Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

7.12.08

டாடா ஸ்கை ப்ளஸ்


டிவியில் வரும் லைவ் நிகழ்ச்சிகளைக் கூட ரீவைண்ட் செய்து பார்க்கும் வசதியுடன் டாட்டா நிறுவனம் டாட்டா ஸ்கை ப்ளஸ் என்ற சேவையைக் கொண்டு வந்துள்ளது. இதற்கென வழங்கப்படும் செட் டாப் பாக்ஸ், டிவி நிகழ்ச்சிகளைத் தேவைப்படும்போது நிறுத்திப் பின் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கும் வசதி, ரீவைண்ட் செய்து நாம் விரும்பும் இடத்திலிருந்து பார்க்கும் வசதி ஆகியவற்றைத்தருகிறது. ஆம், நேரடியாக மைதானத்திலிருந்து ஒளிபரப்பாகும் கிரிக்கெட் போட்டியை லைவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா! இடையே தேடி வரும் நண்பரைத் தவிர்ப்பதற்காக இன்னொரு ரூமுக்குள் சென்று ஒளிந்து கொள்ள திட்டமா? போட்டி நிகழ்ச்சியை அப்படியே தற்காலிகமாக நிறுத்திப் பின் அவர் போன பின்பு மீண்டும் விட்ட இடத்திலிருந்து பார்க் கலாம். ஆச்சரியமாக இருக்கிறதா! மேலே படியுங்கள்.

1990 ஆம் ஆண்டு வாக்கில் பல வீடுகளில் டிவியும் வி.சி.ஆர் எனப்படும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்திடும் சாதனமும் பெருகி இடம் பிடித்தன. வி.சி.ஆர். சாதனமும் வீடியோ டேப்பும் அடங்கக் கூடிய விலையில் கிடைத்ததால் எல்லாரும் வாங்கிப் பயன்படுத்தினார்கள். ஆனால் நாம் வீட்டில் இல்லாத போது ஒளிபரப்பாகும் டிவி நிகழ்ச்சியைப் பதிவு செய்வதற்கு வி.சி.ஆர் சாதனத்தை புரோகிராம் செய்வது சற்று கடினமாக இருந்து வந்தது. ஆனால் டிவிடி பிளேயர் வந்தவுடன் இவற்றின் பயன்பாடு முற்றிலுமாக காணாமல் போனது. ஆனால் நிகழ்ச்சிகளை ஒளி பரப்புகையில் பதிய வேறு சாதனம் கிடைக்காமல் இருந்தது.


2008 ஆம் ஆண்டிலிருந்து செட்டாப் பாக்ஸ்கள் வெளியாகி நமக்குக் கை கொடுத்தன. இப்போது அனைத்து வீடுகளிலும் இது இடம் பெறத் தொடங்கி உள்ளன. இந்த பாக்ஸ் மூலம் நாம் விரும்பும் டிவி சேனல்களை நேரடியாகப் பெற்று பார்க்க முடிகிறது. இந்த வகையில் செட் டாப் பாக்ஸில் வியத்தகு முன்னேற்றத்தினைக் கொண்டு வந்துள்ளது டாட்டா ஸ்கை ப்ளஸ் சேவை. இதன் மூலம் டிவி சேனல்களைமட்டுமின்றி முன்பு நாம் வி.சி.ஆர். மூலம் மேற்கொண்ட வசதிகளையும் அனுபவிக்க முடிகிறது. கீழ்க்காணும் வசதிகள் இதன் மூலம் தரப்படுகின்றன.


லைவ் நிகழ்ச்சிகளைத் தற்காலிகமாக நிறுத்திப் பின் விட்ட இடத்திலிருந்து தொடர்தல், இரண்டு புரோகிராம்களை ஒரே நேரத்தில் பதிந்து கொள்ளும் வசதி; அல்லது ஒன்றைப் பார்க்கும் நேரத்தில் மற்றதைப் பதிந்து கொள்ளும் வசதி. எம்பெக் 4 தொழில் நுட்பத்தில் இயங்கும் வசதி. சீரியல் நிகழ்ச்சிகளைத் தானாகப் பதியும் வசதி.


தற்காலிகமாக நிறுத்தலாம்; ஆனால் எப்படி மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர முடியும் என்பது பலரின் மனதில் எழும் கேள்வி, இல்லையா? இது எப்படி சாத்தியமாகிறது என்று பார்க்கலாம்.


நீங்கள் எப்போது ஒரு சேனலை ட்யூன் செய்தாலும் உள்ளே உள்ள பபர் மெமரி எனப்படும் தற்காலிக நினைவகம் நிகழ்ச்சியினை சேவ் செய்திடத் தொடங்குகிறது. நீங்கள் அதனை ரெகார்ட் செய்கிறீர்களோ இல்லையோ, பபர் மெமரியில் நிகழ்ச்சி பதிவாகிறது. ஆனால் நீங்கள் அடுத்த சேனலுக்கு மாறினால் உடனே முந்தைய சேனலின் பதிவான நிகழ்ச்சிகள் அழிக்கப்பட்டு மாறிய சேனலின் நிகழ்ச்சிகள் பதிவு பெறத் தொடங்குகின்றன. எனவே மீண்டும் விட்ட இடத்திலிருந்து பார்க்கும் வசதி ஒரு சேனலுக்கு மட்டுமே கிடைக்கிறது.


இந்த டாட்டா ஸ்கை ப்ளஸ் உள்ளே 160 ஜிபி கொள்ளளவு திறன் கொண்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கொண்டுள்ளது. இதில் 45 மணி நேர வீடியோ நிகழ்ச்சிகளைப் பதிந்து வைக்கலாம். உள்ளே இரண்டு ட்யூனர்கள் இருப்பதால் இரு வேறு நிகழ்ச்சிகளை இதில் பதியலாம். பின் நேரம் இருக்கையில் மீண்டும் இவற்றைப் பார்க்கலாம்.


சீரியல் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வது குறித்துப் பார்க்கலாம். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஒளி பரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றை நீங்கள் பதிவு செய்திட விரும்பினால் அதற்கான வசதியை இந்த செட் டாப் பாக்ஸ் கொண்டுள்ளது. எடுத்துக் காட்டாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை உங்களுக்குப் பிடித்த பக்தி அல்லது அரசியல் நிகழ்ச்சி ஒன்று குறிப்பிட்ட சேனலில் ஒளி பரப்புவதாக வைத்துக் கொள்வோம். இந்த வசதியைப் பயன்படுத்தி ஒவ்வொரு வாரமும் அந்த நேரத்தில் ஒளி பரப்பாகும் நிகழ்ச்சியைப் பதியும் படி செட் செய்திடலாம். நீங்கள் வீட்டில் இருந்தாலும் இல்லை என்றாலும் அது பதிவு செய்யப்படும்.


பழைய டாட்டா ஸ்கை செட்டாப் பாக்ஸ் எம்பெக் 2 தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. ஸ்கை ப்ளஸ் செட் டாப் பாக்ஸ் இப்போது அதிவேகமாகப் பரவி வரும் எம்பெக் 4 தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது.


இது ஒரு கம்ப்ரஸன் ஸ்டாண்டர்ட் தான். இதனால் ஏற்கனவே கிடைத்து வரும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் மிகப் பெரிய அளவில் துல்லிதமான சிறந்த ஒளி பரப்பு கிடைக்கும் என்றில்லை. தொழில் நுட்பத்தில் தான் வேறுபாடு. ஏற்கனவே எம்பெக் 2 தொழில் நுட்பத்தில் வரும் நிகழ்ச்சிகளும் சிறப்பாகவே கிடைத்து வருகின்றன.


