கம்.










Phishing siteசெய்வது எப்படி?படங்களுடன்


முழு விளக்கம். என்று சொல்லிக்கொடுத்தால் என்ன என்ற நல்ல (?) எண்ணத்தோடு இந்த பதிவை எழுத ஆரம்பித்த பின்பு தான் கொஞ்சம் யோசித்தேன், நமக்கு தெரிந்தால் தானே சொல்லிகொடுக்க முடியும் என்று????????
சரி எழுத உக்காந்தாச்சு பிஷிங் சம்பந்தமா எதாவது போட்டுற வேண்டியதுதான்னு இத ஆரம்பிக்கிறேன்.
ரெண்டு வருஷத்துக்கு முன்பு என்னோட யாஹூ மெயில்க்கு ஒரு யாஹூ கிரீட்டிங் கார்டு வந்தது , சரி யாரோ ஒரு நல்லவரு அனுப்பி இருக்கார்ன்னு திறக்க முயற்சி பண்ணினேன் ,
அது என்னோட யாஹூ ஐ டி மற்றும் password கேட்டது நானும் சரி இது ஒரு திருட்டுப்பயலோட வேலை தான்னு கண்டுகொண்டேன்
நம்மகிட்ட முடியுமா ? சரி நம்ம திறமைய காட்டுவோம்னு அந்த சைட்டை கொஞ்சம் டிங்கரிங் எல்லாம் பண்ணி திறந்து அது யாஹூ ஐ டி மற்றும் பாஸ் வோர்ட்டை எங்கு கொண்டு போய் சேமிக்கிறது என்று கண்டுபிடித்து அதை திறந்து பார்த்தால் !!!!!!!!!!! ஐயோ அம்மா !!! அங்கே கிட்ட தட்ட 14 ஆயிரம் திருடப்பட்ட யாஹூ ஐ டி மற்றும் பாஸ் வோர்ட்கள் இருந்தன.
அவை பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களுடையது என்பது நன்றாக தெரிந்தது, முக்கியமாக மாணவர்கள் மற்றும் மாணவிகள் தான் அநியாயத்துக்கு தொலைதிருந்தனர். இந்திய நாட்டை சேந்தவர்கள் அதில் ஒரு ஐந்து சதவீதம் இருந்தார்கள்.
இரண்டு நாட்கள் மட்டுமே அந்த தளம் செயலில் இருந்தது.
நான் உங்களுக்கு இதன் மூலம் சொல்ல விரும்புவது என்னவென்றால் , நீங்கள் உங்களுக்கு வரும் கிரிடிங் கார்டுகளை கூட கவனமாக திறங்கள்.
உங்களுக்கு தெரியாமல் அடிக்கடி உங்கள் மெய்லை திருடர்கள் திறந்து பார்த்து கொண்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது அதனால் அடிக்கடி பாஸ் வோர்ட் மற்றும் பாஸ் வோர்ட் கேள்வியையும் மாற்றுங்கள்.




For example,




"http://www.yahoo.com:login&mode=secure" is a fake web site address.
Important: A legitimate Yahoo! sign-in page never starts with http://geocities.yahoo.com./




If you land on a GeoCities page with a Yahoo! sign-in box, report it as a phishing web site immediately.
Give a fake password
If you not sure if a site is authentic, don't use your real password to sign in. If you enter a fake password and appear to be signed in, you're likely on a phishing site. Do not enter any more information; close your browser. Keep in mind, though, that some phishing sites automatically display an error message regardless of the password you enter. So, just because your fake password is rejected, don't assume the site is legitimate

மருத்துவ மாணவர்களும்- -சமூக அவலங்களும்



5 1/2 வருசமா இருந்த டாக்டர் படிப்ப 6 1/2 வருசமா ஆக்கினதுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்குமுன்னு நினைக்கிறேன் ........நம்ம மாணவ கண்மணிகள் இந்த வீணாய் போன படிப்பை படித்து அவர்களும் வீணாய் போககூடாதுனுதான் நம்ம மந்திரிங்க இந்த முடிவை எடுத்திருக்காங்க
என்ன இப்படி சொல்லிட்டேன்னு நீங்க சொல்றது என் காதுல விழுது ...என் டாக்டர் நண்பன் ஒருவன் என்னிடம் கொட்டிய மனக்குமுறல் இதோ ............
"ஒருத்தன் MBBS முடிச்சு (5 1/2 வருடம் ) வெளிய வரும்போது அவனுக்கு 24 வயசு ஆயிடும் , இந்த வசுல இவன் கூட பள்ளிகூடத்துல படிச்சவனெல்லாம் இன்ஜினியரிங் முடிச்சு சாப்டுவேர்ல சுளையா இருபத்ஞ்சுக்கு மேல வாங்கிட்டு இருப்பான் , இப்போ இருக்குற நவீன உலகத்துல வெறும் mbbs மட்டும் வச்சுகிட்டு நாக்கு கூட வழிக்க முடியாது , மேல எதாவது ஒரு துறையில் மேற்படிப்பு கண்டிப்பா படிச்சாகனும் ....ஆனா பாருங்க இந்த மேற்படிப்பு எல்லாம் இப்போ ரொம்ப கஷ்டமுங்க .சீட்டும் ரொம்ப கம்மி , சீட் கிடைக்க ரெண்டு வருஷம் கூட காத்து கிடக்கனும்
சரி ஒரு வழியா அப்பாவோட அண்டர்வேர் முதகொண்டு அடமானம் வச்சு படிச்சு முடிச்சு வெளிய வந்தா வயசு 28....29 ... ஆயிடும் ......சரி கிளினிக் தொறக்கலாமுனு பாத்தா இப்ப எல்லாம் யாருங்க சின்ன சின்ன ஆஸ்பத்திரிக்கு வராங்க? ..மூணு நாலு மாடி கட்டி ......கிரனைட் பதிச்சு .......சின்ன சின்ன பொண்ணுங்கள ரிசப்சன்'ல வச்சு , (வியாதி) ரகத்துக்கு ஒன்னா பத்து டாக்டர்கள விசிடிங் டாக்டர்கள வச்சுகிட்டு பாலிகிளினிக் தொறந்தா தான் கல்லா கட்ட முடியும்கிற நெலம
சரி எதாவது பெரிய ஆஸ்பத்திரியில வேலைக்கு போய் காலத்த ஓட்டலாமுனு பாத்தா ......எட்டாயிரம் பத்தாயிரம் தான் சம்பளம்தரானுங்க .....ஒரு சில பேர் மட்டும் தான் நல்ல சம்பளத்துல வேலை பாக்குறாங்க ..திறமைக்கு எல்லாம் மரியாதையை கிடையாது இங்கே..........மனசாட்சி இருக்குற எந்த டாக்டரும் நல்ல சம்பளம் கொடுக்குற பெரிய ஆஸ்பத்திரியில வேல பாக்க மாட்டான் (ஒரு சில ஆஸ்பத்திரிகள் விதிவிலக்கு) ஏன்னா சுகப்பிரசவத்த சிசேரியன் ஆக்குரத பார்த்துகிட்டு சும்மா இருக்கணும்..........கதமுடிஞ்சுபோச்சுன்னு தெரிஞ்ச பிறகும் வெண்டிலேட்டர் வச்சு கூட அஞ்சு நாள் ICU ல வச்சு எக்ஸ்டிரா ஒரு லட்சம் வசூல் பண்ணுறத பாத்துகிட்டு வாய மூடிகிட்டு இருக்கணும். மொத்தத்தில் முதுகெலும்பில்லாமல் இருக்கணும்
சரி நல்ல சம்பாதிக்கிற பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி செட்டிலாயிடலாமுன்னு பார்த்தா சாப்டுவேர்ல இருக்குற பொண்ணுங்கஇப்போ எல்லாம் கம்மியா சம்பாதிக்கிற , முடி நரச்ச டாக்டர் மாப்பிள்ளையே வேணாமுன்னு தல தெறிக்க ஓடுறாங்க
படிப்புக்கு வாங்குன கடனே வட்டி குட்டி போட்டு தலைக்கு மேல் நிக்க வாழ்கையே வெறுத்து போய் விடும், பிளஸ் டூ படிச்ச காலத்துல கடைசி ரேங்க் வங்குனவன் எல்லாம் இப்போ இன்ஜினியரிங் படிச்சு சாப்டுவேர் இஞ்சினியர் ஆகிட்டான் ..அம்பதுஆயிரம் சம்பளம் .......முத ரேங்க் வாங்கி டாக்டருக்கு போனவங்க கதி இப்போ இப்படி ஆகி போச்சு . பேசாம நாமளும் சாப்டுவேர் இஞ்சினியர்ஆகி இருக்கலாமுன்னு தோனுது.

"பொண்ணு நிறமா இருக்குமா"



