17.4.08

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)



ஜாதி, மத பேதங்களை கடந்து இந்திய அளவில் எனக்கு மிகப் பிடித்தமான மனிதர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள். உலக அளவில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

.ஐன்ஸ்டீன் தன் மரணப்படுக்கையிலும் கடைசி நொடிவரை கணக்குகளாய் போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார் என்பார்கள்.

அவர் மூளையை ஆராய ஆர்வம் கொண்ட Dr.Thomas Harvey ஐன்ஸ்டீனின் மரணத்துக்கு பின் திருட்டுத் தனமாய் அவர் மூளையை எடுத்து வைத்துக்கொண்டாராம்.

இன்றும் அது Princeton Hospital Pathology lab-ல் இருக்கின்றது.

ஐன்ஸ்டீனின் வார்த்தைகள் பொதுவாய் நகைச்சுவையும் அர்த்தமும் செறிந்ததாய் இருக்கும்.

இங்கே சில உதாரணங்கள்.

எளிய தமிழில்.ஐன்ஸ்டீன் சொல்கிறார்.....எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் என மட்டும் எனக்குத் தெரியும்.

அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா?அறிவியல் அற்புதமானது தான்.

ஆனால் அதுவே பிழைப்பாய் இருக்காதவரை.ரொம்ப முக்கியமானது என்னவென்றால் கேள்வி கேட்பதை நிறுத்த கூடாது.

கடவுள் முன் நாம் எல்லாரும் சம அளவு அறிவாளிகள்,சம அளவு முட்டாள்கள்.கற்பனாவளம் அறிவைவிட மிக முக்கியமானதாக்கும்.A-யை வெற்றி யென நான் கொண்டால் என் சூத்திரம் A = X + Y + Zஅதாவது இங்கு X உழைப்பையும் Y விளையாட்டையும் Z வாயை மூடிக்கொண்டு கம்னு இருத்தலையும் குறிக்கும்.ஒரே நேரத்தில் யாரும் போருக்கும் சமாதானத்துக்கும் தயாராக முடியாது.

மூன்றாவது உலகப்போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமென எனக்கு தெரியாது.ஆனால் நான்காம் உலகப்போரில் கம்புகளும் கல்லுகளும் தான் பயன்படுத்தப்படும்.ஆகாயமண்டலத்துக்கும் மனிதனின் முட்டாள் தனத்துக்கும் முடிவே இல்லை.

முன்னதுக்கு முடிவிருந்தாலும் இருக்கலாம்.தவறே செய்திராதவர்கள் புதுசாய் எதையும் முயலாதவர்கள் தாம்.காதலில் விழுதலுக்கெல்லாம் புவி ஈர்ப்புவிசை காரணமாகாதையா.

உலகிலேயே புரிந்து கொள்ள முடியாத ரொம்ப கஷ்டமான ஒன்று இன்கம்டாக்ஸ்.சிலவை எளிதாயிருக்க வேண்டும் தான்.

ஆனால் ரொம்ப ரொம்ப எளிதாய் அல்ல.கடவுள் என்ன நெனைப்பில் இருக்கிறார்னு விளங்கிக்கனும், மற்றவையெல்லாம் விளக்கமாயுள்ளன.நேரம் என ஒன்றிருக்க காரணம், எல்லாம் ஒரே சமயத்தில் நடக்காததால் தான்.சூடேறிப்போயிருக்கும் ஓர் அடுப்பில் நீங்கள் ஒரு நிமிடமே கையை வைத்தாலும் அது ஒரு மணிநேரம் போல் தோன்றும்.

ஆனால் அழகான பெண்ணோடு ஒரு மணிநேரமாய் பேசினாலும் அது ஒரு நிமிடமாய் தான் தோன்றும். அதான் ரிலேடிவிட்டி.உலகை புரிஞ்சிக்கவே முடியாத காரணம் அதை புரிந்துகொள்ள முடிவதுதான்.

கடவுள் உலகை படைத்த போது அவருக்கு வேறு எதாவது தெரிவு இருந்ததாவென அறிய ஆவல்.வெற்றிகரமான மனிதனாவதைவிட மதிப்பிற்குரிய மனிதனாதல் வேண்டும்.உதாரணமாய் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும்.

