இவ் வலைப்பதிவு கணினி,தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிகழ்வுகள் பொழுது போக்கு சார்ந்ததாக அமையும்.
23.5.08
20.5.08
சில விளம்பரங்கள்


13.5.08
Mr. JPG -Digital camera tools

பல சமயங்களில் இந்த மாதிரி நடப்பதுண்டு. நீங்கள் "இது பாப்பா 3 மாசமா இருக்கும் போது எடுத்த படம்" என சொல்ல மனைவி "இல்லை இது 6 மாசத்தில் எடுத்த படம் ஆர் யூ கிரேசி" என்பாள். துபாய் போனது 2003-ல் என நீங்கள் அடித்து சொல்ல இல்லை அது 2004-ல் என அவள் தகராறு செய்வாள்.இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவுபவர் தான் மிஸ்டர் ஜேபிஜி.
நீங்கள் நினைப்பது போல உங்கள் ஒளிப்படக்கருவி படம் பிடிக்கும் போது உருவாகும் .jpg கோப்பானது வெறும் படத்தை மட்டும் கொண்டிருப்பதில்லை. அந்த .jpg கோப்பானது இன்னபிற தகவல்களையும் தன்னகத்தே மறைவாய்க் கொண்டுள்ளதாம். உதாரணமாய் இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது (நாள்,சமயம் எல்லாம் துல்லியமாய்),அப்போது பிளாஷ் உபயோகப் படுத்தப்பட்டதா இல்லையா போன்ற பல தகவல்கள். இத்தகவல்களை Exif அல்லது மெட்டாடேட்டா என்கின்றார்கள்.(EXIF stands for Exchangeable Image File - Examples of stored information are shutter speed, date and time, focal length, exposure compensation, metering pattern and if a flash was used etc)
ஆமாம்.இப்போது நீங்கள் உங்கள் மனைவியிடம் பந்தயம் கூட வைத்துக்கொள்ளலாம். கீழ்கண்ட Exif ரீடரை பயன்படுத்தி அந்த குறிப்பிட்ட உங்கள் பாப்பாவின் போட்டோ சரியாக எந்த ஆண்டு, எந்த நாள், எந்த நிமிடம் எடுக்கப்பட்டது என அறிந்துகொள்ளலாம். துபாய் போனது எந்த ஆண்டுவெனவும் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் சொன்னது தான் சரியென்றால் "Something wrong with your computer"-ன்னு உங்கள் மனைவி சொல்வாள் என்பது வேறு விஷயம். ஆச்சர்யபடவேண்டாம்.
இந்த முக்கியமான Exif தகவல்களை நீங்கள் போட்டோ எடிட்டிங் செய்யும்போது இழக்க நேரிடலாம். ஆதலால் போட்டோ எடிட்டிங் செய்யும் முன் அசலை அப்படியே பத்திரமாக வைத்துவிட்டு நகலை மட்டும் எடிட்டிங் செய்தல் நல்லது. அல்லது கீழ்கண்ட இன்னொரு மென்பொருளால் இந்த Exif தகவல்களை பேக்கப்செய்து பத்திரப் படுத்திவிட்டு உங்கள் திருவிளையாடல்களை தொடரலாம். முடிந்ததும் மீண்டும் அந்த Exif தகவல்களை எடிட்செய்யப்பட்ட படத்தின் மீது மீட்டுக் கொள்ளலாம்.Backup exif before editing it , and then after editing restore it back using Exifer.
நீங்கள் எடுத்த டிஜிட்டல் ஒளிப்படங்களெல்லாம் ஒரு ஃபோல்டரில் IMG_001.JPG, IMG_002.JPG, IMG_003.JPG.... என img-க்களாகவோ அல்லது DSC001.JPG, DSC002.JPG, DSC003.JPG...என dsc-க்களாகவோ தானாகவே பெயரிடப்பட்டு இருக்கும். இப்படி கண்டபடி சம்பந்தமேயில்லாமல் போட்டோக்களுக்கு பெயர்கொடுக்காமல் அந்த போட்டோ எடுக்கப்பட்ட நாள்,நேரத்தையே அதற்கு பெயராக கொடுத்தால் எப்படி இருக்கும்? (மேலே படம்) இதன் மூலம் பல்வேறு உங்கள் போட்டோக்களை காலகிரமபடி வரிசைப்படுத்துவதோடு அதை பார்வையிடும் போதும் ஒரு தொடர்வாய் பார்வையிடலாம் அல்லவா? அதற்கு உதவுவது தான் கீழ்கண்ட மென்பொருள். இது உங்கள் டிஜிட்டல் போட்டோக்களின் Exif தகவல்களை தானாகவே படித்து அதிலுள்ள நாள்படி உங்கள் போட்டோக்களை அழகாய் கிரமமாய் பெயர்மாற்றம் செய்யுமாம்.(Eg.2007-08-15 18.05.27.jpg) Namexif-automatically rename photos with the date they were shot.
5.5.08
Savitri In Her Last Days


