Showing posts with label writer sujatha Page. Show all posts
Showing posts with label writer sujatha Page. Show all posts

16.4.08

சுஜாதா மறைவுக்குப் பிறகு



சுஜாதா மறைவுக்குப் பிறகு ..
தமிழ் கூறும் நல்லுலகின் இவ்வளவு பெரிய இழப்பை யாராலும் சரிக்கட்ட முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான்.சுஜாதாவின் வீட்டில் நேற்று அலைமோதிய கூட்டத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்று தான் தோன்றியது:

"இன்று இப்படிக் கூட்டம் இருந்தாலும், நாளை முதல் இதெல்லாம் வடிந்து போக ஆரம்பிக்கும். அது உலக நியதி. இனி வரும் நாட்களில் தான் அவருடைய குடும்பத்தார் தனிமையில், சோகத்தில், பழைய நினைவுகளை அசை போட்டபடி, தவிக்க ஆரம்பிப்பார்கள். அவர்களைக் கொஞ்சமாவது தேற்றும் வண்ணம் நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும்".'என்னால் முடிந்த அளவுக்கு,

சென்னையில் இருக்கும்போதெல்லாம் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது, என்னாலான சின்னச்சின்ன உதவிகளை அவர்களுக்குச் செய்வது, மற்ற நண்பர்கள் மூலமாகவும் இதையெல்லாம் தொடரச் செய்வது' என்பது ஓரளவுக்கு நன்மை பயக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.எந்த விதமான விளம்பரத்தையும் எதிர்பாராமல்,

பல பிரபல திரையுலக நண்பர்கள் சுஜாதா குடுமப்த்தினருக்கு உதவியிருப்பது, உதவி வருவது எனக்குத் தெரியும். அந்த நல்ல நெஞ்சங்கள் நீடூழி வாழட்டும்.

பல்பரிமாண எழுத்தாளர் சுஜாதா




பல்பரிமாண எழுத்தாளர் சுஜாதா
மரணம் தொடர்பாக சுஜாதா ஆயத்தமாகவே இருந்தார் எனச்சொல்ல வேண்டும்। "இப்போதெல்லாம் ஹிந்துவில் முதலில் obtituary தான் பார்க்கிறேன்। இறந்தவர் என்னைவிட இளையவர் என்றால் பரவாயில்லை நாம் இன்னும் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுகொள்கிறேன்। என்னை விட வயதானவர் என்றால் என் நாள் எந்நாள் என்று யோசனை வருகிறது" -


இதை அவரின் 'கற்றதும் பெற்றதும்' என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார்। எனது வாசிப்பு பரிச்சயங்களில் அதிசயிக்க வைத்த எழுத்தாளர்।
தொடாத தலைப்பே இல்லை எனும் அளவிற்கு அனைத்து துறையிலும் தனது எழுத்தைக் கொண்டு சேர்த்தவர்। 'எந்த மரபையும் உடைக்கின்றபோது ஒரு புதுமையான இல
க்கியம் தோன்றும்' என்ற வகையில் அதுவரை இருந்த எழுத்து நடைகளை மாற்றி தனக்கென்ற வகையில் வேகமான சுவாரசியமான நடைக்குள் தமிழ் மொழியைக்கொண்டு வந்தவர்।


இவரது எழுத்து வரிகளில் கலந்திருக்கும் நகைச்சுவை அலாதியானனது: நாசூக்கானது। சொற்களின் அளவைக்குறைத்து கதையில் தன்னுடன் வாசகனையும் வரச்செய்து பெரும்பாலானவற்றை வாசகனே ஊகித்து உணரும் வகையிலான இரசாயனத்தை தனக்கும் வாசகனுக்குமிடையில் தனது மொழிநடை மூலம் ஏற்படுத்திக்கொண்டவர்।


சூழ்நிலைகளையும் சம்பவங்களையும் கூர்ந்து அவதானித்து அவற்றை மிகச்சில சொற்களில் சொல்லி முடிக்கின்ற சாகசக்காரர்। தலைமுறை இடைவெளி இல்லாமல் இக்கால இளைஞர்களினதும் எண்ணஓட்டங்களையும் புரிந்து கொண்டு எழுத்திலும் இளமையைக் கொண்டு வந்தவர்। ஆரம்பகால இவரது சிறுகதை முயற்சிகள் இன்றும் பிரமிப்பூட்டுபவை। வேறுபட்ட கருக்கள், வேறுபட்ட அணுகுமுறைகள் எழுத்தில் வடிக்கமுடியாதவை। சிக்கலான மருத்துவ, விஞ்ஞான,தொழில்நுட்ப,கணணி விடயங்களையும் மிக எளிமையான எடுத்துக்காட்டுக்களோடு பாமரரும் விளங்கும் வகையில் தமிழில் தந்தவர்।


இளமைக்காலத்தை பாட்டியுடன் சிறீரங்கத்தில் கழித்த பசுமையான நினைவுகளை சிறீரங்கத்து தேவதைகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்। கவிஞர் வாலி சிறீரங்கத்தில் இவரது அயலவர்। திருச்சி சென்।ஜோசப் கல்லூரியில் பெளதிகவியலில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும்போது


முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுடன் சகபாடியாக இருந்திருக்கிறார்। இதன் பின்னர் சென்னை தொழில்நுட்ப நிறுவகத்தில் இலத்திரனியல் துறையில் பட்டம் பெற்றார்। இந்திய அரசுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கும் குழுவிற்கு தலைமை தாங்கி செயற்பட்டவர்। இவரது விஞ்ஞானக்கதைகளும் அற்புதமானவை। என் இனிய இயந்திரா॥ மீண்டும் ஜீனோ போன்ற நூல்களில் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளும் ஒரு எந்திர நாய்பற்றி கற்பனை செய்துள்ளார்। அது தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு ஒரு நிலையில் தவறே செய்யாத ஒரு நிலையை அடைகிறது।


இந்த நாயைவைத்து பின்னப்பட்ட அருமையான விஞ்ஞானக்கதை। இவரது துப்பறியும் நாவல்கள் இவரிற்கு அதீத இரசிகர்களைத் தேடித்தந்தது। இவரது கற்பனையான பாத்திரங்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள் என்று பலரை நம்பவைத்தது இவரது எழுத்து। வெகுஜனப்பத்திரிகைகளிலும் சரி, சிறுபத்திரிகைகளிலும் சரி தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துக்கொண்டவர்। இவர் எழுதிய நாடகங்கள் கூடப்புகழ்பெற்றவை। பூரணம் விஸ்வநாதன் நடிப்பில் இவரது நாடகங்கள் சிலாகிக்கப்படட்டன। நாடகத்தையும் மேடை அமைப்பு பின்னணி முதலிய தொழில்நுட்ப அம்சங்களையும் உள்ளடக்கியதாக எழுதியது அவரது பரந்து பட்ட அறிவிற்கு சான்று।
'கனவுத்தொழிற்சாலை' என்ற நூல் சினிமா திரைஉலகின் ஜிகினா பக்கத்திற்கான மறுபக்கத்தைக்காட்டி சாதாரண மக்களுக்கும் திரைஉலகு குறித்த உண்மை நிலையை எடுத்துக்காட்டியது। இவரது தயாரிப்பில் உருவான பாரதி படம் அனைவரதும் பாராட்டைப்பெற்றது। அறிவியல் சார்ந்த ஒரு படமாக 'விக்ரம்' என்ற படத்திற்கான கதை திரைக்தையை எழுதினார்। தனது கதைகள் திரைப்படமாகும்போது நடக்கும் கதை சீர்குலைவுகளை விமர்சித்த இவர் ஒரு திரைப்படம் ஒன்று உருவாகுவதற்கான சவால்கள் சிரமங்கள் குறித்தும் அவ்வப்போது எழுதியுள்ளார்। சென்னை மீடியா ட்ரீம்சின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்।
சிறுகதை நாவல்களை விட இவர் ஜீனியர் விகடனில் எழுதிய ஏன் எதற்கு எப்படி?, கணையாளியில் எழுதிய 'கணையாளியின் கடைசிப்பக்கம்', ஆனந்த விகடனில் எழுதிய கற்றதும் பெற்றதும் என்பவை மிகப்பிரபலமாயின। மூளை மற்றும் ஓமோன்கள் குறித்து எழுதிய 'தலைமைச்செயலகம்' சிறந்த அறிவியல் நூலாகும்। அவரது நுண்ணறிவும் ஆராயும்திறனும் மொழித்திறனும் சேர்ந்து எமக்கொரு நல்ல எழுத்தாளரைத்தந்தது.
பெண்கள் குறித்து சற்று அதிகமாகவே வர்ணிப்பவர் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் 'எப்போதும் பெண்' என்ற தன் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்। 'இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள், படியுங்கள்। இதன் விஷயம் எனக்குப்பிடித்தமானது। பொய் இல்லாமல் பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன்। பெண் என்கிற தீராத அதிசயத்தின்பால் அன்பும் ஆச்சரியமும் ஏன் பக்தியும்தான் என்னை இதை எழுதச்செலுத்தும் சக்திகள்'


ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்தைந்தாம் ஆண்டு மே மாதம் மூன்றாம் நாள் பிறந்த சுஜாதா அவர்கள் தனது 73ம் வயதில் காலமாகியிருக்கிறார்கள்। சிறீரங்கநாதரில் ஆழ்ந்த பக்தியும் ஆழ்வார்களின் பிரபந்தங்களில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்ட சுஜாதா அவர்களின் வாழ்வு நிறைவானது என்பதில் ஐயமில்லை। அன்னாரின் எழுத்துப்பணிக்கு சிரம்தாழ்த்திய அஞ்சலிகள்।
கவிதைகளிலும் ஹைக்கூக்களிலும் வெண்பாக்களிலும் நாட்டங்கொண்டவராகிய இவர் தனது எழுத்துக்களில் இளைய தலைமுறையினரை அறிமுகப்படுத்தவும் தவறுவதில்லை। விஞ்ஞானம் சம்பந்தமான ஹைக்கூக்கள் சைஃபிகூ எனப்படுகின்றன। இதில் சுஜாதாவின் முயற்சி இவ்வாறாக இருக்கிறது।
சந்திரனில் இறங்கினேன்
பூமியில் புறப்படும்போது
கதவைப்பூட்டினேனா?
அவரது எழுத்துக்கு என்றும் மரணமில்லை.


கருத்துக்கள்:
அன்புடன் புகாரி said...
சிறுகதை நாவல்களை விட இவர் ஜீனியர் விகடனில் எழுதிய ஏன் எதற்கு எப்படி?, கணையாளியில் எழுதிய 'கணையாளியின் கடைசிப்பக்கம்', ஆனந்த விகடனில் எழுதிய கற்றதும் பெற்றதும் என்பவை மிகப்பிரபலமாயின। மூளை மற்றும் ஓமோன்கள் குறித்து எழுதிய 'தலைமைச்செயலகம்' சிறந்த அறிவியல் நூலாகும்। அவரது நுண்ணறிவும் ஆராயும்திறனும் மொழித்திறனும் சேர்ந்து எமக்கொரு நல்ல எழுத்தாளரைத்தந்தது.உண்மை. நான் சமீபகாலமாக வாசித்ததெல்லாம் அவரின் கட்டுரைகளைத்தான். சிறுவயதில்தான் கதைகள் வாசித்தேன்.அன்புடன் புகாரி


சுஜாதாஞ்சலி



சுஜாதாஞ்சலி
சிறுகதை, நாவல், நாடகம், அறிவியல் கதைகள், அறிவியல் கட்டுரைகள். கவிதைகள், பொதுக் கட்டுரைகள், திரைப்பட கதை வசனம், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் முத்திரை பதித்த திரு சுஜாதா [S.ரங்கராஜன்] நேற்றுக்காலமானார்.அன்னாரக்கு எமது அஞ்சலிகள்.


ஈழத்தமிழர் பற்றியும் அவர் தப்பான அபிப்பிராயங்களைக்கொண்டிருக்காத மனிதர் அவர்.


இத பற்றி கானாபிரபா அண்ணாவின் வலைப்பூவில் அவருக்கு சுஜாதா வழங்கியபேட்டியில் கேட்டேன் " நம்பிக்கையைத் தளர விடாதீர்கள் " என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.


அன்னாரைப்பற்றிய சிறுதுளிகள்


எழுதிய நாவல்கள்


பதவிக்காக


ஆதலினால் காதல் செய்வீர்


பிரிவோம் சந்திப்போம்


அனிதாவின் காதல்கள்


எப்போதும் பெண்


என் இனிய இயந்திரா


மீண்டும் ஜீனோநிலா நிழல்ஆ


கரையெல்லாம் செண்பகப்பூ


யவனிகாகொலையுதிர் காலம்


வசந்த் வசந்த்


ஆயிரத்தில் இருவர்


பிரியா


நைலான் கயிறு


ஒரு நடுப்பகல் மரணம்


மூன்று நிமிஷம்


கணேஷ்காயத்ரிகணேஷ்


x வஸந்த்அப்ஸரா


மறுபடியும் கணேஷ்


வீபரீதக் கோட்பாடுகள்


அனிதா இளம் மனைவிகாந்தளூர் வசந்தகுமாரன் கதைபாதிராஜ்யம்24 ரூபாய் தீவுவசந்தகாலக் குற்றங்கள்வாய்மையே - சிலசமயம் - வெல்லும்கனவுத்தொழிற்சாலைரத்தம் ஒரே நிறம்மேகத்தைத் துரத்தினவன்நிர்வாண நகரம்வைரம்ஜன்னல் மலர்மேற்கே ஒரு குற்றம்உன்னைக் கண்ட நேரமெல்லாம்நில்லுங்கள் ராஜாவேஎதையும் ஒருமுறைசெப்டம்பர் பலிஹாஸ்டல் தினங்கள்ஒருத்தி நினைக்கையிலேஏறக்குறைய சொர்க்கம்என்றாவது ஒரு நாள்நில் கவனி தாக்குஎழுதிய குறுநாவல்கள்ஆயிரத்தில் இருவர்தீண்டும் இன்பம்குரு பிரசாத்தின் கடைசி தினம்மெரினா சிறுகதைஸ்ரீரங்கத்துக் கதைகள்கட்டுரைகள்கணையாழியின் கடைசி பக்கங்கள்கற்றதும் பெற்றதும்கடவுள் இருக்கிறாராதலைமை செயலகம்எழுத்தும் வாழ்க்கையும்ஏன் ? எதற்கு ? எப்படி ?சுஜாதாட்ஸ் திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்காயத்ரிகரையெல்லாம் செண்பகப்பூப்ரியாவிக்ரம்வானம் வசப்படும்நாடகம்Dr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு்கடவுள் வந்திருந்தார்திரையாசிரியராக பணியாற்றிய திரைப்படங்கள்ரோஜாஇந்தியன்ஆய்த எழுத்துஅந்நியன்பாய்ஸ்முதல்வன்விசில்கன்னத்தில் முத்தமிட்டால்சிவாஜி the பாஸ் சில சுவையான தகவல்கள்* இறந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் முன்னால் ஜனாதிபதி அப்தூல் கலாமும் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.*சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. சுஜாதா திரைக்கதை எழுதிய கடைசி திரைப்படம் சிவாஜிசுஜாதாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லத் தேவையில்லை. இப்போதும் சிவாஜி படத்தில் எழுதிய வரி ஒன்று ஞாபகம் வருகிறது "சாகும் நாள் தெரிந்து போய்விட்டால் வாழும் நாள் நரகமாகிவிடும் "மற்றவர்களுக்கு எப்படியோ என்னைப்பொறுத்தவரையில் அவர் ஓர் சகாப்தம்வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதற்கமைய போய் வாருங்கள் சுஜாதா! போய் வாருங்கள் சுஜாதா அறிந்திராத உலகிற்கு ! நன்றி :- WIKIPEDIA

