Showing posts with label softwares. Show all posts
Showing posts with label softwares. Show all posts

26.11.08

ஜிமெயில் பேக்-அப்


இணையத்தில் காணக்கிடைக்கும் பல இலவச மெயில் சேவைகளில் "ஜிமெயில்" இன்றைக்கு நம்மில் பலருக்கும் பிரதான மெயிலாசனமாகிவிட்டது. ஒரே பயனர் கணக்கில் மெயில் அக்கவுண்ட், ஐகூகிள், பிக்காசா, அட்சென்ஸ், ஆர்குட் என்று பலவசதிகள் வைத்துக் கொள்ளலாம் என்பது அதற்கான இன்னொரு காரணம்.அப்படியே மைக்ரோசாப்ட் வழங்கும் ஸ்கைடிரைவ்(5 GB) போல கூகிளும் சீக்கிரம் ஜிடிரைவ் வழங்கினால் நன்னா இருக்கும்.

உங்கள் ஜிமெயிலிலிருக்கும் மின்னஞ்சல்களையெல்லாம் இறக்கம் செய்து உங்கள் கணிணியின் ஹார்ட் டிரைவில் பாதுகாப்பாக சேமித்துவைத்துக்கொள்ள வேண்டுமா?
பின்பு நேரம்கிடைக்கும் போதெல்லாம் இணைய இணைப்பில்லாத போதும் அம்மெயில்களை அட்டாச்மெண்ட்களோடு திறந்து படிக்கவேண்டுமா? பழையதொரு ஜிமெயில் அக்கவுண்டிலிருக்கும் உங்கள் மின்னஞ்சல்களையெல்லாம் புதியதொரு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டுக்கு மாற்றவேண்டுமா? இரு வேறு உங்கள் ஜிமெயில் அக்கவுண்டுகளை ஒன்றிணைக்க வேண்டுமா?

எளிய இலவச Gmail-Backup டூல் மேற்கண்ட சூழ்ச்சிகளையெல்லாம் உங்களுக்கு செய்கின்றது. ஒரே கண்டிசன். உங்கள் ஜிமெயிலில் IMAP-ஆனது enable செய்யப்பட்டிருக்க வேண்டும்.
விண்டோசில் மட்டுமல்லாது லினக்சிலும் இந்த பயன்பாட்டை பயன்படுத்தலாம் என்பது கூடுதல் விசேசம்.

Download from here

http://www.gmail-backup.com


Thanks.PKP

7.7.08

பைலைச் சரியாக அமைக்கும் டிபிராக்ளர்

அண்மையில் மிகப் பயனுள்ள புரோகிராம் ஒன்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அதுகுறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தக் குறிப்பு. கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் எழுதப்படுகையில் வரிசையாகத்தான் முதலில் எழுதப்படும். காலப் போக்கில் பைல்களை அழித்து அழித்து புதிய பைல்களை எழுதுகையில் அவை ஹார்ட் டிஸ்க்கில் தொடர்ந்த இடத்தில் எழுதப்படாமல் விட்டு விட்டு பல இடங்களில் பிட்டு பிட்டாக எழுதப்படும். ஆனால் கம்ப்யூட்டர் இயக்கம் அவற்றைச் சரியாகக் கோர்வையாகப் படித்து நமக்குத் தரும். இவ்வாறு விட்டு விட்டு பிட்டு பிட்டாக இருக்கும் பைல்களை மீண்டும் சரியாகத் தொடர்ச்சியாக அமைப்பதற்கு உதவிடும் புரோகிரம் தான் டிபிராக் புரோகிராம் ஆகும்.

இதில் என்ன பிரச்னை என்றால் டிபிராக் செய்கையில் ஹார்ட் டிஸ்க் முழுவதும் அல்லது ஒரு குறிப்பிட்ட டிரைவ் முழுவதும் இந்த பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அளவில் பெரிய பைல் ஒன்றை அமைக்கிறீர்கள். நீங்கள் டிபிராக் செய்து நாள் ஆகிவிட்டது என்றால் நிச்சயமாய் அந்த பைல் பல பிட்டுகளாகத்தான் எழுதப்படும். இந்த பைலை மட்டும் டிபிராக் செய்து சரியாக ஓரிடத்த்தில் அமைக்க முடியுமா? முடியும் என்கிறது அண்மையில் நான் பார்த்த டிபிராக்ளர் (Defraggler) என்ற புரோகிராம். இனிமேல் அனைத்து பைல்களையும் நீங்கள் டிபிராக் செய்திடத் தேவையில்லை. குறிப்பிட்ட பைலை மட்டும் இந்த புரோகிராம் மூலம் டிபிராக் செய்து கொள்ளலாம். முழு டிரைவினையும் டிபிராக் செய்திடவும் இந்த புரோகிராம் வழி வகுக்கிறது. இந்த புரோகிராமின் இன்னொரு வசதி என்னவென்றால் இதனை எளிதில் எடுத்துச் செல்லலாம். மிகச் சிறிய கட்டமைப்பில் இது உருவாக்க பட்டுள்ளது. அதனால் ஒரே ஒரு சிறிய எளிய இ.எக்ஸ்.இ. பைலாக இது நமக்குக் கிடைக்கிறது. எனவே இதனை ஒரு பிளாஷ் டிரைவில் பதிந்து எடுத்துச் சென்று எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம். இந்த பைல் 1 எம்பி அளவிலேயே இருக்கிறது.


உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எப்படி இந்த அளவிலான சிறிய பைல் டிபிராக் பணியை மேற்கொள்கிறது? என்ற கேள்வி எழலாம். இதற்கு நீங்கள் செயல்முறையிலேயே தெரிந்து கொள்ளலாம். டிபிராக்ளர் புரோகிராமினை முதலில் www.defraggler.com/download என்ற இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். அதன்பின் மற்ற புரோகிராம்களை இயக்குவது போல இயக்குங்கள். அதன்பின் உங்கள் கம்ப்யூட்டரில் எந்த எந்த புரோகிராம்களை அல்லது போல்டர்களை டிபிராக் செய்திட வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.