பொண்ணு நிறமா இருக்குமா - இந்த கேள்வியை இப்போது பல மாப்பிள்ளைகளின் பெற்றோர் அதிகமாக பயன்படுத்துவதை கேட்டு இருப்பீர்கள். பெண்களுக்கு எப்படி தங்கள் வருங்கால கணவர் மேல் எதிர்பார்ப்புகள்அதிகமாகிவிட்டதோ அதுபோல ஆண்களுக்கும் தனக்கு வரபோகும் மனைவியை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம்.
எதிர்பார்ப்புகள் இருக்கவேண்டியதுதான் தப்பில்லை ஆனால் அது நியாயமானதாக இருக்க வேண்டும் அல்லவா........
அப்படி என்னய்யா நாங்க கேட்டுடோம் ? வரபோற பொண்டாட்டி அழகா இருகனுன்ம்னு நினைக்கிறது ஒரு குத்தமா ? நீங்க கேக்குறது புரியுது ..........நான் இங்க சொல்லவந்தது அழகு பத்தின மேட்டர் இல்ல நிறம் பத்தின மேட்டர்
எலுமிச்சை நிறத்துல தான் பொண்ணு வேணும்னு இப்போ பல இளைஞர்கள் பெற்றோரிடம் கண்டிசன் போடுகின்றனர் ......தமிழ்நாட்டில் எத்தனை சதவிகிதம் பெண்கள் எலுமிச்சை நிறத்தில் இருக்கின்றனர்.?
தமிழ் பெண்களின் இயற்கையான நிறமே கருப்புக்கும் வெள்ளைக்கும் இடைப்பட்ட நிறம் தானே .........
எங்கிருந்து வந்தது இந்த நிறவெறி ......சிவந்த நிறமான பெண்களே அழகானவர்கள் என்ற எண்ணத்தை சினிமாக்கள் உங்கள் மனதில் விதைத்து விட்டதோ ?
மாநிறமான பெண்கள் என்னதான் அழகாயிருந்தாலும் அவர்களுக்கு வெள்ளை மேக்கப் ஒரு இன்ச் கணத்துக்கு ஏற்றி தானே நம் சினிமாக்காரர்கள் நமக்கு காட்டுகிறார்கள் ( சினேகா ஒரு உதாரணம்) கருப்பு கதாநாயகன் விசாலை ஹீரோவாக போட தெரிந்தவர்களுக்கு விஷால் நிறத்தில் உள்ள ஒரு பெண்ணை ஹீரோஇன்னாக போட தெரியவில்லையா இல்லை தைரியமில்லையா? .............அவர்களை விடுங்கள் அது வியாபாரம் -இது வாழ்க்கை அல்லவா .
இளைஞர்கள் கொஞ்சம் யோசித்து பாருங்கள் நீங்கள் படிக்கும் காலத்தில் உங்கள் கவனத்தை ஈர்த்த பெண்கள் எத்தனை பேர் எழுமிச்சை நிறத்தில் இருந்தனர் ? பத்து சதவிகிதம் கூட தேறாது ..............ஏன் என்றால் அவர்களிடம் உங்களுக்கு பிடித்தது அவர்களுடைய திறமையாகவோ , பழகும் விதமாகவோ , துணிச்சலாகவோ இருந்திருக்கும் .................இதை எல்லாம் மறந்து இப்போது நீங்கள் நிறத்தை மட்டும் ஏன் பார்க்கிறீர்கள் ?
உங்கள மாதிரி எல்லா தமிழ் பொண்ணுங்களும் அஜீத் போன்று சிவந்த நிறமுள்ள மாப்பிள்ளைதான் வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தால் இளைஞர்கள் கதி என்னவாகும்?
ஒரு காலத்துல அரவிந்த சாமி என்று ஒரு நடிகர் இருந்தாரே நியாபகம் இருகிறதா?
தளபதி , ரோஜா படங்களுக்கு அப்புறம் ஒரு பத்து வருசத்துக்கு தமிழ்நாட்டுல எல்லோரும் அழகான இளைஞன் என்றால் உதாரணத்துக்கு அரவிந்தசாமியை தான் குறிப்பிடுவார்கள் ...........மாப்பிளை பையன் கொஞ்சம் சிவந்த நிறமாக இருந்து விட்டால் போதும் பெண்வீட்டார் எங்க மாப்பிளை அரவிந்தசாமி மாதிரி இருப்பார் என்று பெருமை அடித்து கொள்வது உண்டு ...........அட நிற வெறியர்களே அந்த அரவிந்த சாமி இப்போது எப்படி இருக்கிறார் என்று தெரியுமா ? வழுக்கை விழுந்து , தொப்பையுடன் , பழைய கவர்ச்சி எல்லாம் காணமல் போய் பரிதாபமாக இருக்கிறார் .........டைவர்ஸ் ஆகி குழந்தைகளுக்காக கோர்ட் படியேறி சண்டை போட்டு நொந்து நூல் ஆகி இருக்கிறார் மனுஷன். அரவிந்த சாமியை குற்றம் சொல்லவில்லை நிற வெறியர்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் சொல்லவந்தேன்.
சிவந்த நிறத்தால் நாம் புதிதாக எதையும் பெற்றுவிட போவதில்லை .சென்னை , பெங்களூர் போன்ற பல மாநில மக்கள் வாழும் நகரங்களில் திராவிடர் அல்லாத பெண்கள் உங்களுக்கு கவர்ச்சியாகவும் வித்யாசமாகவும் கண்ணுக்கு தெரியத்தான் செய்வார்கள் .அந்த பாதிப்பில் நீங்கள் உங்கள் கனவுப்பெண்ணை அந்த நிறத்தில் கற்பனை செய்தால் பாதிக்கபடபோவது நீங்க தான் . ,
சிவந்த நிறத்தில் தான் பெண் வேண்டும் என்று கல்யாண வயதை கடந்து விடாதீர்கள் ..............முற்றிய கத்திரிக்காய் சந்தையில் விலை போகாது.


Voice on Wings said...
//கருப்பு கதாநாயகன் விசாலை ஹீரோவாக போட தெரிந்தவர்களுக்கு விஷால் நிறத்தில் உள்ள ஒரு பெண்ணை ஹீரோஇன்னாக போட தெரியவில்லையா இல்லை தைரியமில்லையா?//முக்கியமான கருத்தைத் தொட்டிருக்கிறீர்கள். அண்மைய காலங்களில் வடக்கத்திய பெண்களுக்கே பெரும்பாலும் கதாநாயகி வாய்ப்பு கிடைப்பது ஒரு வருந்தத்தக்க மாற்றம். 20-25 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் அர்ச்சனா, சரிதா, சரண்யா போன்ற கருமை நிற நடிகைகளுக்கும் சம வாய்ப்பிருந்தது. தங்கள் நடிப்பாற்றலால் சிறந்து விளங்கிய அவர்கள், அழகிலும் எவருக்கும் குறைந்தவர்களாக நினைக்கப்படவில்லை. அது போன்ற ஒரு காலம் மீண்டும் வர வேண்டும். 'சிகப்பழகு' போரடித்து விட்டது.

சீனு said...
அட போங்க. வெள்ளையா இருப்பது ஒரு வியாதி. குளிரும் தாங்காது, வெயிலும் ஆகாது.கருப்பு தோல் உள்ளவர்களுக்கு சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் உடம்புக்குள் ஊடுருவாது. இந்த கதிர் தான் பல சரும வியாதிகளுக்கு காரணம்.வெள்ளையர்கள் பெரும்பாலும் சூரிய குளியல் எடுப்பதற்கு இது தான் காரணம். இது தெரியாமல் நம்மாளுங்க சூரிய குளியல் எடுப்பாங்க பாருங்க, சிரிப்பு சிரிப்பா வரும்.


லக்ஷ்மி said...
நியாயமான ஆதங்கமே. இன்னமும் நிறைய பேருக்கு அழகாயிருப்பதற்கும் நிறமாயிருப்பதற்கும் வேறுபாடு தெரிவதில்லை. புத்திசாலித்தனத்திற்கும் நல்ல மொழியறிவோடிருப்பதற்கும்(ஆங்கிலம்/ஹிந்தி) வேறுபாடு தெரிவதில்லை. இரண்டும் ஒன்றாக இருக்கலாம் ஆனால் எப்போதும் அப்படித்தானிருக்க வேண்டும் கட்டாயமெதுவுமில்லை என்பது பலருக்குப் புரிவதில்லை. ஹ்ம்ம்.... என்ன செய்வது.. கேட்டால் பழமொழியெல்லாம் வரும் "சூடே ஒரு ருசி, சிவப்பே ஒரு அழகு" என்றெல்லாம்... திருந்த ரொம்ப நாளாகுங்க...


20-25 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் அர்ச்சனா, சரிதா, சரண்யா போன்ற கருமை நிற நடிகைகளுக்கும் சம வாய்ப்பிருந்தது. தங்கள் நடிப்பாற்றலால் சிறந்து விளங்கிய அவர்கள், அழகிலும் எவருக்கும் குறைந்தவர்களாக நினைக்கப்படவில்லை//


மங்களூர் சிவா said...
//கருப்பு கதாநாயகன் விசாலை ஹீரோவாக போட தெரிந்தவர்களுக்கு விஷால் நிறத்தில் உள்ள ஒரு பெண்ணை ஹீரோஇன்னாக போட தெரியவில்லையா இல்லை தைரியமில்லையா?//விஷால் ஒரு தெலுங்கு ப்ரொட்யூசரின் மகன் என்பதை பின்னூட்டியவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் விஷாலுக்கும் அதே கதிதான்


பாலராஜன்கீதா said...
என் தோழர் அனுப்பிய மடலை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். (பீட்டருக்கு மன்னிக்கவும்)= = = = = = = = = = = = = = = = = =

When i born, i black,

When i grow, i black,

When i sick, i black,

When i afraid, i black,

When i jealous, i black,

When i am in the sun, i black,

When i die, i black.

But u American,

When u born, u pink!

When u grow, u white!

When u sick, u blue!

When u afraid, u yellow!

When u jealous, u green!

When u r in the sun, u red!When u die, u grey!

A.R.RAHMAN பாடல்களை 5.1 இல் எப்படி கேட்பது? ஒரு விளக்கம்





A.R.RAHMAN பாடல்களை 5.1 channel sound system ல் கேட்டு இருக்கிறீர்களா. ஆஹா ஆஹா .........அதை சொல்ல வார்த்தைகளே இல்லை மக்கா.
எல்லா பாடல்களையும் பொதுவாக சொல்லவில்லை ..குறிப்பாக சில மெலடி பாடல்கள் ரொம்ப அருமையாக ஆறு சேனல்களில் வித்யாசமா பதிவு பண்ணிஇருப்பார் . வேறு எந்த இசை அமைபாளர்களும் இந்த 5.1 channel உத்தியை இவ்வளவு அருமையாக பயன்படுத்தியதாக தெரியவில்லை.
உதாரணத்துக்கு .......சில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் நியூயார்க் நகரம் பாடல் மற்றும் "அன்பே வா என் அன்பே வா " பாடல்களை சொல்லலாம்.
உங்கள் கணினியில் 5.1 சேனல் அவுட் புட் இருந்தால் இதை முயற்சித்து பாருங்கள்
இல்லாவிட்டாலும் உங்கள் கணினியில் 5.1 channel sound card ஒன்று வாங்கி பொருத்தி இதை முயற்சியுங்கள்
Boys படத்திலிருந்து இன்று வரை உள்ள சிறந்த தமிழ் பாடல்கள் 5.1 ல் வெளிவந்துள்ளன
net' ல் கூட கிடைக்கின்றன ........இமேஜ் பைலாக இது சில டாரண்ட் சைட்டுகளில் கிடைக்கும் இதை பதிவிறக்கம் செய்து ஒரு dvd இல் எழுதிக்கொள்ளுங்கள். ஒரு படத்தின் பாடல்கள் சுமாராக 370 mb வரும்.
உங்கள் கணினியில் 5.1 sound speaker system வாங்கி connect செய்து கொள்ளுங்கள்.
உங்கள் கணினியில் klite codec pack install செய்துகொண்டு (download link http://www.free-codecs.com/download/K_Lite_Codec_Pack.htm ) 5.1 சேனல் dvd யை ஓட விடுங்கள் . media player இல் ட்ரை பண்ணுங்க அதுவே சிறந்தது.


click Tools-options-DVD-Advanced இப்போது உங்களுக்கு ac97 mixer தெரியும் இதன் மூலம் நீங்க ஆறு சேனல் களாக வரும் இசையை ரசிக்கலாம் .........center speaker இல் பாடுபவரின் voice track மட்டும் வரும் .அதை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைத்து சேனல் களையும் சுத்தமாக குறைத்து விட்டால் எந்த இசையும் இல்லாமல் ஏதோ அந்த பாடகர் உங்களுக்காக மட்டும் உங்கள் அறையில் வந்து பாடுவது போல இருக்கும்.
அன்பே வா அன்பே வா பாடலை போட்டு விட்டு ac 97 mixer மூலம் front speakers volume ஐ சுத்தமாக குறைத்து rear speakers மற்றும் center speaker இல் அமைதியான சூழலில் கண்ணை மூடி வித்யாசமான அந்த பாடலின் புதிய பரிமாணத்தை அனுபவியுங்கள். நியூயார்க் நகரம் பாடலையும் இதே போல் கேட்கலாம் மிகவும் இனிமையாகவும் வித்யாசமாகவும் இருக்கும்.(கொசுறு)
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ
பேச்செல்லாம் தாலாட்டுப் போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காஃபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமை நிமிஷங்கள் வருஷமானதேனோ?
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ?
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க
பெயரும் ஆனதென்ன தேனா?
ஜில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம் கோடையானதேனோ?
வா அன்பே! நீயும் வந்தால்
செந்தணல் கூடப் பனிக்கட்டிப் போல மாறுமே!
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