சுஜாதா அஞ்சலி கூட்டம் - பெங்களூர்-31.03.2008


சுஜாதா அஞ்சலி கூட்டம் - பெங்களூர்-31.03.2008
பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் சுஜாதா நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. நானும் ஒரு சுஜாதா வாசகனாக என் நண்பருடன் சென்றிருந்தேன். கூட்டம் முதலில் கப்பன் பூங்காவில் என்று சொன்னார்கள், ஆனால் திடீர் என்று ஞானோதயம் வந்து தமிழ்ச் சங்கத்தில் என்று அறிவித்தார்கள். கொசுக்கடிக்கு இந்த இடம் தேவலாம் என்று போனேன்.
திண்ணையில் அறிவிப்பு மாறிக்கொண்டே இருக்க, கூட்டம் மாலை 4:00லா, 4:30மணியா என்ற குழப்பம் இருந்துக்கொண்டிருக்க. எதுக்கும் போகும் முன் திண்ணையில் ஒரு தடவை பார்க்கலாம் என்று பார்த்தால் 5:00மணி என்று போட்டிருந்தது. 4:45 மணிக்கு போன போது
'பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்' வெளியில் சாக்பீஸில் 'சுஜாதா நினைவு அஞ்சலி கூட்டம்' மாலை 5:30 என்று பலகையில் எழுதியிருந்தார்கள்.
பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் 'அல்சூர் லேக்' பக்கத்தில் இருக்கிறது. நான் பலபேரிடம் விலாசம் கேட்ட போது, எல்லோரும் இப்படி தான் சொன்னார்கள். லேக் பக்கத்தில் தமிழ்ச் சங்கம் என்று கேட்டால் யாராவது குளத்தில் தள்ளிவிடும் அபாயம் இருப்பதால் முகவரியை கொடுக்கிறேன்: சரியான முகவரி #59, அண்ணாசாமி முதலியார் தெரு.
5:35மணி ஆகியிருந்தது. யாரோ ஒருவர் சுஜாதா படத்தை கொண்டு வந்து மாலை போட்டு, பக்கத்தில் இரண்டு பூத்தொட்டிகளை வைத்தார். ஒருவர் அவர் புத்தகங்களை எடுத்து வந்து மேடையில் அடுக்கினார். இருபது வருஷம் கழித்து சுஜாதா இறந்த செய்தி கேட்டு நான் சென்னை வந்தேன் என்று ஆதாரத்துடன் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
வானம் லேசாக மூடியிருந்தது. மழை வரும் அறிகுறி தென்பட்டது. 5:45மணி ஆனது கூட்டம் நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. ஒருவர் தமிழ்ச் சங்க நிர்வாகியிடம் போய் மணி 5:45 ஆகிவிட்டதே கூட்டத்தை ஆரம்பிக்கலாமா?" என்று கேட்டவுடன். கொஞ்சம் டென்ஷனாகி "தலைவர் இன்னும் வரவில்லையே ? தலைவர் வராமல் கூட்டமா ?' தமிழ்ச் சங்கத்திற்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது தெரியுமா?" என்று பதில் சொன்னார்.
பாரம்பரியம் மிக்க இந்த தமிழ்ச் சங்கத்தின் தலைவரோ உபதலைவரோ ஒருவர் கோட் சூட் டையுடன் அப்போது வந்தார்.( நான் கிளம்பும் போது, என் மனைவி "தமிழ்ச் சங்கத்துக்கு போறீங்க ஒரு வேட்டியை கட்டிக்கொண்டு போக கூடாதா? இப்படி ஜீன்ஸ் போட்டுக்கொண்டு போறீங்களே ?" என்று சொன்னது நினைவுக்கு வந்தது )
வந்த தலைவர், மற்றும் நிர்வாகிகள் (தொண்டர்கள் என்றும் சொல்லலாம்) எல்லோரும் முதல் மாடிக்கு சென்றுவிட்டார்கள். காப்பி குடிக்க.
கீழே அரங்கில் மாலை போட்ட சுஜாதாவும், என்னை போன்ற சுஜாதா விஸ்வாசிகளும் தனியாக பேசிக்கொண்டிருந்தோம். மணி 6:00 ஆகியிருந்தது. ராகுகாலம் கூட கிடையாது ஏன் இவ்வளவு லேட் என்று சிலர் மேலே போய் அவர்களை அழைத்து வந்தார்கள். கூட்டம் சரியாக 6:20 க்கு ஆரம்பம் ஆனது.
பேச்சை ஆரம்பித்தவர் "கப்பன் பூங்காவிற்கு பதில் தமிழ்ச் சங்கத்திலேயே நினைவு அஞ்சலி விழாவை கொண்டாட முடிவு செய்தோம்" என்று தன் பேச்சை ஆரம்பித்தார்.
சுஜாதா பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு கமல், ரஜினி, ஷ்ரேயா போன்றவர்களை பற்றி விலாவாரியாக சொல்லிவிட்டு. சுஜாதாவிற்கு அஞ்சலி என்று முடித்தார்கள். மணி 7:25 ஆகியிருந்தது. என்னை 'சுருக்கமாக' பேச அழைத்தார்கள். நான் நன்றி, வணக்கத்துக்கு இடையில் 'சுஜாதா, சுஜாதா' என்று இரண்டு முறை சொல்லிவிட்டு வந்து உட்கார்ந்தேன். கூட்டம் முடிந்ததும், தமிழ்ச் சங்கத்தில் திடீர் என்று நல்ல கூட்டம். என்ன என்று பார்த்தால் வெளியில் இடி மின்னலுடன் மழை. மழைக்கு நிறைய பேர் ஒதுங்கினார்கள்.
ஒதுங்கியவர் ஒருவர் யாரிடமோ "இங்கு என்ன சார் இன்னிக்கு டிராமாவா?" என்றார்
வெளியே போகும் போது, துண்டு காகிதத்தை ஒருவர் என்னிடம் கொடுத்தார். ஞாயிறு அன்று நூல் வெளியீடு, மற்றும் தொல்காப்பியர் கருத்தரங்கம், மாலை 3:00 மணி என்று போட்டிருந்தது. திங்கட்கிழமை போனால் சரியாக இருக்கும் என்று எண்ணினேன்.
பிகு: 'பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்', ''பெங்களூர் தமிழ் சங்கம்' எது சரி என்று தெரியலை. 'பெங்ளூர்த் தமிழ்ச் சங்கம்' என்று தான் எல்லா இடங்களிலும் எழுதியிருந்தது.

Comments:

1.தமிழ்நெறியன்
"பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்"?
நன்றாகத்தானிருக்கிறது.
"தமிழர்களுக்கிடையே ஒற்றுமை மிகுதியாக இல்லை. அதனால், ஒற்றாவது மிகுதியாகட்டும். பெயரிலாவது. பெயரளவிலாவது" என்று நினைத்திருப்பார்கள்.
உலகில் எல்லாமே பெயருக்குத்தான் நடக்கிறது. பெயரளவில் நடக்கிறது.
Don't sweat the small stuff படித்திருப்பார்கள். தமிழர்கள் அல்லவா.
2
அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த அபாக்கியசாலிகளில் நானும் ஒருவன்.
சுஜாதா 20 வருடங்கள் வாழ்ந்து, தமிழ் இலக்கிய சாதனை படைத்த பெங்களூரில் இந்தக் கூட்டத்திற்கு சரியாக 30 பேர் வந்திருந்தனர் (மேடையில் இருந்த தலைவர் வகையறாக்கள், எடுபிடிகள், பார்வையாளர்கள் எல்லாம் சேர்த்து - முடியும்போது எண்ணியது).
தேசிகன், அங்கு உங்களது 5 நிமிட உரை தான் சுஜாதாவுக்கு உண்மையான, ஆத்மார்த்தமான அஞ்சலி என்று சொல்லலாம். சுஜாதாவின் பூத உடலை தகனம் செய்கையில் அவரது வாசகரான சுடுகாட்டுப் பணியாளர் ஒருவர், சுஜாதாவின் இறுதி வழியனுப்புதலில் தன் பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக அவரது ஷிஃப்டை மாற்றிக் கொண்டு வந்தார், கண்ணீருடன் தன் பணியை செய்தார் என்று நீங்கள் கூறியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. "ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர், ஒரு வெட்டியான் இருவர் மனத்தையும் கவர்ந்த எழுத்தாளர் - அது தான் சுஜாதா" என்று நீங்கள் முடித்தது நெஞ்சைத் தொட்டது.
அதற்கு முன் பேசிய அனைவரும் (அந்த ஜிப்பா அணிந்த பேராசிரியர் தவிர்த்து) இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பொருத்தமில்லாத விஷயங்களையும் பேசியது அங்கு இருந்த சொற்ப சுஜாதா வாசகர்களை வ்ருத்தியிருக்கும் என்பது நிச்சயம். குறிப்பாக கட்டைத் தொண்டையில் நீண்ட நேரம் பேசிய ஆள் ஒரு மாபெரும் இலக்கியகர்த்தாவை, மக்கள் மனம் கவர்ந்த ஒரு எழுத்தாளரைப் பற்றிப் பேசுகிறோம் என்ற பிரக்ஞை இல்லாமல், ஏதோ தனக்குத் தெரிந்த யாரோ ஒருவரைப் பற்றிச் சொல்வது போலவே கடைசி வரையும் பேசிக் கொண்டிருந்தது அபஸ்வரம்.
நன்றி.

inspired by சதீஷ் — #5


இந்த எழவுக்காகத்தான் எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊர் தமிழ்ச் சங்கம் இருக்கும் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை.
ஆனாலும் உங்களுக்கு அசாத்திய பொறுமை! எல்லாவற்றையும் (சுஜாதாவுக்காகத்) தாங்கிக்கொண்டு வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!
இப்பதிவை அவர்களுக்கு அனுப்பினீர்களா?



3] from: CHANDRAMOWLEESWARAN
சுஜாதா அளவுக்கு பெங்களூரை வர்ணித்தவர் யாரும் இல்லை என்பது உலகம் அறிந்த உண்மை. அவரது படைப்புகளில் பெரும்பான்மை அவர் அங்கு வசித்த போது எழுதப்பட்டவை என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள் அந்த ஊர் தமிழர்கள். அவர் பாணியிலேயே "பசித்த புலி தின்னட்டும்" என சொல்லத்தோன்றுகிறது. ஆனால் யாரையும் திட்டி எழுதி அவர் நம்மை பழக்க்கவில்லையே. போகட்டும் விடுங்கள் . அவர் கற்பூரம் !! இப்போது திருநாட்டில் அரங்கன் முன்பு சுடரும் கற்பூரம் !! நமக்கு என்றும் மனங்களில் சுடரான கற்பூரம் !!!!
reply to this comment Tuesday, 18.03.08, 11:15:21
show comment in his contextreset
4.from:
revathi.narasimhan
அவரை முற்றும் அறிந்தவர், தெரிந்தவர் என்று யாரும் உணரவில்லை. உணராதவர்கள் அவரைப் பற்றிப் பேசித்தான் என்ன ஆகப் போகிறது.விடுங்கள். அவருக்கு இதெல்லாம் தேவை இல்லை என்றுதான் சட்டேன்று கிளம்பி விட்டாற்.
reply to this comment
show comment in his contextreset
[
5] from: உண்மைத்தமிழன்

இப்போதெல்லாம் அமைப்புகள் எல்லாவற்றிலும் அரசியல் தங்குத்தடையின்றி ஊடுறுவியிருக்கின்றன.
விட்டுத் தள்ளுங்கள்.. அழைப்புக்கிணங்கி வாத்தியாரின் பெயரை பதிவு செய்துவந்து விட்டீர்கள்.
இதுவே போதும்.
நம் வாத்தியாருக்கு புத்தகங்களே சாட்சி.. குரல் ஓட்டுத் தேவையில்லை..
அவருடைய பெயர் சாசுவதம் பெற்றது.. அழியாப் புகழ் பெற்றவருக்கு வேறு புகழ் தேவையில்லை..
தாங்கிக் கொண்ட தங்களுக்கும் நன்றிகள்..
reply to this comment Tuesday, 18.03.08, 12:06:34
show comment in his contextreset
[
6] from: Ravi

this is quite embarasing, good i didnt happen to attend this...
~Ravi
reply to this comment Wednesday, 19.03.08, 15:36:16
show comment in his contextreset
[
7] from: vedhagopalan
Your narration about the condolence meeting was really humorous. this irony is the real Anjali for our great master!
reply to this comment Friday, 21.03.08, 01:14:13
show comment in his contextreset
[
8] from: Ramasundaram
we are pained to read the article "akanda pajanai" that has come in this week Thinnai (
http://www.desikan.com/blogcms/url).
It seems that only your speach has given some satisfaction to the visitors of the meeting. You have gone there as hanuman would do to a ramayana sangirthan, and have saved the face of the great writer.
reply to this comment Friday, 21.03.08, 20:31:35
show comment in his contextreset
[
9] from: Rajagopal,


Neenda natkalaga bangalore-il vasikkum Sujatha vin Vasganagiya enakku andha Anjali Meeting patri theriyamal poi vittadhu.Therinthirunthal andha koottathirku vandha 31 vadhu nabaraga irundhiruppen. Enakku andha bakkiyam kidaikkavillai endru varundhugiren.


எளிமையான ஜீனியஸ் சுஜாதா- ஷங்கர்



மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஒரு எளிமையான ஜீனியஸ். அவரது மறைவை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். சுஜாதா மறைவால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர் ஷங்கர்தான். அவரது பெரும்பாலான படங்களுக்கு சுஜாதாதான் வசனம் எழுதியிருக்கிறார்.