அருமையான கருப்பு வண்ணத்தில் இந்த செட் டாப் பாக்ஸ் ப்ளஸ் கிடைக்கிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் அனைத்து எல்.சி.டி. டிவிக்களுடன் இது இணைந்து செல்லும். உடன் வரும் ரிமோட் கண்ட்ரோல் சாதனம் பழையதைப் போலவே காட்சி அளித்தாலும் கூடுதலாகப் பல பட்டன்கள் தரப்பட்டுள்ளன. பிளே / தற்காலிக நிறுத்தம், பார்வேர்ட் / ரீவைண்ட், ரெகார்ட் மற்றும் பிளான் செய்திட பட்டன்கள் தரப்பட்டுள்ளன. நிறைய போர்ட்கள் தரப்பட்டுள்ளன.


எஸ்–வீடியோ, கோ–ஆக்ஸியல், எஸ்பி டி.ஐ.எப்., ஆகிய சாதனங்களுக்கான போர்ட்கள் தரப்பட்டுள்ளன. யு.எஸ்.பி., ஈதர்நெட், மோடம் ஆகியவற்றிற்கானவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.


இதன் யூசர் இன்டர்பேஸ் பழைய டாட்டா ஸ்கை ரிமோட் போலவே உள்ளது. பார்ப்பதற்கு கண்கவர் தோற்றத்தில் பழகுவதற்கு எளிதாகவும் உள்ளது. டிவி நிகழ்ச்சியினைத் தேர்ந்தெடுத்து ரெகார்ட் செய்யத் தொடங்கியவுடன் என வட்டமாக ‘R’ ஒளி தெரிகிறது. எவ்வளவு நேரம் ரெகார்டிங் நடைபெற்றுள்ளது என்றும் தொடர்ந்து காட்டப் படுகிறது. பிளான் மெனு மூலம் ஏற்கனவே ரெகார்ட் செய்த நிகழ்ச்சிகளைப் பார்வையிடலாம்.

பதிவு செய்த நிகழ்ச்சிகளில் எவை எல்லாம் பார்க்கப்பட்டது எனவும் அறியலாம். டிஸ்க் ஸ்பேஸ் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது, எவ்வளவு மீதம் எனவும் அறியலாம். பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றை சிறுவர்கள் பார்க்கக் கூடாது என நீங்கள் விரும்பினால் அவற்றிற்கு 4 இலக்க கோட் எண்கள் கொடுத்து பாதுகாக்கலாம்.


இன்ஸ்டலேஷன், ஆக்டிவேஷன் கட்டணங்கள் அனைத்தும் சேர்ந்து ரூ.10,000 என இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. டாட்டா ஸ்கை ப்ளஸ் பயன்படுத்த மாதக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.


அறிமுகச் சலுகையாக இந்த கட்டணம் வாழ் நாள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டாட்டா ஸ்கை வைத்திருப்பவர்கள் இதற்கு மாறிக் கொள்ள ரூ.5,000 முதல் ரூ.6,000 வரையில் கட்டணம் செலுத்தி மாறிக் கொள்ளலாம். மற்ற சர்வீஸ் புரவைடர்களுடன் ஒப்பிடுகையில் இதற்கான கட்டணம் சற்று அதிகம் தான். ஆனால் இத்தகைய சர்வீஸ் தற்போதைக்கு டாட்டா நிறுவனம் ஒன்று தான் தருவதால் வேறு வழியில்லை. ஒப்பிடவும் முடியாது. வரும் மார்ச் மாதத்திற்குள் வாங்குபவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கட்டணம் இல்லை என்பதால் இது போன்ற ஒன்றை வாங்க வேண்டும் என விரும்புபவர்கள் இதனை வாங்கலாம். எனக்குப் பிடித்த சேனலை இவன் பார்க்க விட மாட்டேங்கிறான் என சிறுவர்களுக்குள் மட்டுமல்ல, மாமனார் மருமகள் இடையே கூட வீடுகளில் சண்டை நடக்கிறது; மன வருத்தம் ஏற்படுகிறது. இந்த வருத்தங்கள் இல்லாமல் வீடு அமைதியாக இருக்க வேண்டும் என்றால் இதற்கு செலவழிப்பது ஒன்றும் வீணாகாது.

25.9.08

ஒரு துகளை தேடி


நூறு ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரான் எனும் துகளை கண்டுபிடித்தார்கள். அதை ஓட விட்டு பின்பு அதனை மின்சாரம் என்றார்கள். இன்றைய நவ நாகரீக மின்னுலகம் மலர்ந்தது.

இதுபோல இன்னொரு துகளும் கட்டாயம் இருக்கவேண்டும். அதை நாம் எப்படியாவது கண்டு பிடித்தேயாகவேண்டும். அதை நாம் கண்டுபிடிக்காததால் தான் இன்னும் அநேக மர்மங்கள் உலகில் நிலவுகின்றன என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள் CERN விஞ்ஞானிகள். நாம் வாழும் இந்த பூமிக்கு புவி ஈர்ப்புவிசை எப்படி வந்தது? அதற்காக காரணம் பூமியின் நிறை என்றால் நிறை என்றால் என்ன? நமக்கு ஒளி தெரியும், அது போகும் வேகமும் தெரியும் அப்படியென்றால் இருளென்றால் என்ன? இப்படி அநேக கேள்விகளுக்கு இன்னும் விடை இல்லையாம். பலசமயங்களில் Higgs boson-னு ஒரு துகள் இருப்பதாக தியரிட்டிக்கலாக கணக்கில் போட்டு காலத்தை ஓட்டினாலும் அந்த மகா "கடவுள் துகளை" எப்படியும் பிராக்டிக்கலாக பார்த்துவிடுவது என்ற நோக்கத்தில் தான் ஜெனிவா அருகே அந்த மகாபெரிய எந்திரத்தை நிர்மாணித்திருக்கின்றார்கள். கடவுளுக்கே கொஞ்சம் திக்திக்கென்றுதான் இருக்கும்."பாவிப்பசங்க எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுவாங்களோ"

என்னத்தைக் கண்டுபிடிக்கிறது முதலில் உங்கள் கணிணி நெட்வொர்க்கை பாதுகாப்பா வைக்க கத்துக்கோங்கடாவென ஒருஹேக்கர் கும்பல் ஏற்கனவே LHC-யின் கணிணி நெட்வொர்க்கை ஹேக்கி அங்கே ""We are 2600 - don't mess with us"" என கொடியும் நாட்டிவிட்டு வந்திருக்கின்றார்கள்.விஞ்ஞானிகள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். நல்லகாலம் அடுத்து ஒரு அடி வைத்திருந்தால் அந்த ராட்சச எந்திரத்தின் கணிணி அறையில் நுழைந்திருப்பார்களாம். போதுமடா சாமி என இதுவரைக்கும் ஆன்லைனில் வைத்திருந்த அந்த நெட்வொர்க்கை ஆப்லைனாக்கி விட்டார்கள். அதனால் அவர்கள் இணைய தளமான www.cmsmon.cern.ch இப்போது டவுன்.இத்தனைக்கும் அவர்கள் ஓட்டுவது என்னமோ Scientific Linux ஆம்.
உங்களுக்கு தெரியுமா CERN தான் இன்டர்நெட்டின் பிறப்பிடமும் கூட.நிற்க.

