23.4.08

இந்தியா .in




இங்கு நீங்கள் பார்க்கும் உலக வரைபடம் சற்று வித்தியாசமானது. அதை சொடுக்கி நீங்கள் பெரிது படுத்திப் பார்த்தால் உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் கொடுக்கப்பட்டுள்ள டொமைன் பெயரை அது காட்டும்.(இந்தியாவிற்கு .in போன்று)
சரி விஷயத்துக்கு வருவோம்.

நண்பர் Thameem கேட்டிருந்தார். How can i get .com or .in website. Can you post me the details (including the expences).
நண்பர் Shiva கேட்டிருந்தார். புதிதாக இனையதளம் ஆரம்பிக்க யாரிடம் பதிவு செய்வது நல்லது.ஆண்டொன்றுக்கு (தோராயமாக) எவ்வளவு கட்டணம் இருக்கும்.
.com போன்ற சர்வதேச டொமைன் பெயர்களை பதிவுசெய்ய http://www.godaddy.com/ போன்ற பேர்போன இணையதளங்களை அணுகலாம். டாலரில் காசு செலுத்த வேண்டும். வருடத்திற்கு ஒரு .com பெயருக்கு 10 டாலர்கள் வரை செலவுஆகும்.
.com மட்டுமல்லாது இந்திய டொமைன்பெயர்களான .in மற்றும் .co.in போன்ற பெயர்களையும் பதிவுசெய்ய http://www.hostindia.net/ என்ற இணைய தளத்தை அணுகலாம். ஒரு .com பெயருக்கு வருடத்திற்கு ரூ 349 செலவாகும். ஒரு .in பெயருக்கு வருடத்திற்கு ரூ 699 செலவாகும்.
மொத்தமாய் பல டொமைன் பெயர்களை வாங்கினாலோ அல்லது பலவருடங்களுக்கு ஒரு பெயரை பதிவுசெய்தாலோ அல்லது பிற சேவைகளையும் சேர்த்துவாங்கினாலோ இந்த விலைகளில் தள்ளுபடிகள் கிடைக்கும்.
நண்பர் Shiva கேட்டிருந்தார். நமது தளத்துக்கு யாராவது வருகை புரிந்தால் அதில் நமக்கு லாபம் ஏதாவது வருமா?
சிவா, அது முழுக்க முழுக்க உங்கள் தளத்தின் பயன்பாட்டை பொறுத்தது. Sify Mall போன்ற நேரடியாக வர்த்தக நோக்கில் வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் எதாவது விற்றுக்கொண்டே இருக்க வேண்டும். காசு வரும். Tamil Matrimony போன்று மக்களுக்கு சேவைகள்/உதவிகள் செய்தும் காசுகள் சம்பாதிக்கலாம். இன்றைய அளவில் வெளிநாடுவாழ் இந்தியர்களையும், இந்திய பெருநகர மக்களையும் கருத்தில் கொண்டு முழுக்க முழுக்க புத்தம் புதிதாய் அவர்க்ளுக்கு எதாவது செய்தால் சூப்பர் ஹிட் ஆகலாம். உட்கார்ந்து யோசிக்கவேண்டும். அதை மென்பொருள் வடிவாக்க வேண்டும். நிறைய வேலை இருக்கிறது. காலப்போக்கில் பட்டி தொட்டிகள் வரைக்கும் இணைய இணைப்புகள் வரும் போது இதன் போக்கு இன்னும் வீரியமாகும்.
விளம்பரங்கள் வழியும் பணம் பண்ணலாம். அமித் அகர்வால் போல் முழுநேர வேலையாய் சீரியசாய் உட்கார்ந்து ஆங்கிலத்தில் பலருக்கும் பயனாகும் படி பிலாகினால் கூகிள் ஆட்சென்ஸ் உதவியால் ஹாண்டா சிஆர்வி வாங்கலாம்.
Html-கூட தெரிய வேண்டியதில்லை. அவ்வளவு எளிதாய் வலைபதிய மென்பொருள்கள் வந்துவிட்டன. பிரபலங்களெல்லாம் வலைப்பதிய வந்து விட்டார்கள். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர்தாப்பாச்சன் கூட வலைபதிக்கிறாராம். குமுதம் அரசு பாணியில் பைத்தியம் என்றுவிடாதீர்கள். ரசிகர்கள் குஷியில் நூற்றுகணக்கில் பின்னூட்டமிட்டு இருக்கின்றார்கள்.bigb.Bigadda.Com இல்லை xboard.us போன்ற மசாலா தளங்கள் நிறுவி அதில்வரும் விளம்பர வருவாய் மூலமும் லட்சங்கள் குவிக்கலாம்.
தமிழில் வலைப்பதிவி ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். நான் ஒரு மணிநேரத்தில் சம்பாதிப்பதை தர எனது வலைப்பதிவு விளம்பரங்கள் ஒரு மாதம் எடுக்கின்றன.
சமீபத்தில் இணையத்தில் படித்த வாசகம் ஒன்று என்னை சுள்ளென உருவக் குத்தியது போல் இருந்தது.
எதை வேண்டுமானாலும் செய். முயலு. முடி. ஆனால் உனக்கு சோறு போடும் உன் கல்வி மற்றும் வேலையை மட்டும் மறந்து விடாதே. அதில் முன்னேற ஏதாவது வாய்ப்புகள் உண்டோவென பார்த்துக்கொண்டே இரு. ஏனெனில் அதனால் தான் நீ இவ்வளவு தூரமும் வந்திருக்கின்றாய்.