தொழில் தவிர்த்து, இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். சுஜாதாவை தனது தந்தை ஸ்தானத்தில் தான் வைத்திருந்தார் ஷங்கர். சுஜாதாவின் மறைவினால் பெரிதும் கலங்கியுள்ள ஷங்கர், அவரை எளிமையான ஜீனியஸ் என புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து ஷங்கர் வெளியிட்டுள்ள செய்தியில், எழுத்தாளர் சுஜாதா ஒரு எளிமையான ஜீனியஸ், எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய இழப்பு எழுத்துலகத்துக்கு மட்டுமில்லை திரை உலகிற்கும் தான். அவருடன் இந்தியன் படத்திலிருந்து, முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி என்று நான்கு படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.

இந்த படங்களில் அவர் வசனம் எழுதியிருந்தாலும் அவருக்கு மிகவும் பொருத்தமான தீனி போடும் படம் ரோபோ. என்னுடைய கேரியரில் அவருடைய பெஸ்ட் வொர்க் இந்த படத்தில் இருக்கும் என்று நினைத்திருந்தேன். அவரும் எனக்கு இதுதான் ரொம்ப பிடித்தமான புராஜெக்ட் என்று சொல்வார். இந்த படம் முடிவதற்குள்ளாகவே எங்களை விட்டு மறைந்து விட்டார். ஒவ்வொரு படத்துக்காகவும் டிஸ்கஷனுக்காக பத்து நாட்கள் வெளியூர் போவோம்.

அந்த இனிமையான நாட்களை மறக்க முடியாது. கதை போக்கையும், அதிலுள்ள சிக்கல்களையும், குறைபாடுகளையும் மிக அழகாக அலசுவார். அவருடைய சிந்தனை எப்பொழுதும் ஒரு கல்லூரி மாணவன் மாதிரி இளமையாக இருக்கும். எவ்வளவு பெரிய விஷயத்தையும் சுருக்கமாகவும், நவீனமாகவும், சுவாரசியமானதாகவும் எழுதிக்கூடியவர். சமயத்தில் நண்பராகவும், சமயத்தில் ஒரு ஆசிரியராகவும் நான் அவரை உணர்வேன்.


அவருக்கு பணத்தாசை கிடையாது. சம்பளம் கேட்கவே தெரியாதவர். சம்பளம் பற்றிப் பேசினால், 'எதாவது கொடுங்க' என்பார். ஆசைகள் ஏதும் இல்லாத எளிய மனம் கொண்டவர். யாரையும் காயப்படுத்த மாட்டார். எல்லோரையும் மதிக்கும் குணமுடையவர். திறமை எங்கிருந்தாலும் கண்டெடுத்து பத்திரிகைகள் வாயிலாக அவர்களை அடையாளம் காட்டுவார். எதற்கும் கலங்க மாட்டார், எதற்கும் உணர்ச்சி வசப்பட மாட்டார். பாசாங்கு இல்லாதவர். அவர் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்துகொள்ளும் போதுகூட அவர் அதை ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை. கூல் அண்டு டேக் இட் ஈசி என்பார்.


எனக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு போன் பண்ணினால் அதற்கு அவர் மிகச் சுலபமாக தீர்வு சொல்லி நொடியில் தீர்த்து விடுவார். அதற்கு நன்றி சொன்னால், எதற்கு நன்றியெல்லாம் நீ என் மகன் மாதிரி என்பார். இந்த இழப்பு அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல எனக்கும் தான்... இதை என்னால் அவரது பாணியில் 'கூலாகவோ ஈசியாகவோ' எடுத்துக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் ஷங்கர்.

ஹாப்பி பர்த்டே சுஜாதா 70வது பிறந்த நாள்





ஹாப்பி பர்த்டே சுஜாதா ! 70வது பிறந்த நாள்
சுஜாதா எழுதிய எல்லாவற்றையும் படித்து அனுபவித்திருக்கிறேன். அந்த அனுபவம் குதூகலம், விளையாட்டு, பக்தி, உற்சாகம், துக்கம் என கலவையானது. ஆனால் நேற்று ஆனந்த விகடன் 'கற்றதும் பெற்றதும்'ல் சுஜாதா எழுதிய இந்த கட்டுரை என்னை கொஞ்சம் டிஸ்டர்ப் செய்தது. முதுமை ஒரு தவிர்க்க இயலாத கட்டளை என்ற போதிலும் அதை எதிர்கொள்வது ஒரு கலை. வயோகதிகத்தின் அச்சுறுத்தும் இருண்ட கனவுகளை அங்கதமாக மாற்றி அதனோடு விளையாடுவதற்கு வாழ்க்கையின்மீதான ஒரு பெரிய தரிசனமும் சுய வெளிச்சமும் இருந்தால்தான் சாத்தியம். சுஜாதாவின் இந்தக் கட்டுரை அந்த வெளிச்சத்தை கொஞ்ச நேரம் நம் மனங்களில் ஏற்றுகிறது. அவர் இந்தக் கட்டுரையில் கூறியிருக்கும் ஞாபக மறதி உட்பட பல symptoms எனக்கு இந்த வயதிலியே இருப்பதை நினைத்தால் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறதுஇன்று தனது 70வது பிறந்த நாள் காணும் திரு.சுஜாதாவிற்கு என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள். அவரை ஸ்ரீரங்கநாதர் நல்ல உடல் நலத்துடன் வைத்துக்கொள்ள பிரார்த்திக்கிறேன். நான் சுஜாதாவின் தீவிர வாசகன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன்.


இந்த வார 'கற்றதும் பெற்றதும்'ல் சுஜாதா...

மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். "யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார். நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன். "எதுக்குப்பா?" "தொடுங்களேன்!" சற்று வியப்புடன் தொட்டார். "மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார். "ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..." "இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார். "உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன். அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?" "ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன்.

தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை.

‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை. மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது.

ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்! டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.

மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன.

ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன்.

எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!

சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!". ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது.

நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை.

பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன். இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன்.

சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது. ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).

இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.

தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.

அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று. நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது.

பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான்.

வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள்.

மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!

நன்றி: ஆனந்த விகடன்



ஹாப்பி பர்த்டே சுஜாதா ! பிடிச்சிருக்கா ? பிடித்திருந்தால் '+' பிடிக்காவிட்டால் '-' என்று ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து மற்றவருக்கு படிக்கவோ படிக்காமலிருக்கவோ உதவுங்கள். பரிந்துரைக்க Starsயை கிளிக் பண்ணுங்க..நன்றி!
?



Works best if you Comments:
வணக்கம் . அன்னிக்கு மூக்கு சுந்தர் பதிவுள்ள எழுதியிருந்ததால, ஆ.வி போய் படித்தேன். உண்மையில் படிக்கும்போது மிகுந்த கலக்கமாய் இருந்தது. சாருக்கு கண்ணில் பிரச்னை ஏற்பட்டபோதும், இதயநோய் ஏற்பட்டபோதும் அவர் சிரித்தபடி எழுதியிருந்தாலும், என் மனது வருத்தப்பட்டது உண்மை. ஆனாலும், அப்போது விட இந்த வார கற்றதும், பெற்றதும் கலங்கடித்து விட்டது. ஒரு மினி சுயசரிதை போன்ற வடிவமும் காரணமாய் இருக்கலாம். அது உங்களை disturb பண்ணியதில் ஆச்சரியமில்லை.சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... உடல்நலப்பிரச்னை அதிகமில்லாமல் நீடுழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்.



தன்னுடைய கவலையைக் கூட சுவைபட சொல்வது ஒரு கலை. அது சுஜாதா அவர்களால் தான் முடியும். அவர் நீடூழி வாழ்ந்து, மேன்மேலும் பற்பல எழுத்தாளர்களின் மானசீக குருவாகத் திகழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.அன்புடன்,'சுபமூகா'





‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை. >>உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!நாளை இருப்போமா என்பது நம் கையில் இல்லை என்பதை எத்தனை தெளிவாக சொல்லி இருக்கிறார்!.அவரை வாழ்த்த வயது போதாது, அவர் நல்லாரோக்கியத்துடன்,நலமே வாழ ராஜராஜேஸ்வரிஅருள்புரிய வேண்டுகிறேன்.அற்புதமான அந்த எழுபது வயது இளைஞரின் ஆசிகள் எங்களுக்கு எப்போதும் கிடைக்கவேண்டும்.அன்புடன்(ரங்க)மீனா
நான் சுஜாதாவின் தீவிர வாசகன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன். //நானும்.எனது வாழ்த்துக்களையும் சுஜாதா அவர்களிடம் சேர்ப்பிக்கவும்.விகடன் கட்டுரை மிகவும் நெகிழ வைத்தது. அவரது நல்ல நெஞ்சுக்கு எவ்விதக் குறையும் வாரா. 'உமக்கென்ன குறைச்சல் நீர் ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை, வந்தால் வரட்டும் முதுமை' என்று எம் எஸ் விஸ்வநாதன் குரலில் பாடத் தோன்றுகிறது. நோய்கள் நீங்கி, இன்னும் பல நூற்றாண்டு ஆரொக்கியமாக வாழ்ந்து, உன்னதப் படைப்புக்களைத் தொடர்ந்து படைக்க எனது அன்பான வாழ்த்துக்கள். பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்தும் அன்பு நெஞ்சம்ச.திருமலை


By Anonymous, at Thu May 05, 07:03:00 AM IST
விகடன் கட்டுரை படிப்பது ஒரு மினி சுயசர்தை படிப்பது போலிருந்தது என்பது உண்மைதான்.கட்டுரை படித்ததும் நானும் பெரிதும் பாதிக்கப்பட்டேன், இங்கு எழுத நினைத்தேன், பிரகாசும் தேசிகரும் போட்டுவிட்டார்கள்.நன்றி.நல்ல உடல் நலத்துடன் ரங்கராஜன் அய்யா அவர்கள், நீண்ட நாள் வாழ இறை அருள் புரியட்டும்!எம்.கே


By எம்.கே.குமார், at Thu May 05, 07:21:00 AM IST
நானும் அவரின் தீவிர வாசகன்! அன்னாருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களும்!


By Moorthi, at Thu May 05, 08:05:00 AM IST
Desikan,today i morning i read the article. amma was reading it two days and recommended me to read this weeks katrathum petrathum in vikatan. there are lots of things that is beyond human understanding. if all the information all available for everyone at some place learning will stop. then it is all about perceiving those information more than coming out with new things. i was reading angels and demons last week and got a new perspective about god. as per the author dan brown science is nothing but god. god has created so many things for you and whenever you learn something you are nearing god. the time when you see both science and god are complementing each other you are starting learning more. ofcourse this is a perspective of one of the character in the book.one more addition the late age memory loss is something called as dementia. the definition of dementia is gradual progressive mental impariment. alzheimer is one form of dementia. nearly 65% of people are suffering from this kind of dementia. this is a compromise that people had to do for their long life. lots of activities are happening on this area in nimhans @ bangalore. as sujatha mentioned live for today.


By kicha, at Thu May 05, 10:51:00 AM IST
Dear Desikan,Thanks for the article. I have one similarity with Sujatha!! Guess What???My Date of Birth is also 13-April and his too. But Actually my DOB is 13-October.. changed due to some reason in school. Apart from this he is a great human being. He came to my colleage during my 2 Year, he was talking about Video Compressiong, Huffman coding etc.. i was thrilled to hear that. I wanted to meet him in person and get an autograph,but i couldn't do on that day. Everyone in my famil likes his stories. I have bought all the Katrathum Petrathu,En Etharku eppadi series from Ananda Vikatan. He is truly a amazing gift to Tamil People and Cinema.Wishing him a great Day and God bless him.Regards,Subbu


By Anonymous, at Thu May 05, 11:29:00 AM IST
என் தாத்தாவின் ஞாபகம் வருகிறது. அவர் இப்படித்தான் ஒரு ஆங்கில வார்த்தையைத் தேடிப் பிடித்துக்கொண்டிருந்தார். "சண்டை போடுறதுக்கு இதைச் சொல்வாங்க" என்று தேடினார். ஞாபகத்திலிருந்து எப்படியும் எடுத்துவிடமுடியும் என்று நம்பித் தேடினார். கடைசியில் சில மணி நேரங்களுக்குப் பிறகு "quarell" என்றார், அதைக் கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தில். "இதைக் கண்டுபிடிக்கத் தெரியலை?" என்றேன். "நான் நினைச்சதை உன்னாலயும்தான் கண்டு பிடிக்கமுடியலை" என்றார்.எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள் போல, எல்லா வயதானவர்களும் ஒரே மாதிரியே. சமீபத்தில் ஜெயகாந்தனைப் பார்த்தபோது, அருகில் என் தாத்தாவைப் பார்ப்பது போலவே உணர்ந்தேன். சுஜாதாவின் எழுத்தில் கூட அதே "தாத்தாமை".இந்தச் சப்பை கமெண்ட்டைப் போடுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. தேசிகனின் வலைப்பதிவு ஒரு "நிலை"க்கு வருவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது. இதே பிரச்சினை பத்ரியின் வலைப்பதிவிலும் இருக்கிறது. ஏதாவது செய்யவும், எழுதாமலிருப்பதைத் தவிர! :-)அன்புடன்ஹரன்பிரசன்னா


By Haranprasanna, at Thu May 05, 01:46:00 PM IST
DesikanConvey my wishes to Sujatha"Now I know why he did not attend my marriage"BTW what film he is curremtly working onDittu


By Dittu, at Sat May 07, 08:13:00 AM IST
Dear DesikanU will become a cloned version of Sujatha one day.best wishesNanu


By Narayanan, at Sun May 08, 11:04:00 AM IST
the post as well as the responses are as sentimental and sensible as most tamil tv serials are.


By Anonymous, at Mon May 09, 03:08:00 AM IST


எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள் போல, எல்லா வயதானவர்களும் ஒரே மாதிரியே

A COLOSSUS by the name of SUJATHA(posted on 3 MAY 2005


மீள் பதிவு (posted on 3 MAY 2005)
********************************
இந்த வார விகடனில், சுஜாதா அவர்களின் "கற்றதும் பெற்றதும்" மிக மிக உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட ஒன்று. வயதானால் ஏற்படும் உடல்/மன/குண மாற்றங்களை தனது அசத்தலான பாணியில் நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். அவர் உடலுக்கு தான் வயதே ஒழிய மனம் இன்னும் இளமையாக இருப்பதாகவே தோன்றுகிறது.