சாப்டுவேர் இன்ஜிநியர்களால் சிதையும் கல்யாண கனவுகள்



சாப்டுவேர் மாப்பிள்ளைகள் மீது தற்கால பெண்களுக்கு அதிகரித்து வரும் மோகம் மிகவும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. இப்படி ஒரு குறிப்பிட்ட துறையில் இருக்கும் மாப்பிள்ளைகள் தான் வேண்டும் என்று பெண்கள் பிடிவாதமாக இருப்பதனால் வரும் சமூக சீரழிவு குறித்து எழுத விரும்புகிறேன் ...........
இரண்டு வருடங்களுக்கு முன்பு என் உறவினர் ஒருவர் தன்னுடைய சாப்டுவேர் எஞ்சினியர் மகளுக்கு மாப்பிளை பார்த்து வருவதாகவும் நல்ல வரன் வந்தால் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். நானும் ஒரு மேட்ரிமோனி சைட் ஒன்றில் பதிவுசெய்து மாதம் மூன்று மாப்பிள்ளைகளின் profile களை அனுப்பி வந்தேன்.
வருடம் இரண்டை தாண்டி விட்டது இன்னும் பார்த்து கொண்டே தான் இருக்கிறார் மனுஷன். எத்தனை மாப்பிள்ளைகள் பார்த்திருப்பார் என்று நீங்களே கணக்கு போட்டு பார்த்து கொள்ளுங்கள்...........
மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் சில டெஸ்ட் கள் வைக்கபடுகின்றன அதில் முதலாவது ..ஜாதகம் ..................
ஜாதகம் பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை .மேலோட்டமாக எத்தனை பொருத்தம் உள்ளது என்று மட்டும் பார்த்தால் போதுமே .........இப்படி பார்க்கும் போதே ரச்சு பொருத்தம் என்ற தாலி பாக்கியம் ........யோனி பொருத்தம் என்ற செக்ஸ் லைப் என்று எல்லா கழுதைகளும் வந்து விடுகின்றன.........இதையும் தாண்டி ஜாதக கட்டத்திற்குள் குதித்து நீச்சல் அடிக்க வேண்டாமே. ........
ஆனால் பெரும்பாலான பெற்றோர் என்ன செய்கின்றனர் ? முதலில் எவனாவது ஒரு உப்புமா ஜோசியனாக பார்த்து பெண்ணின் ஜாதகத்தை கொடுத்து அதுக்கு பொருத்தமான நட்சத்திரங்கள் என்று ஒரு லிஸ்ட் வாங்கி கொள்கின்றனர் .100 க்கு 25 பேர் தான் இந்த நட்சத்திரங்களில் வருவர். பொருத்தமான நட்சத்திரம் கொண்டவர் கொழுத்த சம்பளம் வாங்கும் சாப்டுவேர் எஞ்சினியராக இருந்தால், அவனுக்கு வழுக்கையோ, தொப்பையோ, நரைத்த முடியோ, கருப்பு தோலோ இல்லாமல் இருந்தால் .அவனுடைய ஜாதகம் அந்த உப்புமா ஜோசியனிடம் கொண்டுசெல்லப்படும். பத்தாம் கிளாஸ் கூட படிக்காத அந்த ஜோசியன் ஜாதகத்துல ராகு கேது பொசிசன் சரியில்லை ...இந்த ஜாதகத்தை முடிச்சா புத்திர பாக்கியம் இருக்காதுன்னு ஒரு பிட்ட போடுவான் .(ஒரே தடவையில் ஓகே செய்தால் அவன் பிழைப்பு என்னாவது ) இப்படி ஒரு 5 ஜாதகத்தை கொண்டு போனா அவன் அதுல 2 ஜாதகத்தை ஓகே பண்ணுவான்.இந்த டெஸ்ட் பாஸ் ஆனா போதுமா ? அடுத்த டெஸ்ட் இருக்கு .
தற்போது பெண்வீட்டார் பலர் அவர்களுக்கு வரும் வரன்களில் முதலில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் சாப்டுவேர் மாப்பிள்ளைகளுக்கு தான் முதல் வாய்ப்பு தருகின்றனர்.......இரண்டாவது வாய்ப்பு பெங்களூர் சென்னையில் பிரபலமான சாப்டுவேர் கம்பனிகளில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைகளுக்கு (குறிப்பு: அவர்கள் மாதம் 40,000 சம்பளம் வீட்டிற்க்கு எடுத்து வருபவர்களாக இருத்தல் வேண்டும் )
சின்ன கம்பெனி மற்றும் நாற்பதுக்கு குறைவான வருமானம் உள்ள மாப்பிள்ளைகள் மூன்றாம் நிலை தான்....... டாக்டர் மாப்பிள்ளை, சாப்டுவேர் அல்லாத எஞ்சினியர் மாப்பிள்ளை, MBA மாப்பிளை,சொந்த தொழில் மாப்பிள்ளை எல்லாம் நான்காம் நிலை தான்.
அடுத்த டெஸ்ட் ......family ......மாப்பிள்ளைக்கு கல்யாணமாகாத தங்கச்சிகள் இல்லாதிருத்தல் நலம் , அம்மா இல்லாமல் இருந்தால் இன்னும் நலம் , அப்பா .................போனா போகுது இருந்துட்டு போகட்டும் ஆனா அவர் லம்ப்பா பென்சன் வாங்குபவரா .............சொந்த வீடு ..சொத்து உள்ளவரா இருக்க வேண்டும் .........
கடைசி டெஸ்ட் ..பழக்கவழக்கங்கள் ............மாப்பிள்ளையை பற்றி சுற்றுவட்டாரத்தில் விசாரிக்கும் போது " அந்த அயோக்ய பயலுக்கா பொண்ணு கொடுக்க போறீங்க?" என்று யாரும் கேட்காமல் இருந்தாலே போதும்.
இந்த டெஸ்ட் இல் எடுக்கும் மார்க் முக்கியமில்லை .....கட் ஆப் மார்க் போட இதை சேர்க்க மாட்டார்கள்.
இதெல்லாம் காமெடிக்காக சொல்லல .அத்தனையும் நிஜம்.........எவளவோ கஷ்டப்பட்டு படிச்சு வேலை தேடி ஏதோ ஒரு கம்பெனி யில் செட்டில் ஆகி..........சினிமாவிலும் சுற்று வட்டாரத்திலும் பாத்து ரசிச்ச காதல் காட்சிகள் மனசுல ஓட ............பைக்குல ஒட்டி உக்காந்துகிட்டு ....கோவில்ல ஒட்டி உரசிக்கிட்டு போற புதுமண தம்பதிகள் மனசுல கல்யாண ஆசைய தூண்ட ..........சரி நாமளும் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று நம்ம இளைஞர்கள் ஒரு பொண்ண வச்சு காப்பாத்துற தகுதிய வளர்த்துக்கொண்டு வந்தால்.........அந்த பொண்ணுங்க எதிர்பாக்குற தகுதி சாப்டுவேர் எஞ்சினியர்
இதுக்கெல்லாம் காரணம் சாதாரண நிலையில் இருந்த பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கடந்த 7 ஆண்டுகளுக்குள் திடீர் என்று சொந்த வீடு, கார், நவீன வசதிகள் என்று பணக்காரர்களாக மாறியதுதான்..............இதல்லாம் சாத்தியமானது அவர்கள் பிள்ளைகள் சாப்டுவேர் இஞ்சினியர்களாக இருந்ததால்தான் .............தமிழகத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன ஊர்களிலும் இந்த திடீர் பணக்காரர்கள் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டனர் .........சாப்டுவேர் மாப்பிளைகளால் மட்டுமே இந்த உலகத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் அனுபவிக்க முடியும அவர்கள் தான் நம்மை சொகுசாக வைத்து கொள்வர் என்ற எண்ணம் பெண்கள் மனதில் பதிய துவங்கிவிட்டது
சாப்டுவேர் மாப்பிள்ளை யை மணமுடித்த பெண்கள் தங்கள் தோழிகளிடம் அள்ளிவிடும் பந்தா தாங்க முடியாது ............US ல எல்லாம் நாங்க எப்பவும் புல் AC தான் இருப்போம் .அதான் இந்தியா வந்தா ரொம்ப கஷ்டமா இருக்கு என்று ஓவராக சீன் போடுவர். ..பெண்களின் மன மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம்.............இப்போதெல்லாம் டீ கடைகளிலும் திண்ணை கச்சேரி களிலும் கூட TCS, INFOSYSஎன்ற பெயர்களை கேட்க முடிகிறது.
எல்லா பொண்ணுங்களும் கட்டுனா சாப்டுவேர் எஞ்சிநியர தான் கட்டுவேன்னு அடம் புடிச்சா தமிழ் நாட்டில் முதிர் கன்னிகளும் முதிர் கண்ணன்களும் தான் அதிகமாகிக்கொண்டு போகபோகின்றனர்