பின் அவற்றை டிபிராக் செய்திட கட்டளை கொடுக்கலாம். டிபிராக்ளர் அந்த பைல்களை டிபிராக் செய்துவிட்டு வெற்றிகரமாக செய்ததாக உங்களுக்கு அறிவிக்கும். டிபிராக் செய்திட முடியாத பைல்களின் பட்டியலைத்தரும். அத்துடன் இன்னும் டிபிராக் செய்யப்பட வேண்டிய பைல்கள் என்று ஒரு பட்டியலையும் தரும். பட்டியலில் உள்ள அந்த பைல்களின் மீது கிளிக் செய்தால் அந்த பைல்கள் எங்கு இருக்கிறது என்பதனையும் அவை ஏன் டிபிராக் செய்யப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் கண்கூடாகப் பார்க்க முடியும். டிபிராக்ளர் விண்டோஸ் 2000, 2003, எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் செயல்படுகிறது.


அண்மையில் 64 பிட் சிஸ்டத்தில் இயங்கும் வகையிலும் டிபிராக்ளர் மாற்றம் செய்யப்பட்டு தரப்பட்டுள்ளது. CCleaner என்ற புரோகிராம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த புரோகிராமினைத் தயாரித்து வழங்கிய Piriform என்ற நிறுவனம் தான் இதனையும் தயாரித்து வழங்குகிறது.

25.6.08

கடிவாளங்கள்


இன்று வீட்டுக்கு வீடு கணிணி.30 வருடத்திற்கு முன்பு இப்படி வீட்டுக்கு வீடெல்லாம் கம்ப்யூட்டர் வருமென்று யாராவது கனவு கண்டார்களா? தெரியாது. நாசாவிலும், ஆராய்ச்சிக் கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் மட்டுமே இருக்கும் விலையுயர்ந்த மிருகமாக அது அப்போது கருதப்பட்டது.

இன்று நடு அறை கணிணியில் அப்பா பிபிசியில் செய்தி பார்த்துக் கொண்டிருக்க உத்து பாக்குது குட்டிப் பாப்பா. தாத்தா கிரிக்கெட் ஸ்கோர் கேட்டு வந்து நிற்கின்றார். பாட்டிக்கு யூ.கேயிலுள்ள தன் தங்கையை வெப்கேமில் பார்க்க ஆசை. கான்எடிசனுக்கு (மின்சாரத்துக்கு) பணம் கட்டுவது காம்கேஸ்டுக்கு (இணையம்) பணம் கட்டுவது என அம்மாவுக்கு தலைக்கு மேல் வேலையுள்ளது. எல்லாம் கணிணி வழிதான்.

இப்படி டி.வி போல் நம் குடும்பத்தில் புதுசாய் அங்கமாகிப்போன கணிணியை நம் குடும்பத்துக்கு ஏற்ற நண்பனாக மாற்ற சில கடிவாளங்கள் நாம் போட வேண்டியுள்ளது. அறிந்தோ அறியாமலோ நம் வீட்டு சிறுசுகள் தவறாக தவறான தளங்களுக்கு செல்ல அல்லது வயதுவந்தோர்க்கான தளங்களுக்கு சென்றுவிட வாய்ப்புகள் உள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள், அசிங்கங்கள், மர்ம நபர்கள், ஜாதிமதபேத வெறிகள் இதிலிருந்தெல்லாம் நம் குழந்தைகளை கொஞ்ச காலமாவது விலக்கிவைத்திருக்கலாம் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமாகவே இருக்கும். நீங்களும் அப்படிப்பட்ட ஒரு பெற்றோரானால் உங்கள் கணிணிக்கு இலவசமாய் கடிவாளம் போடலாம்.எப்படி?

ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உணர்ந்த Blue Coat Systems எனும் நிறுவனம் K9webprotection எனும் மென்பொருளை அனைத்து பெற்றோர்களுக்கும் இலவசமாய் வழங்குகின்றார்கள். இம்மென்பொருளை நீங்கள் இறக்கம் செய்து உங்கள் கணிணில் நிறுவினால் நிச்சயம் ஒரு பாதுகாப்பை உணர்வீர்கள். அடிப்படையிலேயே பல தளங்களை தடைசெய்யும் இம்மென்பொருளை உங்கள் விருப்பற்றிற்கு ஏற்றார் போல் கூடுதல் தளங்களை கூட்டவோ அல்லது சில தளங்களின் மீதான தடையை நீக்கவோ செய்து கொள்ளலாம். தவறுதலாக அவர்கள் மோசமான இணையதளம் பக்கம் போனால் "Prohibited" screen வரும் அல்லது ஒரு குரைக்கும் நாய் வருமாறு செய்யலாம். நீங்கள் உசாராகி விடலாமே?.

கீழ்கண்ட சுட்டியிலிருந்து நீங்கள் இறக்கம் செய்துகொள்ளலாம்.
(Free registration required to get the License)

http://www.getk9.com

பொதுவாக உங்கள் வீட்டு கணிணியை எல்லாருக்கும் தெரியும் வகையில் ஒரு பொது அறையில் வைப்பது நல்லது, அது போல குழந்தைகளுக்கு சில நடைமுறை அபாயங்களை சொல்லிக்கொடுப்பதும் தேவையே, உதாரணமாக சாட் ரூம் பேச்சுக்கள், முகமறியாதோரிடம் விலாசம் தொலைப்பேசி எண்கள் கொடுப்பதின் அபாயம் போன்றவற்றை சொல்லிகொடுத்து உசார் படுத்தி வைத்தல் எப்போதுமே நல்லது.