ஏற்கனவே நாம் செய்திருக்கும் அட்டூழியத்தில் பூமி தாங்கமாட்டேங்குது. போகுமிடமெல்லாம் நிலஅதிர்ச்சி, சுனாமி, சூறாவளி, பெருவெள்ளம் அப்படி இப்படினு அது தள்ளாடிக்கொண்டிருக்க இது தேவையா? தப்பி தவறி அது ஒரு "கருந்துளை"யை உண்டாக்கினால் இந்த பூமி தாங்காதே என்பது சிலரின் கருத்து. பிளாக் ஹோல் எனப்படும் இந்த கருந்துளைகள் "bottom less pit" அதாவது அடிவாரமே இல்லாத துளை போன்றது. இதன் ஈர்ப்பு சக்தியும் மிக மிக அதிகம். அந்த பக்கமாய் போகும் ஒளிக்கதிரை கூட இது இழுத்து சாப்பிட்டுவிடுமாம். இந்த மாதிரி ஒரு பிளாக் ஹோல் உருவாகி அது இன்னும் நமக்கு தொல்லை தர அது நமக்கு தேவையாவென ஒரு கும்பல் காட்டு கத்து கத்துகின்றார்கள்.

அட போங்கையா இதுமட்டும் சக்ஸஸ் ஆகி "அந்த" ரகசியத்தை நாங்கள் கண்டுபிடித்துவிட்டால் மனுஷனுக்கு சாவே வராமலிருக்கும் சூட்சுமம் வரைக்கும் நாங்கள் கண்டுபிடித்து விடுவோம். ஏற்கனவே டாலருடன் போட்டி போட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் யூரோ பிராந்தியம் தான் இனி அடுத்த வல்லரசுவென இப்பக்கம் கொண்டாடுகின்றார்கள்.

இப்ப நடப்பது வெறும் வெள்ளோட்டம் தான். அடுத்த ஸ்ப்ரிங்கில் தான் நிஜ விளையாட்டு ஆரம்பமாகின்றது.

"All should leave Geneva"-ன்னு நம்ம நாஸ்ட்ரொடாமஸ் (Nostradamus) தாத்தா முன்னமேயே எதுக்கு சொல்லி வச்சிட்டு போனாருனுதான் தெரியலையே.

(இதெல்லாம் ஒரு சாமானியனின் கருத்துக்கள்.தவறுகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே)


தேங்க்ஸ்.PKP

17.7.08

ஆஸ்திரேலியாவில் அதி துல்லிய (High Definition) அலைச்சறுக்கு வீடியோ.

இந்த வீடியோ ஆஸ்திரேலியாவில் கர்ரம்பின் தங்க கடற்கரை என்னும் இடத்தில் அதி துல்லிய வீடியோ கேமரா மூலம் எடுக்கப்பட்டது. அதி துல்லிய வீடியோ காண வலது பக்கம் "HD is OFF" எனும் பொத்தானை இயக்கி "ON" செய்யவும்.
Fun with Twixtor - Surf at Currumbin from Geoff Charters on Vimeo.

9.7.08

கடலடியில் சந்தித்தோம்

நாடுகளிடையேயான இணைய பரிமாற்றங்களில் 90 சதவீதம் பைபர் ஆப்டிக் கேபிள்கள் வழியும் 10 சதவீதம் செயற்கைகோள்கள் வழியும் நடக்கின்றன. இந்த பைபர் ஆப்டிக் கேபிள்கள் கடல்வழியாய் பூமியின் அனைத்து கண்டங்களையும் இணைக்கின்றன. அண்டார்டிக்காவைத் தவிர. (சில கடலடி கேபிள் படங்கள் கீழே)

கடல் வழி கேபிள்கள் போடுவது ஒன்றும் புதிய யுக்தி அல்ல. 1850-களிலேயே இதுமாதிரி கடலடிகேபிள்களை இங்கிலாந்தில் போட்டிருக்கின்றார்கள் .1870-ல் மும்பையும் லண்டனும் இப்படி கடலடி கேபிள்களால் இணைக்கப்பட்டிருந்தன.

இன்றைக்கு துபாயின் E-marine, சிங்கப்பூரின் Asean Cableship போன்ற நிறுவனங்கள் கப்பல்கொண்டு இந்தமாதிரி கடலடி கேபிள்களை நிறுவுகின்றன. சும்மா இல்லை, ஒரு மீட்டர் பைபர் ஆப்டிக் கேபிளின் எடை 10 கிலோ இருக்குமாம்.

இந்தியாவை உலகெங்கும் இணைக்க கீழ்கண்ட நம் நகரங்களிலிருந்து கடலடி நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள்கள் பல நாட்டு நகரங்களுக்கும் செல்கின்றன. அவை மும்பை, பூனா, சென்னை மற்றும் கொச்சின்.

நமது சென்னையிலிருந்து கீழ்கண்ட கடலடி கேபிள்கள் அக்கரைசீமைக்கு செல்கின்றது.

TIC (Tata Indicom Cable)- இந்த fiber-optic கேபிள் சிங்கப்பூருக்கு செல்கின்றது. இது முழுக்க முழுக்க Tata Communications (முன்னாள் VSNL)-க்கு சொந்தமானது. இதன் நீளம் 3175 கிமீ. இதன் வேகம் 5.12 Tbps.

SEA-ME-WE 4 (South East Asia–Middle East–Western Europe 4)- இந்த கடலடி கேபிளின் ஒரு கிளை சிங்கப்பூருக்கும் மற்றொரு கிளை கொழும்பு போய் பின் மும்பை போய் அப்படியே மேற்கத்திய நாடுகளுக்கும் செல்கின்றது.

i2i CN - இந்த கடலடி கேபிள் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்கின்றது.இது Bharti Airtel -க்கு சொந்தமானது.

FALCON - இந்த கடலடி கேபிள் சென்னையிலிருந்து ஹாங்காங்குக்கு செல்கின்றது.இது Reliance Communications -க்கு சொந்தமானது.

இப்படி எனக்கு தெரிந்து நான்கு கடலடி கேபிள்கள் சென்னையை உலகோடு இணைக்கின்றது.

இன்னொரு LOCOM எனும் கடலடி கேபிளும் நமது சென்னையை மலேசியாவோடு இணைக்கின்றது என்கின்றார்கள். உறுதியாய் தெரியவில்லை.

Reliance Communications-ன் Reliance FLAG - தான் உலகின் மிக நீளமான தனியார் கடலடி கேபிள் ஆகும். இது 65,000 கிமீ நீளமானது.

அடுத்ததொரு யுத்தம் வந்தால் Star war என்று சொல்லிக்கொண்டு தகவல் தொடர்பு செயற்கை கோள்களை தகர்ப்பது போல Fiber war என்று சொல்லிக்கொண்டு தகவல் தொடர்புக்கு உதவும் இந்த கடலடி கேபிள்களையும் சில முட்டாள் மனிதர்கள் தகர்ப்பார்கள். அதுவரைக்கும் உலகம் இப்படிச் சுருங்கிக்கொண்டே தான் இருக்கும்.

இதோ நான் எங்கோ இருந்து எழுதியிருக்க நீங்கள் எங்கோ இருந்து படித்துக் கொண்டிருக்கிறீர்களே. எந்த கடலடி கேபிள் வழி சந்தித்தோமோ?






