

Credit Card எண்ணில் ஒரு கணக்கு
அமெரிக்க Credit Crunch உலக பொருளா தாரத்தையே கொஞ்சம் அசைத்துபார்த்திருக்கின்றது.
இவ் வலைப்பதிவு கணினி,தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிகழ்வுகள் பொழுது போக்கு சார்ந்ததாக அமையும்.



Zip ஆயுதம்
மடியில் வெடிகுண்டை வைத்துக்கொண்டு அலையிறான் என்பார்கள். அதுபோல இந்த 42.zip(http://www.unforgettable.dk)நண்பர் வேண்டுகோளுக்கிணங்க சுட்டி நீக்கப்பட்டது)
கோப்பு உங்கள் கணிணியில் இருந்தால் வெடிகுண்டை உங்கள் கணிணியில் வைத்துக்கொண்டு அலைகின்றீர்கள் என்று அர்த்தம்.எப்படி?இதை Zip bomb அல்லது Decompression Bomb என்பார்கள். இந்த சுருக்கப்பட்ட ஷிப் கோப்பை தப்பித்தவறி விரிக்கச்செய்தால் அவ்ளோதான். அதினுள் 16 zip கோப்புகள் இருக்கும்.
அந்த 16 zip கோப்புகள் விரிவாகி ஒவ்வொன்றினுள்ளும் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்,அப்புறம் அந்த 16 zip கோப்புகளும் விரிவாகி அதனுள் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்.இப்படி விரிவாகி விரிவாகி இந்த 42.372 kb அளவேயான கோப்பு 281 டெர்ரா பைட்டுகளைவிட அதிகமாய் விரிவாகி அப்புறம் அது உங்கள் கணிணி டிரைவில் இருக்க இடமில்லாமல் போய் உங்கள் கணிணி ஸ்தம்பித்து கிராஷ் ஆகிவிடும்.
இது போன்ற ZIP-Crash Trojan களை இந்த காலத்து வைரஸ்கேனர்கள் கண்டுபிடித்து உடனே அந்த ZIP கோப்புகளை அழித்து விடும். வைரஸ்கேனர் உங்கள் கணிணியில் இல்லாவிட்டால் உங்கள் கணிணி அம்பேல் தான்.
Please do not try this with you or with your friends computer.This information is for educational purpose only.