பிளேடு said...
பெண்களின் பேராசை.200 சவரன் 250 சவரன் கூட போட தயார்னு சொல்லி மாப்பிள்ளை தேடும் பெண்ணின் பெற்றோர்.பணம் படைத்த மாப்பிள்ளையாக தேடி மணந்து விட்டு வரதட்சணை கொடுமை என்று குற்றம் சொல்லும் இவர்களை என்ன செய்வது.மனம்தான் முக்கியம் என்று முடிவெடுத்து நல்லவனைத் தேடித் திருமணம் செய்ய பெண்கள் முன்வரவேண்டும்.ஆணும் தன்னுடைய பணத்தை பார்க்காமல் மனதைப் பார்க்கும் பெண்ணை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்.ஆமா. எங்க சுத்துனாலும் திரும்ப திரும்ப சாப்ட்டு வேரு ஆளுங்களையே குறி வைக்கறீங்களே ஏன்.யாராயிருந்தாலும் "உண்பது நாழி. உடுப்பவை இரண்டே."பணம் வாழ்க்கைக்கு தேவையான ஒன்று. ஆனால் அது மட்டுமே வாழ்க்கையாகி விடாது.
Wednesday, November 28, 2007 11:16:00 PM PST
Divya said...
\\சாப்டுவேர் மாப்பிள்ளை யை மணமுடித்த பெண்கள் தங்கள் தோழிகளிடம் அள்ளிவிடும் பந்தா தாங்க முடியாது ............US ல எல்லாம் நாங்கஎப்பவும் புல் AC தான் இருப்போம் .அதான் இந்தியா வந்தா ரொம்ப கஷ்டமா இருக்கு என்று ஓவராக சீன் போடுவர். ..பெண்களின் மன மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம்.\\பெண்களின் எதிர்பார்ப்பிற்கு, ஏனைய பெண்கள் விடும் பந்தாக்கள் காரணமா? இல்லை பெற்றோர்களே தங்கள் பெண்ணிற்கு 'வெளிநாட்டில் ' வாழும் sw engineers தான் வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்களா?இரண்டுமே தான் காரணம் , ஒத்துக்கொள்கிறேன்.ஜாதகம் பார்ப்பதையும் சாடியிருக்கிறீர்கள், பெண்களின் வெளிநாட்டு மோகத்தையும் சாடுகிறீர்கள், இதில் எதற்கு சாப்டுவேர் இஞ்ஜினியர்களை குற்றம் சொல்றீங்க?பெண்களும், அவங்களை பெற்றவங்களும் சாப்டுவேர் இஞ்ஜினியர்கள் மீது மோகம் கொள்வதிற்கு, சாப்டுவெர் இஞ்ஜினியர்ஸ் பொறுப்பல்ல!
Wednesday, November 28, 2007 11:46:00 PM PST
said...
//பெண்களும், அவங்களை பெற்றவங்களும் சாப்டுவேர் இஞ்ஜினியர்கள் மீது மோகம் கொள்வதிற்கு, சாப்டுவெர் இஞ்ஜினியர்ஸ் பொறுப்பல்ல!//இதுக்கு ஒருவகையில் காரணம் மற்றவர்கள் கண்ணை உறுத்தும் படியாக சாப்டுவேர் இஞ்சினியர்கள் செய்யும் ஆடம்பர செலவுகளும் , ஆடம்பர வாழ்க்கையும் தானே திவ்யா
Thursday, November 29, 2007 1:48:00 AM PST
வசந்தம் ரவி said...
arai blade said //மனம்தான் முக்கியம் என்று முடிவெடுத்து நல்லவனைத் தேடித் திருமணம் செய்ய பெண்கள் முன்வரவேண்டும்.//அரைபிளேடு ....நீங்க காமெடி கீமெடி எதுவும் பண்ணலையே? .............பெண்கள் மீது மட்டும் குற்றம் சொல்ல முடியாது ..........சாப்டுவேர் மாப்பிள்ளைகள் மீதும் குற்ற பத்திரிக்கை ரெடி பண்ணிட்டு வரேன்.
Thursday, November 29, 2007 1:53:00 AM PST
said...
//ஆமா. எங்க சுத்துனாலும் திரும்ப திரும்ப சாப்ட்டு வேரு ஆளுங்களையே குறி வைக்கறீங்களே ஏன்.//என்னை ஏதோ சாப்ட்வேர் இன்ஜிநியர்களின் எதிரியாக நினைக்க வேண்டாம் அரை பிளேடு ................எது தப்புன்னு மனசுக்கு பட்டத சொன்னேன் அவ்வளவுதான்
Thursday, November 29, 2007 1:56:00 AM PST
புதுகைத் தென்றல் said...
தங்கள் கூற்று முற்றிலும் உண்மை.
Thursday, November 29, 2007 2:24:00 AM PST
சீனு said...
பேராசை பெருநட்டம்...//ஆமா. எங்க சுத்துனாலும் திரும்ப திரும்ப சாப்ட்டு வேரு ஆளுங்களையே குறி வைக்கறீங்களே ஏன்.//பரவாயில்லைங்க. தப்பா இருந்தா திருத்திகிறது தான் நல்ல வழி.
Thursday, November 29, 2007 2:34:00 AM PST
Manikandan said...
ஏழை பணக்காரன் வித்யாசம் போல இந்த சாபிடுவேர் -சாப்டுவேர் அல்லாதோர் வித்யாசம் சமுதாயத்த கெடுத்து குட்டிசுவரா ஆக்கதான் போகுது
Thursday, November 29, 2007 3:41:00 AM PST
மங்களூர் சிவா said...
the mistake is girls parents not the SWE.good post!
Thursday, November 29, 2007 5:13:00 AM PST
RAJI said...
GOOD POST
Thursday, November 29, 2007 6:32:00 AM PST
Anonymous said...
இவ்வளவு பொச்செரிச்சல் தேவையில்லை. ஆனா நீங்க சொல்றது வாஸ்த்தவமான பேச்சு.
Thursday, November 29, 2007 7:04:00 AM PST
Anonymous said...
If that is the case, none of the s/w engineers shouldn't have any problem in finding suitors. Bcoz the parents of all brides prefer only IT people.Why then there are hundreds of IT guys post in matrimonial websites and wait for years to find a suitable bride?Either despite the preference, there are less girls available compared to the total of all eligible bachelors from IT community or even s/w engineers suffer from same issues as others face.The point is: s/w engineers are no different from any other eligible Tamil male in finding a suitable girl for marriage.I regretfully have to conclude that you just seem to be on a mission to tarnish the image of s/w engineers for anything and everything that is happenning in this country.
Thursday, November 29, 2007 7:05:00 AM PST
Rajkumar said...
100% true .....i agree with u
Thursday, November 29, 2007 7:59:00 AM PST
முரளி கண்ணன் said...
nice
Thursday, November 29, 2007 8:28:00 AM PST

வருகைக்கு நன்றி முரளி..........எல்லாம் நீங்க தொடங்கி வச்சது தான்
Thursday, November 29, 2007 8:55:00 AM PST
Nakkiran said...
எங்க உறவினப் பெண் ஒருவரும் கட்டுனா சாப்ட்வேர் மாப்பிள்ளை தான் கட்டுவேன் 2 வருஷமா ஒத்தக் கால்ல நிற்கிறார்... கடவுள் தான் காப்பாத்தனு,ம்


Vanitha said...
இந்த கருத்தை நான் கண்டிக்கிறேன். அமெரிக்காவில் வாழும் software எஞ்சினியர்களின் மனைவிகள் எந்த அளவு தனிமையின் கொடுமையை அனுபவிக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும். ஏதோ இந்தியா வரும்போதாவது இப்படி பெருமைபேசி தங்கள் மனதை சமாதானப்படுதிக்கொள்கின்றனர்
Thursday, November 29, 2007 8:30:00 PM PST
Anonymous said...
I can't accept that Software Engineers are the root for all the problems in this country. Previously in Tamil Nadu, parents were looking for Govt Employees for their girl. And at that time, people working in private companies were rejected out right. At that time, no one complained against Govt employees (non availability of blogs a reason?)After this Tamil MA movie, many people started criticizing Software Engineers for no reason. There may be some faults with s/w engineers but not that much to attract this level criticism. Everyone earn based on a combination of their effort and luck. Luck is not under our control but effort is. If everyone is paid equally, then there won't be any improvement to our way of life. Simple because, people will start thinking that irrespective of how much effort they put, they are going to earn the same and so they stop from working. This won't do good for the human kind and would drive us t o the pre historic ages.Another thing is the spending power of the s/w engineers. Remember there are only few lakhs of them and they alone can't increase the price of everything. Also, only if people spend the country would grow. If people start saving everything they earn, then economy would go down. Even the income tax policies are set such that people save a little and spend


ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை....இப்பொழுது சாப்ட்வேர் மாப்பிள்ளைகளுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வர(ன்)வேற்பு.....வாழ்த்துக்கள் சாப்ட்வேர் மாப்பிள்ளைகளா""....ஆனால் உங்க வேலையை பத்திரமா தக்க வச்சிக்கங்க""இல்லைனா(ஆப்புதான்)...நான் சாப்ட்வேர் துறையை குறை கூறவில்லை.... நான் கூறுவது மக்களின் மன சிந்தனைகளை பற்றி''மாப்பிள்ளை எந்தத் துறை எண்பது முக்கியமா?... இல்லை.... மணக்கும் பெண்ணிற்கு வாழ்நாள் முழுதும் ,உண்மையான உறவாக,நம்பிக்கையாக,மன நிறைவான வாழ்க்கையை தருபவனாக இருத்தல் முக்கியம்....இதெல்லாம் மனதளவில் உள்ளது.....அன்புடன்..கணேஷ்..