INSIDE A SUBMARINE CABLE
cable infographic
1 Polyethylene cover
2,4 Stranded steel armour wires
3,5 Tar-soaked nylon yarn
6 Polycarbonate insulator
7 Copper sheath
8 Protective core
9 Optical fibres


உலக கடலடி கேபிள்கள் மேப் pdf வடிவில்
http://www1.alcatel-lucent.com/submarine/refs/World_Map_LR.pdf

உலக கடலடி கேபிள்கள் மேப் flash வடிவில்
http://www.tatacommunications.com

7.7.08

ஆயிரத்தோராவது பிரச்சனை


பிரபலங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனைகளில் இது ஆயிரத்தோராவது பிரச்சனை. நிம்மதியாக எங்கும் போக முடிவதில்லை. எப்போதும் யாரோ தன்னை கேமராவில் கண்காணித்துக் கொண்டிருப்பது போன்றே தோன்றும் துபாய் போனால் ஒழுங்காக தூங்க முடிவதில்லை, தென் ஆப்ரிக்கா போனால் கூட அட சுதந்திரமாக அங்கு குளிக்க முடிவதில்லை, மும்பை போய் ஒரு துணிமணி எடுக்கலாமெனில் ஷாப்பிங் மால்களின் டிரஸ்ஸிங் ரூம்களுக்குள் போகவே பயமாயிருக்கிறது.Pinhole அதாவது குண்டூசி அளவேயான மறைந்திருக்கும் கேமராக்கள் உங்களை படம்பிடித்துக் கொண்டிருக்கலாம்.படுக்கை அறையில் சாதாரண கடிகாரம் தானே இருக்கின்றது என அந்த பிரபலம் நினைக்க ஆனால் அதற்குள் தான் அந்த மர்ம காமரா ஒளிந்திருக்கும்.மேஜையில் புசு புசுவென இருக்கும் டெட்டிபியர் கரடி பொம்மையை எடுத்து கொஞ்சலாம் போல் தோன்றும் ஆனால் அதற்குள்ளே தானே அவருக்கு ஒளிந்திருக்கு ஆப்பு (காமெரா).ஏன் ஜேம்ஸ்பாண்ட் கணக்காலும் சாதாரண சட்டைபொத்தான் வடிவில் கூட ஹிடன் கேமராக்கள் இப்போது வந்துள்ளன.

இவற்றிலிருந்து தப்ப வழி இருக்கின்றதா?
அந்த காலத்தில் இராணுவ அல்லது அரசின் பிரத்தியேக உபயோகத்துக்கென இருந்த பல ரகசிய தொழில் நுட்பங்கள் இன்று சாதாரண குடிமகன்கள் கைக்கு எட்டும் அளவுக்கு வந்துவிட்டன. உதாரணமாய் GPS-ஐ சொல்லலாம்.சில வருடங்களுக்கு முன்பு வரை மிலிட்டரி பயன்பாடுகளுக்கு மட்டுமே அது பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது கோபால் கூட ஒன்றுக்கு இரண்டு வைத்திருக்கின்றான்.இன்றைய அளவில் இராணுவ அல்லது அரசின் பிரத்தியேக உபயோகத்துக்கென இருக்கும் ரகசிய தொழில் நுட்பங்கள் என்னென்னவோ யாருக்குத் தெரியும். தெரிய வந்தால் நமக்கு அநாவசியமாய் திகில் தான் பிடிக்கும்.
பெரும்பாலும் 2020-யில் அது வெளி உபயோகத்துக்கு வந்து நான், ஒரு ரேடியோ பெட்டியூண்டு அளவிலுள்ள தானியங்கி மினி நானோ-ஹெலிக்காப்டரில் வைத்து நியூயார்க்கிலிருந்து சென்னையிலிருக்கும் என் ஆசானுக்கு பரிசுபொருள் ஒன்றை கூரியர் போல அனுப்புவேன். அந்த கால தூதுபோன புறாபோல சென்னைபோய் திரும்ப என்னிடம் வரும்.கொஞ்சம் ஓவர் கற்பனையோ?

அதுவரை நியூயார்க் தாக்குபிடிக்கவேண்டும்.அணுஆயுத போர் வந்தால் அது தான் முதல் டார்கெட் அப்படி இப்படினு பலரும் பலதாய் பேச அது பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.கலிபோர்னியா போகலாமெனில் அங்கு ஒரு மாபெரும் பூமியதிர்ச்சி வர காத்திருக்கின்றதாம்.டிக் டிக்... திக் திக்...

நிற்க

இது போல முன்பு அரசு பயன்பாட்டிலிருந்து இப்போது பொதுவில் வந்துள்ள ஒரு கருவி தான் Spy Finder Hidden Camera Detector/Locator.இது என்னமோ principle of optical augmentation முறைப்படி வேலை செய்கின்றதாம். இந்த கையடக்க கருவி வழி சுற்றும் முற்றும் பார்த்தால் எங்காவது Hidden Camera இருந்தால் அது உடனே உங்களுக்கு காட்டிகொடுத்து விடுமாம்.

கலியுகத்தில் இது ஒரு நல்ல பரிசுபொருளோவென தோன்றுகின்றது. ஏதோ ஒரு இணையபக்கத்தில் அவரை பாவம் அப்பாவி ஏமாந்தவராய் பார்க்கமாட்டோம்.

24.4.08

பரிமளா போன பாதை

வெள்ளிக்கிழமை என்றாலே பக்கத்து வீட்டு பரிமளாவுக்கு ஏகத்துக்கும் குஷிதான்.ஏனென்றே எனக்கு தெரிந்ததில்லை. கார் சாவியை சுழற்றிச்சுழற்றி ஏதோ ஒரு பாடலை முணங்கிக்கொண்டே அலுவலகம் விட்டு வீட்டுக்கு வரும் அவள் அரைமணிநேரத்தில் ரெடியாகிவிடுவாள். கிளம்பி போனவள் போனவள் தான். திரும்பிவர நள்ளிரவும் தாண்டிவிடும்.இதையெல்லாம் இங்கு நான் கட்டாயம் சொல்லத்தான் வேண்டுமாவென நினைத்தேன். சொல்லிவிடுவதுதான் நல்லது.அதற்கான காரணத்தையும் அப்புறம் சொல்கின்றேன். எங்கு போகின்றாள் இவள்? மாலை முதல் நள்ளிரவுதாண்டியும் அப்படி எங்கே அவள்? போன வாரம் கிளைமாக்ஸ் நடந்தது. வெறும்(!) 230 டாலர்கள் தான். ஆன்லைனில் ஆர்டர்பண்ணியிருந்த LandAirSea GPS Tracking Key வந்துவிட்டிருந்தது. சிறுசா தீப்பட்டிமாதிரி. ஒரு USB கொக்கியும் இருந்தது. சில பேட்டரிகள் நாம் போடவேண்டும்.பரிமளாவுக்குத் தெரியாமல் அவள் டொயோட்டா கேம்ரி காரின் அடியில் அந்த டிராக்கிங் கீயை நச்சென ஒட்டவைத்தேன். அதிலிருந்த காந்தம் பரிமளாவின் காரை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. இனி இந்த கார் எங்கெல்லாம் போகுமோ அதெல்லாம் எனக்கு சந்து சந்தாக தெரிந்துவிடும். எவ்வளவு வேகமாக அவள் காரை ஓட்டினாள் (அவள் ஒரு பறக்கும் பாவை) எங்கெல்லாம் எவ்வளவு நேரம் அவள் நின்றாள் எல்லாம் இந்த கீ நோட் செய்து வைத்துக்கொள்ளும். அடுத்த நாள் அந்த Tracking Key-யை எடுத்து வந்து எனது கணிணியில் செருகி பார்த்தால் அத்தனையும் மேப் போட்டு துல்லிபமாய் எனக்கு காட்டிவிடும். இதுமாதிரி யாரை வேண்டுமானாலும் நீங்கள் கண்காணிக்கலாமாம் அதுவும் உலக அளவில். அதனால் இனிமேல் "ஒருமாதியான" இடங்களுக்கு போவதாய் இருந்தால் செல்லும்முன் காரை முழுசா சோதனை போட முடிவெடுத்திருக்கின்றேன். இன்றைய காலத்தில் தொழில்நுட்பத்தில் நீங்கள் ஆர்வமுள்ளவராய் இல்லாதவராயினும் நிகழ் கால தொழில்நுட்ப விசயங்களை கண்டிப்பாய் தெரிந்திருக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.எது தொழில் நுட்பத்தால் முடியும் எது முடியாது இதெல்லாம் சகலோர்க்கும் தெரிந்திருக்க வேண்டிய நிலை. ஒன்றும் தெரியாத அப்பாவியாய் இருந்தால் தெரிந்தவன் உங்களை கொள்ளை கொண்டு போய்விடுவான். சரி பரிமளாவின் கதையை நான் இப்போ எப்படி முடிக்கறது? ஒவ்வொரு மொழி பட இயக்குனர்களும் ஒவ்வொரு விதமாய் முடித்திருப்பார்கள். இல்லையா? மேலும் அறிய http://www.trackingkey.com டிஸ்கிளைமர்: எனது பதிவுகளில் வரும் பக்கத்து வீட்டு பரிமளா முதல் பொன்னம்மா பாட்டி வரை அத்தனைபேரும் கற்பனை கதாபாத்திரங்களே Just In Case :) thanks.pkp