அதுவே வழிகாட்ட சிறந்த வழி.நான் கற்றுக்கொள்ள அதிகம் தொல்லை கொடுப்பது என் கல்வியே.நிஜம் ஒரு மாயை. ஆனால் பாருங்கள் அதுதான் நிலைத்திருக்கின்றது.எதிர்காலத்தை பற்றி ரொம்ப யோசிப்பதில்லை. அது சீக்கிரமாய் வந்துவிடுகின்றதே.

-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein)

வயர்லெஸ் கீ போர்டு அபாயம்

வயர்லெஸ் கீ போர்டு அபாயம்
வயர்லெஸ் கீ போர்டு, வயர்லெஸ் மவுஸ் என வைத்துக்கொளல் இப்போதெல்லாம் ஆடம்பர விஷயமல்ல. வீடுகளிலும் அலுவலகங்களிலும் இவை மிக சகஜமாகிவிட்டன.
அசோக்நகர் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பின் முதலாவது மாடியில் ஹாயாக அமர்ந்து கொண்டு வயர்லெஸ் கீ போர்டுவழி உங்கள் கணிணியில் ஏதோ டைப்புகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அது ஏதோ ஒரு பாங்கிங் சைட் பாஸ்வேர்டாக கூட இருக்கலாம்.
அதை அப்படியே என்ன டைப்புகின்றீர்கள் என இரண்டாவது மாடியில் குடியிருக்கும் "பத்தாவது படிக்கும் சுட்டி" தெரிந்து கொள்ளலாம். எப்படி?வயர்லெஸ் கீ போர்டுகள் நீங்கள் தட்டும் எழுத்துக்களை அப்படியே டைப்ப டைப்ப அவற்றை ரேடியோ அலைகளாக மாற்றி கணிணிக்கு அனுப்பிக்கொண்டேயிருக்கும்.
மேல்மாடி சுட்டி ரொம்ப தொலைவில் இல்லையே. அவர்களுக்கும் அந்த ரேடியோ அலைகள் எட்டும். இந்தகால பள்ளிக்கூட படு சுட்டிகளுக்கு ஒரு வயர்லெஸ் ரிசீவரும்,எளிய டிகிரிப்டோ மென்பொருளும் கிடைத்தால் போதும். மொத்தமும் காலி.
ஏன் அப்பேர்பட்ட Microsoft Wireless Optical Desktop 1000/2000 keyboard-கள் கூட இதற்கு விதிவிலக்கில்லையாம். அக்கம் பக்கம் யார் இருக்கானு தெரிஞ்சு வச்சிக்கிறது ஒரு விதத்தில் நல்லது தான்.

எங்கே போகும் இந்த பாதை...




காலம் மாற மாற நாமும் அதற்கு தகுந்தாற்போல் மாறவேண்டும். இதுதான் உலகநியதி. சிலநாடுகள் இந்த மாற்றங்களை புரிந்துகொண்டு, தங்களையும் மாற்றி கொண்டு வேகமாக வளர்ச்சிபாதையில் போய்கொண்டிருக்கும் நிலையில், இந்தியா பல்வேறு விஷயங்களில் இந்த மாற்றங்களை புரிந்துகொள்வதே இல்லை. பிரச்சினை தீவிரமாகி வேறு வழியில்லை என்ற சுழ்நிலையில் மட்டுமே விழித்துகொண்டு மாற்றங்களை ஏற்றுகொள்வது பற்றி யோசிக்கும். இந்த தலைப்பில் பல்வேறுவிதமான மாற்றங்களைபற்றி விவாதிக்கலாம். ஆனால் இங்கே கவனிக்கபோவது அரசின் கவனகுறைவினால் விவசாய நிலங்கள் (தேவையற்ற) குடியிருப்புக்காண நிலங்களாக மாறுவதைபற்றிதான்.மக்கள்தொகை பெருக பெருக அவர்கள் வசிப்பதற்காண குடியிருப்புகளும் பெருகுவது இயற்கையான ஒன்றே. ஆனால் இந்த மாற்றங்கள் நமது இயற்கை வளங்களை பாதிக்காமல் அதேநேரத்தில் நமக்கு புதிய பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல் பார்த்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