பேராசை பிடித்த அமெரிக்க மருமகள்கள்



பணம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் இன்றைய தலைமுறையினருக்கும் பணம் சார்ந்த பிரச்சனைகள் இருக்க தான் செய்கின்றன. அமெரிக்காவில் பொட்டி தட்டும் மாப்பிள்ளைக்கு வாக்கப்பட்டு போகும் நம்ம ஊரு பொண்ணுதாயிகள் பண்ணும் அட்டூழியம் கொஞ்சமா நஞ்சமா,!!!
இப்போது பெரும்பாலான என் ஆர் ஐ சாப்டுவேர் இஞ்சினியர்கள் சந்தித்து வரும் பிரச்சனை ஒன்று உள்ளது, என்ன தெரியுமா? தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய பெற்றோருக்கு, யாராவது கை தூக்கி விட்டால் முன்னேறி விடலாம்' என்ற நிலையில் இருக்கும் அண்ணன் அல்லது தம்பிகளுக்கும் உதவி செய்வது தான் இப்போ பிரச்சனையே.
இதுல என்ன பிரச்சனை? உங்க கிட்ட பணம் இருந்த, உதுவுற மனசும் இருந்தா, உதவி செய்ய வேண்டியது தானே' என்று விஷயம் தெரியாதவர்கள் கேட்கக்கூடும். ஆனா இதுல ஒரு பிரச்சனை இருக்கு, கட்டுன பொண்டாட்டிக்கு தெரியாம எதுவும் செய்ய கூடாது என்று நம் அப்பாவி கணவன்மார்கள் நினைப்பதால், பெரும்பாலான வீடுகளில் மனைவிகளே நிதிமந்திரிகளாக உள்ளனர்.
என்ன தான் அமெரிக்காவில் வசதியாக வாழ்ந்தாலும் சொந்த ஊரில் நம் வீட்டை புதிதாக கட்ட வேண்டும், எல்லா வசதிகளும் செய்து அம்மா அப்பாவை சுகமாக வைத்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் பல பேருக்கும் இருக்கிறது. ஆனால் இவர்களின் மனைவிகள் இதற்க்கு துளியும் ஒத்துபோவது இல்லை.
"நம்மளே இப்போ தான் கொஞ்சம் பணம் சேர்த்து கிட்டு வறோம், இதுல நீங்க இப்படி இளிச்சவாயன இருந்தா உங்க அம்மா அப்பா எல்லா செலவையும் உங்க தலையிலேயே கட்டிடுவாங்க, இன்னும் உங்க தங்கச்சி கல்யாணம் வேற இருக்கு , அதுக்கும் நீங்க தான் செலவு பண்ணனும், என்ன நினைச்சு கிட்டு இருக்கீங்க?
உங்க பிரண்ட பாருங்க , யு எஸ் வந்து நாலு வருஷம் ஆகுது , சொந்த வீடு வாங்கிட்டார். நாம எப்போ வாங்க போறோம் ?" என்று கேள்விகளால் துளைத்து எடுப்பார்கள்.
"என்னமா இப்படி பேசுற, நாம அம்பது லட்ச்சதுக்கு வீடு வாங்குறதுக்கும், ஊர்ல உள்ள வீட்டை அஞ்சு லட்ச்சத்துல புதுப்பிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்? இதுனால என்ன நமக்கு குறைந்து விட போகுது? என்று எதிர்கேள்வி கேட்டால் அவ்வளவுதான், மூஞ்சை தூக்கி வைத்து கொண்டு இரண்டு நாள் பேசாமல் இருந்து கொல்லுவார்கள்.
இதற்க்கு பயந்தே பலரும் வாயை திறப்பதில்லை. ஆனால் "அண்ணே, கொஞ்சம் பணம் உதவி நீ பண்ணினா நான் ஒரு தொழில் பண்ணி முன்னேறி விடுவேன், கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்" என்று வாய் திறந்து உதவி கேட்கும் தம்பிக்கு கூட "எனக்கு இப்போ கொஞ்சம் டைட், ஒரு ஆறு மாசம் கழிச்சு பாக்கலாம்" என்று பொய் சொல்ல சொல்லும் மனைவிமார்களை என்ன செய்வது??????
"அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா" என்ற பாடலில் வருவது போன்ற பெண்களாக தான் இன்றைய பெண்களும் உள்ளனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட வருமானம் பத்து மடங்கு எகிறி விட்டது. பட்ஜெட் போட்டு சம்பளத்தை செலவழிக்கும் பழக்கம் எல்லாம் மலையேறி கொண்டு வருகிறது.
ஆனால் 'கணவன் அவன் வீட்டாருக்கு எந்த வகையிலும் உதவி செய்யக்கூடாது என்ற பெண்களின் எண்ணம் மட்டும் அப்படியே உள்ளது. அமெரிக்காவில் உள்ள சாப்டுவேர் இன்ஜிநியர்களின் மனைவிமார்கள் எந்த ஒரு விழாவில் சந்தித்து கொண்டாலும் , கூடி பேசும் போது " அவர் நான் சொல்றத கேக்கவே மாட்டிகிறார், எப்போ பார்தாலும் அவங்க அம்மா போன் பண்ணி 'இந்த செலவு அந்த செலவுன்னு சொல்லி நச்சரிகிறார்" என்று தங்கள் எரிச்சலை பகிர்ந்து கொள்வர். ஆனால் இவர்கள் பண்ணும் செலவுகளை எல்லாம் நாம் கணக்கு பார்க்க கூடாது என்று எதிர்பார்ப்பார்கள்.
இந்த பெண்களுக்கு அவர்கள் மாசமாக இருக்கும் போதும், குழந்தைகளை வளர்க்கவும் மட்டும் ஆயா வேலை பார்க்க பெற்றோர் தேவை படுகின்றனர், அதற்கு அங்கே ஆள் கிடைப்பதில்லை என்பது தான் காரணம்.
எத்தனையோ பேர் தங்கள் பெற்றோர்களை அமெரிக்காவுக்கு வரவழைத்து ஆறு மாதம் வரை தங்க வைத்து கொள்கின்றனர், ஆறு மாதத்தில் அவர்கள், ஐயோ அம்மா, விட்டால் போதும்டா சாமி என்று இந்தியா திரும்புவதை பார்த்திருப்பீர்கள்.
ஆனால் இதை வெளியே காட்டிக்கொள்ளாமல் "US TRIP எல்லாம் ரொம்ப பிரமாதமாக இருந்தது" என்று சமாளிப்பார்கள். இந்தியாவில் , பக்கத்து வீடு எதுத்த வீடு , கோவில் குளம் , சொந்தகாரர்களுடன் அரட்டை, விசேசங்களுக்கு செல்லுதல் என்று பிசி யாக இருக்கும் பெரியவர்களை ஒரு மாதம் வரை தான் அமெரிக்காவில் தங்க வைக்கலாம், அதற்கு மேல் தங்கவைத்தால் அது கூண்டுக்குள் அடைத்த மாதிரி தான் இருக்கும்.
கடவுள் அருளால் நல்ல வசதியான வாழ்க்கை நமக்கு கிடைத்திருக்கிறது, நம்மை பெற்றவர்களும், நம்மோடு பிறந்தவர்களும் இதே போல வளமாக வாழ நாம் உதவி செய்வது நம் கடமை என்று ஒரு ஆண் மகன் நினைப்பதில் என்ன தவறு?
பேராசை பிடித்த பெண்கள் கொஞ்சம் மனசாட்சியோடு நினைத்து பார்கட்டும்.
இந்த பெண்கள் தங்கள் சுயநலத்துக்காக பெரியவர்களை வாட்டி வதைப்பதும் இல்லாமல் , அந்த பெரியவர்களுக்கு டிக்கெட்டுக்கு செலவு செய்ததை கூட சொல்லி காட்டுவது கொடுமை. உண்மையில் பெரியவர்களால் இவர்களுக்கு நல்ல லாபமே ஒழிய செலவு இல்லை.




மிக மிக அருமையான பதிவு.//அமெரிக்காவில் உள்ள சாப்டுவேர் இன்ஜிநியர்களின் மனைவிமார்கள் எந்த ஒரு விழாவில் சந்தித்து கொண்டாலும் , கூடி பேசும் போது " அவர் நான் சொல்றத கேக்கவே மாட்டிகிறார், எப்போ பார்தாலும் அவங்க அம்மா போன் பண்ணி 'இந்த செலவு அந்த செலவுன்னு சொல்லி நச்சரிகிறார்" என்று தங்கள் எரிச்சலை பகிர்ந்து கொள்வர்.//ஆனால், அவர்கள் செய்யும் கொடுமையை வெளியில் சொன்னால் கேவலம் என்று நினைத்து எதுவும் சொல்வதில்லை.


சொக்கன்...! said...
இது உங்க சொந்த கதையில்லையே....ஏன் கேக்றேன்னா ர்ர்ரொம்ப ஃபீலிங்ஸோட எழுதியிருக்கீங்க..அதான்.இதுவரை யாரும் தொடாத ஒரு பிரச்சினையை தொட்டிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்.எனக்கு தெரிந்த ஒரு வயதான பெண்மணி அமெரிக்கா போய்ட்டு வந்து என்னிடம் அழுது புலம்பியது இப்போது நினைத்தாலும் பாரமாக இருக்கிறது. சிலருக்குத்தான் அப்படியான அனுபவம் என நினைத்திருந்தேன்...ம்ம்ம்ம்



Please change title to பேராசை பிடித்த அமெரிக்க சில மருமகள்கள்" .Sorry for english as i can not type tamil . All points are one sided. Have you validated the Wife's arguments ? When Husband is helping his family roots same will not apply to wife side ?All brothers/sisters of Husband were not eager to share their issue with husband's wife and will be considered as outsider or novice , so they react other way . I have seen families who enjoy their US stay . Parents of NRI always doesnt want to stay in US not because of treatment because of other reasons like wheather and social activity .This is a ego issue and also husband also want to hide lot from their wife . so problem muliplies not because of purpose . If male treat female equal then problem may reduce.



Anonymous said...
இது எல்லா மருமகள்கள்களுக்கும் பொருந்தும். அமெரிக்காவில் மட்டும் நடக்கிற மாதிரி எண்ண வேண்டாம். பழைய விசு படங்களை நினைவில் கொள்ளவும்./*ஆனால் 'கணவன் அவன் வீட்டாருக்கு எந்த வகையிலும் உதவி செய்யக்கூடாது என்ற பெண்களின் எண்ணம் மட்டும் அப்படியே உள்ளது. அமெரிக்காவில் உள்ள சாப்டுவேர் இன்ஜிநியர்களின் மனைவிமார்கள் எந்த ஒரு விழாவில் சந்தித்து கொண்டாலும் , கூடி பேசும் போது " அவர் நான் சொல்றத கேக்கவே மாட்டிகிறார், எப்போ பார்தாலும் அவங்க அம்மா போன் பண்ணி 'இந்த செலவு அந்த செலவுன்னு சொல்லி நச்சரிகிறார்" என்று தங்கள் எரிச்சலை பகிர்ந்து கொள்வர். ஆனால் இவர்கள் பண்ணும் செலவுகளை எல்லாம் நாம் கணக்கு பார்க்க கூடாது என்று எதிர்பார்ப்பார்கள்.8/இது ஈகோ பிரச்ச்னையே தவிர பண பிரச்சைனை அல்ல. உங்கள் வீட்டுக்காரர்கள் உதவியை உங்களிடம் மட்டுமே கேட்கிறார்கள். உஙகள் மனைவியிடம் கேட்கச் சொல்லுஙகள், அப்புறம் எப்படி மாறுகிறார்கள் என்று பாருங்கள்./*இந்த பெண்களுக்கு அவர்கள் மாசமாக இருக்கும் போதும், குழந்தைகளை வளர்க்கவும் மட்டும் ஆயா வேலை பார்க்க பெற்றோர் தேவை படுகின்றனர், அதற்கு அங்கே ஆள் கிடைப்பதில்லை என்பது தான் காரணம். எத்தனையோ பேர் தங்கள் பெற்றோர்களை அமெரிக்காவுக்கு வரவழைத்து ஆறு மாதம் வரை தங்க வைத்து கொள்கின்றனர், ஆறு மாதத்தில் அவர்கள், ஐயோ அம்மா, விட்டால் போதும்டா சாமி என்று இந்தியா திரும்புவதை பார்த்திருப்பீர்கள். */இதுவும் இந்தியாவாக இருந்தாலும், அம்மா வீட்டிற்கு போக முடியாதவர்கள் செய்வதே. இதில் பிரச்சனை, அதே பெற்றோர்கள் பெண் அவர்கள் வீட்டிற்கு வந்தால், வேலை செய்வதை பெரிதாக பேசமாட்டார்கள். அதே அவர்கள் நம் வீட்டிற்கு வந்து செய்வது சுயகொவுரவம் குறைந்து விட்டது போல் கருதுகிறார்கள்.எனக்கு தெரிந்த வரை இதில் பெற்றோர்கள் எண்ணத்தின் மேல் தான் குறை உள்ளது.



said...
சில மனப்புழுக்கங்களை வெளியே சொல்ல முடியாது. உள்ளுக்குள்ளேயே போட்டுக்கொண்டு மனைவிக்காக பெற்றோரை/உடன்பிறந்தோரை திட்ட வேண்டியதுதான். சரிபாதி "உங்க நல்லதுக்குதான் சொல்றேன்" என்று சொல்லும் போது ஆமாம் சாமி போட்டுவிட்டு சென்று கொண்டேயிருக்க வேண்டியதுதான். சரிபாதிதான் முக்கியம். மீதியை பற்றி கவலை இல்லை.சரிபாதியின் மகிழ்ச்சிக்காக அவளது உறவுகளை உணவகங்களுக்கு அழைத்து செல்லும்போது என் தாய்தந்தையர் இந்த உணவகங்களை மிதித்தேனும் பார்த்திருப்பார்களா என்ற சுயபச்சாதாபம் ஏற்படுவது உண்மையே.சரிபாதி மகிழ்ச்சியாக இருந்தால்தான் மீதி பாதியாகிய நாம் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். மகிழ்ச்சி முக்கியம் என்று வரும்போது மனசாட்சியை கழட்டி வைத்து விட வேண்டும். பெண்ணுரிமை என்பது தாய்க்கு அல்ல. தாரத்திற்கு மட்டுமே. இந்த பெண்ணுரிமை குறித்த அறிவு உங்களுக்கு இருந்திருந்தால் இந்த பதிவை எழுதியிருக்க மாட்டீர்கள். சட்டங்களும் சமூக அமைப்புகளும் பெண்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. உண்மையில் இன்றைய ஆண் பரிதாபத்திற்கு உரியவன்.இது "அமெரிக்கா" என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைவது இல்லை. எங்கும் உள்ள பொதுவான நிலையே.