13.5.08

Mr. JPG -Digital camera tools


டிஜிட்டல் கேமெரா வந்தாலும் வந்தது இப்போதெல்லாம் ஃபிலிம் செலவில்லை கழுவ செலவில்லை. இஷ்டத்துக்கும் படங்களை சுட்டுத்தள்ளலாம். உங்கள் குழந்தை வளர்வதை வாராவாரமாக மாதாமாதமாக வரிசையாக படம் பிடித்துவைக்கலாம். சில வருடங்களுக்கு முன் கொடைக்கானல் போனது, தஞ்சாவூர் போனது, கும்பக்கோணம் கல்யாணம், துபாய் அஞ்சப்பரில் சாப்பிட்டது, அபுதாபி அடுக்குமாடிகளை வியந்தது, சார்ஜா கிரிக்கெட் மைதானம் போனது இப்படி ஏகப்பட்ட நினைவுகள் இன்று டிஜிட்டல் இமேஜ்களாகி உங்கள் கணிணியில் இருக்கும்.
பல சமயங்களில் இந்த மாதிரி நடப்பதுண்டு. நீங்கள் "இது பாப்பா 3 மாசமா இருக்கும் போது எடுத்த படம்" என சொல்ல மனைவி "இல்லை இது 6 மாசத்தில் எடுத்த படம் ஆர் யூ கிரேசி" என்பாள். துபாய் போனது 2003-ல் என நீங்கள் அடித்து சொல்ல இல்லை அது 2004-ல் என அவள் தகராறு செய்வாள்.இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவுபவர் தான் மிஸ்டர் ஜேபிஜி.
நீங்கள் நினைப்பது போல உங்கள் ஒளிப்படக்கருவி படம் பிடிக்கும் போது உருவாகும் .jpg கோப்பானது வெறும் படத்தை மட்டும் கொண்டிருப்பதில்லை. அந்த .jpg கோப்பானது இன்னபிற தகவல்களையும் தன்னகத்தே மறைவாய்க் கொண்டுள்ளதாம். உதாரணமாய் இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது (நாள்,சமயம் எல்லாம் துல்லியமாய்),அப்போது பிளாஷ் உபயோகப் படுத்தப்பட்டதா இல்லையா போன்ற பல தகவல்கள். இத்தகவல்களை Exif அல்லது மெட்டாடேட்டா என்கின்றார்கள்.(EXIF stands for Exchangeable Image File - Examples of stored information are shutter speed, date and time, focal length, exposure compensation, metering pattern and if a flash was used etc)
ஆமாம்.இப்போது நீங்கள் உங்கள் மனைவியிடம் பந்தயம் கூட வைத்துக்கொள்ளலாம். கீழ்கண்ட Exif ரீடரை பயன்படுத்தி அந்த குறிப்பிட்ட உங்கள் பாப்பாவின் போட்டோ சரியாக எந்த ஆண்டு, எந்த நாள், எந்த நிமிடம் எடுக்கப்பட்டது என அறிந்துகொள்ளலாம். துபாய் போனது எந்த ஆண்டுவெனவும் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் சொன்னது தான் சரியென்றால் "Something wrong with your computer"-ன்னு உங்கள் மனைவி சொல்வாள் என்பது வேறு விஷயம். ஆச்சர்யபடவேண்டாம்.
Download Exif Reader
இந்த முக்கியமான Exif தகவல்களை நீங்கள் போட்டோ எடிட்டிங் செய்யும்போது இழக்க நேரிடலாம். ஆதலால் போட்டோ எடிட்டிங் செய்யும் முன் அசலை அப்படியே பத்திரமாக வைத்துவிட்டு நகலை மட்டும் எடிட்டிங் செய்தல் நல்லது. அல்லது கீழ்கண்ட இன்னொரு மென்பொருளால் இந்த Exif தகவல்களை பேக்கப்செய்து பத்திரப் படுத்திவிட்டு உங்கள் திருவிளையாடல்களை தொடரலாம். முடிந்ததும் மீண்டும் அந்த Exif தகவல்களை எடிட்செய்யப்பட்ட படத்தின் மீது மீட்டுக் கொள்ளலாம்.Backup exif before editing it , and then after editing restore it back using Exifer.

Download Exifer
நீங்கள் எடுத்த டிஜிட்டல் ஒளிப்படங்களெல்லாம் ஒரு ஃபோல்டரில் IMG_001.JPG, IMG_002.JPG, IMG_003.JPG.... என img-க்களாகவோ அல்லது DSC001.JPG, DSC002.JPG, DSC003.JPG...என dsc-க்களாகவோ தானாகவே பெயரிடப்பட்டு இருக்கும். இப்படி கண்டபடி சம்பந்தமேயில்லாமல் போட்டோக்களுக்கு பெயர்கொடுக்காமல் அந்த போட்டோ எடுக்கப்பட்ட நாள்,நேரத்தையே அதற்கு பெயராக கொடுத்தால் எப்படி இருக்கும்? (மேலே படம்) இதன் மூலம் பல்வேறு உங்கள் போட்டோக்களை காலகிரமபடி வரிசைப்படுத்துவதோடு அதை பார்வையிடும் போதும் ஒரு தொடர்வாய் பார்வையிடலாம் அல்லவா? அதற்கு உதவுவது தான் கீழ்கண்ட மென்பொருள். இது உங்கள் டிஜிட்டல் போட்டோக்களின் Exif தகவல்களை தானாகவே படித்து அதிலுள்ள நாள்படி உங்கள் போட்டோக்களை அழகாய் கிரமமாய் பெயர்மாற்றம் செய்யுமாம்.(Eg.2007-08-15 18.05.27.jpg) Namexif-automatically rename photos with the date they were shot.

thanks.pkp

24.4.08

போட்டோ ஸ்கிரீன்சேவர்

போட்டோ ஸ்கிரீன்சேவர்

டிஜிட்டல் கேமரா மூலம் சுடப்பட்ட ஒளிப்படங்களை ஒரே சொடுக்கில் உங்கள் கணிணியின் வால்பேப்பராக்க இன்றைய கணிணிகள் வசதிகொண்டுள்ளன.

எந்த படத்தையும் வலது சொடுக்கினால் "Set as Desktop Background" வசதி அப்படத்தை உங்கள் கணிணியின் பிண்ணணி (Wallpaper) படமாக்கும்.

ஆனால் உங்களின் கெனான் ஒளிப்படக்கருவி மின்னி மின்னி உள்வாங்கிய உங்கள் குழந்தையின் புன்னகை படங்களை உங்களின் ஸ்கிரீன்சேவராய் உங்கள் கணிணியில் ஓட விடுவது எப்படி? கூகிள் வழங்கும் இலவச மென்பொருளான பிக்காசா உங்களிடம் இருந்தால் அது இதுமாதிரி தெரிவுசெய்யப்பட்ட படங்களை உங்கள் கணிணியில் ஸ்கிரீன்சேவராய் ஓட விட வசதியளிக்கின்றது.

ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமாய் வசதி வாய்ப்புகளோடு .scr வடிவில் உங்கள் குடும்ப படங்களை ஸ்கிரீன்சேவராக்க இதோ ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் PhotoMeister. இதனைபயன் படுத்தி நீங்கள் உருவாக்கும் Screensaver-க்கு பலவித எஃபெக்ட்கள் கொடுக்கலாம், போட்டோ தலைப்புகள் போட்டுக்கொள்ளலாம், பிண்ணணியில் இசையை ஓட விடலாம், இப்படி பல கிமிக்ஸ்கள் செய்யலாம். கணிணியும் உங்கள் குதுகல குடும்பத்தை எதிரொளித்துக்கொண்டே இருக்கும்.
Product Home Page

http://www.photomeister.com/

Direct Download Link

http://download2.paessler.com/download/photomeister.zip

20.4.08

எளிய அவுட்லுக் எக்ஸ்பிரஸ் backup மென்பொருள்


outlook Express மின்னஞ்சல் மென்பொருளை பயன்படுத்தும் நண்பர்கள் அநேகர்.என்னத்தான் உயர்நுட்ப மின்னஞ்சல்கள் like Outlook,Lotus Notes மென்பொருள்கள் இருந்தாலும் சிறு/குறுஅலுவலகம் மற்றும் வீடுகளில் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் ராஜாங்கம் தான்.
என்ன வேண்டுமோ அது மட்டும் கொண்டதோடு POP,IMAP,HTTP,News Group Reader இதெல்லாம் கொண்டு இது இருப்பதால் பெரும்பாலும் திருப்தி அளிக்கிறது.ஆனால் வந்திருக்கும் மெயில்களை பத்திரமாக் backup செய்ய,இருக்கும் விலைமதிப்பற்ற address book-ஐ பாதுகாப்பாய் வைத்திருக்க வழியுள்ளதா?.
இதோ ஒரு வழி..இலவச எளிய அவுட்லுக் எக்ஸ்பிரஸ் backup மென்பொருள்.இதை ஓட்டி உங்கள் மெயில்களை பத்திரமாய் இன்னொரு டிரைவிலோ அல்லது CD,DVD,USB டிரைவிலோ பேக் அப் எடுத்து வைத்திருங்கள்.எப்போது உதவும் அது என்று சொல்லமுடியாது.
Product Page
http://www.oehelp.com/OEBackup/Default.aspx
Direct download link
http://www.oehelp.com/OEBackup/oeqbfull.zip
Free Outlook Exprees Backup software

19.4.08

A.R.RAHMAN பாடல்களை 5.1 இல் எப்படி கேட்பது? ஒரு விளக்கம்





A.R.RAHMAN பாடல்களை 5.1 channel sound system ல் கேட்டு இருக்கிறீர்களா. ஆஹா ஆஹா .........அதை சொல்ல வார்த்தைகளே இல்லை மக்கா.
எல்லா பாடல்களையும் பொதுவாக சொல்லவில்லை ..குறிப்பாக சில மெலடி பாடல்கள் ரொம்ப அருமையாக ஆறு சேனல்களில் வித்யாசமா பதிவு பண்ணிஇருப்பார் . வேறு எந்த இசை அமைபாளர்களும் இந்த 5.1 channel உத்தியை இவ்வளவு அருமையாக பயன்படுத்தியதாக தெரியவில்லை.
உதாரணத்துக்கு .......சில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் நியூயார்க் நகரம் பாடல் மற்றும் "அன்பே வா என் அன்பே வா " பாடல்களை சொல்லலாம்.
உங்கள் கணினியில் 5.1 சேனல் அவுட் புட் இருந்தால் இதை முயற்சித்து பாருங்கள்
இல்லாவிட்டாலும் உங்கள் கணினியில் 5.1 channel sound card ஒன்று வாங்கி பொருத்தி இதை முயற்சியுங்கள்
Boys படத்திலிருந்து இன்று வரை உள்ள சிறந்த தமிழ் பாடல்கள் 5.1 ல் வெளிவந்துள்ளன
net' ல் கூட கிடைக்கின்றன ........இமேஜ் பைலாக இது சில டாரண்ட் சைட்டுகளில் கிடைக்கும் இதை பதிவிறக்கம் செய்து ஒரு dvd இல் எழுதிக்கொள்ளுங்கள். ஒரு படத்தின் பாடல்கள் சுமாராக 370 mb வரும்.
உங்கள் கணினியில் 5.1 sound speaker system வாங்கி connect செய்து கொள்ளுங்கள்.
உங்கள் கணினியில் klite codec pack install செய்துகொண்டு (download link http://www.free-codecs.com/download/K_Lite_Codec_Pack.htm ) 5.1 சேனல் dvd யை ஓட விடுங்கள் . media player இல் ட்ரை பண்ணுங்க அதுவே சிறந்தது.


click Tools-options-DVD-Advanced இப்போது உங்களுக்கு ac97 mixer தெரியும் இதன் மூலம் நீங்க ஆறு சேனல் களாக வரும் இசையை ரசிக்கலாம் .........center speaker இல் பாடுபவரின் voice track மட்டும் வரும் .அதை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைத்து சேனல் களையும் சுத்தமாக குறைத்து விட்டால் எந்த இசையும் இல்லாமல் ஏதோ அந்த பாடகர் உங்களுக்காக மட்டும் உங்கள் அறையில் வந்து பாடுவது போல இருக்கும்.
அன்பே வா அன்பே வா பாடலை போட்டு விட்டு ac 97 mixer மூலம் front speakers volume ஐ சுத்தமாக குறைத்து rear speakers மற்றும் center speaker இல் அமைதியான சூழலில் கண்ணை மூடி வித்யாசமான அந்த பாடலின் புதிய பரிமாணத்தை அனுபவியுங்கள். நியூயார்க் நகரம் பாடலையும் இதே போல் கேட்கலாம் மிகவும் இனிமையாகவும் வித்யாசமாகவும் இருக்கும்.(கொசுறு)
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ
பேச்செல்லாம் தாலாட்டுப் போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காஃபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமை நிமிஷங்கள் வருஷமானதேனோ?
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ?
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க
பெயரும் ஆனதென்ன தேனா?
ஜில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம் கோடையானதேனோ?
வா அன்பே! நீயும் வந்தால்
செந்தணல் கூடப் பனிக்கட்டிப் போல மாறுமே!
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ

18.4.08

காகிதத்திலிருந்து கணிணிக்கு


உங்களின் பழைய தமிழ் நூல்கள்,அச்சுப் பிரதிகள்,சேகரித்த செய்திதாள்கள், பத்திரிகை துணுக்கு துண்டுகள்,கிழித்து வைத்திருக்கும் பிரசுரங்கள்,தமிழ் பக்கங்கள் இவற்றை எல்லாம் கணிணியில் ஏற்றி புதிய பதிப்பாக மென்னூலாகவோ அல்லது அச்சிட்டோ வெளியிட ஆசையா?.

எளிது அது இப்போது.