சொந்தமாக ஒரு வீடு என்பது மக்களின் நியாயமான கனவுதான். சேமிப்பும் அதை பாதுகாப்பாய் முதலீடு செய்ய மக்கள் விரும்புவதும் வரவேற்கபட வேண்டிய விஷயம்தான். ஆனால் அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாய் இருக்கவேண்டுமே தவிர உபத்திரமாய் இருக்ககூடாது. உதாரணமாக மக்கள் தங்கள் சேமிப்பை வங்கிகளில் முதலீடு செய்தால் அதன் மூலம் வங்கிகளில் சேரும் கோடிக்கணக்கான ரூபாய்கள் தொழில்துறையினருக்கு கடனாக சென்று பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்புகள் உருவாவதற்கும், அரசுக்கும் பல்வேறு வகையில் வரி வருவாய்க்கு வழிவகுக்கும்.

வங்கிகளில் வட்டிவிகிதம் குறைவென்றால் அதற்கு மாறாக பங்கு சந்தை, ம்யூச்சுவல் பண்ட், இன்சுரன்ஸ் போன்ற துறைகளில் முதலீடு செய்தாலும் அது வளர்ச்சிக்கே வித்திடும். ஆனால் நிலங்களில் செய்யப்டும் முதலீடுகள் கண்டிப்பாக நாட்டுக்கு எதிர்மறையான பிரசினைகளைதான் உருவாக்கும்.முதல் பிரச்சினை, நகர எல்லைக்குள்ளேயே பல மனைகள் வீடுகள் கட்டப்படாமல் காலியாக இருக்க சுற்றியுள்ள விவசாய நிலங்களை மனைகளாக்கி வீணாக்குவது. அத்தியாவசியமான உணவு பொருட்களை லாபநோக்கம் கருதி பதுக்குவது எப்படி குற்றமோ அதேபோல் லாபநோக்கத்தில் செய்யப்படும் இதுபோன்ற முதலீடுகளால் விளைநிலங்களை பாழாக்குவதும் குற்றமே.

இரண்டாவதும், மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய பிரச்சினை என்னவென்றால் அரசாங்கத்துக்கு (நகராட்சிகள்) நிறைய செலவினங்ளை உருவாக்குவது. நகரங்கள் அகலமாக விரிவடைந்து கொண்டே போனால், அவர்களுக்கென்று சாலை போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் போன்ற சேவையை செய்வதற்கு மேலும் மேலும் முதலீடுகள் செய்ய நேரிடும்.


விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சில நகரங்களில் கேபிள் டிவிக்கான கட்டணங்கள் அபார்ட்மெண்ட்களில் ஒரு மாதிரியாகவும் தனித்த வீடுகளில் ஒரு மாதிரியாகவும் இருக்கும். காரணம், அபார்ட்மெண்ட்களில் குறைந்த செலவில் (வயரில்) பெரும்பாலானோருக்கு இனைப்புகள் வழங்கிவிடலாம். அவர்களுக்கே இப்படியென்றால், கண்டிப்பாக அரசுக்கும் இது பலவேறு வகையில் செலவினங்களை குறைக்கும்.

வெளிநாடுகளில் 50 மாடி 100 மாடி என கட்டடங்கள் எழுப்புவதற்கு காரணம் அவர்களிடம் இடம் இல்லை என்பது இல்லை. பல வகைகளில் இது வசதியாக இருப்பதால் நிலபரப்பில் இந்தியாவைவிட மிகபெரிய நாடுகள் கூட நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு / அலுவலகங்களுக்கே முன்னுரிமை தருகின்றன. இந்தியாவும் நகரங்களில் சலுகைகள் மூலம் இதுபோன்ற குடியிருப்புகளை ஆதரித்தால் விளைநிலங்களையும் காப்பாற்றலாம் மற்றும் நகரங்களில் இடநெருக்கடி தவிர்க்கப்பட்டு அகலமான சாலைகள் அமைப்பதிலிருந்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான பூங்காகளையும் உருவாக்கலாம்.மக்களின் கவலையெல்லாம் தங்களுடைய முதலீடுகள் லாபம் தரகூடியவையாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் என்பதே.