19.4.08

அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு உங்கள் வீட்டினருடன் மணிக்கணக்கில் போனில் அரட்டை அடிக்க சிறந்த வழி


நீங்க அமெரிக்காவில் வேலை பார்க்கும் தனிக்கட்டையா?
அம்மாவுக்கு போன் போட்டு மணிகணக்கில் பேசுபவரா? அல்லது
குடும்பத்தோடு செட்டில் ஆனவரா ?
உங்க மனைவி அம்மா வீட்டுக்கு போன் போட்டு மணிகணக்கில் பேசி உங்க போன் பில்லை கண்டபடி ஏத்தி விடுறாங்களா?
உங்களுக்கான ஒரு நல்ல தீர்வு
நீங்க படத்துல பாக்குற இந்த சின்ன magic jack என்னும் கருவி.................
இதை நீங்க ஒரு வருடத்துக்கு 40 டாலர் என்ற விலையில் வாங்குங்கள் ...........
இதை இந்தியாவுக்கு அனுப்பி உங்க அம்மா வீட்டிலோ அல்லது உங்க மனைவியின் அம்மா வீட்டிலோ broadband இணைப்பு உள்ள கணினியில் usb port இல் சொருகி விட்டால் போதும். இந்த கருவியின் மறுபக்கம் ஒரு சாதாரண போன் ஜாக் இருக்கும் அதில் ஒரு சாதாரண கார்ட்லஸ் போனை இணைத்து விட வேண்டும் .........
இப்போது இது அமெரிக்காவில் இருக்கும் ஒரு லோக்கல் போன் போல செயல்படும் இந்த போனில் இருந்து எந்த ஒரு அமெரிக்கா போனுக்கும் இலவசமாக அழைக்கலாம் மணிக்கணக்கில் அரட்டையும் அடிக்கலாம்.
இந்த போனுக்கு தனியாக ஒரு அமெரிக்க போன் நம்பரும் கொடுத்து விடுகிறார்கள் .........
அதனால் இந்த போனில் இருந்து செல்லும் கால்கள் அமெரிக்க லோக்கல் காலாகவே கருதப்படும். ........
இது உண்மையில் அமெரிக்காவுக்குள் மட்டுமே பயன்படுத்த ஏற்படுத்தப்பட்ட வசதியாகும் ........நம்ம ஆளுங்க சும்மா இருப்பாங்களா? இத இந்தியாவுல மாட்டி சோதனை பண்ணி பார்த்து இப்போ ஆள் ஆளுக்கு வாங்க ஆரம்பிச்சுடாங்க.

Comments


bsnl இணைப்புகளிலும் இது நன்றாகவே வேலை செய்கிறது..............ஆன்லைன் வாய்ஸ் சாட்டில் ...ஹெல்லோ ......இப்போ கேக்குதா? .......சரியா கேக்கல ......மைக் மாட்டி இருக்கா? செட்டிங்ஸ் சரியா இருக்கா பாரு ......என்று மாரடிப்பதை விட இது எவ்வளவோ சிறந்தது.

சுந்தர் said...
If this is VoIP, than it won't work in BSNL network and some other networks who have banned unauthorized VoIP connections. One of my friends' family uses Airtel broadband services with no issues so far.If there is a PC on the other side with broadband connection, the easiest / legal way to talk to them is to do voice chat using yahoo, msn, kind of messengers.Anyway, thanks for the post.

சுந்தர் said...
Interestingly in their website (magicjack), in the Q&A section I found the following Q&A:Q: Can I send a magicJack to a friend or relative overseas? A: Yes, however you would have to send it to an address in the United States first, and then forward it from there. Makes sense to me!

Anonymous said...
Magic Jack is alternative to SKYPE out . I think except one year free i m not seeing any reason to try it out .

18.4.08

சென்னை டிவி சானல்களை சிக்காகோவிலிருந்து பார்க்கலாம்



சென்னை மாதவரம் வீட்டிலுள்ள டிவியில் நீங்கள் என்னவெல்லாம் சேனல்கள் பார்க்கமுடியுமோ அவற்றையெல்லாம் இப்போது நீங்கள் சிக்காகோ பிரின்ஸ்டன் அவென்யூவிலுள்ள உங்கள் வீட்டிலிருந்தும் பார்க்கலாமாம்.


எப்படி இது சாத்தியம்.


என்னவெல்லாம் தேவை இதற்கு?.இந்தியாவில் தேவையானது ஒரு டிவி,கேபிள் இணைப்பு மற்றும் நல்ல இணைய இணைப்பு.சிக்காகோவில் தேவையானது நல்ல இணைய இணைப்பும் கணிணியும்.$149-க்கு கிடைக்கும் HAVA unit எனும் இக்கருவியை இந்திய வீட்டு டிவியில் முறைப்படி இணைத்துவிட்டால் சிக்காகோவிலிருந்து உங்கள் கணிணி/இணையம் வழி அந்த சென்னை டிவியை பார்க்கலாம்.(Hava மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும்).


ஏறக்குறைய அனைத்து சேனல்களையும்.எந்தஅமெரிக்க டிவி சந்தாதார கணக்கும் இல்லாமல் பார்க்கலாம்.மேலும் Tivo போல் நிகழ்ச்சிகளை சேமித்து வைத்து பிற்பாடு பார்க்கும் வசதியும் இதில் உண்டு என்கிறார்கள்.


டெக்னாலஜி துள்ளியோடிக்கொண்டிருக்கிறது.


http://www.snappymultimedia.com/products_hava_hd_pro.htm


Watch Indian Local Tv Channels from USA and worl wide Remote Viewing Over The Internet

17.4.08

எலக்ட்ரானிக் உலகை கலக்கப்போகும் புதிய வரவுகள



கைநாட்டாக மாறும் சாப்டுவேர் இஞ்சினியர்கள்

தலைப்பை பார்த்து பயந்து விட வேண்டாம். நம் கணினியையும் அதில் உள்ள தகவல்களையும் திருடு போகாமல் பாதுகாக்க இப்போது பிரபலமடைந்து வரும் முறை கைவிரல் ரேகையை கடவுசொல்லுக்கு பதிலாக பயன்படுத்துவது தான்.

நாம் நம் கணினிக்குள் நுழையும் போது, encrypt செய்யப்பட்ட பைல்களை திறக்கும் போது மற்றும் சில windows applications களை திறக்கும் போதும் இந்த விரல் ரேகை முறையை கடவுச்சொல்லுக்கு பதில் பயன்படுத்தலாம்.
இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுச்சொல் பயன்படுத்துவோர் அதை சிரமப்பட்டு நினைவில் வைத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை
மேலும் நமது கடவுச்சொல்லை யாரேனும் திருடிவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் தேவை இல்லை. நம் விரலை வெட்டி எடுத்து சென்றுவிடாமல் பார்த்து கொண்டால் போதும்.
மேலும் விபரம் அறிய இங்கே சென்று பார்க்கவும்.


comments.