அதற்கு உதாரணம், அவரைப் போன்ற இன்னொரு தாத்தாவின் வயதை கண்டுபிடிக்க அவர் மேற்கொள்ளும் சாகசம் :-) (பார்க்க, தேசிகனின் ஹாப்பி பர்த்டே சுஜாதா
!)


//எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
//

யதார்த்தத்தை எவ்வளவு நெகிழ்ச்சியாக வெளிப்படுத்தியிருக்கிறார்! எனக்கென்னவோ, அவர் பல ஆண்டுகளாக, அயற்சியில்லாமல் தனது உடலையும், மூளையையும் வருத்திக் கொண்டதன் விளைவாகவே (அதனால் பலருக்கு அவரது எழுத்துக்கள் வாயிலாக மிகுந்த சந்தோஷம் கிடைத்தது என்றாலும்) தற்போது பலவித உடல் நலக்குறைவுகளால் கஷ்டப்படுகிறார் என்று தோன்றுகிறது. அவர் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்.


//கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது.
//

NOSTALGIA போன்ற ஒரு சுகமான உணர்வு உலகத்தில் கிடையாது என்று பறைசாற்றுபவை அவரது ஸ்ரீரங்கத்துக் கதைகள்.

ஸ்ரீரங்கத்து கதைகளை (முழுத்தொகுப்பாக) மறுபடியும் படித்தபோது ழரு பிரமிப்பு லற்பட்டது! ஒவ்வொரு கதையும் ஒரு நல்முத்து! அவற்றை படிக்கையில், திரு.R.K.நாராயணன் அவர்களின் "Malgudi Days" ஏற்படுத்திய அதே அளவு தாக்கத்தையும், ஒரு வித சுகமான "Nostalgic" உணர்வுகளையும் அனுபவிக்க முடிந்தது. அந்தக்காலத்து மிக அழகான ஸ்ரீரங்கத்தையும், மக்களையும், பெருமாளையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவற்றை படித்து முடிக்கும் வரை, அவரது தேர்ந்த, unique "கதை சொல்லும் பாணி" என்ற கயிற்றினால் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்!!

குறிப்பாக, "அரசு பகுத்தறிவுப் பாசறை" ஓரு "Real Classic"! Jeffrey Archer-இன் பாணியை திரு.சுஜாதா மிக அருமையாக தமிழில் கையாண்டிருக்கிறார். எவரும் எதிர்பார்க்காத ஓரு முடிவு தான் அக்கதையின் சிறப்பு! அடுத்ததாக, "மாஞ்சு" என்ற கதை, உள்ளத்தை உருக்கி விடுகிறது. "மறு" என்ற கதையில் வரும் நிகழ்ச்சிகளை உண்மையில் நடந்ததாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது!!


//சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".
//

எங்கேயோ படித்திருக்கிறேன். ஒரு பெரிய தத்துவ மேதை (நாத்திகர்) இறக்கும் தருவாயில், தனது சீடர்களை அழைத்து, "நான் இத்தனை நாள் கடவுள் இல்லை என்று சொல்லி வந்ததை மட்டும் கொள்ளாமல், நீங்கள் உங்கள் வழியில் அது உண்மையா என்று ஆராய வேண்டும்" என்றாராம். சுஜாதா சொல்லும் குழப்பங்கள் பலருக்கும் உள்ளன.


// நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
//

எவ்வளவு எளிமையாகக் கூறி விட்டார்!


//இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.
//

அவர் கூறிய இந்த TOP TEN-இல் குறைந்தது 9 விடயங்கள் பொதுவாக எல்லா வயதினருக்கும் பொருந்தக் கூடியவையே!!! இளவயதினருக்கு பத்தாவது விஷயமாக 'பணத்தை'க் கூறலாம்!


//என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!
//

இதை வாசிக்கும்போது, அவரது சிறந்த கதைகளில் ஒன்றாக நான் கருதும் "பிரிவோம் சந்திப்போம்" பகுதி இரண்டின் கடைசி பத்தி (நியூயார்க் நகரை அற்புதமாக வர்ணித்து விட்டு, ஆனால் மதுமிதா தான் இல்லை என்று நாயகன் நினைப்பதாக முடித்திருப்பார்!) ஏற்படுத்திய அதே தாக்கம் உண்டானது!!!! அந்த தாக்கத்தின் (பல ஆண்டுகளுக்கு பின்னர்!) வெளிப்பாடு தான், என் மகளுக்கு "மதுமிதா" என்று பெயர் சூட்டியது!!!


அவரே ஒரு கட்டுரையில் எழுதியது போல 'இன்னுமொரு நூற்றாண்டிரும்' என்று அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி: ஆனந்த விகடன்

15.4.08

சுஜாதா பற்றி ரவிபிரகாஷ்(விகடன்)