எத்தனை அருமை வாசகம்.

22.4.08

அஜித் பேட்டி-விஜய் பேட்டி -ஒரு ஒப்பீடு



புது வருஷத்து ஸ்பெஷல் டிவி ப்ரோக்ரம்ஸ்'ல அஜித் பேட்டி தான் விஜய் மற்றும் சன் டிவியில் கலக்கோ கலக்குனு கலக்கிடுச்சு. இது வரை அஜீத் டிவி பக்கம் வராததால இளைய தளபதி தான் ஆட்சி பண்ணிக்கிட்டு இருந்தார் டிவியை இப்போ அஜித்தின் இந்த டிவி பிரவேசம் அவருக்கு பெரிய அதிர்ச்சி.
ஒரு சாதாரண நடிகன் பேட்டிக்கு அப்படி என்ன முக்கியத்துவம் ? இத தான் சன் டிவி ஆரம்பிச்ச காலத்துல இருந்து பாத்துகிட்டு இருக்கிறோமே? என்று நீங்க கேக்கலாம் ?
நானும் அஜித் ரசிகன் எல்லாம் கிடையாது , ஆனா இத்தன வருஷம் பேட்டி கொடுக்காம இருந்த ஒரு ஆள் பேட்டி கொடுக்குறார்யா!!!! என்ற எதிர்பார்பையும் தாண்டி அந்த பேட்டியை நம்மை சேனல் மாத்தாம பாக்க வைக்கிறது அஜித்தின் வித்யாசமான பேச்சு தோரணை , stylish உடைகள் மற்றும் கொஞ்சம் கூட அலட்டிகொள்ளாத தன்மை, நிதானமான பேச்சு இதெல்லாம் தான்,
இன்னொரு விஷயம் , அஜித் சில விசங்களை கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் உண்மை தான் சொல்லுவேன் என்று உறுதியாக இருந்ததால் அந்த பேட்டிகள் சுவாரசியம் மிக்கவையாக இருந்தன.
உதாரணத்திற்கு , விஜய் டிவியில் கோபிநாத் அஜித்திடம் "நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க ? " என்று கேட்டார்.
அதற்கு அஜித் உண்மையை மறைக்காமல் "நான் 10th std தான் படிச்சிருக்கேன் " என்றார்.
இதே இடத்தில் விஜய் இருந்திந்தால் "நான் லயோலா காலேஜுல vis com படிச்சேன்" என்று நாக்கு கூசாமல் பொய் சொல்லுவார்.
லயோலா viscom department இல் பேராசிரியர்கள் சிலர் இவர் இப்படி பேட்டி கொடுப்பதை பார்த்து அடிக்கடி வகுப்புகளில் ஏளனம் செய்வது உண்டாம்.
30 நாட்கள் கூட கல்லூரிக்கு வந்ததில்லையாம்.
கதை இப்படி இருக்க விஜய் நான் பிளஸ் டூ படித்திருக்கிறேன் என்று தானே சொல்ல வேண்டும்.
நான் ஒன்றும் விஜய் படம் புடிக்காது என்று சொல்பவன் இல்லை. நடனத்திலும் முகபாவனையிலும், கலகலப்பான நடிப்பிலும் பட்டையை கிளப்பும் விஜய் பேட்டிகளிலும் நடிக்கிறார் என்றே தோன்றுகிறது. விஜய் மட்டும் அல்ல 98 % நடிகர்கள் பேட்டியிலும் நடிக்கிறார்கள் ,
இதில் அஜீத் விதிவிலக்கு ஆனால் இதுவே அஜித்துக்கு ஆபத்திலும் முடியலாம்.
இவர் வாயிலிருந்து எதாவது ஏடாகூடமாக வார்த்தையை புடுங்கிவிட பேட்டி எடுப்பவர்கள் இனி முயற்சிக்க கூடும்.
அஜீத் பேட்டியில் ஒரு காமெடியான விஷயம், சன் டிவி யில் அஜித்தை பேட்டி எடுத்த விஜயசாரதி ஏதோ அம்மாவிடம் பேட்டி எடுக்கும் ரபி பெர்னாட் போல பம்மிக்கொண்டே பேசியது பார்ப்பதற்கு காமெடியாக இருந்தது.