அரசாங்கம்தான் ஆரோக்யமான முதலீடுகளுக்கு சலுகைகளும் தவறான முதலீடுகளுக்கு கூடுதலான வரிச்சுமையையும் சுமத்தி அதை கட்டுப்படுத்தவேண்டும்.எனவே இது போன்ற பிரச்சினைகளை தடுக்க அரசு எடுக்கவேண்டிய முடிவுகள்.1) வளர்ந்து வரும் நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விரைவாக அனுமதி அளிப்பதோடு மட்டுமில்லாமல், இந்த குடியிருப்புகளுக்கு முத்திரைதாள் கட்டணத்தை குறிப்பிட்டகாலத்துக்கு ரத்து செய்யவேண்டும்.2) நகரங்களில் நிலங்கள் மனைகளாக பிரிக்கப்பட்டு குறிப்பிட்டகாலத்துக்குள் அவற்றை (வீடுகளாக) பயன்ப்டுத்தாவிட்டால் ஆண்டுதோறும் அந்த மனைகளின் மீது 10 அல்லது 20 சதவிகித அபராத வரி விதிக்கவேண்டும்.

பிற வங்கியின் ATMல் பணம் எடுத்தால்


ATM
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிற வங்கியின் ATMல் பணம் எடுத்தால் அதற்கென்று தனியாக கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களை பொறுத்தவரையில் இது ஒரு சந்தோஷமான செய்தி. ஆனால் நீங்கள் எந்த ATMல் வேண்டுமானாலும் கூடுதல் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம் என்ற வசதி வந்துவிட்டால் சில தனியார் வங்கிகள் சிக்கனம் கருதி புதிதாக ATM நிலயங்களை திறக்காமல் இருக்கும். இது ஏற்கணவே இருக்கும் ATMல் கூட்டத்தை அதிகரிக்கும். எனவே பிற வங்கிகளின் ATM ல் பணம் எடுத்தால் அதற்காக குறிப்பிட்ட அளவு கட்டனம் வசூலிப்பதுதான் சரியான நடைமுறை.
இன்னும் சொல்லபோனால் ATM என்பது வங்கிதுறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்ட நிலையில், ஒவ்வொறு வங்கியும் தனித்தனியாக ATM அமைத்து அதற்கென வாடகை, ஊழியர்கள் மற்றும் நிர்வாக செலவு செய்வதை விட, ATM சென்டர் நடத்துவதையே தனித்துறையாக மாற்றி அதை அரசாங்கமோ அல்லது தனியாரோ நிர்வாகிக்கலாம். ஒரு ATM நிலையத்தில் செய்யப்படும் பணபரிமாற்றத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வங்கியிடமிருந்து கட்டணம் வசூலித்துகொள்ளலாம்.

ஜோக்ஸ்


ஜோக்ஸ்



ஒரு குழந்தை தன் அம்மாவிடம்..."அம்மா, மனித இனம் எப்படிமா உருவாயிற்று?""கடவுள் ஆதாமையும் ஏவாளையும் படைச்சார். அவங்களுக்கு குழந்தை பிறந்து படிப்படியா மனித இனம் உருவாயிற்று."


அதே குழந்தை தன் அப்பாவிடம் இதே சந்தேகத்தை கேட்க..."குரங்கிலிருந்து படிப்படையா உருவானதுதாம்மா மனித இனம்"குழம்பிபோன அந்த குழந்தை மீண்டும் தன் அம்மாவிடம்..."அம்மா, கடவுள்தான் மனிதனை படைச்சார்னு நீ சொல்ற, ஆனா அப்பா குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானான்னு சொல்றார். எதும்மா உண்மை?""


ரெண்டும் சரிதான். நான் சொன்னது எங்க பரம்பரையைபத்தி, உங்க அப்பா சொல்றது அவர் பரம்பரையைபத்தி."

ஜோக்ஸ்



ஜோக்ஸ்



ஒரு குழந்தை தன் அம்மாவிடம்..."அம்மா, மனித இனம் எப்படிமா உருவாயிற்று?""கடவுள் ஆதாமையும் ஏவாளையும் படைச்சார். அவங்களுக்கு குழந்தை பிறந்து படிப்படியா மனித இனம் உருவாயிற்று."