என்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசையில் சுஜாதா பற்றியும் எழுதுவதாக இருந்தேன். ஆனால், அந்த நிகழ்வு சந்தோஷமான ஒன்றாக அமையாமல், திடுதிப்பென ஒரு துக்ககரமான சம்பவத்தில் தொடங்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
கடந்த 27-02-2008 புதன்கிழமை அன்று காலையில், விகடன் ஆசிரியர் திரு.அசோகன் எனக்குப் போன் செய்து, "எழுத்தாளர் சுஜாதா உடல்நிலை சரியில்லாமல், அப்போலோவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். முடிந்தால் ஒரு நடை போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்" என்றார்.
அலுவலகம் போனதும், அன்றைக்கு முடிக்க வேண்டிய இதழுக்கான ஃபாரம் லிஸ்ட் போட்டுக் கொடுத்துவிட்டு, நான் சுஜாதாவைப் பார்க்கக் கிளம்பினேன். வெறுங்கையாகப் போகவேண்டாம் என்பதற்காக ஒரு பெரிய ஹார்லிக்ஸ் பாட்டிலை வாங்கிக்கொண்டு போனேன். விகடன் எடிட்டோ ரியல் அலுவலகத்திலிருந்து பொடிநடை தூரத்தில் அப்போலோ.
ஆஸ்பத்திரியின் மெயின் பில்டிங்குக்குப் போனேன். சுஜாதாவின் இயற்பெயரான ரங்கராஜன் என்ற பெயரைச் சொல்லி, விசாரித்தேன். பக்கத்துக் கட்டடத்தில் முதல் மாடி, 48-ம் எண்ணுள்ள ஐ.சி.யு அறையில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கே போனதும், ஒரு நர்ஸ் மறித்து, "வெயிட்டிங் ஹாலில் டோ க்கன் வாங்கிக்கொண்டு வாருங்கள். அப்போதுதான் அனுமதிக்க முடியும்" என்றாள். அதே பில்டிங்கில் சுற்றிச் சுற்றித் தேடியும் வெயிட்டிங் ஹால் கிடைக்காமல், மீண்டும் ஒரு ஊழியரிடம் கேட்க, அவர் திரும்பவும் என்னை மெயின் பில்டிங்குக்குப் போகச் சொன்னார். அங்கே போய் விசாரிக்க, "நேரா போய் லெஃப்ட்டு!" நேரா போய் லெஃப்டை அடைந்து விசாரிக்க, "உள்ளே போய் ஃபர்ஸ்ட் ரைட்டு!" என அங்கங்கே என்னை மடைமாற்றி, குறிப்பிட்ட வெயிட்டிங் ஹாலுக்குக் கொண்டு சேர்த்தார்கள்.
அங்குள்ள வரவேற்பாளரிடம் என் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, விஷயம் சொல்லி டோ க்கன் கேட்டேன். "சார், டாக்டர்ஸ் ரவுண்ட்ஸ் வந்துட்டிருக்காங்க. அவங்க கீழே இறங்கினப்புறம் நீங்க போகலாம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!" என்றார். டீலக்ஸ் பஸ்ஸின் சொகுசு நாற்காலிகள் போல் போடப்பட்டிருந்த அந்த ஹாலில், ஒன்றில் வசதியாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, மூலையாக வைக்கப்பட்டு இருந்த டி.வி-யில் ஓடிக்கொண்டு இருந்த 'சூர்யவம்சம்' தொடரைப் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். என் பெயர் அழைக்கப்படுமா என என் காதுகள் காத்திருந்தன.
முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, அழைக்கப்பட்டேன். வரவேற்பாளர் இன்டர்காமில், "தேவகி! ரவிபிரகாஷ்னு ஒருத்தரை அனுப்பறேன். அவரை ஃபர்ஸ்ட் ஃப்ளோர் 48-ம் ரூமுக்கு அனுப்புங்க" என்றுவிட்டு, "போங்க சார்!" என்றார். "டோ க்கன் சார்?" "தேவையில்லை. அதான், போன்ல சொல்லிட்டேனே!"
போனேன். மறுபடி டோ க்கன் கேட்டாள் அந்த நர்ஸ். "நீங்கதானே தேவகி?" என்றதும், சிரித்துக்கொண்டே, "நீங்களா? போங்க" என்று அனுமதித்தாள்.
ஒரே மாடிக்கு லிப்டில் சென்றிருக்க வேண்டியதில்லைதான். அப்போது இருந்த குழப்பத்தில் ஒன்றும் புரியவில்லை. காத்திருந்து, லிப்ட் வந்ததும் ஏறிச் சென்றேன். முதல் மாடியில் வெளிப்பட்டு, தேடித் தேடி, ஐ.சி.யு-வை அடைந்து, 28, 36, 42, 34, 17 என மாறி மாறி இருந்த அறைகளில் குழம்பி, அங்கிருந்த ஒருவரை விசாரிக்க, "இதோ!"
உள்ளே நுழைந்தேன். இருவர் அட்மிட் ஆகும் அறை. முதல் பிளாக் காலியாக இருந்தது. கடந்து உள்ளே போனேன். ஹா... சுஜாதா!
சின்ன வயதில் என்னைத் தன் எழுத்தால் அசர வைத்த சுஜாதா. "இவன் உங்க பரம ரசிகன். உங்க எழுத்துன்னா இவனுக்கு உசுரு!" என்று சாவி அவர்களால் நான் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட சுஜாதா. "எப்படிக் கூட்டினாலும் விடை ஒரே மதிப்பில் வர்றதுக்கு இப்படி ஒரு சுலபமான வழி இருக்கா? கிரேட்!" என்று வியந்து, தனது 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதிய சுஜாதா.
சலனமற்றுத் தலைசாய்த்துப் படுத்திருந்தார். தலை மட்டும்தான் வெளியே தெரிந்தது. உடம்பு எங்கே இருக்கிறது என்று புரியாமல் மேலே துணிகளும் போர்வையும் மூடியிருந்தன. லாலி லாலியாகத் தொங்கும் வயர்களின் நடுவே படுத்திருக்கும் அவரைப் பார்க்க மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அருகில் இருந்த இரண்டு நர்ஸ்களிடம், அவரது நிலை பற்றிக் கேட்டேன். "ப்ச்... நோ ஹோப்! டயலிசிஸ் நடந்துட்டிருக்கு. ஹார்ட் பீட் டவுன் ஆயிருச்சு. வென்டிலேட்டர் வெச்சிருக்கு. தெரியலே... இன்னிக்கோ நாளைக்கோ, ஒரு வாரமோ!'"
"சார் யாரு தெரியுமில்லே... வேர்ல்ட் ஃபேமஸ் ரைட்டர்!" என்றேன்.
"தெரியும். நாங்களும் இவரோட ஃபேன்ஸ்தான்!" - இருவரின் முகங்களிலும் ஒரு வறட்சிப் புன்னகை.
இதே கோலத்தில், இதே அப்போலோவில் என் குரு சாவி அவர்களைப் பார்த்தது ஞாபகத்துக்கு வந்தது.
நர்ஸிடம் சுஜாதாவின் மனைவி தங்கியிருக்கும் அறை எண்ணைக் கேட்டுக்கொண்டு வெளியே வந்தேன். கண்டுபிடித்து, உள்ளே போனேன். ஐந்தாறு பெண்மணிகளுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார். கூடவே, உயரமாக ஒரே ஒரு ஆண். அவர் சுஜாதாவின் மகனாக இருக்க வேண்டும் என யூகித்தேன்.
சுஜாதாவுக்காக வாங்கி, அவரிடமே கொடுத்து, உடல்நிலை விசாரிக்கலாம் என்ற எண்ணத்தில் வாங்கி வந்திருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலை, சுஜாதாவின் மனைவி சுஜாதாவிடம் கொடுத்து, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். "தெரியுமே! ரெண்டு மூணு தரம் வீட்டுக்கு வந்திருக்கீங்களே!" என்றார். அதன்பின் சம்பிரதாய விசாரிப்புகள்.
போன வியாழக்கிழமையே, நிமோனியா என அப்போலோவில் கொண்டு வந்து சேர்த்தார்களாம். இரண்டு மூன்று நாளில் குணமாகி, வீட்டுக்குப் போய்விடலாம் என்றிருந்த நிலையில், மீண்டும் உடல்நிலை மோசமாகி, டயலிசிஸ் செய்யவேண்டி வந்து, நேற்று (செவ்வாய்) மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வென்டிலேட்டர் வைத்து, உசிர் ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்றார். "யாருக்குமே இன்னும் சொல்லலை. சங்கருக்குக்கூடத் தெரியாது. (டைரக்டர் ஷங்கரைச் சொல்கிறார் என்பது லேட்டாகத்தான் புரிந்தது.) யாருக்கும் சொல்லவேண்டாம்னுட்டார். 'உடம்பு சரியாகி வீட்டுக்கு வந்துடுவேன். நான் அப்போலோல சேர்றதும், வீடு திரும்பறதும் என்ன புதுசா? வீணா பிரஸ்ஸுக்கெல்லாம் சொல்லி காப்ரா பண்ணவேண்டாம்'னார். அதான் சொல்லலை. நாங்களே அதான் நினைச்சுண்டிருந்தோம். திடும்னு நேத்துலேர்ந்து இப்படி ஆயிடுத்து. ரொம்ப நெருங்கிய சொந்தக்காராளுக்கு மட்டும் சொன்னேன். இனிமேதான் ஒவ்வொருத்தருக்கா சொல்லணும்" என்றார். மாமிக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. ஆறுதல் சொல்லவேண்டியது மாமிக்கு மட்டும்தானா? என்னைப் போன்ற லட்சக்கணக்கான சுஜாதாவின் வாசகர்களுக்கும் அல்லவா?
பின்பு, சுஜாதாவின் மகனிடம் கைகுலுக்கிப் பேசினேன். இவரிடம் போனில் இரண்டொரு முறை பேசியிருக்கிறேன். அப்படியே சுஜாதாவின் குரல். சுஜாதாவிடமே இந்தக் குரல் ஒற்றுமை பற்றி வியந்து பேசியிருக்கிறேன்.
பின் அனைவரிடமும் விடைபெற்று, வெளியே வந்து, சுஜாதாவின் நிலைமை சீரியஸாக இருப்பது பற்றி அசோகனுக்குப் போன் மூலம் தெரிவித்துவிட்டு, வெளியேற வழி தெரியாமல் தடுமாறி, படிகளில் இறங்கி, அலுவலகம் வந்தேன். எம்.டி-யின் நம்பர் கொடுத்து, அவரிடம் பேசி விஷயத்தைச் சொல்லுங்கள் என்றார் அசோகன்.
பேசினேன். சுஜாதா கிடந்த இருப்பைச் சொன்னேன். போனிலேயே விசும்பி, விசும்பி அழத் தொடங்கிவிட்டார் எங்கள் சேர்மன் பாலசுப்ரமணியன். "நானும் அவரும் ஒரே வயசு. என்னை விட சில மாசங்கள்தான் மூத்தவராக இருப்பார். நாற்பது வருஷத்துக்கும் மேலான நட்பு" என்று மேலே பேசமுடியாமல் நா தழுதழுத்தார். பின்பு, "என் உடம்பு இருக்கிற இருப்புல எங்கேயும் போக முடியலியே! எனக்காக நாளைக்கு மறுபடியும் ஒரு தரம் போய், மாமி கிட்டே நான் ரொம்ப வருத்தப்பட்டேன்னு சொல்லுங்கோ!" என்றார். அதைச் சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் எதிர்முனையில் அடக்கமாட்டாத அழுகை.
அன்று இரவு, பத்து மணிக்கு அசோகனிடமிருந்து போன்... "சுஜாதா எக்ஸ்பயர்ட்!"
எழுத்துலக சகாப்தம் ஒன்று முடிந்துவிட்டது!
***
சுஜாதாவுடனான தொடர்பு எனக்குப் பெருமதிப்புக்குரிய சாவி அவர்களின் மூலம் கிடைத்தது. 'சாவி' வார இதழின் பொறுப்பாசிரியராக நான் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, அடிக்கடி போன் மூலம் தொடர்பு கொண்டு சுஜாதாவிடம் பேசியிருக்கிறேன். கதைகள் கேட்டு வாங்கிப் போட்டிருக்கிறேன்.
ஒரு முறை சிறுகதை எழுதித் தந்தவர், அதற்குத் தலைப்பு எழுத மறந்துவிட்டார். ஃபாரம் முடித்து அனுப்பவேண்டிய கடைசி கட்ட நிலையில், சட்டென அந்தக் கதைக்குத் தலைப்பு வைப்பதையே வாசகர்களுக்கு ஒரு போட்டியாக அறிவித்துவிட்டேன். சிறந்த தலைப்பை சுஜாதாவே தேர்ந்தெடுப்பார் என்று குறிப்பிட்டேன். மறுநாள் காலை, லே-அவுட் செய்த அட்டைகளைப் பார்வையிட்ட சாவி அவர்கள், என் சமயோசித புத்தியைப் பாராட்டினார்.
அன்று காலையே சுஜாதாவுக்கு போன் செய்து, "கதைக்குத் தலைப்பு எழுத மறந்துட்டீங்க. அதுக்குத் தண்டனையா ரவி உங்களுக்கு ஒரு வேலை வெச்சுட்டான். கதைக்கான தலைப்பை எழுதச் சொல்லி வாசகர்களுக்குப் போட்டி அறிவிச்சிருக்கான். பரிசுக்குரிய சிறந்த தலைப்பை நீங்கதான் செலக்ட் பண்ணித் தரீங்க!" என்றார் சாவி.
"ஆகட்டும்" என்றார் சுஜாதா. "ஆனா, ஆயிரக்கணக்குல விடைகள் வந்தா அத்தனையையும் எனக்கு அனுப்ப வேணாம். ரவியையே தேர்ந்தெடுத்து, அதிகபட்சமா எனக்கு 20, 25 தலைப்புகள் அனுப்பி வெச்சா போறும்!" என்றார். அதன்படியே செய்தேன். அதிலிருந்து ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். கூடவே, சிறுகதைக்குத் தலைப்பு வைக்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று இளம் எழுத்தாளர்களுக்கு ஒரு குறிப்பையும் எழுதி அனுப்பியிருந்தார். தலைப்பு மிகச் சுருக்கமாக ஒரு வார்த்தையில் இருந்தால் உத்தமம்; அல்லது, ஓரிரண்டு வார்த்தைகளில் இருக்கலாம். கதையின் தலைப்பு எக்காரணம் கொண்டும் கதையின் சஸ்பென்ஸை வெளிப்படுத்துவதாக இருக்கக்கூடாது என அவர் கொடுத்திருந்த குறிப்புகள் வளரும் எழுத்தாளர்களுக்கு மிகப் பயனுள்ளவை.
அதன்பின், சுஜாதா ஒருமுறை சாவியைப் பார்க்க வந்திருந்தபோது, அவரிடம் என்னை அறிமுகப்படுத்தி, "இவன் உங்க தீவிர வாசகன். உங்க எழுத்துன்னா இவனுக்கு உசுரு" என்று சொல்லி, போட்டோ வுக்குப் போஸ் கொடுக்கையில், "ரவி, உனக்குப் பிடிச்ச எழுத்தாளர் சுஜாதா பக்கத்துல வந்து நின்னு போட்டோ எடுத்துக்கோ" என்றார். அந்தப் போட்டோ இன்னும் என்னிடம் மிகப் பத்திரமாக இருக்கிறது.
சாவி பத்திரிகையின் சர்க்குலேஷன் குறைந்துகொண்டே வந்த ஒரு கட்டத்தில், என் எதிர்கால நிலைமை குறித்து பயந்து, குமுதம் வார இதழில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்குமா என்று யோசித்தேன். அப்போது குமுதம் பொறுப்பாசிரியராகச் சேர்ந்து பணியாற்றிக்கொண்டு இருந்தார் சுஜாதா. 'தங்களைப் பார்த்துப் பேசவேண்டும்' என்று அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டு அவர் வீட்டுக்குப் போனேன். அவர் அப்போது நுங்கம்பாக்கத்தில் இருந்தார் என்று ஞாபகம்.
"என்ன விஷயம்?" என்று கேட்டார்.
"சொன்னேன். 'சாவி சாரை விட்டு வர மனசில்லை சார் எனக்கு. ஆனாலும், என் எதிர்காலத்தைப் பத்தியும் யோசிக்கணுமே! அவருக்குப் பிறகு நான் எங்கே போவேன்? பத்திரிகை ரொம்பத் தள்ளாடிக்கிட்டிருக்கு. அவரால நடத்த முடியலை. ஏஜென்ட்டுகள் கிட்ட ரொட்டீனா போய் பணம் வசூலிக்கச் சரியான ஆட்கள் இல்லே. சரியா எடுத்து நிர்வாகம் செய்ய ஆள் இல்லை. மிஞ்சிப் போனா இன்னும் ஆறு மாசம், இல்லே ஒரு வருஷம்... அத்தோட பத்திரிகையை இழுத்து மூடிடுவார். அதுக்கப்புறம் நான் எங்கே போய் நிப்பேன்? அதான், உங்க கிட்டே வந்தேன்" என்றேன்.
"சரி, நாளைக்கு குமுதம் ஆபீஸ் வாங்க! எடிட்டரும் (எஸ்.ஏ.பி.) இருப்பார். பேசி முடிவு பண்ணலாம்" என்றார்.
அதன்படியே மறுநாள் காலையில், குமுதம் ஆபீஸ் போனேன். எஸ்.ஏ.பி. அவர்களைச் சந்தித்தேன். உடன் சுஜாதாவும் இருந்தார்.
எஸ்.ஏ.பி. எடுத்த எடுப்பில் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். அவரது குரலும் சுஜாதாவின் குரலைப் போலவே மிக மென்மையாக இருந்தது.
"சுஜாதா சொன்னார் உங்களைப் பத்தி. நீங்கதான் சாவி பத்திரிகையைப் பாத்துக்கறீங்களா?" என்றார்.
"ஆமா சார்!" என்றேன்.
"உங்களோட வேற யார் யாரு வொர்க் பண்றாங்க?"
"ஆசிரியர் குழுனு யாரும் கிடையாது. நான் மட்டும்தான். நான்தான் அங்கே பொறுப்பாசிரியர், உதவி ஆசிரியர் எல்லாமே! லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் ஒருத்தர் இருக்கார். ராணிமைந்தன் முக்கிய நிருபரா மேட்டர்கள் கொண்டு வந்து தருவார். மத்தபடி கதை, கட்டுரை, ஜோக்ஸ் செலக்ஷன் எல்லாமே நான்தான்."
"இப்ப நீங்க அந்த வேலையை விட்டுட்டு இங்கே வந்து சேர்ந்துட்டீங்கன்னா, சாவி யாரை வெச்சு நடத்துவார்?"
"ஒரு வாரம் ராணிமைந்தனை வெச்சு நடத்தலாம். தொடர்ந்து பார்த்துக்க ஆள் வேணும். சாவிக்கும் வயசாச்சு. முடியாது. அதனால..."
"அதனால..?"
"அதிகபட்சம் அடுத்து ரெண்டு வாரம் நடத்துவார். அப்புறம் மூடிடுவார்."
"அப்படியா சொல்றீங்க?" என்றார் எஸ்.ஏ.பி.
"ஆமாம். ஏற்கெனவே பத்திரிகை தள்ளாடிட்டிருக்கு. அதை நிறுத்திட என் விலகல் ஒரு காரணமா இருக்கும்!" என்றேன்.
எஸ்.ஏ.பி. சற்று யோசனையில் மூழ்கினார். பின்பு, "சமீபத்துல ஒரு ஃபங்ஷன்ல சாவி சாரைப் பார்த்தேன். பத்திரிகை நஷ்டத்துல ஓடறது பத்தி சொல்லிட்டிருந்தார். 'நிறுத்திடலாம்னு நினைக்கிறேன்'னு சொன்னார். எனக்குக் கஷ்டமா போச்சு! 'இல்ல சார், பத்திரிகை ரொம்ப நல்லா வந்துட்டிருக்கு. லே-அவுட், எடிட்டிங் எல்லாம் பிரமாதம். வேற சில காரணங்களால அதை உங்களால கொண்டு வர முடியாம இருக்கலாம். அதுக்கெல்லாம் தகுந்த ஆளுங்களைப் போட்டுச் சரி பண்ணிக்குங்க. ஒரு நல்ல பத்திரிகை இப்படி திடும்னு நிக்கிறது எனக்கு வருத்தமா இருக்கு. எனக்காக பல்லைக் கடிச்சுக்கிட்டு 2000-வது ஆண்டு வரைக்குமாவது நீங்க 'சாவி'யைத் தொடர்ந்து நடத்தணும்'னு கேட்டுக்கிட்டேன். 'சரி, முயற்சி பண்றேன்'னார்" என்றவர் சற்று இடைவெளி விட்டு,
"இது நடந்து ஒரு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே நீங்க குமுதத்துல சேர்ந்து, அதனால சாவி சார் வேற வழியில்லாம சாவி பத்திரிகையை நிறுத்தும்படி ஆகுதுனு வெச்சுக்குங்க. அவர் என்னைப் பத்தி என்ன நினைப்பார்? நாளைப் பின்ன என்னை எங்கேயாவது பார்க்கும்போது, 'என்ன சார், 2000 வரைக்கும் நடத்தணும்னு கேட்டுக்கிட்ட நீங்க அடுத்த கொஞ்ச நாள்லயே, பத்திரிகையின் விலா எலும்பு மாதிரி இருக்கிற ரவியை உருவிக்கிட்டீங்கன்னா என்ன அர்த்தம்?'னு கேட்டா, அவருக்கு நான் என்ன பதில் சொல்வேன்?" என்றார்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. சுஜாதாவின் பலமான சிபாரிசோடு குமுதத்தில் சேர்ந்துவிடலாம் என்று ரொம்ப நம்பிக்கையோடு போயிருந்தேன். எஸ்.ஏ.பி. என்னடாவென்றால் இப்படி ஒரு கேள்வியைத் தூக்கிப் போடுகிறார். இதற்கு என்ன பதில் சொல்வது?
"சார், மறுபடியும் சொல்றேன்... எனக்கு சாவியை விட்டு வர மனசில்லை. ஆனா, நான் அங்கே நீடிச்சாலும், அவர் இன்னும் எத்தனை நாளைக்கு சாவியை நடத்துவார்னு தெரியாது. உங்க கிட்டே '2000 வரைக்கும் நடத்துவேன்'னு அவர் சொல்லியிருக்கலாம். ஆனா, அது சாத்தியமில்லை. எனவே, நான் சுயநலமா யோசிச்சுதான் முடிவு எடுக்க வேண்டியிருக்கு!" என்றேன்.
எஸ்.ஏ.பி. புன்னகைத்துவிட்டு, "ஒண்ணும் கவலைப்படாதீங்க! நீங்க குழப்பம், கவலை எல்லாத்தையும் விட்டுட்டு, வழக்கம்போல நாளைக்கு சாவி கிட்டேயே வேலைக்குப் போங்க! எவ்வளவு காலம் நடத்தறாரோ நடத்தட்டும். அது வரைக்கும் அவர் கிட்டேயே வேலை செய்யுங்க. சாவி போன்ற பத்திரிகை ஜாம்பவான்களிடம் வேலை செய்ய, நீங்க கொடுத்து வெச்சிருக்கணும். அவர் என்னிக்குப் பத்திரிகையை மூடிட்டு உங்களை வேற வேலை தேடிக்கச் சொல்றாரோ, அன்னிக்கு வேற எங்கேயும் போகாம நேரே என்கிட்டே வாங்க. குமுதத்தின் கதவுகள் உங்களுக்காக என்னிக்கும் திறந்திருக்கும்" என்றார்.
எதிர்பார்த்தபடி குமுதத்தில் வேலை கிடைக்கவில்லை என்றாலும், எஸ்.ஏ.பி. கொடுத்த தைரியமும், சொன்ன ஆறுதல் வார்த்தைகளும் என் மனசில் இருந்த குழப்பத்தையும் கவலையையும் துப்புரவாகப் போக்கிவிட்டன. அவர் சொன்னபடியே, தொடர்ந்து சாவியிடம் வேலைக்குப் போய் வந்தேன்.
எஸ்.ஏ.பி. அடுத்த இரண்டு நாளில் அமெரிக்கா பயணமானார். அங்கிருந்து திரும்பி வரவில்லை... உயிரோடு!
சுஜாதாவை நான் மீண்டும் சந்தித்தது, சாவி பத்திரிகை நின்ற பின்பு!
மீண்டும் குமுதம் ஆபீஸ் போனேன். ஒரு சின்ன அறையில், மிகச் சாதாரண மர மேஜையின் பின்னால், மர நாற்காலியில் எலிமென்ட்டரி ஸ்கூல் வாத்தியார் போல அமர்ந்திருந்தார் சுஜாதா. என்னைப் பார்த்ததும், "வாங்க ரவி! முன்னாடி கிடைக்கவிருந்த ஒரு நல்ல வாய்ப்பு கை நழுவிப் போயிடுச்சு உங்களுக்கு. இப்ப சூழ்நிலையே வேற. எல்லாமே மாறிப்போச்சு! இங்கே சப்-எடிட்டர்கள் தேவையில்லே. ரிப்போர்ட்டர்கள்தான் தேவை. இளம் விஞ்ஞானிகள் நாலஞ்சு பேரைப் பார்த்து லேட்டஸ்ட் தியரிகள், கண்டுபிடிப்புகள்னு ஏதாவது மேட்டர் பண்ணிட்டு வாங்க. நாலு வாரம் தொடர்ந்து பண்ணா போதும்; மாச சம்பளத்தைவிட அதிகமா ரெமுனரேஷன் வாங்கிடலாம்!" என்று சொல்லி அனுப்பினார்.
எனக்குத் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை. இளம் விஞ்ஞானிகளை எங்கே போய்த் தேடுவேன் என்று சுஜாதாவிடமே கேட்பதற்கும் தயக்கமாக இருந்தது. தவிர, நான் பேட்டி எடுத்தெல்லாம் எனக்குப் பழக்கமில்லை. ஜர்னலிஸத்தில் நான் பழகாத ஒரு பிரிவு, பேட்டி எடுத்தல்தான். குறிப்பாக அரசியல்வாதிகள், சினிமா தொடர்புடையவர்கள் என்றால், எனக்கு அலர்ஜி!
சாவியில் இருக்கும்போது கவிஞர் வைரமுத்துவுடனெல்லாம் டீல் பண்ணியிருக்கிறேனே தவிர, அதெல்லாம் சப்-எடிட்டராக இருந்துதான். பேட்டி என்று யாருக்காகவும் போய்க் காத்திருந்தது இல்லை.
எனவே, "ஆகட்டும் சார்!" என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து தப்பித்தால் போதும் என்கிற மன நிலையில் எஸ்கேப் ஆனேன்.
அதற்கப்புறம், 'சுதேசமித்திரன்' நாளிதழில் சுதாங்கனின் கீழ் ஒரு நாலு நாள் வேலை பார்த்தேன். இடையில், சாவி நின்றவுடனேயே வேலை கேட்டு ஆனந்த விகடனுக்கும் விண்ணப்பித்திருந்தேன். என்னைப் பற்றி அங்கிருப்பவர்களுக்குத் தெரிந்திருந்தது. கூடவே, ஓவியர் அரஸ்ஸின் பலமான சிபாரிசும் சேரவே, அங்கிருந்து அழைப்பு வந்தது. விகடன் அலுவலகத்துக்குப் போனது, ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்களைப் பார்த்துப் பேசியது, வேலையில் சேர்ந்தது எல்லாவற்றையும் பிறகு விரிவாக எழுதுகிறேன்.
விகடனில் வேலையில் சேர்ந்த பின், சுஜாதா அவர்களுடனான தொடர்பு அறுந்தது.
அங்கே சீனியர்களே சுஜாதா, வாலி, வைரமுத்து போன்ற பிரபலங்களுடன் தொடர்பில் இருந்தனர். பின்னர் மதன், ராவ், வீயெஸ்வி என ஒவ்வொருவராக விலகிவிட, ஆனந்த விகடனின் நிர்வாக ஆசிரியர் ஆனார் அசோகன்.
அவர் பந்தா இல்லாதவர்; பழகுவதற்கு மிக மிக எளிமையானவர்; தன் தலைக்குப் பின்னே ஒளிச் சக்கரம் சுழல்வது போன்ற எண்ணங்கள் எதுவும் இல்லாதவர். அவர் விகடனின் முக்கியப் பொறுப்புக்கு வந்த பிறகுதான் சுஜாதா, வாலி இருவரிடமும் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. சுஜாதாவுடனாவது முன்பே பழகியிருக்கிறேன். காவியக் கவிஞர் வாலியின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது விகடனில்தான். அதற்குக் காரணம் அசோகன்தான். மற்றபடி, எனக்கு வைரமுத்துவுடனான தொடர்பு சாவியோடு அறுந்தது. விகடனில் தொடரவில்லை. காரணம், இங்கே வைரமுத்துவுடன் மிக நெருக்கத்தில் இருந்தவர் கண்ணன்.
சுஜாதாவிடம் சிறுகதை, கட்டுரைகள் வேண்டுமென்றால், அது விகடனுக்காக மட்டுமல்ல, ஜூனியர் விகடனுக்காக இருந்தாலும் என்னைத்தான் பேசச் சொல்வார் அசோகன். அதே போல் வாலியிடம் ஏதாவது பேசவேண்டும் என்றாலும், என்னைத்தான் பேசச் சொல்வார். அதை அசோகன் எனக்கு அளித்த கௌரவமாகவே கருதினேன். இந்த இரு ஜாம்பவான்களுடன் தொடர்பு கிட்டியதற்கு, இன்றளவும் அசோகனுக்கு மானசிகமாக நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
சுஜாதாவிடம் பல முறை போனிலும், சில முறை நேரிலும் பேசியிருக்கிறேன். மிக மென்மையான குரலில் பேசுவார். பெரும்பாலும் அவர் பேச்சினிடையே 'அது வந்திட்டு...' என்ற சொற்றொடர் தவறாமல் இடம்பெறும்.
அவர் விகடனில் தொடர்ந்து எழுதி வந்த 'கற்றதும் பெற்றதும்' கட்டுரைகளில் ஒரு முறை, மாயச் சதுரம் அமைப்பது பற்றி எழுதியிருந்தார். எப்படிக் கூட்டினாலும் கூட்டுத் தொகை 15 வருகிற 3x3 கட்டத்தைக் கொடுத்துவிட்டு, சீனர்கள் அதை சனி கிரகத்துக்கான கட்டம் என்று சொல்வதாகவும், அதே போல் 9x9 கட்டத்தைக் கொடுத்து (எப்படிக் கூட்டினாலும், கூட்டுத் தொகை 369 வரும்) அது சந்திரனுக்கான மாயச் சதுரம் என்றும், அது போல் உங்களால் (வாசகர்களால்) அமைக்க முடியுமா என்றும் கேட்டிருந்தார்.
இப்படியான மாயச் சதுரங்கள் அமைப்பது பற்றி நான் விளையாட்டாக, எட்டாம் வகுப்பு படிக்கும்போதே அறிந்து வைத்திருந்தேன். இந்த ட்ரிக்கை யார் எனக்குச் சொல்லிக்கொடுத்தார்கள் என்பது நினைவில்லை. உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக திருச்சி போயிருந்த சமயத்தில், அங்கே யாரோ ஒருவர் சொல்லிக்கொடுத்தார் என்று ஞாபகம்.
ஒற்றைப்படை எண்ணிக்கையிலான சிறு சிறு கட்டங்கள் கொண்ட எத்தனை பெரிய மாயச் சதுரத்தையும் அமைக்கமுடியும். ஒரே ஒரு ட்ரிக்தான். மேல் நோக்கி வலது புறமாகப் பாயும் ஒரு அம்புக்குறியைக் கற்பனை செய்துகொள்ள வேண்டும். அதன் போக்கிலேயே கட்டங்களை நிரப்பிக்கொண்டு போகவேண்டும். அதாவது, ஒரு எண்ணை ஒரு கட்டத்தில் பூர்த்தி செய்த பிறகு, அடுத்த எண்ணைப் பக்கத்தில் உள்ள கட்டத்துக்கு மேலே உள்ள கட்டத்தில் எழுத வேண்டும். இதற்குப் பல துணை நிபந்தனைகள் உள்ளன. எல்லாமே சிம்பிள்தான்! இந்த விதிமுறைகளின்படி எத்தனை பெரிய மாயச் சதுரமும் அமைக்க முடியும். ஒன்றிலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும் என்பதில்லை. எந்த ஒரு எண்ணிலிருந்தும் தொடங்கலாம்; கூட்டு எண்ணாக எந்த ஒரு எண்ணையும் பயன்படுத்திக் கூட்டிக் கூட்டிப் போட்டுக்கொண்டே போனால், இறுதியில் படுக்கைவசமாக, நெடுக்குவசமாக, மூலை விட்டமாக எப்படிக் கூட்டினாலும், ஒரே கூட்டுத் தொகைதான் வரும்.
அது எப்படி என்று சுஜாதாவுக்கு விரிவாக விளக்கி ஒரு கடிதம் எழுதி, 25x25 அளவிலான ஒரு பெரிய மாயச் சதுரத்தையும் தயார் செய்து அனுப்பியிருந்தேன்.
அதைப் படித்துவிட்டு, சுஜாதா உடனே எனக்கு போன் செய்தார். "ஆச்சர்யமா இருக்கு ரவிபிரகாஷ்! எப்படி இதை நீங்க கண்டுபிடிச்சீங்க? பிரமிப்பா இருக்கு. மேத்ஸ்ல நீங்க கில்லாடியோ?" என்றெல்லாம் மனம் விட்டுப் பாராட்டினார். "அப்படியெல்லாம் இல்லை சார்! கணக்குல நான் புலியும் இல்லை. இந்த மாதிரி கணக்குப் புதிர்கள்னா எனக்கு இன்ட்ரஸ்ட் உண்டு. எப்பவோ சின்ன வயசுல யாரோ சொல்லிக்கொடுத்த ட்ரிக்தான் இது. ஒற்றைப் படை எண்ணில் அமைந்த மாயச் சதுரங்கள் அமைக்கிறதுக்கான ட்ரிக் இது. அதுக்கப்புறம் நானே முயற்சி பண்ணி இரட்டைப் படை மாயச் சதுரத்துக்கு என்ன ட்ரிக்னு கண்டுபிடிச்சேன். அதையும் உங்களுக்கு எழுதி அனுப்பறேன், பாருங்க!" என்றேன்.
சுஜாதா தனது அடுத்த க-பெ கட்டுரையில், 'மாயச் சதுரம் பற்றி ஒரு சுவாரஸ்யமான கடிதம், விகடன் ஆசிரியர் குழுவைச் சார்ந்த ரவிபிரகாஷிடமிருந்து வந்தது. எந்த எண்ணையும் ஆரம்ப எண்ணாக வைத்து, ஒற்றைப் படை எண் வரிசையில் எத்தனை பெரிய மாயச் சதுரத்தையும் அமைக்க, ஓர் எளிய முறை சொல்லியிருக்கிறார். Amazing! இதே போல் இரட்டைப் படை மாயச் சதுரம் அமைக்கவும் ஒரு தந்திரம் உள்ளது. தெரிந்தவர்கள் எழுதலாம்' என்று என்னைப் பற்றிச் சிலாகித்துக் குறிப்பிட்டிருந்தார்.
ஏராளமான வாசகர்கள் மாயச் சதுரம் அமைப்பது பற்றி எழுதியிருந்தார்கள். அவற்றில் சிக்கலான வழிமுறைகளை விட்டுவிட்டு, எளிமையானவற்றை, சுலபத்தில் விளக்கிப் புரிந்துகொள்ள முடிகிற வழிமுறைகளை நானே தேர்வு செய்து, சின்ன குறிப்புகளோடு சுஜாதாவுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதை அப்படியே அடுத்த வார 'கற்றதும்-பெற்றதும்' கட்டுரையில் ஆரம்பப் பகுதியாக வைத்திருந்தார்.
சுஜாதா மறைவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு கூட, அவரோடு போனில் பேசி, காதலர் தினத்தை முன்னிட்டுக் காதல் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று கேட்டிருந்தேன். கேட்ட ஒரு வாரத்துக்குள் கட்டுரையை எனக்கு இ-மெயில் செய்தார். அதற்கு அவர் தலைப்பு எதுவும் வைக்கவில்லை. இரண்டு வகையான காதலைப் பற்றி அவர் அதில் விவரித்திருந்தார். எனவே, நானே 'காதலிலே ரெண்டு வகை' என்று தலைப்பு போட்டு, கீழே பிராக்கெட்டுக்குள் குட்டியாக 'சைவம், அசைவம் அல்ல!' என்று போட்டிருந்தேன். வைரமுத்துவின் வரிகளை சுஜாதா பாணியில் கொஞ்சம் நகைச்சுவையாக்கிய தலைப்பு அது.
அவரது கட்டுரை விகடனில் பிரசுரமான பிறகு, அது பற்றிய அவரது அபிப்ராயத்தைக் கேட்கவேண்டும் என்று எண்ணியிருந்தேன். சந்தர்ப்பம் அமையவில்லை.
அது மட்டுமல்ல, விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கும் என் 'ஏடாகூட கதைகள்' புத்தகத்தை அவர் வீட்டுக்கே சென்று அவரிடம் கொடுத்து ஆசி வாங்கி வரவேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். அதற்கும் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது.
விகடன் பிரசுரம் மாதா மாதம் வெளியிடும் 'விகடன் புக் கிளப்' என்கிற புத்தகத்தில் வெளியிட பொன்ஸீ என்னிடம் சுஜாதா பற்றி ஒரு கட்டுரை கேட்டிருந்தார். வியாழன் அன்று காலையில், அவரைப் பற்றி எனக்குத் தோன்றியதை மடமடவென்று கம்போஸ் செய்தேன். ஜூனியர் விகடனுக்காக ரா.கி.ரா-விடம் சுஜாதா பற்றி ஒரு கட்டுரை கேட்கச் சொன்னார் அசோகன். கேட்டேன். அதன்படியே மறுநாள் (வியாழன்) காலை கொடுத்தார். அது ரொம்ப நீளமாக இருக்கவே, ஜூ.வி-யில் இடம் இல்லாத காரணத்தால், இரண்டு பக்க அளவில் சுருக்கிக் கொடுக்கச் சொன்னார்கள். செய்தேன்.
சுஜாதா பற்றிய அந்த நினைவு அஞ்சலி கட்டுரைக்கு ரா.கி.ரா வைத்திருந்த தலைப்பு...
'அவரைப் போல் இனி ஒருவர் வரமாட்டார்!'
சத்தியமான வார்த்தை.