கூகிள் எர்த் சேட்டலைட்கள்
கூகிள் எர்த் பற்றிய அறிமுகம் நம்மில் பலருக்கும் தேவைப்படாது. அது அவ்வளவாய் பிரபலம். ஆனால் கூகிள் எர்த் படங்களை விண்வெளியிலிருந்து சுட்டுத்தள்ளும் சேட்டலைட்கள் பற்றி கேள்விபட்டிருக்கின்றீர்களா?. அந்த சேட்டலைட்டின் பெயர் QuickBird (படத்தில் காண்பது). இவர் தான் மூத்த அண்ணா.
இவர் விண்ணில் ஏவப்பட்ட நாள் முதல் (October 18, 2001) பூமியின் மூலை முடுக்குகளையெல்லாம் வானிலிருந்து படம் எடுத்து பிடித்து பூமிக்கு அனுப்பி வைக்கின்றார். அவற்றை தாம் நாம் கூகிள் எர்த்தில் அல்லது கூகிள் மேப் சேட்டலைட் வியூவில் பார்க்கின்றோம். இந்த சேட்டலைட் பூமிக்கு மேல் 450கிமீ தொலைவில் பூமியை சுற்றியவாறு உள்ளதாம். உண்மையில் இந்த சேட்டலைட் கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமானதல்ல. இது DigitalGlobe எனும் American remote sensing நிறுவனத்தினுடையது.
QuickBird-ன் தம்பி சேட்டலைட்டான WorldView I சமீபத்தில் தான் (September 18, 2007) விண்ணில் ஏவப்பட்டது. இப்போது இவரும் கலக்கலாய் தெளிவாய் லேட்டஸ்ட் டெக்னாலஜியோடு படங்களை சுட்டு வானிலிருந்து பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார். QuickBird-ஐ விட தெளிவான படங்களாய் இவை இருக்கின்றன. விரைவில் இப்படங்கள் கூகிள் எர்த்தில் இடம்பிடிக்க தொடங்கிவிடும்.
WorldView I-னால் தினமும் 750,000 சதுரகிலோமீட்டர்களை படம்பிடிக்க இயலுமாம்.மேலும் அப்படங்களில் பூமியின் அரைமீட்டரே அளவான பொருள்களையும் காண இயலுமாம்.WorldView I சேட்டலைட் பூமிக்கு அனுப்பிய சில சாம்பிள் படங்களை இங்கே காணலாம்.
http://www.digitalglobe.com/worldview-1_images.html
அடுத்ததாய் 2008-ல் Worldview II ஏவவிருக்கின்றார்கள். அது என்னமாயமெல்லாம் செய்யப்போகின்றதோ?.
இப்போதைக்கு DigitalGlobe-ன் ஒரே காம்பெடீட்டர் GeoEye Inc.இவர்கள் பணியும் விண் ஒடம் வழி படம் எடுத்து கொடுப்பதே.கூகிள் எர்த்தை ரியல்டைமில் பார்க்க ஆசையா?.
கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும்.
சுவாமி சுகபோதானந்தா ஐக்கிய அரபு நாடுகளிலேயே, ஏன் அரபு நாடுகளிலேயே துபாய்க்கென ஒரு தனிப் பிரமாண்டம் என்றுமே உண்டு.எண்ணெய் வருவாயை ஒதுக்கிவைத்து விட்டு வேறெப்படி பணம் பண்ணலாம் என யோசித்து புதுமைகளை தைரியமாய் புகுத்தி இன்று ஆப்ரிக்க மற்றும் அரபு நாடுகளுக்கு இந்த நகர் ஒரு ஹப் (Hub) அதாவது முச்சந்தி.துபாயில் அப்படி என்னத் தான் நடக்கின்றது என ஒரு சராசரி துபாய்வாசியிடம் கேட்டாலே சொல்வான் Shipping Shopping and F**king -ன்னு.அப்புறமென்ன காசுக்கு சொல்லவா வேணும்.
வணிகம் மற்றும் சுற்றுலாத்துறையில் டுபே-Dubey-DBX கொடிகட்டிப் பறக்கிறது.
தேரா துபாய்,பர் துபாய்-யிடையே ஓடும் கிரீக் எனப்படும் நீர்க்கரையில் நின்றிருந்தால் நீங்கள் பார்க்கும் ஓயாமல் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் விமானங்களே இதற்கு சாட்சி.கட்டுமானங்கள் காணுமிடமெங்கும்.யாரோ சொன்னார்கள் உலகின் 3-ல் ஒரு
பங்கு கிரேன்கள் துபாயிலுள்ளதுவென.கோல்ட் சவுக் போனால் ஏதோ தங்கத்தால் இழைத்து கட்டப்பட்ட அரண்மனைக்குள் புகுந்தது போல் தோன்றும்.ரெக்கார்ட் பிரேக் பண்ணும் நவீன உலக கட்டுமான சாதனைகள் நகரெங்கும்.பிற அரபு நாடுகள் போலல்லாது யார் வேண்டுமானாலும் வீடு வாங்கலாம் நிலம் வாங்கலாம் என்ற அரசின் உற்சாக அறிவிப்பு வேறு.ம்...ம். நம்மாட்கள் நிறைய பாடங்கள் இவர்களிடமிருந்து கற்க வேண்டியுள்ளது.
(சார்ஜா,துபாய் சேக்குகளிடையேயான தகராறால் சார்ஜா துபாயிடையேயான சாலைப் போக்குவரத்து முன்பு நாறிப்போய் இருந்தது.இப்போது நிலை தெரியவில்லை).
கீழே 1991-துபாயையும் 2005-துபாயையும் பாருங்கள்.கூடவே துபாய் ரோடுகள்.
UAE United Arab Emirates Dubai Old Photos Amazing Pictures From Sky