நீங்கள் நினைப்பது போல் அவற்றையெல்லாம் தட்டச்சு செய்து கணிணியில் ஏற்ற வேண்டிய அவசியமில்லை.எந்த தமிழ் தாளையும் ஸ்கேனாக படம் (bmp) பண்ணி (ஸ்கேனர் தேவைப்படும்)

பின்பு OCR மென்பொருள் வழி ஸ்கான் செய்தால் சாதாரண அந்த பட கோப்பு பின்பு சாதாரண text கோப்பாக மாறி உங்களுக்கு கிடைக்கும்.

நீங்கள் மேற்செய்ய வேண்டியதெல்லாம் ஏதேனும் மாற்றம் எடிட்டிங் செய்து உங்கள் மின்புத்தகம் செய்யவேண்டியது தான்.


இந்த மாதிரியான முதன் முதல் தமிழ் ஓசிஆர் மென்பொருள் "பொன்விழி" ஆகும்.70% வரை குறையின்றி பணிசெய்வதாக கேள்வி.

கீழ்காணும் இரண்டு தமிழ் OCR மென்பொருள்களும் இலவச மென்பொருள்களே.



PonVizhi Product Page


http://www.ildc.in/GIST/htm/ocr_spell.htm


PonVizhi Direct Download Link


http://www.ildc.in/GIST/LearnFun/PonVizhi-TamilOCR.zip


Another Tamil OCR


http://sourceforge.net/projects/gtamilocr/


Free Tamil OCR Optical Character Recognition Paper printout Scan Computer Image


Picture to text file conversion

கணிணி பவர் ஆப் மேட் ஈஸி


உங்கள் கணிணியை தானாகவே ஒரு குறிப்பிட்ட சமயத்தில் பவர் ஆப் செய்ய வேண்டுமா?.

இதோ ஒரு சிறு இலவச மென்பொருள்.சமயத்தை குறித்து விட்டால் போதும்.சரியான நேரத்தில் அதுவே உங்கள் கணிணியை Shutdown,Logoff அல்லது Hybernate செய்துவிடும்.

இனி இசை கேட்டு கொண்டே தூங்கிவிடலாம் அல்லது படம் பார்த்தவாறே தூங்கிவிடலாம். :)

Product Page


Direct Download Link


Automatic Scheduled Computer Switchoff Poweroff Reboot Freeware Utility

உடைக்கப்பட்ட விண்டோஸ் விஸ்டா



யாராலும் உடைக்கவே முடியாது.எதுவுமே செய்யமுடியாது.பாதுகாப்பு விஷயங்களில் எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டோம் என்று நுண்மென்னால் (அதாங்க ஐ மீன் மைக்ரோசாப்ட்டால்,FireFox -ஐ நெருப்பு நரின்னும் போது Microsoft-ஐ நுண்மென் எனக் கூடாதா? :) )சொல்லி வெளியான விண்டோஸ் விஸ்டா-Windows Vista முற்றிலும் ஹாக்கர் ஜாம்பவான்களால் இன்று உடைக்கப்பட்டு நிற்கின்றது.


பொதுவாக விண்டோஸ் விஸ்டாவை ஆக்டிவேட் பண்ண இணையம் போய் இணையம் வழி மைக்ரோசாப்ட் செர்வர்களால் அவை ஆக்டிவேட் செய்யப்படும்.இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடினமாய் இருக்கும் என்பதால் KMS (Key Management Service) எனப்படும் இந்தமாதிரி சிறு சிறு "விண்டோஸ் விஸ்டாவை ஆக்டிவேட் செய்யும் செர்வர்"களை மைக்ரோசாப்ட் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் கொடுக்க தீர்மானித்தது.


அதில் வந்தது தான் வினை.அந்த KMS செர்வெர் இமேஜ் இணையத் தெருவில் இன்று கொட்டிக்கிடக்கின்றது.இந்த செர்வெரின் VMware இமேஜை torrent வழி இறக்கம் செய்து ஒரு VMware Player கொண்டு தற்காலிகமாக அந்த இமேஜை ஓடவிட்டு உங்கள் விண்டோஸ் விஸ்டாவை நீங்களே ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.


என்னத்தை சொல்வது.இங்கே நமக்கொரு சந்தேகம் இலவசமாய் விஸ்டாவை கொடுப்பதற்கு பதிலாய் இந்தமாதிரி வேலைகளை செய்தால் பிச்சிகிட்டு ஓடும் என தெரிந்தே மைக்ரோசாப்ட் செய்யும் மார்க்கெட்டிங் சதியா இல்லை உண்மையிலேயே கிராக் செய்யப்பட்டதா என தெரியவில்லை.


பின்ன என்னங்க சொல்வது.விண்டோஸ் விஸ்டா பற்றி கவலைப்படாத ஜந்துகளெல்லாம் இப்போது ஒரு DVD யை கையில் வைத்து கொண்டு அதை சந்தோசமாய் கிராக் பண்ணிவிட்டு பின்னர் ஆகா என்னா அருமை Windows Vista.Super graphics ya-ன்னு சொல்லிட்டு போறதுங்க.


Read More KMS Crack Activate Windows Vista


Microsoft.Windows.Vista.Local.Activation.Server-MelindaGates torrent which contains a spoofed KMS server VM image Windows vista pirate cracked

17.4.08

கடைசி 20 பின்னூட்டங்களை வலைப்பதிவில் காட்ட சொந்தமாக widget தயார் செய்வது எப்படி. விளக்கம் இதோ!!!!

கடைசி 20 பின்னூட்டங்களை வலைப்பதிவில் காட்ட சொந்தமாக widget தயார் செய்வது எப்படி. விளக்கம் இதோ!!!!

பதிவர்கள் பலர் தங்கள் வலைப்பதிவுகளில் இப்போது கடைசியாக இடப்பட்ட பின்னூடங்களை காட்ட ஆசைபடுகின்றனர். அதற்காக Third party Recent comment widget போடுகின்றனர் . இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இது recentcomment காட்டுவதற்கான javascript ஐ வேறு ஒரு தளத்தில் வைத்திருக்கும், load அதிகமாகினால் நம்முடைய வலைப்பதிவும் open ஆகாது
இதற்க்கு பதில் நாமே சொந்தமாக இதை தயாரிக்கலாமே , எப்படி என்று பாருங்கள்
Step 1: Goto Template->Edit HTML tab. Find the

tag in your template
கீழே உள்ள கோடை tag க்கு முன்னால் பேஸ்ட் செய்யுங்கள்.