சுஜாதா கட்டுரை
''விகடன் பிரசுரத்திலிருந்து வெளியாகும் 'விகடன் புக் கிளப்' புத்தகத்துக்காக சுஜாதா பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொடுங்கள்'' என்று 27.2.2008 புதன்கிழமை இரவு போன் பண்ணிக் கேட்டார் பொன்ஸீ. சுஜாதா மறைந்த தினம் அது. மறுநாள் வியாழனன்று காலையில் கம்போஸ் செய்யத் தொடங்கி, அடுத்தடுத்து வந்த விசாரிப்பு போன்கால்களால் எட்டரை மணிக்கு எழுதி முடித்த கட்டுரை கீழே!
சுஜாதா பேரைக் கேட்டாலே அதிருதுல்லே!
'சிவாஜி... பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்லே..!' - சிவாஜி படத்தில் சுஜாதா எழுதிய இந்த வசனம் பட்டிதொட்டி பூராவும் பற்றிக்கொண்டு, இன்னமும் அதிர்ந்துகொண்டு இருக்கிறது.
சொல்லப்போனால், இந்த வசனம் எழுத்துலகைப் பொறுத்தவரை சுஜாதாவுக்கே பொருந்தும். 1960-கள் வரை கட்டுப்பெட்டியாக இருந்த தமிழ் நடை, சுஜாதாவின் வருகைக்குப் பின் சிலிர்த்துக்கொண்டு படு நவீனமாகியது. மாட்டுவண்டியிலும் குதிரையிலும் பயணித்துக்கொண்டு இருந்த தமிழ் உரைநடைக்கு மின்சாரம் பாய்ச்சி, அதை ராக்கெட்டில் சீறிப் பாயச் செய்தவர் சுஜாதா. வாயிலேயே நுழையாத ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்களின் கதைகளைத்தான் தாங்கள் படிப்பதாக ஜம்பமடித்துக்கொண்டு இருந்த அன்றைய இளைஞர்களைத் தமது காந்த எழுத்தால் கட்டிப்போட்டு, 'நான் சுஜாதாவின் வாசகன்' என்று பெருமையோடு சொல்லிக்கொள்ளச் செய்தவர் சுஜாதா.
அன்றிலிருந்து இன்று வரை எழுத்துலகின் சூப்பர் ஸ்டார் 'சுஜாதா'தான்!
அவர் இன்று நம்மிடையே இல்லை!
தமிழகத்தின் தென்கோடி கிராமங்களில் வசிக்கும் சாமான்ய மனிதர்கள் பலரால் எப்படி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்ததை இன்னமும் ஏற்க முடியவில்லையோ, அப்படித்தான் இந்தப் புரட்சி எழுத்தாளர் சுஜாதா மறைந்ததையும் வாசகர்களால் ஜீரணிக்க முடியும் என்று தோன்றவில்லை.
சுஜாதாவின் பேனா தொடாத விஷயங்கள் உண்டா? சிறுகதை, நெடுங்கதை, சரித்திரக் கதை, ஆன்மிகம், நாவல், நாடகம், கட்டுரை, புதுக்கவிதை, ஹைக்கூ, வெண்பா, திரைக்கதை வசனம்... எத்தனை எத்தனை! நகரத்து இளைஞனுக்கும் கிராமியப் பாடல்களை அறிமுகப்படுத்தி, மண் வாசனையில் மயங்க வைத்த 'கரையெல்லாம் செண்பகப் பூ', கடினமான அறிவியல் விஷயங்களையும் எளிய தமிழில் சொன்ன அடுத்த நூற்றாண்டு, கி.பி.இரண்டாயிரத்துக்கு அப்பால், சிலிக்கன் சில்லுப் புரட்சி, செய்தி சொல்லும் செயற்கைக் கோள்கள், கணிப்பொறியின் கதை, தலைமைச் செயலகம்... தூண்டில் கதைகள், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என, ஜீனோமிலிருந்து ஜீனோ நாய்க்குட்டி வரை எல்லா தளங்களிலும் அவரது பேனா நாட்டியமாடியிருக்கிறது.
தான் பெற்ற கண் சிகிச்சை, பல் சிகிச்சை, ஹார்ட் ஆபரேஷன், டயலிஸிஸ் பற்றியெல்லாம் கூட விளக்கமாகவும், வாசகர்களை பயமுறுத்தாத விதத்தில் நகைச்சுவையோடும் எழுதி, விழிப்பு உணர்வு ஏற்படுத்தியவர் சுஜாதா.
ஆழ்வார்களைப் பற்றியும் எழுதுவார்... அணு ஆராய்ச்சி பற்றியும் எழுதுவார்; கும்பகோணம் கோயில்கள் பற்றியும் எழுதுவார்... குவாண்டம் தியரி பற்றியும் எழுதுவார்! ஜூனியர் விகடனில் அவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிய 'ஏன்? எதற்கு? எப்படி?' கேள்வி-பதில் பகுதி வாசகர்களின் அறிவியல் தாகத்துக்குத் தண்ணீர் வார்த்தது. ஆனந்த விகடனில் அவர் தொடர்ந்து எழுதி வந்த 'கற்றதும்... பெற்றதும்...' கட்டுரைகளில் அவர் வாசகருக்குச் சொல்லாத விஷயங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
'க-பெ' கட்டுரை ஒன்றில்... "எழுபது ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்த பல்லை ஏழே நிமிஷங்களில் நீக்கி, ட்ரேயில் 'ப்ளங்க்' என்று போட்டபோது, அதை வாஞ்சையுடன் பார்த்து, 'போய் வா, நண்பா!' என்று விடைகொடுத்தேன்" என்று பல்லுக்கும் பிரியாவிடை கொடுத்து எழுதியிருக்கிறார் சுஜாதா. இன்று அவருக்கே நாம் விடைகொடுத்து அனுப்பவேண்டும் என்றால், முடியுமா நம்மால்?
தமிழகம், இந்தியாவைத் தாண்டி உலக நாடுகளிலும் அவரது வாசகர் வட்டம் பரந்து விரிந்திருக்கிறது. சுஜாதா இப்போது நம்மிடையே இல்லை என்கிற அதிர்ச்சியூட்டும் உண்மையை அவர்கள் எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறார்கள்?
தன்னைப் படைத்த பிரம்மனின் பிரிவால் கலங்கி நிற்கும் கணேஷ் - வசந்த்துக்கு யார் ஆறுதல் சொல்லப்போகிறார்கள்?
( நன்றி: ரவிபிரகாஷ்)