ஆனா ஒன்னு , அஜித் இப்படி எப்போ பார்த்தாலும் சீரியஸாக உர் என்று மூஞ்சியை வைத்துக்கொண்டிருந்தால் பேட்டியை பார்க்கும் நமக்கு ஏதோ செய்தி சேனலில் வெளிநாட்டு அதிபர் பேட்டி பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.

பாக்தாத்தா-பெங்களூருவா? அய்யய்யோ!



கூகிள் யெர்த்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது

பாவப்பட்ட பாக்தாத் நகரின் அற்புதமான அமைப்பை பார்த்து அசந்து போனேன்,

ஒவ்வொரு தெருக்களும்,சாலைகளும் வளைவுகள் இல்லாமல், திருட்டுத்தனமான ஆக்கிரமிப்புகள் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் விசாலமாக அமைந்து உள்ளது
( அதான் அமெரிக்காகாரன் சுலபமா ஆட்டயப்போட்டாணுங்களோ)இப்படி திட்டமிட்டு உருவாக்கி இருக்கிறார்களே ,

ஒரு நல்ல அரசாங்கத்தை உருவாக்க தவறியதால் இன்று ICU வில் இருக்கும் நோயாளி போல இதன் கதை ஆகிவிட்டது.சரி நம்ம பெருமை மிகு பெங்களூரு எப்படி இருக்கு என்று பார்க்க போனால்.....அய்யோ இது என்ன கொடுமை? ........குறுகிய திட்டமிடப்படாத சாலைகள், நெருக்கடி மிகுந்த கட்டிட அமைப்பு....அப்பப்பா மூச்சு திணறி தான் போகும்.
உஷார் மக்களே .....அப்படி இருந்த அவர்களே இப்படி ஆகிட்டானுங்கோ.......இப்படி இருக்கிற நாம எப்படியும் மாறிவிட வாய்ப்பு உள்ளது.....
என்ன நான் சொல்றது?

20.4.08

எளிய அவுட்லுக் எக்ஸ்பிரஸ் backup மென்பொருள்


outlook Express மின்னஞ்சல் மென்பொருளை பயன்படுத்தும் நண்பர்கள் அநேகர்.என்னத்தான் உயர்நுட்ப மின்னஞ்சல்கள் like Outlook,Lotus Notes மென்பொருள்கள் இருந்தாலும் சிறு/குறுஅலுவலகம் மற்றும் வீடுகளில் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் ராஜாங்கம் தான்.
என்ன வேண்டுமோ அது மட்டும் கொண்டதோடு POP,IMAP,HTTP,News Group Reader இதெல்லாம் கொண்டு இது இருப்பதால் பெரும்பாலும் திருப்தி அளிக்கிறது.ஆனால் வந்திருக்கும் மெயில்களை பத்திரமாக் backup செய்ய,இருக்கும் விலைமதிப்பற்ற address book-ஐ பாதுகாப்பாய் வைத்திருக்க வழியுள்ளதா?.
இதோ ஒரு வழி..இலவச எளிய அவுட்லுக் எக்ஸ்பிரஸ் backup மென்பொருள்.இதை ஓட்டி உங்கள் மெயில்களை பத்திரமாய் இன்னொரு டிரைவிலோ அல்லது CD,DVD,USB டிரைவிலோ பேக் அப் எடுத்து வைத்திருங்கள்.எப்போது உதவும் அது என்று சொல்லமுடியாது.
Product Page
http://www.oehelp.com/OEBackup/Default.aspx
Direct download link
http://www.oehelp.com/OEBackup/oeqbfull.zip
Free Outlook Exprees Backup software

சென்னை வந்த டெல்


குர்கான்,மொகாலி,ஐதராபாத்,பெங்களூரில் வாடிக்கையாளார் சேவை மையங்களைக் (Customer Service Call Centers)கொண்ட அமெரிக்காவைச் (Round Rock, Texas) சேர்ந்த டெல்-Dell நிறுவனம் இந்தியாவில் அதுவும் சென்னையில் தனது கணிணி உற்பத்தி தொழிற்சாலையை (Manufacturing Unit) திறக்கின்றது இனிப்பான செய்தி.