தமிழீழவன் said...
இதிலும் சிக்கள்கள் இருக்கின்றது.அதாவது நம் கைவிரல் ஈரமாக இருந்தாலோ, அல்லது விரலில் காயம் ஏற்பட்டாலோ இந்த விரல் வாசிப்பாளர்கள் திறப்பதற்கு மறுத்துவிடுவார்கள். அப்படியான சமயம் என்னச் செய்யலாம்?

Udhayakumar said...
This post has been removed by the author.

Udhayakumar said...
//அதாவது நம் கைவிரல் ஈரமாக இருந்தாலோ, அல்லது விரலில் காயம் ஏற்பட்டாலோ இந்த விரல் வாசிப்பாளர்கள் திறப்பதற்கு மறுத்துவிடுவார்கள். அப்படியான சமயம் என்னச் செய்யலாம்?//It is not just based on only one finger. You can configure for more fingersHP and Toshiba laptops are already having this.

கூகிள் எர்த் சேட்டலைட்கள்




கூகிள் எர்த் சேட்டலைட்கள்
கூகிள் எர்த் பற்றிய அறிமுகம் நம்மில் பலருக்கும் தேவைப்படாது. அது அவ்வளவாய் பிரபலம். ஆனால் கூகிள் எர்த் படங்களை விண்வெளியிலிருந்து சுட்டுத்தள்ளும் சேட்டலைட்கள் பற்றி கேள்விபட்டிருக்கின்றீர்களா?. அந்த சேட்டலைட்டின் பெயர் QuickBird (படத்தில் காண்பது). இவர் தான் மூத்த அண்ணா.


இவர் விண்ணில் ஏவப்பட்ட நாள் முதல் (October 18, 2001) பூமியின் மூலை முடுக்குகளையெல்லாம் வானிலிருந்து படம் எடுத்து பிடித்து பூமிக்கு அனுப்பி வைக்கின்றார். அவற்றை தாம் நாம் கூகிள் எர்த்தில் அல்லது கூகிள் மேப் சேட்டலைட் வியூவில் பார்க்கின்றோம். இந்த சேட்டலைட் பூமிக்கு மேல் 450கிமீ தொலைவில் பூமியை சுற்றியவாறு உள்ளதாம். உண்மையில் இந்த சேட்டலைட் கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமானதல்ல. இது DigitalGlobe எனும் American remote sensing நிறுவனத்தினுடையது.


QuickBird-ன் தம்பி சேட்டலைட்டான WorldView I சமீபத்தில் தான் (September 18, 2007) விண்ணில் ஏவப்பட்டது. இப்போது இவரும் கலக்கலாய் தெளிவாய் லேட்டஸ்ட் டெக்னாலஜியோடு படங்களை சுட்டு வானிலிருந்து பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார். QuickBird-ஐ விட தெளிவான படங்களாய் இவை இருக்கின்றன. விரைவில் இப்படங்கள் கூகிள் எர்த்தில் இடம்பிடிக்க தொடங்கிவிடும்.


WorldView I-னால் தினமும் 750,000 சதுரகிலோமீட்டர்களை படம்பிடிக்க இயலுமாம்.மேலும் அப்படங்களில் பூமியின் அரைமீட்டரே அளவான பொருள்களையும் காண இயலுமாம்.WorldView I சேட்டலைட் பூமிக்கு அனுப்பிய சில சாம்பிள் படங்களை இங்கே காணலாம்.


http://www.digitalglobe.com/worldview-1_images.html


அடுத்ததாய் 2008-ல் Worldview II ஏவவிருக்கின்றார்கள். அது என்னமாயமெல்லாம் செய்யப்போகின்றதோ?.


இப்போதைக்கு DigitalGlobe-ன் ஒரே காம்பெடீட்டர் GeoEye Inc.இவர்கள் பணியும் விண் ஒடம் வழி படம் எடுத்து கொடுப்பதே.கூகிள் எர்த்தை ரியல்டைமில் பார்க்க ஆசையா?.


கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும்.

16.4.08

அம்பலம் ஏறும் அந்தரங்கங்கள்


டிஜிட்டல் உலகில் எல்லாமே செம ஸ்பீடு. டிஜிட்டலைஸ்ட் ஆகிய நடிகையின் கவர்ச்சி படமாகட்டும் அல்லது ரகசிய கசமுசா வீடியோவாகட்டும் அல்லது டிஜிட்டலைஸ்ட் ஆகிய ஒரு மென்புத்தகமாகட்டும் நொடிப்பொழுதில் உலகெங்கும் விஷ காய்ச்சல் போல் இணையம் வழி பரவிவிடும். என்னத்தான் பாதுகாப்பு முறைகள் கடைபிடித்தாலும் கலிபோர்னிய காட்டு தீ போல் இவை பரவுகின்றன. உருவாக்குதல் தான் கடினம், காப்பி செய்ய சில நொடிப்பொழுதுகள் போதும். மில்லியன் டாலர்கள் செலவு செய்து ஆயிரக்கணக்கானோரின் உழைப்பில் வெளியாகும் வீடியோ கேம்கள், விலைமிக்க மின் பொருள்களின் கதையும் அதுதான்.ஏதோ ஒரு விபரீத ஆசையில் யாருக்கும் தெரியாமல் சிட்டி ஹாலின் மதிப்புமிக்க மேயர் ஆசனத்தில் தன் மனைவியை துளி கூட துணியின்றி அவரை அமரவைத்து படம் எடுத்து தன் வீட்டு கணிணியில் வைத்திருந்தார் ஒரு பிரிட்டன் நகர மேயர். தன் வீட்டு பசங்க வீட்டில் ஒரு பார்ட்டி வைக்க வெளியூர் சென்றிருந்தார் மேயர். அவர் பிள்ளைகளின் நண்பர்கள் மேயர் வீட்டு கணிணியில் விளையாட தவறுதலாய் சிக்கியது அந்த படம். எவ்வளவு நேரமாகும்? ஒரே கிளிக்கில் உலகெங்கும் பறந்தது அந்த ஜோடியின் அந்தரங்கம்.இப்படி படமாயும், வீடியோவாயும் மாட்டி நோந்து போனோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதில் புதிது இப்போது ஒலிவடிவம்.நண்பரிடம், நன்கு தெரிந்தவரிடம், காதலரிடம் தானே பேசுகிறேன் என்ற நினைப்பில் அந்தரங்கமாய் ஏதேதோ கிளுகிளுப்பாய் பேச அப்பேச்சுக்கள் முழுவதும் எதிர்முனை நபரால் பதிவு செய்யப்பட்டு MP3 ஒலி வடிவில் எடுக்கப்பட்டு இணையத்தில் உலவ விடப்பட்டால் எப்படி இருக்கும்?. டிஜிட்டல் உலகில் இது போன்றவை எளிதாய் சாத்தியம். வெளிவரும் செல்போன்கள் அனைத்துமே இது போன்ற வாய்ஸ் ரெக்கார்டிங் கொண்டிருப்பது ஒரு பயமுறுத்தும் செய்தி. "நேரில் காதுள் பேசு. போனில் அதுவும் பேசாதே" என புதுசாய் சொற்றொடர் உருவாக்கவேண்டியுள்ளது.அப்படியே எசகு பிசகாய் எதாவது ஆர்வக்கோளாரில் பேசினாலும் பேசும்போது கவனமாய் போனில் பேசவும். முக்கியமாய் "அது" போன்ற பேச்சுகளிடையே உங்கள் விலாசம், பெயர், மொபைல்நம்பர் போன்ற தகவல்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. இதை தெரிஞ்சு உசாராக
ஒரு சாம்பிள் தேவையா என்ன?