ஏதோ எங்கள் வீட்டில் நிகழ்ந்ததை எட்டிப்பார்த்தோ ஒட்டுக்கேட்டோ எழுதியதுபோல இருந்தது. While I can't comment for the others, I can atleast register what happened in my case.எனது திருமணத்திற்கு முன்பு எங்கள் ஊரில் நான் இங்கிருந்து அனுப்பியதில் வீடு கட்டினோம். ஒரு தமையன் விவசாயி. இன்னொருவர் நாற்பது கடந்தும் சவுதிக்கும் ஊருக்குமாய் அல்லாடிக்கொண்டிருக்கும் Welder (ஊரோடு செட்டில் ஆகலாம் என்று எண்ணி ஆறேழு ஆண்டுகள் முன் எடுத்த நேர்மையான முயற்சிகள் - கேண்டீன், அரசு ஒப்பந்ததாரர் - தோல்வியிலும் நஷ்டத்திலும் இழுத்துவிட மறுபடி சவுதிக்கே போய்விட்டார்)அண்ணனால் ஏற்பட்ட கடன்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பு என் 75 வயது அப்பா பேரில். போன வருடம் என் பெற்றோர் இங்கே என் குழந்தையை கவனித்துக்கொள்ள (உங்கள் பாஷையில் "ஆயா வேலை பார்க்க") வந்திருந்தார்கள். பலநாட்கள் மனதிற்குள்ளேயே மருகிப்போய் ஒருநாள் என் அப்பா ஒரு தாளில் இரண்டு தவணைகளில் $6000 கேட்டு கடிதம் போல எழுதி என்னிடம் தந்தார். மூன்று வருடங்களில் தன் பென்ஷனிலிருந்து திருப்பித்தந்து விடுவதாகவும், கிராமத்தில் தன் பெயரில் இருக்கும் சிறுதுண்டு நிலத்தை என் பெயருக்கு எழுதித்தந்துவிடுவதாகவும் எழுதியிருந்தார்.எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.இவ்விஷயம் தெரிந்து என் இல்லாள் எவ்வளவு பேசினார் தெரியுமா ? அவரது வாதங்கள் :- அவருடைய நண்பர்கள் ஊரில் கிட்டத்தட்ட 30-40 லட்சத்திற்கும் இங்கும் கிட்டத்தட்ட 5-6 லட்சம் டாலர்களிலுமாய் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட நாங்கள் இன்னும் வீடே வாங்கவில்லை இங்கு. (அதற்குக் காரணம், பொருளாதார பற்றாக்குறை அல்ல; இறையருளால் இப்போது நினைத்தாலும் வாங்க இயலும், ஆனால் பச்சை அட்டை இல்லாத நாடோடி வாழ்வென்பதால் இன்னும் உறுதியாக முடிவெடுக்க இயலாமையே காரணம்)- ஊருக்கு திரும்பிப்போனால் எங்களுக்கு வீடில்லை (பிரச்சினை வந்தபோது). ஆனால் என் பெற்றோர் மற்றும் தமையனார்க்கு வீடு உள்ளது - எல்லாவற்றையும் அனுப்பிக்கொண்டே இருந்தால் நாம் நாளைக்கு தெருவில்தான் நிற்கவேண்டும்- நமக்கு retirement benefits கிடையாது- நாம் நாளை நம்மை நம்பித்தான் இருக்கவேண்டும்; பெண்ணையோ பிள்ளையையோ அல்ல.ஆசிரியையாக வேலை பார்க்கும் என் தமக்கை ஊரில் வீடு கட்டினபோது, வங்கியில் வாங்கின கடன், நகை விற்ற பணம் எல்லாம் போக 2 லட்சம் தேவைப்பட, அதை நான் கடனாக தந்தேன். இப்போது அதை அவரிடமிருந்து கேட்டு வாங்கி என் பெற்றோருக்கு உதவலாம் என்று ஒருமுறை சொன்னார். பணம் இருந்தால் தானாக உதவக்கூடியவரே என் தமக்கை. இன்னும் சொல்லப்போனால் என் பெற்றோரின் கடன் அடைக்க தமக்கு தெரிந்தவர்கள் மூலம் கடன் வாங்கி உதவியும் செய்திருக்கிறார்.எல்லாம் 'அதை பிடுங்கி இதில் போட்டு, இதை பிடுங்கி அதில் போட்டு' என்னும் நடுத்தரவர்க்கம்தான்.அவருடைய பெற்றோர் அவரிடம் எதுவும் வாங்காமல் இருந்ததற்குக் காரணம், அவர்கள் மேல் நடுத்தரவர்க்கம். மொத்தமே 5 பேர் கொண்ட குடும்பம், அவருடைய அப்பா மத்திய அரசு நிறுவனத்தில் வேலையென்பதால் ஓரளவு நல்ல சம்பளம், சேமிப்பு, திருமணத்திற்கு முன்னரே என் இல்லாள் வெளிநாடுகளில் வேலைசெய்து சம்பாதித்த பணம் என்று. நாங்களோ சற்று பெரிய குடும்பம். கைக்கும் வாய்க்குமென்றே ஓடிய குடும்பம்.இன்னும் என்னால் பணம் தர இயலவில்லை. அது விஷயமாய் பேச்செடுத்தால் மறுபடி என்ன பூகம்பம் வருமோ என்று தெரியவில்லை.இறுதியாக, அப்படி அவர்களுக்கு பணம் அனுப்பினால் நான் பெட்டியோடு வெளியேறிவிடுவேன் என்றார். 'சரி, தாராளமாக வெளியேறலாம். என் பெற்றோர் / சகோதரர்களுக்கு தக்க சமயத்தில் உதவுவதற்கு குறுக்கே நிற்கும் பெண் என் மனைவியாக என் வாழ்வில் வேண்டாம்' என்று சொல்லியிருப்பேன், எங்களுக்கு ஒன்றரை வயது செல்வம் மட்டும் இல்லாது போயிருந்தால்.


அன்புடன்NRI_அனானி

நூறு சவரன் கேட்கும் பெற்றோர்களே இது நியாயமா?



தங்கம் விலை ஜெட் வேகத்தில் ஏறிக்கொண்டு போகிறது இரண்டு வருடங்களுக்கு முன்பு சவரன் நான்காயிரம் ரூபாய் இருந்தது இப்போது எட்டாயிரம் வரை போய்விட்டது. ஆனா இந்த மாப்புள பசங்க அப்பா அம்மா மட்டும் தங்கம் விலை எப்படி போனால் என்ன எங்க மகனுக்கு நூறு சவரன் போட்டு தான் பொண்ணு வேணும்னு அடம் புடிகிறாங்கோ. என்ன கொடுமை இது ? அடே முட்டாள்களே ரெண்டு வருசத்துக்கு முன்னாடி சொன்னதையே இப்பயும் சொல்லிக்கிட்டு இருக்கீங்களே நூறு சவரன் விலை என்ன தெரியுமா ? எட்டு லட்சத்துக்கு மேல வரும் .
இதென்னடி அநியாயமா இருக்கு நம்ம பொண்ணுக்கு நூறு போட்டு தான் கட்டி கொடுத்தோம் அதே மாதிரி நம்ம பையனுக்கும் நூறு போட்டு எடுத்தா தான் கவுரவம்...!
அம்மா .........புள்ளய பெத்த புண்ணியவதியே ......நீங்க உங்க மகளுக்கு நூறு போட்டு கட்டி கொடுத்தப்ப சவரன் விலை என்ன? கொஞ்சம் நெனச்சு பாருங்க!
குறிப்பா .இப்போ நாப்பது ஆயிரத்துக்கு மேல சம்பளம் வாங்குற பசங்க அப்பா அம்மா தான் இப்படி எல்லாம் கேக்குறாங்க .....பசங்களே உங்க அம்மா அப்பாவுக்கு தான் அறிவு கெட்டு போச்சுன்னா உங்களுக்கு என்ன ஆச்சு .......உங்களுக்கு இந்த நகையால என்ன பிரயோஜனம்?
முன்னெல்லாம் தொழில் பாக்குறவங்க ஒரு அவசரத்துக்கு அடமானம் வைக்கிறதுக்கு தான் இந்த நகை பயன்பட்டுச்சு .......இப்போ உங்களுக்கு என்ன கஷ்டம்? பொண்ணு வீட்டு காரன் கிட்ட பிச்சை எடுக்குறதுக்கு. நியாபகம் வச்சுகோங்க நீங்க வாங்குறது நூறு சவரன் நகை இல்ல நூறு சவரன் அவமானம்.
அதுக்காக உங்கள வரதட்சணையே வாங்காதீங்கனு சொல்ல வரல .....பொண்ணு நீங்க விரும்புற மாதிரி இருக்கா பாருங்க .....குடும்பம் எப்படினு பாருங்க எல்லாம் ஒத்துவந்தா " நீங்க உங்க பொண்ணுக்கு என்ன செய்ய விரும்புறீன்களோ அதை பண்ணுங்க" னு ஒரு வார்த்தை சொல்லிடுங்க அது போதும் .......கண்டிப்பா அவங்க அவங்களால முடிஞ்சத செய்வாங்க ..உங்களுக்கும் மதிப்பும் உண்மையான மரியாதையும் கிடைக்கும்.
Anonymous said...
>>" நீங்க உங்க பொண்ணுக்கு என்ன செய்ய விரும்புறீன்களோ அதை பண்ணுங்க" னு ஒரு வார்த்தை சொல்லிடுங்க அது போதும் .......கண்டிப்பா அவங்க அவங்களால முடிஞ்சத செய்வாங்க ..உங்களுக்கும் மதிப்பும் உண்மையான மரியாதையும் கிடைக்கும் இப்படித்தாங்க நா மட்டுமில்ல, பொண்ணு பாக்கப்போன எங்க வீட்டு மக்களும் சொன்னோம்.
'எங்களுக்கு எந்தவித எதிர்பார்ப்புமில்லை, உங்க விருப்பம்' என்று. எனக்கு ப்ரேஸ்லட் எல்லாம் போடுவதாக பேச்சு வந்தபோது அப்போதே நான் எனக்கு நகையில் பெரிய நாட்டமில்லை என்று உறுதியாக மறுத்தும்விட்டிருக்கிறேன்.
மோதிரம் மட்டும் வழக்கம் என்று வற்புறுத்தியதால் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டேன்.இரண்டே இரண்டு சறுக்கல்கள்தான் நிகழ்ந்தன எங்கள் பக்கத்திலிருந்து.1. எங்கள் வீட்டில் வைத்து கலந்து பேசியபோது என் மாமனார் பெண் பெயரில் ஏதோ டெபாஸிட் தொகை போட்டு தருவதாக சொன்னார். அதை நான் கண்டுகொள்வதில்லை. காது கேளாத என் அப்பா, பொது உலக சூட்சுமமில்லாத/அனுபவமில்லாத என் அம்மா இவர்கள் சார்பாக என் திருமணத்தை முன்னின்று நடத்தின என் மாமா (அம்மாவின் அண்ணன் - அவர் ஒரு டென்ஷன் பார்ட்டி வேறு) மணநாளன்று பெண்ணின் அப்பாவிடம் அந்த டெபாஸிட் பற்றி கேட்டிருக்கிறார்.
இல்லையென்றும் விரைவில் ஆவன செய்யுமாறும் என் மாமனார் சொல்லியிருக்கிறார் போல. என் மாமா அந்த டெபாஸிட்டை என்பெயரில் போட்டுத்தர சொல்லியிருக்கிறார் போல. அதற்கு என் மாமனாரானவர் 'இது என்னமோ ஒங்க பையன வெல பேசற மாதிரி இருக்கே, அப்படீன்னா என்ன வெலைன்னு சொல்லுங்க, மொத்தமா வாங்கிக்கிறோம்' என்று சொல்ல, முகம் செத்துப்போன என் மாமா என்னிடம் வந்து புலம்ப, அப்போதே, 'அதப்போயி ஏன் மாமா கேட்டீங்க, அப்படியே விட்டிருக்கவேண்டியதுதான, டெபாஸிட் போட்டா போடறாங்க, இல்லன்னா விடறாங்க, அது பெரிய விஷயமா ?' என்று மண்டபத்திலேயே என் மாமாவிடம் கேட்க, என் பெற்றோர் சார்பில் திருமணத்தை தான் முன்னின்று நடத்தியதால் என் பெற்றோரிடம் விபரம் சொல்லி பொறுப்பை முடிக்கும் முகமாகவே அப்ப்டி கேட்டதாகவும் வேறு உள்நோக்கம் எதுவுல் இல்லையென்றும் என்னிடம் வருந்திக்கூறினார்.
2. மணமான அடுத்து என் மனைவி வீட்டிற்கு காரில் சென்றபோது என் உறவினனும் கூட வந்தான். கார் வாடகை அவர்களையே கொடுக்கச்சொன்னான். என்னிடம் காசு இருந்து நான் கொடுக்க இருந்தும் என் உறவினன் தடுத்துவிட்டான். ஏதோ வழக்கம் போல என்று அப்போது நான் சும்மா இருந்துவிட்டேன், அந்த சூழலில் அதுபற்றி விபரமாக யோசிக்கவில்லை. பிற்பாடுதான் தெரிந்தது, 'பெண்-மாப்பிள்ளையை தங்கள் வீட்டிற்கு அவர்கள்தான் அழைக்கவேண்டும்' என்ற சம்பிரதாயத்தால் அவர்களிடம் கார்வாடகை வாங்கியிருக்கிறோம் என்று.
But it was too late, my friend.இதின் எங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர் என்ன தெரியுமா ?- அவர்கள் குடும்பத்தில் என் மாமாவிற்கு "FD தாத்தா" என்ற பட்டப்பெயர் ;- மணமாகி இரண்டே மாதத்தில் இது பற்றி பேச்சு வந்தபோது (Yahoo Chat-ல்) நிகழ்ச்சி 1-ற்கு 'என் மாமா கேட்டது மாபெறும் தவறில்லை; கேட்காமலேகூட விட்டிருக்கலாம், ஆயினும் அதற்கு அவருக்கு சரியான காரணம் உண்டு, ஆனால் கேட்ட விதம்தான் தவறு" என்று சொல்லியும், நிகழ்ச்சி 2-க்கு வருத்தம் தெரிவித்தும் என் மனைவியிடம் தன்னிலை விளக்கம் அளித்தபிறகும் என் மனைவியானவர் சொன்னார் :"என் அம்மாவுக்காக குழியில் விழுந்துவிட்டேன்" (அவர் அம்மா இன்னதென தெரியாததொரு வியாதியால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாக மற்றவர் உதவியின்றி நகரக்கூட இயலாத நிலையில் இருக்கிறார்)இதைவிட அதிகமாகவும் என் மனைவியால் - கிட்டத்தட்ட பெண் வீட்டாரிடம் பணம் பிடுங்கும் கூட்டம் என்ற அளவிற்கு - குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் நான். காரணம் அயல்நாட்டில் சம்பாரித்த நான், (தானும் நல்ல கணினி வேலையில் சமமாக சம்பாரித்துக்கொண்டிருக்கும்போது) திருமண செலவில் பாதியை ஏற்றுக்கொள்ளவில்லை.
தம் இளைய சகோதரனின் திருமணத்திற்கு தங்கள் குடும்பம் அப்படித்தான் செய்யப்போவதாகவும் சொல்லப்பட்டேன்.இப்போது அவர் சகோதரனுக்கு மணம் நிச்சயமாகியிருக்கிறது. நாங்கள் சொன்னதுபோல 'உங்கள் விருப்பம்போல' என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்; என் மனைவி சொன்னதுபோல பாதி செலவையெல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை; திருமணத்தை grand ஆக செய்யச்சொல்லியிருக்கிறார்கள்.
அன்புடன்அனானி
அனானியின் அனுபவங்கள் சோகமாக இருக்கின்றன. இது போன்ற மோசமான பெண் வீட்டார் இருக்கத்தான் செய்கின்றனர்

அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு உங்கள் வீட்டினருடன் மணிக்கணக்கில் போனில் அரட்டை அடிக்க சிறந்த வழி


நீங்க அமெரிக்காவில் வேலை பார்க்கும் தனிக்கட்டையா?
அம்மாவுக்கு போன் போட்டு மணிகணக்கில் பேசுபவரா? அல்லது
குடும்பத்தோடு செட்டில் ஆனவரா ?
உங்க மனைவி அம்மா வீட்டுக்கு போன் போட்டு மணிகணக்கில் பேசி உங்க போன் பில்லை கண்டபடி ஏத்தி விடுறாங்களா?
உங்களுக்கான ஒரு நல்ல தீர்வு
நீங்க படத்துல பாக்குற இந்த சின்ன magic jack என்னும் கருவி.................
இதை நீங்க ஒரு வருடத்துக்கு 40 டாலர் என்ற விலையில் வாங்குங்கள் ...........
இதை இந்தியாவுக்கு அனுப்பி உங்க அம்மா வீட்டிலோ அல்லது உங்க மனைவியின் அம்மா வீட்டிலோ broadband இணைப்பு உள்ள கணினியில் usb port இல் சொருகி விட்டால் போதும். இந்த கருவியின் மறுபக்கம் ஒரு சாதாரண போன் ஜாக் இருக்கும் அதில் ஒரு சாதாரண கார்ட்லஸ் போனை இணைத்து விட வேண்டும் .........
இப்போது இது அமெரிக்காவில் இருக்கும் ஒரு லோக்கல் போன் போல செயல்படும் இந்த போனில் இருந்து எந்த ஒரு அமெரிக்கா போனுக்கும் இலவசமாக அழைக்கலாம் மணிக்கணக்கில் அரட்டையும் அடிக்கலாம்.
இந்த போனுக்கு தனியாக ஒரு அமெரிக்க போன் நம்பரும் கொடுத்து விடுகிறார்கள் .........
அதனால் இந்த போனில் இருந்து செல்லும் கால்கள் அமெரிக்க லோக்கல் காலாகவே கருதப்படும். ........
இது உண்மையில் அமெரிக்காவுக்குள் மட்டுமே பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட வசதியாகும் ........நம்ம ஆளுங்க சும்மா இருப்பாங்களா? இத இந்தியாவுல மாட்டி சோதனை பண்ணி பார்த்து இப்போ ஆள் ஆளுக்கு வாங்க ஆரம்பிச்சுடாங்க.

Comments


bsnl இணைப்புகளிலும் இது நன்றாகவே வேலை செய்கிறது..............ஆன்லைன் வாய்ஸ் சாட்டில் ...ஹெல்லோ ......இப்போ கேக்குதா? .......சரியா கேக்கல ......மைக் மாட்டி இருக்கா? செட்டிங்ஸ் சரியா இருக்கா பாரு ......என்று மாரடிப்பதை விட இது எவ்வளவோ சிறந்தது.

சுந்தர் said...
If this is VoIP, than it won't work in BSNL network and some other networks who have banned unauthorized VoIP connections. One of my friends' family uses Airtel broadband services with no issues so far.If there is a PC on the other side with broadband connection, the easiest / legal way to talk to them is to do voice chat using yahoo, msn, kind of messengers.Anyway, thanks for the post.

சுந்தர் said...
Interestingly in their website (magicjack), in the Q&A section I found the following Q&A:Q: Can I send a magicJack to a friend or relative overseas? A: Yes, however you would have to send it to an address in the United States first, and then forward it from there. Makes sense to me!

Anonymous said...
Magic Jack is alternative to SKYPE out . I think except one year free i m not seeing any reason to try it out .

18.4.08

உலக அளவில் ஒரே கரன்சி


Globalization அதாவது உலகமயமாக்கலின் தாக்கம் இன்று எல்லாராலுமே உணரப்படுகின்றது. வால்ஸ்டிரீட்டின் நெளிவு சுழிவுகள் உலகபங்குசந்தைகளில்எதிரொலிக்கின்றன.

ஈரானில் போர் மேகம் சூழ்ந்தால் சீனாவில் பெட்ரோல் விலை ஏறுகின்றது. அமெரிக்காவில் Day Light Saving Time மாற்றப்பட்டால் சென்னையில் கால் சென்டரில் வேலை செய்யும் மனோஜ் சீக்கிரமாக வேலைக்கு போக வேண்டியுள்ளது.

இப்படி வீடுவரை குடிவந்துள்ள உலகமயமாக்கல் பாதி கிணறே தாண்டியுள்ளதால் தாம் இன்றைய உலக எக்கானமி தடுமாறுகின்றது என்கின்றது ஒரு ஆய்வு.

அதாவது இன்று Economic imbalance, Economic instability பிரபலமான வார்த்தைகள்.இதற்க்கெல்லாம் தீர்வு அரைவேக்காட்டு தனமாய் உள்ள உலகமயமாக்கலை முழுதாக்க வேண்டுமாம்.

அதாவது ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து யூரோ எனும் கரன்சி கொண்டு வந்துள்ளார்கள். அரபு நாடுகளும் இது போன்ற ஒரு பொது கரன்சிக்கு தயாராகின்றார்கள்.

ஏன் தெற்காசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் உட்பட சில நாடுகள் சேர்ந்து பொது கரன்சி உருவாக்கவும் திட்டம் போட்டுள்ளன.

அமெரிக்காவும் கனடாவும் மெக்ஸிகோவும் இணைந்து North American Union- என "The Late Great U.S.A" உருவாக்கி அதில் பொது கரன்சி உலவ விட திட்டங்கள் உள்ளன.

இந்த போட்டிகளையெல்லாம் விட்டு விட்டு பேசாமல் உலக அளவில் ஒரு பொது கரன்சி உருவாக்கி, அதற்கொரு உலக ரெசர்வ் பாங்க் உருவாக்கினால் பெரும்பாலான தலைவலிகள் தீரும் என்கின்றார்கள் பெரும்பாலானோர்.


இதைத்தான் Single Global Currency.org-ம் வலியுறுத்துகின்றார்கள்.

2025-க்குள் உலக அளவில் ஒரு பொது கரன்சி கொண்டு வருவது தான் இவர்கள் நோக்கம்.

பலரின் விருப்பமும் அதுதான்.

முன்னாள் U.S Federal Reserver Chair Paul Volcker இவ்வாறாக கூறினார்

"A global economy requires a global currency."

உலக பொது கரன்சியானால் உலகில் அனைவருக்கும் சம்பளம் ஒரே கரன்சியில் வழங்கப்படுவதால் ஏற்றத்தாழ்வுகள் வெகுவாக குறையும். பெரும்பாலான பொருளாதார குளறுபடிகள் சரியாகும் என நம்புகின்றார்கள்.