Step 2:
Goto Template->Page elements tab and click on "Add a page element" in your sidebar.
Choose HTML/Javascript element.
சரியான தலைப்பு கொடுத்து கீழே உள்ள கோடை பேஸ்ட் செய்து விடுங்கள்



இதில் முக்கியமானது "yourblog" என்பதை உங்கள் வலைப்பதிவு address ஆக மாற்ற வேண்டும் .
20 என்பது எத்தனை பின்னூட்டங்கள் காட்ட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது , இதை உங்கள் விருப்பம் போல மாற்றிக்கொள்ளலாம்.
100 என்பது எத்தனை எழுத்துக்கள் காட்டப்பட வேண்டும் என்பதை குறிக்கிறது, இதை 300 or 400 என்று மாற்றினால் முழு பின்னூட்டத்தையும் கூட காட்ட முடியும்.
இதை செய்து முடியுங்கள் உங்கள் வலைப்பதிவு வேகமாக load ஆகும் , படிப்பவர்களுக்கும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.
இதை sidebar அல்லது bottom of the post இல் காட்டினால் சிறப்பாக இருக்கும் .
இது எப்படி இருக்கிறது என்று பாருங்கள

வீடியோ கான்பரன்சிங்'க்கு ஏற்ற சிறந்த இலவச மென்பொருள்


வீடியோ கான்பரன்சிங்'க்கு ஏற்ற சிறந்த இலவச மென்பொருள்

மாறிவரும் இணைய உலகில், தற்போதைய நிலவரப்படி வீடியோ கான்பரன்சிங் செய்ய ஏற்ற இலவச மென்பொருளாக "ஓவூ" கருதப்படுகிறது.
http://www.oovoo.com/
அப்படி என்ன இதுல புதுசா இருக்கு? என்று கேட்கிறீர்களா?இருக்கு , புதுசு புதுசா சில மேம்பட்ட வசதிகள் இருக்கு , அதுவும் இலவசமா.skype, yahoo இன்ன பிற மென்பொருள்களை விட இதில் வீடியோ தகவல் பரிமாற்ற வேகம் மிக அதிகம் (up to 5mbps) அதனால் துல்லியமான வீடியோ கிடைக்கும்.
மேலும் இதில் ஒரே நேரத்தில் 20 files அனுப்பவும் , 25mb வரை பெரியதான பைலை அனுப்பவும் முடியும்.

பிளாக்கர் வலைப்பதிவில் எவ்வளவு படங்கள் வரை ஏற்றலாம்? பதில்


நண்பர் ஒருவர் என்னிடம் இந்த கேள்வியை மின்மடலில் கேட்டு இருந்தார், இந்த சந்தேகம் பலருக்கும் என்று எண்ணுகிறேன்.
ஏன் என்றால் ஈமெயில் இன் பாக்ஸ் போல பிளாக்கர் கணக்கில் இவ்வளவு கோப்புகள் தான் ஏற்ற முடியும் என்று எந்த வரைமுறையும் காணப்படுவதில்லை.
உண்மை என்னவென்றால் நீங்கள் உங்கள் பிளாக்கர் கணக்கில் வலைப்பதிவில் ஏற்றும் படங்கள் யாவும் கூகுளின் மற்றொரு சேவையான பிகாசாவில் தான் சேமிக்கப்படும். நீங்கள் பிகாசா சேவையை கூகிள் அக்கௌன்ட் பக்கத்தில் போய் இணைத்து கொண்டு, உள்ளே சென்று பாருங்கள் தெரியும் சேதி,
ஆம் , நீங்கள் உங்கள் வலைப்பதிவில் ஏற்றி இருக்கும் அத்தனை படங்களும் அங்கே ஆல்பம் ஆக இருக்கும் , இந்த படங்களை மற்றவர்களுடன் நாம் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
பிகாசா 1 gb free storage கொடுக்கிறது, இந்த limit டை நாம் தாண்டிவிட்டால் நாம் வலைபதியும் போது படங்களை ஏற்ற முடியாது. மேற்கொண்டு இடம் வேண்டும் என்றால் $20 கொடுத்து ஒரு 6 gb வாங்கி கொள்ளலாம். அல்லது photobucket போன்ற இலவச image hosting service தேடி செல்லலாம்.

விளம்பர அட்டாக்கிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்க சிறந்த மென்பொருள்


விளம்பர அட்டாக்கிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்க சிறந்த மென்பொருள்

உங்கள் கணினியில் நீங்கள் என்ன தான் antivirus நிறுவி இருந்தாலும் அதையும் மீறி சில adware மற்றும் spyware உங்கள் கணினியில் ஜம்மென்று பாய் விரித்து படுத்து இருக்கும் ஆனால் அது உங்களுக்கு தெரியாது.
சில சமயம் சில adware ,அதாவது நம் கட்டுப்பாட்டையும் மீறி நம் கணினியில் விளம்பரங்களை அவிழ்த்து விடும் திருட்டு மென்பொருள், நாம் ஒவ்வொரு முறை internet explorer ஐ திறக்கும் போதும் டமாரென்று ரெண்டு மூணு விளம்பர விண்டோ க்களை திறந்து விட்டு விடும்,
நாம் என்ன தான் antivirus மற்றும் spyware remover tools கொண்டு சலித்து எடுத்தாலும் பிரச்சனையை தீர்க்க முடியாமல் போகலாம், காரணம் இந்தவகை adware&spyware பெரும்பாலும் நம் registry யில் சில மாற்றங்களை செய்து விடும், மேலும் நமது host file எனப்படும் முக்கியமான பைலிலும் மாற்றம் செய்து விடும். இதனால் இது செய்துள்ள மாற்றங்களை நீக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.
இதற்கான சரியான தீர்வு "SPY BOT" ஆம், இலவசமாக கிடைக்கும் மென்பொருட்களில் சிறந்ததாக கருதப்படுகிறது.மிக துல்லியமாக adware மற்றும் spyware களை கண்டறிந்து அழிக்கிறது.
மேலும் நமது registry யில் மாற்றம் ஏதும் செய்யப்பட்டால் அதை நிறுத்தி நமது அனுமதிக்கு காத்திருக்கிறது. இதனால் நிம்ம்மதியாக இணையத்தில் உலாவலாம். இவ்வளவு அருமையான சேவைக்கு இவர்கள் கேட்பது நன்கொடை மட்டுமே. பயன் இருந்தால் நன்கொடை செய்யுங்கள்.
spybot download link

மாற்று மருந்துகள்




மாற்று மருந்துகள்
ஏற்கனவே நம்மிடையே வெறுப்பூட்டிகொண்டிருக்கும் சில அரசியல் கட்சிகளை விட்டால் வேறு நமக்கு மாற்று அரசியல் கட்சிகள் எதுவும் இல்லை.அதுவே தான் தலைவர்கள் நிலைமையும்.ஒன்றை விட்டால் இன்னொன்று என உருப்படியாய் மாற்று தலைவர் எவருமே இல்லை.