Comments
[1] from: தியாகராஜன்
வாழ்க்கையின் எத்தனையோ சந்தர்ப்பங்கள் உங்களால், உங்கள் கதைகளால்,உங்கள் கட்டுரைகளால், உங்கள் கவிதைகளால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.... மிக்க நன்றி, சுஜாதா சார்.ஆண்டவனிடம் சற்று ஓய்விடுங்கள்.....
[2] from: uthaya
" தன்னைப் படைத்த பிரம்மனின் பிரிவால் கலங்கி நிற்கும் கணேஷ் - வசந்த்துக்கு யார் ஆறுதல் சொல்லப்போகிறார்கள்? " ...
Those who died along with Sujatha,Gnaesh –


சுஜாதா எழுதிய கடைசி கற்றதும் பெற்றதும்


கற்றதும் பெற்றதும்
ஏதோ தேடும் போது, சுஜாதா எழுதிய கடைசி கற்றதும் பெற்றதும் கண்ணில் பட்டது. சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு.
விகடனில் கற்றதும் பெற்றதும் முடிக்கும் போது, தற்காலிக முற்றும் மீண்டும் சந்திக்கலாம் என்று சொல்லுவார். இந்த முறை திடீர் என்று 'முற்றும்' போட்டார். ஏன் என்று பிறகு ஒரு சமயம் சொல்லுகிறேன். இப்போது படிக்க கடைசி பகுதி..
கம்ப்யூட்டரே, பதில் சொல்லு!வயசாவதன் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்று, சமீபத்திய ஞாபகங்கள் கண்ணாமூச்சி காட்டுவது. நினைவு இருப்பது போலிருக்கும்; வார்த்தை சிக்காது. இரண்டு நாட்களுக்கு முன், முகம்மது கைஃப் என்ற பெயர் சட்டென்று மறந்து போய், அதி-காலையில் ஒரு மணி நேரம் விழித்திருந்து யோசித்தேன். இந்த உபாதைக்கு நியூரான்களைப் புதுப்பிக்க மருந்து மாத்திரைகள் இருக்கிறதா? டாக்டர் ராமச்சந்திரன் போன்றவர்கள் சொல்லலாம்.
ஆனால், நான் கடைப்பிடிப்பது ஒரு நிச்சயமான மார்க்கம்... இன்டர்நெட்! ஞாபகம் வரவில்லை என்றால், அப்படியே விட்டு விட்டுக் காலை எழுந்ததும், கம்ப்யூட்டரைத் திறந்து google அலலது yahoo answers-ல் கேள்வி கேட்டால், கிடைத்துவிடும். இப்படித்தான் சாமர்செட் மாம் எழுதிய நான் படித்த மூன்றில் இரண்டு நாவல்களின் பெயர்கள் ஞாபக-மிருந்தன (Of Human Bondage, The Moon and Sixpence). மூன்றாவது பூச்சி பறந்தது. நெட்டில் கேட்டதில், சட்டென்று பதில்! The Razor’s Edge.
இணையம் இருக்கும் வரை இறப்பு இல்லை. அதில் தேடும் முறையை மறந்து-போய்விட்டால், ஏறக்குறைய சங்குதான்.
சாமர்செட் மாமின் நாவல்களை நான் எம்.ஐ.டி. படிக்கும்போது, க்ளாஸ் கட் அடித்து--விட்டுக்கூடப் படித்திருக்கிறேன். பால் கோகேன் என்னும் சித்திரக்காரரின் வாழ்க்கை சார்ந்த
கதையோ, சுயசரித்திரம் சார்ந்த கதையோ, தாமஸ் ஹார்டியின் வாழ்வைத் தழுவிய நாவலோ... மாமின் உரைநடையின் தெளிவு என் எழுத்தை ஒரு விதத்தில் பாதித்தது.
இப்போது படிக்கும்போது, அந்த நாவல்-கள் அப்படியொன்றும் ஓஹோ என்று தெரியவில்லை. Razors Edge நாவல் அப்போது போர் அடித்-தது. இப்-போது அதுதான் சிறந்த-தாகத் தெரிகிறது. மேற்கத்திய வாழ்வு அலுத்துப் -போய், ஒருவன் நிம்மதி தேடி இந்தியா-வுக்கு வந்து, ரமண மகரிஷியின் ஆசிரமத்தில் அமைதி காணும் கதை. சாமர்செட் மாம் எழுதிய எதையும் படித்திரா தவர்கள், அவருடைய Rain என்னும் சிறுகதையை மட்டும் படித்தால் போதும்.
-(0)-(0)-
திருமங்கையாழ்வாரின் காலத்தில் முதலில் கட்டப்பட்ட நீள்மதிலரங்கம் என்னும் திரு-வரங்கத்துக் கோயிலின் மதில் சுவர்கள் இப்போது சிதில-மடைந்து, காட்டுச் செடி பீறிட்டு உடைந்து-விழும் நிலை-யில் இருப்-பதை ராஜ் டி.வி-யில் காட்டி-னார்கள். இதைப் புதுப்-பிக்க ஒரு பிரபு மூணு கோடி ரூபாய் தந்திருப்ப-தாகவும், மதிலருகே வசிப்பவர்களைத் தற்-காலிக-மாக இடம் மாற்று-வதில்தான் பிரச்னை என்றும் சொன்னார்-கள்.
கோயிலை ஒட்டிய உத்தர வீதியின் மதில் சுவர்கள் பல அங்கங்கே சிதிலமாக இருப்ப-தையும், அவற்றுக்கருகே தற்காலிக அஸ்பெஸ்டாஸ் குடியிருப்புகள் முளைத்திருப்ப-தையும் சென்ற முறை பார்த்-தேன். இவற்றை யார் அனுமதித்-தார்கள், தெரியவில்லை! கோப்புகளை நோண்டிக் கண்டுபிடிப்பதற்குள் இம்மாதிரி-யான பிரச்னைக்கு உடனே கலெக்டரோ, கமிஷனரோ தீர்வு காண- வேண்டும். மதில் கல் இடிந்து யார் தலையிலா-வது விழும் வரை காத்திருக்கக்-கூடாது. பெரிய பெரிய கற்கள். உடனடி பரமபதம்!

வாடாத நினைவுகள் - லேனா தமிழ்வாணன்


வாடாத நினைவுகள் - லேனா தமிழ்வாணன்
லேனாவின் பார்வையில் என்ற இந்தப் பகுதியில் சமூக அக்கறைகளை மட்டுமே இதுவரை எழுதி வந்திருக்கிறேன்.
ஆனால் முதல் முறையாக இப்பகுதியில் எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி செலுத்த எண்ணுகிறேன்.
தமிழ் எழுத்துலகில் நவீன வடிவங்களைப் பயன்படுத்தியவர்களுள் சுஜாதாவின் பங்கு மிக உருப்படியானது.
60 வயது ஆனதும் சாய்வு நாற்காலியைக் கேட்காமல், மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் முன்பு வரை எழுத்து எழுத்து என்று 73 வயதிலும் எழுத்தை அப்படி நேசித்தார்.
வாசகர்கள் எதிர்பார்ப்பு மற்றும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டே அவரது படைப்புகள் அமைந்தன. தம் திருப்திக்கு எதையாவது எழுதுவேன்; படித்துத் தொலைப்பது உங்கள் தலையெழுத்து என்கிறபோக்கு சுஜாதாவிடம் இருந்ததே இல்லை.
1970களில் இளைஞர்களாக இருந்தவர்களை ஈர்க்க ஆரம்பித்தார். அவர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டார். காலத்திற்கு ஒவ்வாத எழுத்து என்றோ, இவர் அந்தக் காலத்து ஆசாமி என்றோ இவரது எழுத்துக்கள் பெயர் வாங்கியதே இல்லை. நவீனங்களுக்கு ஏற்ப, அண்மைத் தலைமுறைக்கு ஏற்பத் தன் எழுத்தை நவீனப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் சுஜாதாவுக்கு இருந்தது.
அறிவியல் சார்ந்த எழுத்து என்று எடுத்துக் கொண்டால், சுஜாதாவின் பங்களிப்பை எவருமே குறைத்து மதிப்பிடமுடியாது. எட்டாத உயரத்தில் இருந்த விஷயங்களைப் பிடித்துப் பாமரன் கையில் கொடுத்து இந்தா புரிந்து கொள்; இது மிகச் சுலபம் என்று ஆக்கியவர் சுஜாதா.
இவரது எழுத்து நடைமுறைக்குப் புதிது. அதில் இருந்த நமட்டுச் சிரிப்பை அடையாளம் காணவே உயர்ந்த ரசனை வேண்டும்.
ஆக, வாசகர்களின் இரசனைகளைக் கருத்தில் கொண்டு சில இடங்களில் இறங்கி வந்தும், சில இடங்களில் அவர்களிடம் நீங்கள் மேலே வாருங்கள் என்று இழுத்துக் கொண்டும் வந்த இரட்டைச் சாதனையாளர் சுஜாதா.
ப்ரியா படத்தில் ஆரம்பித்த இவரது திரையுலகச் சாதனை சாதாரணமானதல்ல. திரையுலகில் பலராலும் அண்ணாந்து பார்க்கப்படுகிற ஷங்கரே அண்ணாந்து பார்க்கிற மனிதராக எழுத்துலகைச் சேர்ந்த ஒருவர் விளங்கியிருக்கிறார் என்பது எழுத்துலகிற்கே பெருமை.
கணிப்பொறியும் எழுத்தும் சுஜாதாவின் இரு கண்கள். தொழில் நுட்பம் நன்கு தெரிந்தவர்களுக்கு எழுத்துலகம் என்பது தொலைதூரம். எழுத்தாளர்கள் பலருக்கோ கணிப்பொறி என்பது கனவுலகம். ஒரு மனிதன் இரு குதிரைகளில் சவாரி செய்யமுடியுமா என்று கேட்டவர்களுக்கு சுஜாதாவின் அறிவிக்கப்படாத பதில் முடியும் என்பது.
இந்த எழுத்துலக மேதை குமுதத்தோடு இணைந்திருந்த காலத்தில் நன்கு நெருங்கிப் பழகும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் நலனில் அவர் காட்டிய அக்கறைகள்; இதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை எண்ணிப் பார்க்கும்போது என் கண்கள் பனிக்கின்றன.
தமிழ் எழுத்துலகிற்கென்று பல பெருமைகள் உண்டு. இவற்றுள் முக்கியமானது. எந்த மொழிக்காரர்களிடமும் தமிழ் வாசகர்கள் ஒன்றைச் சொல்லி மார்தட்டிக் கொள்ளலாம். "எங்களுக்கென்று ஒரு சுஜாதா இருக்கார் தெரியும்ல?"
( நன்றி: http://www.tamilvanan.com/