அப்படியே உலக அளவில் ஒரு பார்லிமெண்ட் அமைத்து உலகளாவிய அரசு ஒன்றும் ஆட்சி செய்தால் பிரச்சனையே இருக்காது போங்க.

புத்தாண்டு உணர்வுகள்

வியர்வையில் வீரம்பெரியவர்கள் சிறகடித்து போய் உலகபிரசித்தி என்னும் முகிலை எட்டிப்பிடித்து விட்டார்கள் என்று எண்ணுகிறாயோ? இல்லை.
பிறர் துயிலும் பொழுது இவர்கள் கால்கடுக்க ஏறினார்கள்
-ஹென்றி லாங் பெல்லோ
Positive Thinking"I Imagine this new year as my best year.I affirm enthusiasm energy and pleasure in my work.
As a positive thinker I will do 10% better than last year.God will help me reach this goal"-Norman Vincent Peale
The most important thing in the Olympic games is not to win but to take part;just as the most important thing in life is not the triumph but the struggle.
The essential thing is not to have conquered but to have fought well
-Baron Pierre de Coubertin (Founder of the Modern Olympic games)
செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது-சாபாகிளிஸ்
Let your goal be "Day by Day I am on my way.Say it over and over again and you will succeed-Mack.R.Douglas
வீழ்வது வெட்கமல்ல,வீழ்ந்தே கிடப்பது தான் வெட்கத்திலும் வெட்கம்-சீனா
We are stronger than we think
-Dale Carnegie
உண்மை உன் பக்கமெனில் வெற்றியும் நிச்சயம் உன் பக்கம் தான்
-நேரு-இந்திரா கடித்தத்தில்

இந்த வீணைக்கு தெரியாது-A hit`s Profile

ராகம் - சகானா.(Sahana)
வெளியீடு-தூர்தர்ஸனின் ரயில் ஸ்நேகம் டிவி தொடர் (1990`s) (with 13 episodes)இயக்கம்-கே.பாலசந்தர்
பாடியவர்-சித்ராநடிப்பு-நிழல்கள் ரவி, அமுதா
எழுதியவர் : வைரமுத்து
இசை அமைத்தவர் : வி.எஸ்.நரசிம்மன்.

வரிகள்
இந்த வீணைக்கு தெரியாதுஇதை செய்தவன் யாரென்று(2)
என் சொந்த பிள்ளையும் அறியாது
அதை தந்தவன் யாரென்று
எனக்குள் அழுது ரசிக்கின்றேன்
இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்
இந்த வீணைக்கு தெரியாது
மலையில் வழுக்கி விழுந்த
நதிக்குஅடைக்கலம் தந்தது
கடல் தானேதரையில் வழுக்கி விழந்த
கொடிக்குஅடைக்கலம் தந்தது
கிளை தானேஎங்கோ அழுத
கண்ணீர் துடைக்க
எங்கோ ஒரு விரல் இருக்கிறது
காகம் குருவிகள் தாகம்
தீரகங்கை இன்னும் நடக்கிறது
இந்த வீணைக்கு தெரியாது
சொந்தம் பந்தம் என்பது எல்லாம்
சொல்லித் திரிந்த முறை தானே
சொர்கம் நரகம் என்பது எல்லாம்
சூழ்நிலை கொடுத்த நிறம் தானே
உள்ளம் என்பது சரியாய் இருந்தால்
உலகம் முழுதும் இனிக்கிறது
உதிர போகும் பூவும் கூட
உயிர் வாழ்ந்திட தான் துடிக்கிறது
இந்த வீணைக்கு தெரியாது
என் சொந்த பிள்ளையும் அறியாது

ரூபி போகும் ரயில்-வெப் டெவலப்பர்கள்

வெப் டெவலப்பர்கள் உலகில் இன்று சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு ஜார்கன் "Ruby on Rails".
இது ஒரு சில சமயங்களில் RoR அல்லது Rails எனப்படுகிறது.
Perl , Python போன்ற ஸ்கிரிப்டிங் வகைகளுக்கு இந்த RoR ஒரு மாற்று எனலாம்.வேகமான செயல்பாடு,எளிதான ஸ்கிரிப்டிங் என்கிறார்கள்.

இன்னும் மார்க்கெட்டில் இதெல்லாம் நிரூபிக்கப்பட்டதாக தெரியவில்லை.
ஆனாலும் போகப் போக இந்த ஸ்கிரிப்டிங் வகை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ruby on Rails ஆனது இருவற்றால் ஆனது. அதாவது Ruby எனப்படும் object-oriented programming scripting language (OOP) - மற்றும் Rails எனப்படும் open source web framework-ன் கலவையே Ruby on Rails.
அதாவது ரயில் இல்லையேல் ரூபி இல்லை. இது டேவிட் கெனிமெர் கான்ஸ் என்பவரால் (David Heinemeier Hanss) உருவாக்கப்பட்டு,இன்று அது open-source project ஆக,
rubyonrails.org -ல் காணக் கிடைக்கிறது.
நீங்களே உங்கள் வின்டோஸ் கணிணியில் இதை நிறுவி விளையாடி பார்க்கலாம்.ரூபியுடன் நீங்களும் ரயிலேறி பாருங்கள்.
Windows -க்கான Ruby download link
http://rubyforge.org/frs/?group_id=167&release_id=5246
Rubygems download link
http://rubyforge.org/frs/?group_id=126&release_id=2471
சாம்பிள் ஸ்கிரிப்டுகள்-டூடோரியல்கள்- இங்கே
http://www.hotscripts.com/Ruby_on_Rails/index.html

காகிதத்திலிருந்து கணிணிக்கு


உங்களின் பழைய தமிழ் நூல்கள்,அச்சுப் பிரதிகள்,சேகரித்த செய்திதாள்கள், பத்திரிகை துணுக்கு துண்டுகள்,கிழித்து வைத்திருக்கும் பிரசுரங்கள்,தமிழ் பக்கங்கள் இவற்றை எல்லாம் கணிணியில் ஏற்றி புதிய பதிப்பாக மென்னூலாகவோ அல்லது அச்சிட்டோ வெளியிட ஆசையா?.

எளிது அது இப்போது.


நீங்கள் நினைப்பது போல் அவற்றையெல்லாம் தட்டச்சு செய்து கணிணியில் ஏற்ற வேண்டிய அவசியமில்லை.எந்த தமிழ் தாளையும் ஸ்கேனாக படம் (bmp) பண்ணி (ஸ்கேனர் தேவைப்படும்)

பின்பு OCR மென்பொருள் வழி ஸ்கான் செய்தால் சாதாரண அந்த பட கோப்பு பின்பு சாதாரண text கோப்பாக மாறி உங்களுக்கு கிடைக்கும்.

நீங்கள் மேற்செய்ய வேண்டியதெல்லாம் ஏதேனும் மாற்றம் எடிட்டிங் செய்து உங்கள் மின்புத்தகம் செய்யவேண்டியது தான்.


இந்த மாதிரியான முதன் முதல் தமிழ் ஓசிஆர் மென்பொருள் "பொன்விழி" ஆகும்.70% வரை குறையின்றி பணிசெய்வதாக கேள்வி.

கீழ்காணும் இரண்டு தமிழ் OCR மென்பொருள்களும் இலவச மென்பொருள்களே.



PonVizhi Product Page


http://www.ildc.in/GIST/htm/ocr_spell.htm


PonVizhi Direct Download Link


http://www.ildc.in/GIST/LearnFun/PonVizhi-TamilOCR.zip


Another Tamil OCR


http://sourceforge.net/projects/gtamilocr/


Free Tamil OCR Optical Character Recognition Paper printout Scan Computer Image


Picture to text file conversion

சின்னத் திரைப் பாடல்கள்




சில சமயங்களில் சின்னத் திரை தமிழ் தொடர் தீம் பாடல்கள் அர்த்தத்தோடு அழகாக ரசிக்கும் படியாக அமைந்து விடுவதும் உண்டு.அப்படியான பாடல்களில் ஒன்று "நம்பிக்கை" தொடரின் கீழ்கண்ட பாடல்.கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகள் கீழே


.நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை


நம்பிக்கை இல்லாமல் நாளை இல்லை


நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை


நம்பிக்கை இல்லாமல் வாழ்வு இல்லை


நட்பு என்பதும் நம்பிக்கை


கற்பு என்பதும் நம்பிக்கை


முயற்சி என்பதும் நம்பிக்கை


நாம் மூச்சு விடுவது நம்பிக்கை


தலையை இழந்த அருகம் புல்லும்தழைத்து வருவது நம்பிக்கை


அப்பா என்னும் உறவும் கூட அம்மா கொடுத்த நம்பிக்கை


ஆண்டவன் என்னும் கற்பனை கூடஅச்சம் கொடுத்த நம்பிக்கை


அடுத்த வருடம் மழை வரும் என்பது உழுவோர்க்கெல்லாம் நம்பிக்கை


அடுத்த தேர்தலில் ஆட்சி என்பதுஅரசியல்வாதியின் நம்பிக்கைதரைக்கு மேலே பாதம் நிற்பதும்ஆகாயத்தில் நிலவு நிற்பதும்எல்லைக்குள்ளே கடல்கள் இருப்பதும்இதயகூட்டில் ஜீவன் இருப்பதும்நம்பிக்கை


நம்பிக்கை அது நம்பிக்கை நம்பிக்கை

இந்திரஜால் Phantom-ம் மாண்ட்ரேக்கும்




கார்ட்டூன் நெட்வொர்க்குகள் வந்து பால்ய குழந்தைகளை ஆளும் முன் அந்தகால "குழந்தை"களை ஆண்டு கொண்டிருந்தவை Indrajal Comics-காமிக்ஸ் புத்தகங்கள் எனப்படும் படக்கதை நூல்கள்.


Phanton,Mandrake,Bahadur,Flash Gordon,Dara,Rip Kirby,Buz Sawyer,Kerry Drake


இப்படி தொடரும் அந்தகால வீர தீர காமிக்ஸ் கதை புத்தகங்களை அழகாக ஸ்கான் பண்ணி இணையத்தில் சேமித்து வைத்திருக்கிறார்கள்.


நீங்களும் ரசிகர்களானால் இதை இலவசமாய் இணையத்திலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம்.


மலரும் நினைவுகளுக்கு திரும்பலாம்.


http://thecomiclinks.blogspot.com/2006/08/comic-download-links.html

கணிணி பவர் ஆப் மேட் ஈஸி


உங்கள் கணிணியை தானாகவே ஒரு குறிப்பிட்ட சமயத்தில் பவர் ஆப் செய்ய வேண்டுமா?.

இதோ ஒரு சிறு இலவச மென்பொருள்.சமயத்தை குறித்து விட்டால் போதும்.சரியான நேரத்தில் அதுவே உங்கள் கணிணியை Shutdown,Logoff அல்லது Hybernate செய்துவிடும்.

இனி இசை கேட்டு கொண்டே தூங்கிவிடலாம் அல்லது படம் பார்த்தவாறே தூங்கிவிடலாம். :)

Product Page


Direct Download Link


Automatic Scheduled Computer Switchoff Poweroff Reboot Freeware Utility