நல்ல வேளையாய் மென்பொருள்களில் அப்படியில்லை.ஒன்றை விட்டால் இன்னொன்றுக்கு மாறிக்கொள்ளலாம்.அடிக்கடி IE sucks என்கின்றீர்களா? ரூட்டை மாத்து,Fire fox இருக்குது அல்லவா iTune sucks என்கின்றீர்களா? ரூட்டை மாத்து.Sharepod இருக்குதுல.


இப்படி அநேக இலவச மென்பொருள்கள் மாற்றுக்கு உள்ளன. சொல்லப்போனால் போட்டிக்கு மாற்றாய் வரும் மென்பொருள்கள் தான் அட்டகாசமாயும் இருக்கின்றன.


உங்களுக்காக இதோ சில


Internet explorer க்கு மாற்றாக Firefox


Adobe Acrobat Reader க்கு மாற்றாக Foxit Reader


iTune க்கு மாற்றாக Sharepod


Real Player க்கு மாற்றாக Real Alternative


QuickTime க்கு மாற்றாக QuickTime Alternative


Windows Picture and Fax Viewer க்கு மாற்றாக Irfan View


Windows zip க்கு மாற்றாக 7-zip

மந்திர மென்பொருள்கள்




மந்திர மென்பொருள்கள்
அடிப்படையில் புரோகிராமராய் இல்லாவிட்டாலும் சிலசமயங்களில் சில மென்பொருள்கள் வேலைசெய்யும் விதங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுவதுண்டு. பெரும்பாலான மென்பொருள்களை ஓட்டும் போது அது இந்த லாஜிக்கில் தான் வேலை செய்யுமாயிருக்கும் என மனதில் தோன்றும். ஆனால் சிலவற்றின் லாஜிக் புரிவதேயில்லை.


அப்படி ஒரு மென்பொருள் சமீபத்தில் வலைமேயும் போது சிக்கியது.அதன் பெயர் eyedropper. இந்த இலவச மென்பொருள் Web designer மற்றும் DTP experts களுக்கு ஒரு வரப்பிரசாதம். பல விதங்களில் இது உதவினாலும் இதன் பிரதான பயன் கீழே.வெப்டெவலபர்களுக்கு ஒரு தலைவலி வருவதுண்டு.ஒரு கலர் கொடுத்திருப்பார்கள்.


ஆனால் அதற்கு மேச்சான பக்கங்களை உருவாக்க அந்த கலரின் சரியான Html Color code RGB HEX CMYK -யை கண்டு பிடிப்பதற்குள் உயிர்போய்விடும்.


இந்த மென்பொருளை நிறுவி மவுஸ் பாயிண்டரை கொண்டு போய் அந்த குறிப்பிட்ட நிறம் மேல் வைத்தால் போதும்.


அது அந்த வண்ணத்தின் Html Color code தகவல்களை பிட்டு பிட்டு வைத்துவிடும்.


Product Home Page


http://www.inetia.com/en/eyedropper/


Download Here


http://www.inetia.com/en/eyedropper/download/


இதென்ன பெரிய மந்திரம், இப்போதெல்லாம் CAPTCHA எனப்படும் கோணல்மாணல் எழுத்துக்கள் வெரிபிக்கேசனை படிக்கவே மென்பொருள்கள் வந்து விட்டன என்கின்றீர்களா?.


(completely automated public Turing test to tell computers and humans apart ....அப்பாடா என்னா பெரிய அப்ரிவியேசன்).


கணிணிக்கு பலவழிகளில் கண் பார்வைகொடுக்கும் பணிவெற்றிபெற்றுவருவதாகவே தோன்றுகின்றது.


CAPTCHA decoder reader


http://sam.zoy.org/pwntcha/

Zip ஆயுதம்



Zip ஆயுதம்
மடியில் வெடிகுண்டை வைத்துக்கொண்டு அலையிறான் என்பார்கள். அதுபோல இந்த 42.zip(http://www.unforgettable.dk)நண்பர் வேண்டுகோளுக்கிணங்க சுட்டி நீக்கப்பட்டது)


கோப்பு உங்கள் கணிணியில் இருந்தால் வெடிகுண்டை உங்கள் கணிணியில் வைத்துக்கொண்டு அலைகின்றீர்கள் என்று அர்த்தம்.எப்படி?இதை Zip bomb அல்லது Decompression Bomb என்பார்கள். இந்த சுருக்கப்பட்ட ஷிப் கோப்பை தப்பித்தவறி விரிக்கச்செய்தால் அவ்ளோதான். அதினுள் 16 zip கோப்புகள் இருக்கும்.


அந்த 16 zip கோப்புகள் விரிவாகி ஒவ்வொன்றினுள்ளும் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்,அப்புறம் அந்த 16 zip கோப்புகளும் விரிவாகி அதனுள் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்.இப்படி விரிவாகி விரிவாகி இந்த 42.372 kb அளவேயான கோப்பு 281 டெர்ரா பைட்டுகளைவிட அதிகமாய் விரிவாகி அப்புறம் அது உங்கள் கணிணி டிரைவில் இருக்க இடமில்லாமல் போய் உங்கள் கணிணி ஸ்தம்பித்து கிராஷ் ஆகிவிடும்.


இது போன்ற ZIP-Crash Trojan களை இந்த காலத்து வைரஸ்கேனர்கள் கண்டுபிடித்து உடனே அந்த ZIP கோப்புகளை அழித்து விடும். வைரஸ்கேனர் உங்கள் கணிணியில் இல்லாவிட்டால் உங்கள் கணிணி அம்பேல் தான்.


Please do not try this with you or with your friends computer.This information is for educational purpose only.

ரியல் இறக்கம்-RealPlayer








என்றைக்குமே RealPlayer மென்பொருள் நமக்கு பிடித்ததாய் அமைந்ததில்லை.
இணையத்தில் காணக்கிடைக்கும் பிரபலமான அபூர்வ வீடியோ கிளிப்புகள் பெரும்பாலும் rm, ram ஃபார்மாட்டில் கிடைப்பதால் ரியல் பிளயர் சும்மாவேனும் நிறுவி வைத்திருப்பது உண்டு. ஆனால் சமீபத்தில் வெளியான RealPlayer (பீட்டா) நம் அபிப்ராயத்தையே முற்றிலும் மாற்றி விடும் போலுள்ளது.