அப்போலோ தினங்கள்-சுஜாதா





அப்போலோ தினங்கள்
'அப்போலோ தினங்கள்' என்று கடைசியாக அவர் எழுதியதைப் பார்த்தபோது, எனக்கு அவர் ஆஸ்பத்திரியில் போராடிய கடைசித் தருணம்தான் நினைவுக்கு வந்தது.
அதற்கு முன் நான் அவரைப் பார்த்தது, பிப் 21ம் தேதி. உடம்பு மெலிந்து, ஆக்ஸிஜன் மிஷினின் உதவியால் சுவாசம். கடந்த பதினைந்து வருடங்களில் நான் அவரை எவ்வளவோ முறை சந்தித்திருக்கிறேன்; இதுமாதிரி பார்ப்பது முதல் முறை. அத்தனை கஷ்டத்திலும், 'என்ன தேசிகன், ஆம்டையா நல்லா இருக்காளா? ஆண்டாள் எப்படி இருக்கா? ஸ்கூல் எல்லாம் ஒழுங்காப் போறாளா?' என்று எதையும் விடாமல் விசாரித்தார்.
எல்லாரும் நல்லா இருக்காங்க சார்!'
'கிரிக்கெட் என்னப்பா ஆச்சு, வழக்கம் போலதானா?' என்றார்.
சில மணி நேரத்துக்கு முன்பு எடுத்த ரத்தப் பரிசோதனை அளவில் கிரியாடினின் அளவு அதிகமாக இருப்பதாகத் தகவல் வந்ததால், டாக்டர் உடனே மருத்துவமனைக்கு வரச் சொல்லியிருந்தார். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
'இந்தத் தடவை உடம்பு ரொம்ப படுத்திடுத்து. ஆஸ்பிட்டல் போனா இன்னும் படுத்துவாங்களே' என்றார்.
'ஒண்ணும் ஆகாது சார்! ஒரு டயாலிஸிஸ் பண்ணிட்டு அனுப்பிடுவாங்க!'
கண்களைக் கொஞ்ச நேரம் மூடிக் கொண்டார். நாக்கால் உதட்டை ஈரப்படுத்திக்கொண்டார். அருகிலுள்ள பிரின்டர், ஃபான்ட் பிரச்னையினால் பூச்சி பூச்சியாக எதையோ அடித்துத் தள்ளியிருந்தது.
ஆம்புலன்ஸில், 'ஏ.ஸி சரியா இல்லியே' என்றார். ஃபேனைத் தட்டிவிட்டு, அவர் பக்கம் திருப்பினேன். 'எனக்கு ஒண்ணும் சீரியஸ் இல்லை, டிரைவரிடம் மெதுவாவே போகச் சொல்லுப்பா.'
ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துவிட்டுக் கிளம்பினேன். 27ம் தேதி காலையில் அவரது மூத்த மகன் ரங்காவிடமிருந்து அழைப்பு. 'அப்பாவுக்கு ரொம்ப முடியலை, சீக்கிரம் கிளம்பி வாப்பா' என்றார்.
சுஜாதா ரொம்ப சென்ஸிடிவ்வானவர். ஒருமுறை அவருக்கு வந்த கூரியர் தபாலை என்னிடம் கொடுத்து, 'இந்த கூரியர்ல ஏகப்பட்ட ஸ்டேப்ளர் பின் இருக்கு. ஏன் இவ்வளவு பின் அடிக்கிறாங்க, கையை ரொம்பக் குத்துறது' என்றார். இதனாலேயே அவர் வீட்டில் நிறைய பார்சல்கள் பிரிக்கப்படாமல் இருக்கிறதோ என்ற எண்ணம்கூட எனக்கு வந்ததுண்டு.
ஆனால், நான் மருத்துவமனை போன சமயம், அவர் உடலில் எல்லா இடங்களிலும் பைப்பும் ட்யூப்புகளும் செருகப்பட்டு, சினிமாவில் பார்ப்பது போல், மானிட் டரில் எண்களும், 'பீப்' சத்தங்களும், விதவிதமான கோடுகளும்... பெருமாளே, இதெல்லாம் அவருக்குத் தெரியக் கூடாது என்று ரெங்கநாதரை வேண்டிக்கொண்டேன்.
'சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கேதான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கேதான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது'
என்று அவர் தன் எழுபதாவது பிறந்த நாள் கட்டுரையில் எழுதியிருந்தார்.
சென்ற ஜூன் மாதம் அவரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துக்கொண்டு போனேன். ஸ்ரீசூர்ணம் கேட்டு நெற்றியில் இட்டுக்கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டார்.
ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாளைச் சேவித்த பின், அவருக்கு ஏற்பட்ட மனநிறைவை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. 'எப்படியோ பெருமாள்ட்ட என்னைக் கொண்டு வந்து சேர்த்துட்டேப்பா!' என்றார் நெகிழ்வுடன். கோயிலில் ஏனோ சில இடங்களில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துகொண்டார். அதைக் 'கற்றதும் பெற்றதும்'ல் எழுதியிருந்தார்.
ஸ்ரீரங்கம் பயணம் முடிந்த பின், 'இந்த ட்ரிப்புக்கு நான் எவ்ளோ தரணும்?' என்றார். 'சிவாஜி படத்தின் பிரிவ்யூக்கு ஒரு டிக்கெட்' என்றேன். அதற்கும் ஒரு சிரிப்பு.
பெரிய பெரிய விஷயங்களை எழுதினாலும், சுஜாதாவுக்கு சின்னச் சின்ன ஆசைகள் நிறைய உண்டு. கடற்கரையில் வாக்கிங் போகும்போது, கிளிமூக்கு மாங்காய், வேகவைத்த கடலை வாங்கிச் சாப்பிடுவார். 'அது உடம்புக்கு ஆகாது' என்று முக்கால் பாகத்தை டிரைவரிடம் கொடுத்துவிடுவார். பம்பரம் வாங்கிக் கொண்டுவரச் சொல்லி விட்டுப் பார்ப்பதும், பீச்சில் குழந்தைகள் விளையாடுவதை ஆர்வத்துடன் பார்ப்பதுமாக இருப்பார். அவர்களிடம், 'உன் பேர் என்ன?' என்று ஆர்வமாகக் கேட்பார். வித்தியாசமான பெயராக இருந்தால் ஞாபகம் வைத்துக் கொள்வார்.
'ஏம்பா, உன் பொண்ணுக்கு ஆண்டாள்னு பேர் வெச்சிருக்க, ஸ்கூல்ல கேலி பண்ண மாட்டாங்களா?'
'சார், மரகதவள்ளின்னே பேர் இருக்கும்போது...'
'மரகதவள்ளி நாளையே சுருக்கி மேகி ஆயிடுமே' என்றார் தனக்கே உரிய நகைச்சுவையுடன்.
சமீபத்தில் ஒரு முறை 'உன்னுடன் பைக்கில் வருகிறேன்' என்று அதிர்ச்சிக்குள்ளாக்கினார். என் பின்னால் உட்கார்ந்து கொண்டு, தன் வீடு வரை அழைத்துப் போகச் சொன்னார். 'இப்ப என்ன ஸ்பீட்?' என்று விசாரித்துவிட்டு, 'இன்னும் கொஞ்சம் வேகமா போ, பார்க்கலாம்!' என்று பைக் சவாரியை அனுபவித்தார்.
'ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்' தொகுப்புக்கு நான் கோட்டோவியங்கள் வரைய ஆசைப்பட்டபோது, அவரிடம் என்னென்ன வரைய வேண்டும் என்று கேட்டேன். ஒரு பேப்பரை எடுத்து, ரங்கு கடை எங்கே இருக்கும், அவர் வீடு, கோபுரங்கள், தெருக்கள் என்று ஏராளமான இடங்களை மேப் போல போட்டுக் காண்பித்தார். வரைந்து வந்து காண்பித்தபோது, மிகவும் ரசித்தார். அவரும் ஓர் ஓவியர்தான் என்பது பலருக்குத் தெரியாது. அவர் வரைந்த வாட்டர் கலர் படங்கள் முன்பு அவர் வீட்டில் மாட்டியிருக்கும். அதே போல், கணையாழியின் கடைசிப் பக்கத்திலும் சில சின்னச் சின்ன படங்கள் வரைந்துள்ளார்.
ஐந்து வருடங்களுக்கு முன் அவரின் பயோகிராஃபியை எழுத வேண்டும் என்று கேட்டேன். 'உண்மையைச் சொல்ல வேண்டி வரும்; கூடவேபிரச் னையும் வருமே' என்று யோசித் தார். போன வருடம் மீண்டும் அதே யோசனையைச் சொன்ன போது, 'ஓ, தாராளமா செய்ய லாமே!' என்றார் ஆர்வத்துடன். 'சில பகுதிகளை எழுதிட்டு வர்றேன், பாருங்க' என்றேன். 'நீ எழுதுறாப்ல எழுதாத; நான் எழுதுறாப்ல எழுது' என்று உற்சாகப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து, அவரைப் பேசவைத்து, சில பகுதிகளை ரெக்கார்ட் செய்தேன். பல தர்மசங்கடமான கேள்விகளுக்கு எளிமையாகப் பதில் சொன்னார். சில கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, கண்களில் நீர் வந்தது. அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள், கதைகளில் அவர் பயோகிராஃபி சம்பந்தமான பகுதிகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்...
'எல்லாமே ஒரு குறுக்கெழுத்துச் சதுரம் போல இருக்கிறது, மேலிருந்து கீழ், இடமிருந்து வலம் என்று வார்த்தைகளுக்கான குறிப்புகள் கிடைக்கின்றன. வெள்ளைக் கட்டங்களை நிரப்புகிறோம். பல வார்த்தைகள் கிடைத்துவிட்டன. சில வார்த்தைகளுக்கு எழுத்துகள் தான் உள்ளன. சில வார்த்தைகள் காலியாகவே இருக்கின்றன. என்றாவது ஒரு நாள் அது நிரப்பப்படும்' என்று சுஜாதா எழுதிய வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது.
அவர் தேர்ந்தெடுத்துப் படிக்கும் புத்தகம் நிறைய. நவம்பர் மாதம், 'இப்ப எல்லாம் எதையும் படிக்கிறதில்லை; கண்ணும் ரொம்ப ஸ்ட்ரைன் ஆகறது. நான் இப்ப கொஞ்ச நேரமாவது படிக்கிற புஸ்தகம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் மட்டும்தான், அதுதான் எனக்கு எல்லாம்!' என்றார்.
அவருடன் 27ம் தேதி மாலை அவரது கடைசித் தருணங்களில் இருந்தபோது, அவர் படும் கஷ்டங்களைப் பார்க்க முடியாமல், அருகில் அமர்ந்து அவருக்குப் பிடித்த பாசுரங்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கத் தொடங்கிய சமயம், உயிர் அவரைவிட்டு வேகமாகப் பிரிந்துகொண்டு இருந்தது. உயிர் பிரிந்தபோது படித்தது, 'சிற்றஞ் சிறுகாலே...' என்ற ஆண்டாள் திருப்பாவைப் பாசுரம். ஒரு தீவிர சுஜாதா ரசிகனாக இதுதான் அவருக்கு என்னால் கடைசியில் செய்ய முடிந்தது.
'மனித உயிர் என்பது வற்றாத ஓர் அதிசயம், அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால், ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும்'
என்று சுஜாதா சொன்னது எவ்வளவு உண்மை!
இப்போது பிரிகிறோம், இனி எப்போது சந்திப்போம் சுஜாதா சார்?
(இந்த வார விகடனில் சுஜாதா பற்றி என்னுடைய கட்டுரை, நன்றி: விகடன் )
சுஜாதா எழுதிய கடைசி பத்தி 'அப்போலோ தினங்கள்' அதில் எழுதியிருப்பது
இன்று 18வது நாள்.. எத்தனை பேருக்கு கவலை, மனக் கஷ்டம். இதை விதி என்று சொல்வதா தற்செயல் என்பதா? எப்படியும் இந்த அனுபவத்தை நான் மறக்கவோ மீண்டும் தாங்கவோ முடியாது. இனி ஆஸ்பத்திரி பக்கமே வரக்கூடாதபடி பகவான் என்னைக் காக்கவேண்டும். மனைவியும் மகனும் பொறுமையாக பார்த்துக் கொண்டதை மறக்கவே மாட்டேன். இவர்கள் இல்லை என்றால் சீரியஸாகி விளைவுகள் விபரீதமாயிருக்கும்.
( விகடனில் இரண்டு லைன் எஸ்டிராவாக இருக்கிறது அது தவறு )