ஏற்கனவே 8 உற்பத்தி தொழிற்சாலைகளை கொண்ட இந்நிறுவனத்திற்கு ஆசிய பசிபிக் பகுதியில் இது 3 ஆவது உற்பத்தி தொழிற்சாலை.50 ஏக்கரில் ஸ்ரீபெரும்புதூர் Hi-Tech Park-ல் 280 கோடி ரூபாய் செலவில் இது அமையவிருக்கின்றது.

அடுத்த ஆண்டு மத்தியில் "Made in India" என்ற பொறியோடு dell கணிணிகள் ஓகோவென வெளியாகும்.ஒரு ஆண்டுக்கு 400,000 கணிணிகள் உற்பத்திசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

20000 பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.1984- ஆம் ஆண்டு Michael Dell (படம்) என்ற University of Texas ( Austin)மாணவரால் வெறும் 1000 டாலரில் துவக்கப்பட்ட இந்நிறுவனத்தின் இன்றைய வளர்ச்சி அபாரம்.இன்று 63,700 பேர் இந்நிறுவனத்தில் வேலை செய்கின்றார்கள்.


தற்போதைய President மற்றும் CEO Kevin Rollins.சுவையான தகவல் என்னவென்றால் இந்நிறுவன கணிணிகள் மற்றும் மடிக்கணிணிகள் கடைகளில், மால்களில் விலைக்கு கிடைப்பதில்லை.இணையம் மற்றும் தொலைபேசி வழியே தான் மொத்த வர்த்தகமும் நடக்கின்றது.

இவர்கள் கஸ்டமர் சர்வீஸ் ரொம்ப பிரபலம்.

Alienware எனப்படும் உச்ச வகை மடிக்கணிணிகளும் இப்போது இவர்களோடதே.

20 ஆண்டுகளுக்கு முன் இருந்த 1GB ஹார்டுடிஸ்க்



கடந்த இருபது ஆண்டுகளில் விஞ்ஞானம் கண்ட வளர்ச்சி எத்தனை பிரமாண்டம் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.


மேலே படத்தை பார்த்தாலே நன்கு புரியும். 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த 1GB ஹார்டுடிஸ்க்கை தூக்க குறைந்தது இருவர் வேண்டும். இன்றைய 1GB SD டிரைவ் விரல் நுனியில் நின்றுவிடுகின்றது.


இது இப்படியேப் போனால் பத்துவருடம் கழித்து விரல் நுனியில் என்ன இருக்கும் என யோசித்துகூட பார்க்க இயலவில்லை. எங்கு போகின்றோம்னும் தெரியலை. எனக்கு அவ்வப்போது மின்னஞ்சல் செய்யும் வலையுலக நண்பர் MSK இப்படியாக எழுதுகின்றார்.


"உங்களது வலைப்பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் வலையோடிகளில் நானும் ஒருவன்.சமீபகால உங்களது வலைப்பதிவுகளில் ஒரு எழுத்தாளரின் ஆழம்,வலையோடி வாசகர்களின் தேடல் என்ன,தேவை என்ன என்பதைத் தெளிவாக கண்ணூட்டம் காண்பவரின் கருத்தாழம் வெளிப்படுகிறது.வலைப்பின்னல் என்பதும்,வலைத்தேடல் என்பதும் பொழுதுபோக்கு என்ற நிலை மாறி,இப்பொழுது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. உணவு, காற்று, நீர்,ஒளி இவற்றுக்கு அடுத்தபடியாக இன்றைய மானுடப்பிறப்பின் ஒரு அங்கமாக மாறிப்போனது வலைப்பின்னல்.இன்றைய நாளிலிருந்து 20 அல்லது 25 வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது அன்றைய மனிதனின் (வலைப் பின்னலற்ற)வாழ்க்கையில் இந்த உலகையும்,உறவுகளையும் தன்னோடு சார்புபடுத்திக் கொள்ள சிறிதளவேணும் காலம் கிடைத்திருக்கும்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் இதுவும் இயந்திரமயமாகிப் போனது. மெக்ஸிகோவில் இல்லறம் கொண்ட மகனுடன் வலைப்பின்னலில் முகம் பார்த்துப் பேசி, மனதில் பேரன்பும்,விழிகளில் வெள்ளத்தையும் ஒடவிடும் மதுரைத் தாய்.மலைக்கும் மடுவுக்கும் தொடர்பு கொள்ள இங்கு முடியும் என்றாலும் வலையோடலில் அன்பும்,பாசமும் ஒடமுடிவதில்லை.எங்கு முடியும் இந்த வறட்சியான வளர்ச்சி? உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம்,தெரிந்திருந்தால் தெரிவியுங்கள் எனக்கு."