மின்சாரக் கனவு


முதலில் எங்கோ உருவாக்கப்பட்ட ஒலி அலைகளை கம்பியின்றி தொலை வானொலிகளுக்கு கடத்தி வெற்றி பெற்றார்கள். அதோடு ஒளியையும் சேர்த்து கலந்து இனிதாய் ஒலியும் ஒளியுமாய் தொலைகாட்சிகளுக்கு பின் கடத்தினார்கள்.இப்படி வெற்றிகரமாய் வயர்லெஸ் வழி ஒலியையும் ஒளியையும் கடத்தியாயிற்று.இப்படியே மின்சாரத்தையும் கம்பியின்றி கடத்த முடியுமா?அப்படி கடத்த முடிந்தால் எத்தனை மாற்றங்கள் உலகில் உருவாகும்.யூகிக்க கூட முடியாத ஒன்று.நெடுஞ்சாலைகளில் மைல்கணக்கில் வேகமாய் நம் கூடவே வரும் அந்த பருத்த மின்கம்பங்களும், கம்பிகளும் காணாமல் போய்விடும்.பாக்கெட்டில் இருக்கும் செல்போன் தானாய் வயர்லெஸ்ஸாய் சார்ஜ் ஆகிவிடும்.EB-க்கு தனியாய் காசு கட்டலாம்.மின்சார பேருந்துகள் ஓடிக்கொண்டே இருக்க வயர்லெஸ்ஸாய் அதற்கு கரண்ட் சப்ளை ஆகிக்கொண்டேயிருக்கும். இப்படி எல்லாமே மாறிப்போகும்.இதெல்லாம் சாத்தியமா? சமீபத்திய ஆய்வுகள் சில இவை சாத்தியம் என்கின்றன. இதை Wireless Electricity Power Transfer என்கின்றார்கள். மைக்ரோவேவ் ஓவன் மாதிரி ஒர் அறையை இந்த மின்னலைகளால் நிறைத்து அந்த அறை முழுவதும் மின்சாரத்தை கம்பியின்றி கடத்த முயன்றிருக்கிறார்கள். கி.பி 3000-த்தில் உங்களிடமுள்ள மின்கருவிகள் எல்லாம் வயர்கள் தொல்லைகள் எதுவும் இன்றி தானாய் இயங்க உலகமே இவ்வலைகளால் நிறைந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?அட குடி தண்ணீரை கூட குழாயின்றி கடத்தலாம்ங்க. மேகம் டன் டன்னாய் வானில் தண்ணீரை குழாயின்றி கடத்த வில்லையா என்ன? :)ஆனால் ஒன்று. அதுவரை மாறி மாறி குண்டு வைத்து தகர்த்து தன்னை தானே கொல்லும் மனித ஜன்மம் தான் இருக்குமோ என்னவோ தெரியவில்லை
.

வானத்திலே திருவிழா



சூரியனை ஓயாமல் சுற்றி வந்து கொண்டிருக்கும் சனி போன்ற இயற்கை கோள்கள் நம்மிலே, நம் செயல்பாட்டிலே எந்த வித தாக்கங்களை ஏற்ப்படுத்துகின்றனவென திட்டமாய் தெரியவில்லை. ஆனால் பூமியை ஓயாமல் சுற்றி வந்து கொண்டிருக்கும் மனிதனின் செயற்கை கோள்கள்(Satellite) நம்மிலே, நம் செயல்பாட்டிலே அதிக தாக்கங்களை ஏற்ப்படுத்தி வருகின்றது உண்மையே.உதாரணத்துக்கு சொல்லப்போனால் பூமி உருண்டையை இடைவிடாது சுற்றி வரும்
QuickBird, WorldView I போன்ற சேட்டலைட்கள் இன்றி கூகிள் எர்த் நமக்கு கிடைத்திருக்காது.Global Navigation Satellite System-ன் அந்த 24 சேட்டலைட்கள் இன்றி அமெரிக்க கார்களின் GPS வேலை செய்யாது.INSAT 4B இல்லாமல் சன் டிவியின் SunDTH நேரடி சேட்டலைட் வழி ஒளிபரப்பு சேவை நமக்கு கிடைத்திருக்காது.இப்படி டிவி சேனல்களை கேபிள்களின்றி நாடுமுழுதும் ஒளிபரப்ப ,சுற்று புற சீதோஷண நிலையை மணிக்கு மணி தெரிந்துகொள்ள , கடலடி இண்டர்நெட் கேபிள் வெட்டுண்டு போனாலும் அவசரத்துக்கு இணையம் மேய, நமக்கப்பாலுள்ள அண்டங்களை ரொம்ப அவசியமாய் ஆராய, எதிரியின் தந்திர நகர்வுகளை கவனமாய் நோட்டமிட இப்படி பல உதவிகள் இந்த செயற்கை கோள்களால்.அந்த காலத்து போர் தந்திரம் ஆரம்ப குறி எதிரியை புற உலகிலிருந்து துண்டிப்பது. சாலைகளை துண்டித்தல், பாலங்களை உடைத்தல், துறைமுகங்களை தகர்த்தல் இப்படி.வரும் கால போர் தந்திரமும் இப்படியே தான் இருக்கும். ஆனால் சற்று வித்தியாசமாக. பகைநாடு பற்றிய தகவல்களை அள்ளித்தரும் இந்த சேட்டலைட்களை நொறுக்குதல்.சீனா, ரஷ்யாவின் கருத்துப் படி ஆத்திர அவசரமேயில்லாமல் விண்வெளியில் சும்மா ஒடிக்கொண்டிருந்த ஒரு செயற்கைகோளை ஏவுகணை(SM-3) வைத்து சுட்டு அமெரிக்கா ஒரு வெற்றிகரமான ஸ்டார்வார் (Starwar) ஒத்திகை பார்த்துள்ளதாம்.இதையே தான் சீனாவும் (KillSat) முன்பு ஒருமுறை சாதித்துள்ளது.ஆக இன்னொரு யுத்தம் வந்தால் முதல் இலக்கு வானமாய் தான் இருக்குமோ...?சிறு வயதில் படித்த சிறுவர் பாடல் ஒன்று நினைவுக்கு வருகின்றது.வானத்திலே திருவிழாவழக்கமான ஒருவிழாஇடி இடிக்கும் மேகங்கள்இறங்கி வரும் தாளங்கள்மின்னல் ஒரு நாட்டியம்மேடை வான மண்டபம்தூரல் ஒரு தோரணம்தூய மழை காரணம்எட்டுத் திசை காற்றிலேஏக வெள்ளம் ஆற்றிலேதெருவெல்லாம் வெள்ளமேதிண்ணையோரம் செல்லுமேபார் முழுதும் வீட்டிலேபறவை கூட கூட்டிலேதவளை மட்டும் பாடுமேதண்ணீரிலே ஆடுமேஅகன்ற வெளி வேடிக்கைஆண்டு தோறும் வாடிக்கை" மனசு ஏனோ இலகுவாகி சில்லுனு இருக்குது.