அதே குழந்தை தன் அப்பாவிடம் இதே சந்தேகத்தை கேட்க..."குரங்கிலிருந்து படிப்படையா உருவானதுதாம்மா மனித இனம்"குழம்பிபோன அந்த குழந்தை மீண்டும் தன் அம்மாவிடம்..."அம்மா, கடவுள்தான் மனிதனை படைச்சார்னு நீ சொல்ற, ஆனா அப்பா குரங்கிலிருந்துதான் மனிதன் உருவானான்னு சொல்றார். எதும்மா உண்மை?""


ரெண்டும் சரிதான். நான் சொன்னது எங்க பரம்பரையைபத்தி, உங்க அப்பா சொல்றது அவர் பரம்பரையைபத்தி."

அலைப்பேசியும் .jar கோப்புகளும்



அலைப்பேசியும் .jar கோப்புகளும்


முன்பு போல் அலைப்பேசிகள் இனிமேலும் பேசமட்டுமல்லாது இன்ன பிற காரியங்களையும் கையடக்கமாய் செய்ய உதவும் அளவிற்குவந்துவிட்டன. இணையத்தை மேயமுடிகின்றது, மின்னஞ்சல் பொட்டியை பார்க்கமுடிகின்றது, மென்புத்தகங்களை படிக்கமுடிகின்றது அப்படியே இஷ்ட விளையாட்டுகளை இறக்கம் செய்து பல ஆட்டங்களும் ஆடமுடிகின்றது. முன்பெல்லாம் கணிணிகளில் மட்டுமே முடிந்த பயன்பாடுகளையெல்லாம் இப்போது உள்ளங்கையிலேயே செய்ய முடிகின்றன.
உங்கள் அலைபேசியையும் இது மாதிரி முழுவீச்சில் பயன்படுத்தலாம். என்ன கொஞ்சம் ஒசர ரகமான ஃபோனாய் உங்கள் போன் இருத்தல் வேண்டும். அதிக போன் மெமரி இருந்தால் நல்லது. மைக்ரோ SD மெமரி கார்டு வசதி உங்கள் போனில் இருந்தால் நீங்கள் கலக்கலாம் போங்க.
மேல் நான் சொன்ன கைப்பேசி மென்பொருள்களெல்லாம் இணையத்தில் நிறையவே இறக்கத்துக்கு கிடைக்கின்றன. பெரும்பாலும் இவை jar,jad வடிவில் கிடைக்கும். இம்மென்பொருள்களை உங்கள் கைப்பேசிக்கு கடத்தி நிறுவலாம்.(கைப்பேசியிலிருந்து கணிணிக்கு) கைப்பேசியில் ஒரு மென்பொருளை நிறுவ அதன் .jar கோப்பும் அல்லது .jad எனப்படும் இன்னொரு கோப்பும் உங்களுக்குத் தேவைப்படலாம்.
ஒருவேளை .jar மட்டுமே இருந்தால் அதிலிருந்து .jad கோப்பை எளிதாய் jadMaker எனும் இலவச மென்பொருள் வழி உருவாக்கலாம்.
இந்த கைப்பேசி மென்பொருள்களை உங்கள் கணிணியில் சோதனைக்காக ஓட்ட, சரிபார்க்க ஒரு Cell Phone Emulator வேண்டுமாயின் நீங்கள் சன் ஜாவாவின் இலவச Sun Java Wireless Toolkit-ஐ முயன்று பார்க்கலாம்.
இப்போது ஆப்பிள் ஐபோனுக்கே சாப்ட்வேர் டெவலப்மென்ட் கிட் கிடைக்கின்றது.
கைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் கீழ்கண்ட சுட்டியில் அநேக ஈபுத்தகங்கள் கிடைக்கின்றன.(Registration Required)http://www.thinnai.info
கைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் குரான் கீழ்கண்ட சுட்டியில் கிடைக்கின்றது. (Registration Required)
http://www.mobango.com
கைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் பைபிள் கீழ்கண்ட சுட்டியில் கிடைக்கின்றது. (Registration Required)
http://www.christiansmobile.com