இதில் நமக்கு மிக பிடித்தமான பயன் Youtube வீடியோக்கள் , Google Video-களை பிரவுஸரில் ஒரே கிளிக்கில் நேரடியாக டவுன் லோட் செய்து கொளல் தான். இவை .flv எனும் கோப்பு வகையாக உங்கள் கணிணியில் இறக்கம் செய்யப்பட்டு உங்கள் வீடியோ லைப்ரரியில் அழகாய் அடுக்கப்படும். பின் நேரம் கிடைக்கும் போது அவ்வீடியோக்களை பொறுமையாய் Full Screen-ல் பார்த்துக்கொள்ளலாம்.


நல்ல வீடியோ குவாலிட்டி கூட.esnips.com எனும் பிரபல கோப்புகள் கிடங்குகாரர்கள் நம் பேவரைட் MP3-களை கேட்க மட்டுமே அனுமதிக்கின்றார்கள். டவுண்லோட் செய்ய வசதி தருவதில்லை.


செர்வர் சுமையை தவிர்க்க தான்.


ஆனால் புதிய RealPlayer அந்த MP3-களையும் ஒரே கிளிக்கில் இறக்கம் செய்ய நன்கு உதவுகின்றது.இவை .ivr எனும் கோப்பு வகையாக உங்கள் கணிணியில் இறக்கம் செய்யப்படும்.


அநேக இலவச மென்பொருள்கள், வெப்தளங்கள், பயர்பாக்ஸ் எக்ஸ்டென்சன்கள் இத்தகைய வீடியோக்களை இறக்கம் செய்ய இருப்பதால் RealPlayer லேட்டாதான் வந்திருக்கின்றார் எனச் சொல்லலாம்


அழிக்க அன்லாக்கர்



எனக்கு தெரிந்தவரை ஆக்குதல் தான் ரொம்பவும் கடினம். அழித்தல் மிக எளிது. ஆனால் சில சமயங்களில் கணிணி உலகு அப்படி இருப்பதல்ல. சில கோப்புகளை அழிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

Cannot delete file: Access is denied அல்லது The source or destination file may be in use அல்லது There has been a sharing violation போன்ற வார்த்தைகளால் நச்சல் கொடுக்கும்.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலும் அக்குறிப்பிட்ட கோப்பானது அச்சமயத்தில் இன்னொரு பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்திருப்பதால் அழிக்கமுடியாதிருந்திருக்கலாம்.

இது போன்ற சமயங்களில் உதவ வருவது தான் Unlocker எனும் மென்பொருள்.

இந்த இலவச மென்பொருள் அக்கோப்புகளை அது மாதிரி பணிகளிலிருந்து விடுவிப்பதால் அழிக்கமுடியா கோப்புகளையும் எளிதாக அழிக்கலாம். தேவைப்படும்போது முயன்று பாருங்கள்.


Product Homepage


Download Link


1. Simply right click the folder or file and select Unlocker

2. If the folder or file is locked, a window listing of lockers will appear

3. Simply click Unlock All and you are done!

4. Now you can delete the file.

அலைப்பேசியும் .jar கோப்புகளும்



அலைப்பேசியும் .jar கோப்புகளும்


முன்பு போல் அலைப்பேசிகள் இனிமேலும் பேசமட்டுமல்லாது இன்ன பிற காரியங்களையும் கையடக்கமாய் செய்ய உதவும் அளவிற்குவந்துவிட்டன. இணையத்தை மேயமுடிகின்றது, மின்னஞ்சல் பொட்டியை பார்க்கமுடிகின்றது, மென்புத்தகங்களை படிக்கமுடிகின்றது அப்படியே இஷ்ட விளையாட்டுகளை இறக்கம் செய்து பல ஆட்டங்களும் ஆடமுடிகின்றது. முன்பெல்லாம் கணிணிகளில் மட்டுமே முடிந்த பயன்பாடுகளையெல்லாம் இப்போது உள்ளங்கையிலேயே செய்ய முடிகின்றன.
உங்கள் அலைபேசியையும் இது மாதிரி முழுவீச்சில் பயன்படுத்தலாம். என்ன கொஞ்சம் ஒசர ரகமான ஃபோனாய் உங்கள் போன் இருத்தல் வேண்டும். அதிக போன் மெமரி இருந்தால் நல்லது. மைக்ரோ SD மெமரி கார்டு வசதி உங்கள் போனில் இருந்தால் நீங்கள் கலக்கலாம் போங்க.
மேல் நான் சொன்ன கைப்பேசி மென்பொருள்களெல்லாம் இணையத்தில் நிறையவே இறக்கத்துக்கு கிடைக்கின்றன. பெரும்பாலும் இவை jar,jad வடிவில் கிடைக்கும். இம்மென்பொருள்களை உங்கள் கைப்பேசிக்கு கடத்தி நிறுவலாம்.(கைப்பேசியிலிருந்து கணிணிக்கு) கைப்பேசியில் ஒரு மென்பொருளை நிறுவ அதன் .jar கோப்பும் அல்லது .jad எனப்படும் இன்னொரு கோப்பும் உங்களுக்குத் தேவைப்படலாம்.
ஒருவேளை .jar மட்டுமே இருந்தால் அதிலிருந்து .jad கோப்பை எளிதாய் jadMaker எனும் இலவச மென்பொருள் வழி உருவாக்கலாம்.
இந்த கைப்பேசி மென்பொருள்களை உங்கள் கணிணியில் சோதனைக்காக ஓட்ட, சரிபார்க்க ஒரு Cell Phone Emulator வேண்டுமாயின் நீங்கள் சன் ஜாவாவின் இலவச Sun Java Wireless Toolkit-ஐ முயன்று பார்க்கலாம்.
இப்போது ஆப்பிள் ஐபோனுக்கே சாப்ட்வேர் டெவலப்மென்ட் கிட் கிடைக்கின்றது.
கைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் கீழ்கண்ட சுட்டியில் அநேக ஈபுத்தகங்கள் கிடைக்கின்றன.(Registration Required)http://www.thinnai.info
கைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் குரான் கீழ்கண்ட சுட்டியில் கிடைக்கின்றது. (Registration Required)
http://www.mobango.com
கைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் பைபிள் கீழ்கண்ட சுட்டியில் கிடைக்கின்றது. (Registration Required)
http://www.christiansmobile.com