விர்சுவல் லேப்கள்




விர்சுவல் லேப்கள்
இணைய இணைப்புப் பட்டையானது (Bandwidth)நம்மிடையே தடிமனாக தடிமனாக முன்பு சாத்தியமில்லாதன வெல்லாம் இன்று சாத்தியகிக் கொண்டிருக்கின்றன. மெல்லிய டயலப் கனெக்ஸனை வைத்துக்கொண்டு மோடம் வழி டயல் செய்து அது தான்பாட்டுக்கு ஒரு பாட்டுப்பாடிக் கொண்டு விஎஸ்என்எல்லோடு இணைய, சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். பின் சிறிது நேரத்தில் இணையஇணைப்பு பட்டென கட்டாகிவிடும். படு பேஜாரா போய்விடும். அந்த இனிய மோடம் பாடும் குரலை கேட்டு ரொம்பநாளாகி விட்டது. சமீபத்தில் "காதலர் தின"த்தில் வரும் "ஓ மரியா" பாடலில் அந்த மோடம் பாடும் பாடலை கேட்க நேரிட்டது. ஆச்சர்யமாய் இருந்தது.எவ்வளவு வேகமாய் போய் கொண்டிருக்கிறோம்.அகலப்பட்டையானது (Broadband) உலகத்தை சுருக்கிப்போட்டு விட்டது. அவுட் சோர்சிங் ஆகட்டும், வொர்க் ப்ரம் ஹோம் ஆகட்டும், VoIP ஆகட்டும், ஆன்லைன் படிப்புகள் ஆகட்டும், வெப்காஸ்டிங் ஆகட்டும் எல்லாமே இன்று கூடிக்கொண்டிருக்கும் பாண்ட்விட்த்தால் சாத்தியமாகிற்று. அந்த வரிசையில் தான் இந்த விர்சுவல் லேப்களும் வரும்.நல்ல பாண்விட்த்தோடு கூடிய இணைய இணைப்பு உங்களிடம் இருக்கின்றதா? மைக்ரோசாப்டின் அநேக தொழில் நுட்பங்களை நீங்கள் வீட்டிலிருந்த படியே பயிலலாம். செய்துபார்க்கலாம். பெரிய பெரிய செர்வர்கள், தேவையான மென்பொருள்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டம்கள், மற்றும் பிற உபரிகள் என எதுவும் பற்றி கவலைப்படத் தேவையில்லை.எங்கும் போக வேண்டிய அவசியமும் இல்லை. எல்லாம் சரியாக அமைக்கப்பட்ட விர்சுவல் லேப்கள் உங்களுக்காக தயாராக உள்ளன. நீங்கள் அந்த தூரத்து மைக்ரோசாப்டின் கணிணிகளின் உட்புகுந்து கற்க்கலாம்,கலக்கலாம்.எல்லாம் இலவசமாக.இங்கே அதற்கான சுட்டிகளை கொடுத்துள்ளேன். யாருக்காவது அது உதவலாம் என்ற எண்ணத்தில்.

Microsoft Virtual Labs Home

தேவeloper Virtual Labs.To quickly evaluate the latest Microsoft technologies for developers, such as VSTS, BizTalk Server, and .NET Framework 3.0 with these featured labs.
MSDN Virtual Labs

இProfessional Virtual லாப்ஸ்
.Experiment with the newest features of Microsoft server products such as 2007 Microsoft Office system, Exchange 2007, and Windows Vista in these featured
TechNet Virtual Labs

போட்டு தாக்கு-(Electromagnetic Bomb)

நாமெல்லாரும் இருப்போம், கட்டிடங்களெல்லாம் அப்படியே இருக்கும். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பால் நாம் சென்றிருப்போம். என்ன? கால எந்திரம் பற்றி எதாவது கூறுகிறேனென நினைத்தீர்களா? இல்லை நான் இங்கு சொல்ல வருவது ஈ-பாம்(E-bomb) அதாவது மின்காந்த வெடிகுண்டு (Electromagnetic Bomb) பற்றி.நவீன கால இந்த E-bomb ஒரு நகரில் போடப்பட்டால் உருவாக்கப்படும் மாபெரும் மின்காந்த புலமானது அப்பகுதியிலுள்ள அனைத்து மின்னணு சாதனங்களையும் பொரித்து போட்டு விடுமாம். உதாரணமாய் உங்கள் கணிணியின் சர்கியூட் போர்டு அந்த அசூர மின்காந்த அலைகளுக்கு தாக்குபிடிக்க முடியாமல் உருகிப்போகும். இதில் ஹார்ட் டிஸ்க் எம்மாத்திரம். அதிலுள்ள அனைத்து டேட்டாவும் அழிபட்டு போகும். தொலைப்பேசிகள், கைபேசிகள், தொலைகாட்சிகள் எல்லாம் செயலிழந்துபோம். மின்சார வசதி துண்டிக்கப்பட்டு விடும். வாகனங்கள் நடுரோட்டில் நின்றுவிடும். மொத்ததில் எலக்ட்ரானிக் சர்கியூட்கள் உள்ள அனைத்து சாதனங்களும் ஸ்தம்பித்துவிடும். ஆனால் மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பான். நடை பிணமாக.இத்தகைய E-bomb-களை பற்றி இன்னும் எந்த நாடும் அப்பட்டமாக பேச விட்டாலும் ஆளாளுக்கு வைத்திருப்பார்கள் என்றே தோன்றுகின்றது. இந்தியாவில் IIT, Kharagpur இதில் மும்முரமாய் இருக்கின்றதாம்.இதிலிருந்து தப்பிப்பது எப்படி?எப்படி அண்டர் கிரவுண்ட் அதாவது பேஸ்மென்டில் நீங்கள் இருக்கும் போது அல்லது சில லிப்டில் நீங்கள் இருக்கும் போது உங்களுக்கு மொபைல் சிக்னல் கிடைக்காதோ அது போல சிக்னல் கிடைக்காத இடத்தில் உங்கள் எலக்ட்ரானிக் சாதனங்கள் இருந்தால் தப்பித்தீர்கள். இதனை Faraday cage அல்லது Faraday shield என்கின்றார்கள்.இப்போதுதான் புரிகின்றது எதற்கு அநேக டேட்டா சென்டர்கள் தரையின்அடியில் அமைக்கபடுகின்றன வென்று.சில United States national security கட்டிடங்கள் இது மாதிரி ஃபாரடே பாதுகாப்புக்குள் கட்டப்பட்டுள்ளனவாம்.வெறும் நானூறே டாலருக்கு இந்த E-bomb-களை தயாரிக்கலாமாம். நவ நாகரீக நகரொன்றை Time machine எதுவுமின்றி 200 ஆண்டுகளுக்குப் பின்தள்ளலாம் ஒரு சொடுக்கில்.நல்லாருக்கு.வாழுக விஞ்ஞானம்.

தேங்க்ஸ் PKP


comments:
வடுவூர் குமார் said...
ஓஹோ! இந்த பயத்தால் தான் பல கட்டிடங்கள் நிலத்துக்கு கீழே போகின்றன்!!

தமிழ்நெஞ்சம் said...
திருக்குறளில் தேட தேடியந்திரம் திருக்குறளில் 1330 குறள், 133 அதிகாரங்கள் இருந்தாலும் ஒரு திருக்குறள் நூலை (வன்னூல்)த் திறந்து அதில் ஒரு குறிப்பிட்ட சொல்லைத் தேடுவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.இங்கே அதை எளிமைப்படுத்தி அருமையான தேடு இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.தேடும் சொல்லானது1) முதல் வார்த்தையாகவோ2) கடைசி வார்த்தையாகவோ3) எங்குவேண்டுமானாலுமோ இருக்கலாம்4) குறளின் எண்ணைக் கொடுதால் குறள் திரையில் பளிச்சிடுகிறதுஅன்பு என்று கொடுத்தால் 'அன்பு' வில் ஆரம்பிக்கும் குறள்கள்இமைப்பதற்குள் திரையில் தோன்றுகின்றன.http://muthu.org/index.php?option=com_wrapper&Itemid=26