It is really hard to make out who the person lying as dying patient. She was Savitri, the legendary actress on Telugu and Tamil screens. It's hard to believe and hearts melt in grief even now. How time can play with beautiful screen goddesses as well! You can also see Gemini Ganesan in the picture. This photograph was taken in almost last hours of Savitri's life.
2.5.08
இப்படத்தைப் பாருங்கள்
பக்கத்திலுள்ள படத்தை பார்த்ததும் ஏதோ சீன மொழில் எழுதியிருக்கின்றது என்று தானே நினைக்கின்றீர்கள். அது தான் இல்லை. சீனாக்காரர்களின் கண் போலவே உங்கள் விழிகளையும் 95 சதவீதம் மூடிக்கொண்டு கூச்சக்கண்ணில் இப்படத்தைப் பாருங்கள். வாவ்....படித்திருப்பீர்களென நினைக்கின்றேன். pkp
25.4.08
விக்கி மாஃபியா
View Larger Map SAT View Chennai Merina-Click Map See all places
விக்கி மாஃபியா என்றதும் "இது ரொம்ப முக்கியமோ? அடுத்தவன் கம்ப்யூட்டர கெடுக்க நல்ல வழி சொல்றீங்க"- என்று சொல்லும் படியான பதிவு அல்ல இது. இது விக்கிமேப்பியா (Wikimapia.org) பற்றிய பதிவு. :) இந்தியாவில் இண்டர்நெட் எத்தனையாய் ஊடுருவியிருக்கின்றது என்பதற்கு இந்த விக்கிமேப்பியாவே சாட்சி. நம்மூரில் பிரபலமான இந்த மேப்பின் விசேஷம் என்னவென்றால் நீங்களே உங்கள் வீட்டை, உங்களுக்கு தெரிந்த இடங்களை பிறர் அறிய எழுதி அதில் குறித்து வைக்கலாம். நம்மூரில் எதோ ஒரு கோடியிலிருக்கும் குப்பன் மற்றும் சுப்பனின் வீடுகளும் அழகாக குறித்து வைக்கப்பட்டிருக்கின்றது. இப்படி இந்த தளத்திற்கு வருவோர்களாலேயே குறிக்கப்பட்டு இந்த மேப்பானது தகவல்களால் பெருகி வருகின்றது. மேலே படத்தில் மவுசை வைத்தால் சென்னை கடற்கரை மற்றும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தை பார்க்கலாம்.சென்னையில் மட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்கள் இப்படி வாசகர்களால் குறிக்கப்பட்டுள்ளனவாம். யாகூகாரர்களும் சும்மா இருக்கவில்லை. இப்போது இந்தியாவில் டிரைவிங் டைரக்ஷன்கள் கொடுக்க தொடங்கியிருக்கின்றார்கள். உதாரணமாய் From tnagar,chennai to ashoknagar,chennai என கொடுத்த போது அழகாய் எங்கே இடது பக்கம் திரும்பவேண்டும் எங்கே வலது பக்கம் திரும்பவேண்டும் என டிரைவிங் தகவல்களும் வரைபடமும் (மேலே) கொடுக்கின்றார்கள். திநகரிலிருந்து அசோக்நகர் செல்ல வரைபடம் பெற இங்கே சொடுக்குங்கள். கிடைத்த வழித்தடம் கீழே Start-Raja Mannar St,
L-Gopathi Narayanswami Chetty Rd,
Prakasam Rd,1st L,R-Nageswaran St,
L-Sir Mohammed Usman Rd,
R-Duraisamy Rd,Brindavan St,
L-Thamvaiah Rd,
R-Veeraswamy St,
R-Arya Gowda Rd,
L-Brindavan Street Extension,
L-4th Av,L-Jawaharlal Nehru Rd,1st L,
Stop (L stands for Left & R stands for Right) மைக்ரோசாப்டின் லைவும் டிரைவிங் டைரக்ஷன்கள் கொடுக்கின்றார்கள்.ஆனால் பிரமாதமாய் ஒன்றும் தெரியவில்லை.இங்கே சொடுக்கி சென்னை டு மதுரை டிரைவிங் டைரக்ஷன் பாருங்கள். அமெரிக்க வாழ் நண்பரா நீங்கள்?. உங்கள் பூகோள அறிவுக்கு இங்கு கூலாய் ஓர் குவிஸ் மேப். http://jimspages.com/States.htm