என்னத்தை சொல்ல நான். விஞ்ஞானம் வளர வளர ஆயிரம் நன்மைகளை நாம் கண்டாலும் அதற்கேற்றார் போல் நாம் இழக்கும் இழப்புகளும் சொல்லிமாளாதனவே.


அந்தகாலப் பெரியோர் சொன்ன வாக்கு் தான் நினைவுக்கு வருகின்றது.


வருந்தி அழைத்தாலும் வராதன வாரா.


பொருந்துவன போம் என்றால் போகா.

19.4.08

Phishing site செய்வது எப்படி? படங்களுடன் முழு விளக்கம்.










Phishing siteசெய்வது எப்படி?படங்களுடன்


முழு விளக்கம். என்று சொல்லிக்கொடுத்தால் என்ன என்ற நல்ல (?) எண்ணத்தோடு இந்த பதிவை எழுத ஆரம்பித்த பின்பு தான் கொஞ்சம் யோசித்தேன், நமக்கு தெரிந்தால் தானே சொல்லிகொடுக்க முடியும் என்று????????
சரி எழுத உக்காந்தாச்சு பிஷிங் சம்பந்தமா எதாவது போட்டுற வேண்டியதுதான்னு இத ஆரம்பிக்கிறேன்.
ரெண்டு வருஷத்துக்கு முன்பு என்னோட யாஹூ மெயில்க்கு ஒரு யாஹூ கிரீட்டிங் கார்டு வந்தது , சரி யாரோ ஒரு நல்லவரு அனுப்பி இருக்கார்ன்னு திறக்க முயற்சி பண்ணினேன் ,
அது என்னோட யாஹூ ஐ டி மற்றும் password கேட்டது நானும் சரி இது ஒரு திருட்டுப்பயலோட வேலை தான்னு கண்டுகொண்டேன்
நம்மகிட்ட முடியுமா ? சரி நம்ம திறமைய காட்டுவோம்னு அந்த சைட்டை கொஞ்சம் டிங்கரிங் எல்லாம் பண்ணி திறந்து அது யாஹூ ஐ டி மற்றும் பாஸ் வோர்ட்டை எங்கு கொண்டு போய் சேமிக்கிறது என்று கண்டுபிடித்து அதை திறந்து பார்த்தால் !!!!!!!!!!! ஐயோ அம்மா !!! அங்கே கிட்ட தட்ட 14 ஆயிரம் திருடப்பட்ட யாஹூ ஐ டி மற்றும் பாஸ் வோர்ட்கள் இருந்தன.
அவை பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்களுடையது என்பது நன்றாக தெரிந்தது, முக்கியமாக மாணவர்கள் மற்றும் மாணவிகள் தான் அநியாயத்துக்கு தொலைதிருந்தனர். இந்திய நாட்டை சேந்தவர்கள் அதில் ஒரு ஐந்து சதவீதம் இருந்தார்கள்.
இரண்டு நாட்கள் மட்டுமே அந்த தளம் செயலில் இருந்தது.
நான் உங்களுக்கு இதன் மூலம் சொல்ல விரும்புவது என்னவென்றால் , நீங்கள் உங்களுக்கு வரும் கிரிடிங் கார்டுகளை கூட கவனமாக திறங்கள்.
உங்களுக்கு தெரியாமல் அடிக்கடி உங்கள் மெய்லை திருடர்கள் திறந்து பார்த்து கொண்டிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது அதனால் அடிக்கடி பாஸ் வோர்ட் மற்றும் பாஸ் வோர்ட் கேள்வியையும் மாற்றுங்கள்.




For example,




"http://www.yahoo.com:login&mode=secure" is a fake web site address.
Important: A legitimate Yahoo! sign-in page never starts with http://geocities.yahoo.com./




If you land on a GeoCities page with a Yahoo! sign-in box, report it as a phishing web site immediately.
Give a fake password
If you not sure if a site is authentic, don't use your real password to sign in. If you enter a fake password and appear to be signed in, you're likely on a phishing site. Do not enter any more information; close your browser. Keep in mind, though, that some phishing sites automatically display an error message regardless of the password you enter. So, just because your fake password is rejected, don't assume the site is legitimate